Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு
2023 ஐபிஎல் சீசன் அனைத்து போட்டிகளையும் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஈரோடு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பிப். 25 முதல் 27 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி சக குடிமகனின் நலனுக்காகவும், நம் தேசத்தின் செழிப்பிற்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் வருகைப் பதிவேட்டில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதிவு
கோவை, ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா – குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு. தீர்த்த குளத்தை பார்வையிட்ட திரெளபதி முர்மு, தியான பீடத்தில் வழிபட்டார்
நான் சுறுசுறுப்பாக பணியாற்ற மருத்துவத்துறைதான் காரணம். எனது டென்ஷன் அனைத்தையும குறைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள மருத்துவர் தணிகாசலத்தை வாழ்த்துகிறேன் என சென்னை, கிண்டியில் நடைபெற்ற கார்டியோபேஸ் 2023 நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மயான கொள்ளை விழாவையொட்டி வேலூரில் சில டாஸ்மாக் கடைகளை நாளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
பென்சில் ஷார்பனர்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 12%-ஆக குறைப்பு; கொள்கலன்களில் பொருத்தப்படும் டேக் டிராக்கிங் சாதனங்கள், டேட்டா கருவிகள் மீதான ஜிஎஸ்டி, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18% முதல் 0% வரை குறைக்கப்படும்! -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அன்பு ஜோதி ஆசிரமப் பெண்களிடம் விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தெரிவித்துள்ளார். முழுமையான அறிக்கை விசாரணைக்கு பிறகு தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
தஞ்சை, பெரியகோவிலில் மகா சிவராத்திரி சனி பிரதோஷம் கோலாகலம் நந்தயம்பெருமானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அபிஷேகத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத சனி மகா பிரதோஷம் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அருகம்புல், வில்வ இலை, மல்லி உள்ளிட்ட பூக்களால் நந்திக்கு மாலை அணிவித்து அலங்காரம்
விழுப்புரம், அன்பு ஜோதி ஆசிரமத்தில், பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
சாதாரணமான போலீஸ் விசாரணைகளை மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என மனித உரிமை மீறல் வழக்கில் சென்னை காவல் உதவி ஆணையருக்கு எதிரான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினேன் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரில் இருந்து இந்திய வீரர் சுமித் நாகல் வெளியேறியுள்ளார். அரையிறுதியில் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் மொரீனோவுடன் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். ஈஷாவில் இன்று நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார்
வேலூர்- காட்பாடி பாலத்தில் நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இந்த தடையை அறிவித்துள்ளார்
டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22-ல் நடத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளார்
ஈரோடு, வில்லரசம்பட்டியில் எடப்பாடி பழனிசாமி கட்சி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் 'போதையற்ற தமிழ்நாடு' முழக்கத்தினை முன்வைத்து ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்திட்டார்
கொரோனா ஊரடங்கில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்
போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கியதற்கு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வருடன் சந்திப்பு
வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது.
நீர் மேலாண்மை பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம்.
முதல்வரை சந்திந்த பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா வந்தடைந்தன.
குடியரசு தலைவரான பின் முதல் முறையாக தமிழகம் வந்தார் திரௌபதி முர்மு
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 56.82 கோடி மோசடி செய்த வழக்கு
ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேருக்கு பிடிவாரண்ட்
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் சிறப்பு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்
2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்
அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி
தொழில் நிறுவனங்களை வரவேற்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகிறது.
எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் கருணாநிதி
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, வர்த்தக மையத்தில் 'ஃபேர்புரோ' என்ற தலைப்பில் வீடு, மனை விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2 குற்றவாளிகளுக்கும் 13 நாள் நீதிமன்ற காவல் விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகினார். அவருக்கு பதிலாக மேட் ரென்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320 ஆகவும், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனையாகிறது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதால் கோயிலைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் கோரியது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 38000க்கு மேற்பட்டோரும், சிரியாவில் 5800க்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.
கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்து மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானாவில் கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆசாத் இருவரும் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் 2வது டெஸ்ட் போட்டி, டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. 242 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.
மதுரை, கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். கோவை ஈஷா மையத்தின் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.