பெட்ரோல். டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 260-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 3168 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து 55 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 477 மில்லியன் கனஅடியாக உள்ளது.
பேரிடர் மீட்பு குழு
இந்தியாவில் இருந்து துருக்கி விரைந்தது 2 மத்திய மீட்பு படை குழு, சிறப்பு மோப்ப நாய் படை. உத்தர பிரதேசம், காசியாபாத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டது பேரிடர் மீட்பு குழு.
பா.ஜ.க.,வினர்தான் பொய் சொல்வதில் வல்லுநர்கள். பொய் சொல்லி மக்களை தவறாக வழிநடத்துவதில் பயிற்சி பெற்றவர்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்
2ஜி வழக்கு பற்றி அதிமுக எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் பேசிய நிலையில், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 2ஜி வழக்கு முடிவுற்றது, குற்றம் நிரூபிக்கப்படவில்லை என திமுக எம்.பி. வில்சன் பதில் அளித்தார்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தொண்டர்களை ஏமாற்றும் துரோக சக்தியை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டுவோம் என இ.பி.எஸ் தரப்பு மீது டி.டி.வி தினகரன் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தெப்ப திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
கேரள பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
வணிகங்களுக்கான தொழில் உரிமங்களை மார்ச் மாத இறுதிக்குள் ஆன்லைனில் புதுப்பிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 வடமாநில சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். ரூ.5 ஆயிரம் மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் என்று கூறப்படும் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. முன்னதாக, கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் அதிகபட்ச தண்டனையில் பாதியை அனுபவித்துவிட்டார் என்ற வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
திரிபுரா மாநில மக்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியை நிராகரிப்பார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிபுரா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இருப்பினும் சில இடங்களில் காங்கிரஸ், சிபிஎம் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பார்தி ஏர்டெல் நிகர லாபம் டிசம்பர் 2022 காலாண்டில் 91.5 சதவீதம் உயர்ந்து ரூ.1,588 கோடியாக உள்ளது என நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல்லின் மூன்றாம் காலாண்டு இன்று வெளியானது. அதில் நிறுவனத்தின் வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரன் க்ரீன் காயம் காரணமாக விலக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கேமரன் காயமுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி நெருக்கடி சூழலில் பேனா சிலை வேண்டுமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர், தமிழக அரசு ஏற்கனவே நிதிச் சூழலில் சிக்கித் தவிக்கும் நிலையில் பேனா சிலை கடலுக்குள் அவசியம்தானா? என்ற கேள்வி எழுகிறது. எப்படி பார்த்தாலும் பேனா சின்னம் அமைத்தால் செலவு வரத்தானே செய்யும். மேலும், நினைவுச் சின்னங்கள் சர்ச்சை இல்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் அமைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
2ஜி வழக்கு பற்றி அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை மாநிலங்களவையில் பேசிய நிலையில், திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தன
கசாப்புக் கடைகாரனை நம்பும் ஆட்டின் நிலைதான் ஓ.பி.எஸ் வேட்பாளரின் நிலை என்று என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ள நிலையில், டி. ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
அதானி நிறுவனங்கள் ஒரு ட்ரோனை கூட உருவாக்கியது இல்லை. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்காக மோடி இஸ்ரேல் சென்று பேசி வாங்கிக்கொடுத்தார் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்
மக்களவையில் பேசிய கனிமொழி 20 மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் மத்திய அரசு சர்வாதிகார போக்கில் செல்கிறது. நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து காணப்படுகிறது எனவும் கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளருக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையத்துக்கு ஒதுக்காததால் அ.ம.மு.க வேட்பாளர் சிவபிரசாத் வேட்புமனுவை வாபஸ் பெறுகிறார் என்று அ.ம.மு.க பொதுச் செயலாலர் டி.டி.வி தினகரன அறிவித்துள்ளார்.
சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் தங்கம், வெள்ளி பட்டறைகளில், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 வட மாநில சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர். மாதத்திற்கு ரூ. 5000 மட்டும் கொடுத்து 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது; போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, “தமிழ்நாடு, தெலங்கானா, கேரளாவில் அரசுக்கு எதிராக ஆளுர்கள் செயல்படுகிறார்கள். உடன்கட்டை ஏறுவது குறித்து பெருமையாகப் பேசுவது வெட்கப்பட வேண்டிய செயல்” என்று கூறினார்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு: “பாதுகாப்பு துறையில் அனுபவம் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளன” என்று விமர்சித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த கோரி, பிரதமர் மோடிக்கு , மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்னி வீர் திட்டத்தினால் இளைஞர்கள் அஞ்சுகின்றனர்; விலவாசி உயர்வு, விவசாயிகள் பாதிப்பு நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது – மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு
துருக்கியை 5வது முறையாக நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவானது. இதுவரை சுமார் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
உடன்கட்டை ஏறும் வழக்கத்தைப் பற்றி பேசிய பாஜக எம்.பி., சி.பி.ஜோஷிக்கு எதிராக, மக்களவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
புதுக்கோட்டை வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய 8 பேரிடம் திருச்சியில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
கொரோனா காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினைத் தளர்த்த வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுவோருக்கான வயதுவரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசும், காவல் படைத் தேர்வுகளில், 3 ஆண்டுகள் வயது வரம்பைத் தளர்த்தியுள்ளது – முதல்வர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு – அண்ணாமலை
தோழமைக் கட்சியின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் – மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
பொதுநலன் மற்றும் கூட்டணியின் நன்மை கருதி தனது தரப்பு வேட்பாளரை வாபஸ் வாங்கிய ஓபிஎஸ்க்கு நன்றி – அண்ணாமலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் தென்னரசு
ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர் வாபஸ் பெற்ற நிலையில், இபிஎஸ் அறிவித்த தென்னரசு மனு தாக்கல்
நிலநடுக்கம் காரணமாக உதவிக்கரம் நீட்ட இந்திய மீட்பு படை குழு துருக்கி சென்றடைந்தது
2 மத்திய மீட்பு படை குழுவும், சிறப்பு மோப்ப நாய் படையும் துருக்கி சென்றடைந்தது
அதானி குழும புகார் – ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி தாக்கல் செய்த பொதுநல மனு
மனுவை பிப்.10ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என ஓ.பி.எஸ் கூறுவதே முரண்பாடு தான். தி.மு.கவின் “பி”டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.
ஓ.பி.எஸ் குறித்த செங்கேட்டையனின் பேச்சு அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியலில் எது வேண்டுமானாலும நடக்கலாம். ஆனால் இணைப்பு மட்டும் சாத்தியமில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
மதவெறுப்பை தூண்டும் விதமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக பதவியேற்பு, அவர் தனது கடமையை சரிவர செய்யவில்லை என்றால், நிரந்தர நீதிபதியாக அவரை உயர்த்தாமல் இருக்க கொலீஜியத்திற்கு அதிகாரம் உண்டு” -நீதிபதிகள்.
துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை, இன்று காலை 9:15 மணிக்கு விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம். காலை 10.35-க்கு விக்டோரியா கவுரிக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது .
அதானி விவகாரம் தொடர்பான விவாதத்தை தடுக்க பிரதமர் மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார் – ராகுல் காந்தி
ஈரோடு இடைத்தேர்தல் – மேளதாளத்துடன் பிரசாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம். இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
செங்கல்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம்