Advertisment

News Highlights: வேளாண் மசோதாவுக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆதரவு

வேளாண் மசோதா விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வரும் 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights: வேளாண் மசோதாவுக்கு முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆதரவு

Tamil News Today Updates: பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் மசோதாவில் குறை காண முடியாது எனக் கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண் மசோதாவுக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்தார். தற்கால சூழலில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என பிரதமர் மோடி ஐநா சபையின் 75 ஆம் ஆண்டு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை அமளி விவகாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. நாடாளுமன்ற வளாகத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

வேளாண் மசோதா விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வரும் 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்கிடையே நாளை மறுதினம் நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார் வேளாண் மசோதா எதிர்ப்பில் தாங்கள் தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    00:15 (IST)23 Sep 2020

    தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீண்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சி.எஸ்.கே 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சிஎஸ்கே 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சிஎஸ்கே கேப்டன் தோனி கடைசி ஓவரில் அடித்த ஹாட்ரிக் சிக்ஸ் வெற்றிக்கு உதவாமல் வீணானது.

    22:30 (IST)22 Sep 2020

    துரோணாச்சாரியார் விருது பெற்ற டாக்டர் சௌந்தரராஜனுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து

    இந்தியாவிலேயே முதன் முறையாக எச்.ஐ.வி நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது உள்ளிட்ட சாதனைகளுக்காக டாக்டர் சௌந்தரரராஜனுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், பல சாதனைகள் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

    21:26 (IST)22 Sep 2020

    சி.எஸ்.கே வெற்றிக்கு 217 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் தொடரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. அதனால், 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    21:26 (IST)22 Sep 2020

    சி.எஸ்.கே வெற்றிக்கு 217 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் தொடரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்தது. அதனால், 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

    21:03 (IST)22 Sep 2020

    துரைமுருகன் மகனை யாராலும் மிரட்ட முடியாது - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமியிடம், டெல்லியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனும் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த்தை மிரட்டியதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, இது நம்புபடியாக இல்லை. துரைமுருகன் மகனை யாராலும் மிரட்ட முடியாது. ஒரு சாதாரண திமுக தொண்டனைக் கூட மிரட்ட முடியாது என்று கூறினார்.

    20:35 (IST)22 Sep 2020

    சிஎஸ்கே-வை வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன் வெளியே சென்றார்

    அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், இங்கிடி பந்தில் சாஹர் கேட்ச் செய்ய அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 74 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து வந்த மில்லர் ரன் அவுட்டில் வெளியேறினார்.

    20:13 (IST)22 Sep 2020

    ராஜஸ்தான் ராயல்ஸ் வெளுத்துவாங்கும் சஞ்சு சாம்சன் அதிரடி 50

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்துவரும் ராஜஸ்தான் ராயஸ் அணியின் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 50 ரன்களை அடித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ஓவருக்கு 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

    19:29 (IST)22 Sep 2020

    திருப்பூரில் 2 பேர் மரணத்துக்கு அதிமுக அரசின் அலட்சிய போக்கே காரணம் - ஸ்டாலின்

    திருப்பூரில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருவர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவர் மரணத்துக்கும் அதிமுக அரசின் அலட்சிய போக்கே காரணம். மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    19:29 (IST)22 Sep 2020

    திருப்பூரில் 2 பேர் மரணத்துக்கு அதிமுக அரசின் அலட்சிய போக்கே காரணம் - ஸ்டாலின்

    திருப்பூரில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இருவர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவர் மரணத்துக்கும் அதிமுக அரசின் அலட்சிய போக்கே காரணம். மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    18:29 (IST)22 Sep 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,337 பேருக்கு கொரோனா; 76 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று 76 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    16:49 (IST)22 Sep 2020

    எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்

    16:20 (IST)22 Sep 2020

    வேளாண் சட்டத்தை எதிர்க்கும் ஸ்டாலின்

    வேளாண் சட்டத்தால் இதுவரை கிடைத்த வருமானத்தையும் விவசாயிகள் இழக்க நேரிடும். குறைந்தபட்ச ஆதார விலை உண்டு என எந்தப் பிரிவும் வேளாண் சட்டத்தில் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    16:08 (IST)22 Sep 2020

    நான் எப்போதுமே விவசாயி தான் - முதல்வர்

    மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது; விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே ஒரு விவசாயி தான் என்றும், அதனால் தான் பல திட்டங்களை அறிவிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் வேளாண் சட்டத்தில் குறைகாண முடியாது என்றும் கூறினார். 

    15:32 (IST)22 Sep 2020

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4,850-க்கு விற்பனையாகிறது. 

