Tamil News Updates: வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் அரசின் கருத்துருவை நிராகரித்த விவசாயிகள், வரும் 14-ம் தேதி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு. வேளாண் சட்ட திருத்தங்கள் குறித்து, ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் விரும்பவில்லை என்றார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 9% அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னையில் 47% மழைபொழிவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அவர் உறுதியளித்தார். இன்று காலை உடற்கூராய்வு செய்யப்படுகிறது, சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல். முகத்தில் காயங்கள் இருப்பதால், அவரது மரணம் மீதான சந்தேகம் எழுந்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
சென்னை அறிவாலயத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திபில், ” 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா சிறை சென்றவர் என்று ராசா தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா சிறை செல்ல காரணமாக இருந்த கீழமை நீதிபதி குன்ஹா அவர்களின், தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பட்டது என்றும் தெரிவித்தார். “மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கையில் சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டையும் சிபிஐ நிருபிக்கவில்ல என்ற முடிவிற்கு வருவதில் எனக்கு சிறிதும் தயக்கமில்லை” என்று டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில் தெரிவித்தாக ராசா கூறினார்.
Web Title:Tamil news today live farmer protest vj chitra suicide rain in tamil nadu
மாநில பட்டியலினத்திலுள்ள 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொது பெயரிட மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்தமைக்காக மாண்புமிகு அமைச்சர், MLAக்கள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர் என்று முதல்வர் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை நடைபெறும் பாரதி சர்வதேச கலை விழாவில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்கிறார்.
ரஜினிகாந்த் ஆட்சி அமைத்தால் அதிகப்படியான தொழிற்சாலைகளை கொண்டு வருவார் என்று ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா தெரிவித்தார்.
புதிய பாராளுமன்ற அடிக்கல்லிற்கு ஏன் ஆரிய வேத மதப்படி சடங்கு செய்யப்படுகிறது? ஆரியர் மட்டும் வரி கட்டுகிறார்களா? பிற இன/மதத்தவர் வரி கட்டுவதில்லையா? ஏன் சமஸ்கிருதம்? பிற மொழியினரும் வரி கட்டவில்லையா? தமிழும், முருகவழிபாடும் கிடையாதா? திருக்குறள் இல்லையா?
யாருக்கான கட்டிடம் இது? என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பினார்.
எம்ஜிஆர் சென்ட்ரல் - விஜயவாடா தினசரி (செவ்வாய் தவிர) சிறப்பு கட்டண விழாக்கால ரயில் நாளை முதல் டிசம்பர் மாதம் முழுவதும் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு நடக்கிறது.
திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுக அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழு திட்டம் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
ஹஜ் 2021-க்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதி 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடை வைக்க ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்பு மசோதா விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் என்று மாநிலங்களவை உறுப்பினர் கே பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
நீட் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என்பதனை விசாரித்து அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.
“விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைத்து, அடித்தட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தில் ஒன்பது மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அவர் வழங்கினார். பணியின்போது உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கான நிதி உதவியையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
அடுத்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் நான்கு தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் பங்கேற்கலாம் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.
திமுகவில் ரஜினி ரசிகர்கள் அதிகம் உள்ளனர், ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவுக்குதான் ஆபத்து . 2ஜி தீர்ப்பு விரைவில் வர உள்ளது, ஆ.ராசா ஜனவரி 31 வரைதான் பேச முடியும் ஹெச்.ராஜா பேட்டி.
சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் துவக்கம் .பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது இறுதி ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் பங்கேற்பு.
புதிய நாடாளுமன்றத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, டாடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர், குடியரசு துணை தலைவருக்கு பிரத்யேக இல்லங்கள், பிரதமர் அலுவலகம், மத்திய செயலகம், மக்களவை, மாநிலங்களவை, நூலகம் ஆகியவை நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதனை தொடர்ந்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அரசை ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும் . பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேச்சு
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் . பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை.
நடிகை சித்ரா மரணம் தற்கொலை தான் என பிரேத பரிசோதனையில் தகவல். சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று பிரேத பரிசோதனை முடிவில் காவல்துறை தகவல்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் ஒப்படைப்பு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில் உடல் ஒப்படைப்பு .சித்ராவின் உடல் இறுதி சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு வரப்பட்டது. நடிகை சித்ராவின் இறுதிச்சடங்கு நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
திருவண்ணாமலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா சிறப்பு பூஜை . ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகம் பங்கேற்பு ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் . ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா
அரசுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலத்தில் விசிகவினர் போராட்டம்
2-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய கல்வித்துறை!
தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி ஆகியோருடன் நேற்று ரஜினி ஆலோசனை நடத்திய நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசுவது பண்பாடற்ற செயல். அதிமுகவினர் பக்குவப்பட்ட அரசியல்வாதிகள். 2G வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 45,780 புள்ளிகள் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 109 புள்ளிகள் சரிந்து 13,420-ல் வர்த்தகமாகிறது.
பொதுப்பிரிவினருக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. அரசு, தனியார் கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்று 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு. சித்ராவின் நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை திட்டம்.
வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையில், இம்மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்கள் முன் 14-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ள விவசாயிகள், மற்ற மாநில விவசாயிகளும், டெல்லிக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் அலைபேசி, சிம்கார்டுகள் மற்றும் இணைய வசதிகள் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும், புறக்கணிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 9% அதிகம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதோடு சென்னையில் 47% மழைபொழிவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது