Advertisment

Tamil News Today: டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Tamil News Updates: தமிழ்நாடு, இந்தியாவில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் சுருக்கங்களை இந்த இணைப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Farmer pro.jpg

IE Tamil Updates

Tamil Nadu | பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

Advertisment

சென்னையில் தொடர்ந்து 641 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.]

 தனித் தேர்வர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் (பிப்ரவரி 24) தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவிப்பு, 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 23, 2024 22:16 IST
    2 தொகுதிகள் தரும் கட்சிகளுடன் கூட்டணி - த.மா.கா யுவராஜா பேட்டி

    த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா பேட்டி: “2 தொகுதிகள் தரும் கட்சிகளுடன் கூட்டணி; த.மா.கா கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட முன்னுரிமை அளிக்கும் கட்சியுடன் கூட்டணி” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 23, 2024 22:08 IST
    தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் அரசியல் கட்சிகள் கோரிக்கை; ஆணையம் முடிவெடுக்கும் -  சத்யபிரத சாகு

    தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரே கட்ட தேர்தல் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.



  • Feb 23, 2024 21:24 IST
    ராஜிவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி 

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன், திங்கள் அல்லது செவ்வாய்கிழமை இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 23, 2024 21:10 IST
    அமைச்சர் கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து

    அமைச்சர் கண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.



  • Feb 23, 2024 20:48 IST
    சென்னை மேயர் சென்ற கார் விபத்தில் சிக்கியது

    சென்னை அருகே மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் செக்கியது. நல்வாய்ப்பாக மேயர் பிரியா காயமின்றி தப்பினார். முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால், மேயர் பிரியா சென்ற கார் அந்த கார் மீது மோதியது. பின்னால், வந்த லாஇர்யும் மேயர் பிரியா சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் லேசாக காயம் அடைந்தார்.



  • Feb 23, 2024 20:46 IST
    பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கடன்  - மத்திய அரசு

    கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்; எஸ்.பி.ஐ வங்கியின் கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • Feb 23, 2024 20:46 IST
    பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கடன்  - மத்திய அரசு

    கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 50,000 கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடன் தொகையை 3 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்; எஸ்.பி.ஐ வங்கியின் கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • Feb 23, 2024 19:55 IST
    நாம் தமிழர் கட்சி சட்ட ஆலோசகராக கயல்விழி நியமனம்

    நாம் தமிழர் கட்சி தேர்தல் சட்ட ஆலோசகராக சீமானின் மனைஇவ் கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று நா.த.க அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Feb 23, 2024 19:24 IST
    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது - ஐகோர்ட் கருத்து

    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ராகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்வதன் நோக்கம் என்ன? அதற்கு படிக்காமலிருப்பதே நல்லது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என்று கோவை பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Feb 23, 2024 19:24 IST
    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது - ஐகோர்ட் கருத்து

    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ராகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்வதன் நோக்கம் என்ன? அதற்கு படிக்காமலிருப்பதே நல்லது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என்று கோவை பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Feb 23, 2024 19:24 IST
    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது - ஐகோர்ட் கருத்து

    ராகிங்கில் ஈடுபடுவதற்கு பதில் படிக்காமல் இருப்பதே நல்லது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.ராகிங் செய்வதாக இருந்தால் கல்லூரிக்கு செல்வதன் நோக்கம் என்ன? அதற்கு படிக்காமலிருப்பதே நல்லது. ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை என்று கோவை பொறியியல் கல்லூரியில் ராகிங் செய்ததாக 8 மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • Feb 23, 2024 17:40 IST
    ஜெயலலிதா உருவ கேக் தயார்

     

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் கொண்ட 300 கிலோ எடையுள்ள கேக் மதுரையில் தயார்செய்யப்பட்டுள்ளது.



  • Feb 23, 2024 17:18 IST
    சென்னை- கடற்கரை ரயில்கள் பிப்.25 ரத்து

     

    3வது வாரமாக பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே நாளை மறுநாள் (பிப்.25) 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
    இதனால் பயணிகளின் தேவைக்காக கூடுதலாக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.



  • Feb 23, 2024 17:16 IST
    சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியருக்கு மிரட்டல்

     

    சென்னை பெருநகர மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக திருவெற்றியூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • Feb 23, 2024 17:15 IST
    302 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து


    இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது.



  • Feb 23, 2024 17:14 IST
    தனிக்கொடியை அறிமுகப்படுத்திய மே17 இயக்கம்

    திருமுருகன் காந்தியின் மே17 இயக்கத்துக்கு தனிக்கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடியை அறிமுகப்படுத்தினர்.



  • Feb 23, 2024 16:07 IST
    கேரளத்தில் ஓட்டுநர் உரிம விதிகள் திருத்தம்

    கேரள மாநிலத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களை குறைக்கும் நோக்கில், நாளொன்றுக்கு ஒரு அலுவலகத்தில் 30 பேர் மட்டுமே லைசென்ஸ் டெஸ்ட்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.



  • Feb 23, 2024 15:19 IST
    தங்க கட்டிகள் கடத்தல் - தீவிர விசாரணை

    ராமேஸ்வரம், வேதாளை கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Feb 23, 2024 15:15 IST
    தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு. எஞ்சினில் இருந்து கரும் புகை வெளியானபோதே உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



  • Feb 23, 2024 14:42 IST
    ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு

    தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு டிஐஜியாக மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்பிசிஐடி - சிறப்பு பிரிவின் எஸ்.பி அருளரசுக்கு தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையக கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பி சசிமோகனுக்கு, மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவின் எஸ்பியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Feb 23, 2024 14:12 IST
    “அதிக கட்டணம் - நடவடிக்கை எடுக்க வேண்டும்“ - உயர் நீதிமன்றம் உத்தரவு

    அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Feb 23, 2024 14:11 IST
    மத்திய அரசுக்கு மீன்வளத்துறை அமைச்சர் அறிக்கை

    இந்தியா - இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களும் அச்சமின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபட கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை அனுப்பியுள்ளார். 