    15:06 (IST)22 Sep 2020

    கோகுல்ராஜ் கொலை வழக்கு

    கோகுல்ராஜ் கொலை வழக்கு விவகாரத்தில் யுவராஜ்க்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    14:37 (IST)22 Sep 2020

    விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் காவல் நிலையத்தில் மரணம்

    திருப்பூர் நல்லூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் மரணமடைந்துள்ளார். ஜெய்நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் காவல் நிலையத்தில் மரணமடைந்ததை அடுத்து, அவரது உடல் உற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

    14:15 (IST)22 Sep 2020

    ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு - விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    தேர்தலின்போது ஆன்லைன் மூலம் வாக்கு பதிவு செய்ய அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பான கோரிக்கை மனுவை மத்திய அரசிடம் அளிக்கவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

    13:59 (IST)22 Sep 2020

    முதல்வர் விளக்கம்

    3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதோடு வேளாண் மசோதாவை எதிர்த்து பேசிய எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

    13:52 (IST)22 Sep 2020

    நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

    நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாண்டு வகுப்புகளை தொடங்க அட்டவணை வெளியிட்டது மத்திய அரசு. இதையடுத்து அவர்களுக்கு மார்ச் மாதம் 8-ம் தேதி செமஸ்டர் தேர்வுகள் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    13:47 (IST)22 Sep 2020

    அரசு கொறடா அனந்த ராமனுக்கு கொரோனா!

    புதுச்சேரி சட்டமன்ற அரசு கொறடா அனந்த ராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    13:45 (IST)22 Sep 2020

    முதல்வர் ஆய்வு!

    ராமநாதபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய் தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக, 167 கோடி மதிப்பிலான நலத் திட்டம் மற்றும் புதிய திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.  70 கோடியே 54 லட்சம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். லடாக்கில் உயிர்நீத்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானாதிக்கு அரசு வேலை வழங்குவதற்கான அரசாணையும் முதல்வர் வழங்கினார்.

    11:48 (IST)22 Sep 2020

    ஸ்டாலின் வழக்கு நாளை விசாரணை!

    உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை .  உரிமை குழு அனுப்பிய புதிய நோட்டீசை எதிர்த்த வழக்குகள் விசாரணையில் இருந்து நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு. 

    11:47 (IST)22 Sep 2020

    போராட்டம் வாபஸ்!

    சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எம்.பி.க்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் . போராட்டத்தை கைவிடுவதாக எம்.பி.க்கள் அறிவிப்பு. அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .  8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

    11:46 (IST)22 Sep 2020

    மோடியுடன் சந்திப்பு!

    காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியுடன் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் சந்திப்பு .மேகதாது அணையை கட்டக்கூடாது என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி இதுவரை வலியுறுத்தவில்லை எம்.பி டி. ஆர் பாலு குற்றச்சாட்டு!

    11:44 (IST)22 Sep 2020

    எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும்!

    மாநிலங்களவை தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி. குலாம்நபி ஆசாத் அறிவிப்பு

    10:56 (IST)22 Sep 2020

    மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு!

    எதிர்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது . எம்பிக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு விளக்கம். 

    10:11 (IST)22 Sep 2020

    கூகுள் மீது வழக்கு!

    செல்போன்கள் மூலம் பணம் செலுத்த வகை செய்யும் பேடிஎம் செயலியை, தற்காலிகமாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இது தொடர்பாக,  கூகுள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பேடிஎம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார். 

    10:10 (IST)22 Sep 2020

    ஸ்டாலின் ஆலோசனை!

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த  நிர்வாகிகள் மற்றும்  அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பாதிப்புகள் குறித்தும் -தி.மு.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்ததுடன்,  ஆலோசனைகளை வழங்கினார்

    10:09 (IST)22 Sep 2020

    உதயநிதி ஸ்டாலின் ட்வீட்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையால் தொடர் மரணங்கள் நிகழ்த்தப்படுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  சாத்தான்குளம்  இரட்டை கொலைகளை தொடர்ந்து செல்வன் என்ற இளைஞரை தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகருடன் சேர்ந்து  கடத்தி கொலை செய்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தமது  டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

    10:07 (IST)22 Sep 2020

    மோடி உரை!

    ஐ.நா.வின் 75வது ஆண்டு விழா மற்றும் பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி ஐ.நா. சாசனத்தில் கையெழுத்திட்டதன் மூலம் உலக நாடுகளின் நலன் சார்ந்த நடவடிக்கையில்   இந்தியாவும் பங்கேற்றுள்ளதாக தெரிவித்தார். இது உலகமே ஒரு குடும்பம் என்ற பொருள்படும் இந்தியாவின் வசுதைவ குடும்பகம் என்ற தத்துவத்தை பிரதிபலிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். 

    09:59 (IST)22 Sep 2020

    ஒருநாள் உண்ணாவிரதம்!

    விவசாயிகள் மசோதா நிறைவேற்றத்தின்போது எம்.பிக்களின் நடவடிக்கையை கண்டித்து மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் இன்று ஒருநாள் உண்ணாவிரதம்!

    சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண் மசோதாக்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment