பெட்ரோல். டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 260-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நீர்இருப்பு 3,163 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 482 மில்லியன் கனஅடியாக உள்ளது.
1,300 ஊழியர்கள் பணி நீக்கம்
ZOOM நிறுவத்தில் 1,300 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவம் அறிவித்துள்ளது. பணீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 16 வாரத்திற்கான சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகள் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கில் 12 பேரிடம் நடைபெற்ற உண்மை கண்டறியும் சோதனையில், 12 பேரில் 11 பேர் பொய்யான தகவல் அளித்தது உண்மை கண்டறியும் சோதனையில் தெரிய வந்துள்ளது. 12 பேரில், திலீப் என்ற ஒருவர் மட்டுமே உண்மையை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது; இந்தியர் ஒருவரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த மாற்று பாலின ஜோடி குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். இருப்பினும் குழந்தையின் பாலினத்தை பொதுவெளியில் சொல்ல அவர்கள் விரும்பவில்லை
குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாததால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது எனக்கு தெரிந்து, இதுதான் முதல்முறை. இது மிகவும் வருந்தத்தக்கது என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் வேதனை தெரிவித்துள்ளார்
வேலூர், லத்தேரி காவல் நிலைய போலீசார் 12 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தவறியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்
கோவையில் ஒரே நாளில் 46 தனிப்படை குழுக்கள் அமைத்து கஞ்சாவுக்கு எதிரான வேட்டை நடத்திய நிலையில் 28 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் கஞ்சா சாக்லேட்டுகளும் அடங்கும். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்தியா எளிதாக எதிர்கொள்கிறது. இதில் இரண்டு விதத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
ஒன்று, நமது எல்லைக்குள் வரும் பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். அடுத்த பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளை நாம் கொல்கின்றோம். பயங்கரவாதிகளுக்கு இருபுறமும் சாவு நிச்சயம்” என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் சிக்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், “துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயமாகி உள்ளார். அவரின் குடும்பத்தினரோடு தொடர்பில் உள்ளோம். அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
துருக்கி நிலநடுக்கத்தில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்துகொள்ள மக்களவை வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ஏன் எனது பேச்சுகள் நீக்கப்பட்டன” என செய்தியாளர்களை நோக்கி கேள்வியெழுப்பினார்.
மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மக்கள் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைப்பது நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் அல்லது டிவி செய்திகளால் அல்ல. எனது பல ஆண்டுகால அர்ப்பணிப்பால் நம்பிக்கை வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.
நெருக்கடியான நிலையில், உங்கள் முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
“கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்புக் கவசம், உங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
முந்தைய யு.பி.ஏ அரசாங்கத்தை தாக்கிய பிரதமர் மோடி, “வாக்கு வங்கி அரசியல் நாட்டிற்கு தீங்கு விளைவித்தது, இந்தியாவின் வளர்ச்சியை தாமதப்படுத்தியது மற்றும் நடுத்தர வர்க்கம் புறக்கணிக்கப்பட்டது, ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நாட்டிற்கு பாதுகாப்பு அளித்தது” என்று பிரதமர் மோடி கூறினார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பிரதமர் மோடி பதில் அளிக்கும் போது, பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர் என்று கூறினார்.
எதிர்க்கட்சிகள் கடந்த ஒன்பது ஆண்டுகளை குற்றச்சாட்டுகளைச் வைப்பதில் வீணடித்துவிட்டன. இந்த காலகட்டத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நிர்பந்தமான விமர்சனம் மாற்றியது என்றும் பிரதமர் மோடி கூறினர்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்று கூறினார்.
மக்களவையில் புதன்கிழமை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான காங்கிரசைக் குறிவைத்து, “2004-2014 காலம் ஊழல்கள் மற்றும் வன்முறைகளின் பத்தாண்டுகள். என்றும், “2004-2014 வரை ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றுவதுதான் யு.பி.ஏ-வின் அடையாளம். 2004-14 பத்தாண்டுகள் இந்தியாவின் தசாப்தம் என்று அறியப்படும்,” என்று அவர் மேலும் கூறினார். நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் நம்பிக்கை உள்ளது. ஆனால், சிலர் தங்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்ததால் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார். இந்தியாவில் இப்போது ஒரு நிலையான மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது என்றும், சீர்திருத்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார். மோடி மீது மக்கள் நம்பிக்கை வைப்பது நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சி காட்சிகளால் அல்ல. ஆனால், எனது பல ஆண்டுகால அர்ப்பணிப்பால் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
கடந்த 9 ஆண்டுகளில், ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது- மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது; ஈரோட்டில் எத்தனை அமைச்சர்கள் முகாமிட்டாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்- அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
மக்களவையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு இடையே எதிர்க்கட்சி எம்.பி. க்கள் தொடர்ந்து அமளி தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, இபிஎஸ் ஈரோடு வில்லரசம்பட்டியில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் இந்த ஆண்டில் 2000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.
இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மக்களவையில் பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால்பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் * தமிழக அரசுக்கு வி.கே.சசிகலா வலியுறுத்தல்
காமராஜரை அவதூறாக பேசியதாக, திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இளையராஜா இசையில் தனுஷ் குரலில் உருவாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் ‘ஒன்னோட நடந்தா’ பாடல் வெளியானது!
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு 2வது அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் உள்ள, சிறுமி டானியா இல்லத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு!
கடலூர், செல்லங்குப்பம் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்து எரிப்பு *2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
துருக்கியில் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு
புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. நாடு செழித்து தன்னிறைவுடன் இருப்பதற்காக கல்வி மிகவும் அவசியம்.
அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கு உருவானது தான் திராவிட இயக்கம். 2-ம் கட்ட புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மாநில எல்லைகளை கடந்த பிரச்சனை என்பதால் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும். நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் அரசு சட்டம் கொண்டு வரும். மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகனின் இரு வேட்புமனுக்களும் நிராகரிப்பு.
சிறுவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் மீது காவல்துறை எழுத்துப்பூர்வ தகவலை உரிய நேரத்தில் வழங்காததால் குண்டர் சட்டம் ரத்து – நீதிமன்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டது
இரட்டை இலை சின்னம் தவறானவர்கள் கையில் உள்ளது
இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது
திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
2024 நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட எந்த தடையும் இல்லை.
இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும் – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் வழக்கு. சுற்றுச்சூழலுடன் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் பேனா சின்னத்துக்கு தடை தேவை – மீனவர்கள் மனு
2023-24 நிதியாண்டில் பணவீக்கம் சராசரியாக 5.6% ஆக இருக்கும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
ரெப்போ கடன் வட்டி விகிதம் 0.25% அதிகரித்து 6.50% உயர்வு . ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு . வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு .
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம். காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதல்வர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் . 19ம் தேதியன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்வார் எனவும் திமுக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 96 பேர் வேட்புமனு தாக்கல் – வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை. இறுதி வேட்பாளர் பட்டியல் 10ம் தேதி மாலை வெளியாகிறது
கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம். 2வது கட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
துருக்கி, சிரியாவை சிதைத்த நிலநடுக்கம் – தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை . இதுவரை 7,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்
சென்னையில் வரும் ஜூன் மாதம் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது – ஸ்குவாஷ் கூட்டமைப்பு செயலாளர் தகவல்
சிவகங்கை, வில்லியரேந்தல் பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விபத்து . இதில் 2 பேர் உயிரிழப்பு