     



  • Feb 23, 2024 13:35 IST
    தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

    “தி.மு.க தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தி.மு.க-வின் தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. அடிமட்டத் தொண்டர்களின் செயல்பாடு வரை தலைமைக்குத் தெரியும்" என்று தி.மு.க மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

     



  • Feb 23, 2024 13:33 IST
    இ.பி.எஸ் உடன் பா.ம.க எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ம.க எம்.எல்.ஏக்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்கள். 



  • Feb 23, 2024 13:32 IST
    26ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கும் தி.மு.க

    மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க வருகிற 26ம் தேதி முதல் “இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்“ என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை தொடங்குகிறது.  



  • Feb 23, 2024 12:54 IST
    அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுப்பு

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 



  • Feb 23, 2024 12:54 IST
    வாக்குப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.க மோசடி -  திருமாவளவன் குற்றச்சாட்டு 

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதாக குற்றம் சட்டியுள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன் பா.ஜ.க அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். 

    மேலு பேசிய அவர், "வாக்குச்சீட்டு முறைப்படி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும். தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு விரைவில் அழைப்பு வரும்" என்றும் கூறியுள்ளார். 

     



  • Feb 23, 2024 12:52 IST
    தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

    சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என்றும், அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

    மமாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல; விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிட்டப்பட்டுள்ளது. ரிட் தாக்கல் செய்ய முடியும் என தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது 



  • Feb 23, 2024 12:50 IST
    தேர்தல் - அ.தி.மு.க கோரிக்கைகள் முன்வைப்பு

    "வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். இறந்தவர்கள், வீடு மாறியவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். துணை ராணுவ உதவியுடன் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும்" என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 



  • Feb 23, 2024 12:49 IST
    தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை

    நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 



  • Feb 23, 2024 11:54 IST
    கோடநாடு பங்களாவை போலீசார், அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி சிபிசிஐடி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி தடையங்களை அழிக்க கூடாது எனவும், ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு



  • Feb 23, 2024 11:53 IST
    செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

    செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தந்தை பெருமாள் சாமி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்



  • Feb 23, 2024 11:33 IST
    முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர்: பழனிவேல் தியாகராஜன் குறித்து புகழாரம்

    "முதல் 2 ஆண்டுகளில் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டவர், பழனிவேல் தியாகராஜன் " "நிதித்துறையில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர், பழனிவேல் தியாகராஜன்" "நிதித்துறையை போலவே ஐ.டி. துறைக்கும் மாற்றங்கள் தேவைப்பட்டதால் பழனிவேல் தியாகராஜனை அமைச்சராக நியமித்தேன்" தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை



  • Feb 23, 2024 11:09 IST
    தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 'UmagineTN 2024' உச்சி மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை வர்த்தக மையத்தில் 2 நாட்கள் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு



  • Feb 23, 2024 11:08 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

     சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் ஒரு கிராம் ரூ.5,795க்கும், ஒரு சவரன் ரூ.46,360க்கும் விற்பனை



  • Feb 23, 2024 10:42 IST
    உயிரிழந்த விவசாயில் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

    டெல்லி சலோ போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்திற்கு ரூ.1 கோடி  நிவாரணம்  வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர்  பகவந்த் மான் அறிவிப்பு. அவரது சகோதரிக்கு அரசு வேலை வழங்ப்படும் என்ற உறுதி.  



  • Feb 23, 2024 09:47 IST
    அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல்.

    மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல்.  தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பம்.



  • Feb 23, 2024 09:39 IST
    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் : இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை

    சென்னை வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்துகிறார்



  • Feb 23, 2024 09:36 IST
    மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி மரணம்

    மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனை கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான மனோகர் ஜோஷி (86) மாரடைப்பால் மும்பையில் காலமானார். 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநில முதலமைச்சராக இருந்தார்.



  • Feb 23, 2024 08:47 IST
    மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்ப்படி விநாடிக்கு 77 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்படும் நிலையில், நீர் இருப்பு 28.36 டி.எம்.சி. ஆக உள்ளது



  • Feb 23, 2024 08:45 IST
    சாலை விபத்தில் பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு

    சாலை விபத்தில் பெண் எம்.எல்.ஏ உயிரிழப்பு .  தெலங்கானாவில், பிஆர்எஸ் எம்.எல்.ஏ லஷ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழப்பு



  • Feb 23, 2024 07:53 IST
    மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 29ல் அ.தி.மு.க. போட்டி

    மேகதாது அணை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 29ல் தஞ்சையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம். மேகதாது அணை கட்டப்பட்டால் மேட்டூருக்கு வரும் தண்ணீர் முழுவதுமாக தடுக்கப்படும் என்றும், டெல்டா பாசனப் பகுதி பாலைவனமாகிவிடும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை! 



  • Feb 23, 2024 07:51 IST
    விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்

    போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம் - அம்பாலா காவல்துறையின் அறிவிப்பால் அதிர்ச்சி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment