Advertisment

Tamil News Highlights: கட்டணம் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி- மத்திய அரசு

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: கட்டணம் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி- மத்திய அரசு

Tamil News Updates: விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் திருத்த சட்டங்கள் எழுத்துப்பூர்வமாக இன்று விவசாயிகளிடம் வழங்கப்படுகிறது. அரசுடன் இன்று ஆறாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்மை திருத்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. வட இந்தியாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisment

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். கடலூரில் மழை பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. புரெவி புயல் குறித்து கணக்கிட மத்திய குழுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்தியாவில் முதற்கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:46 (IST)09 Dec 2020

    ஆ. ராசாவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை

    ஜெயலலிதா பற்றி பேசினால் அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.  

    21:28 (IST)09 Dec 2020

    வேளாண் சட்டங்கள்: முதலவர் எடப்பாடி மீது ஸ்டாலின் விமர்சனம்

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் தராத வேளாண் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் பழனிசாமிதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.  

    20:37 (IST)09 Dec 2020

    எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் வை-ஃபை வசதி

    பொதுத்தரவு அலுவலகங்களின் மூலம் பொது வை-ஃபை வலைப் பின்னல்களை அமைப்பதற்கான தொலைத்தொடர்புத் துறையின் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம், எந்தவித உரிமக் கட்டணமும் இல்லாமல் பொது இடங்களில் அகண்ட அலைவரிசை வை-ஃபை வசதிகளை நாடு முழுவதும் உள்ள பொதுத்தரவு அலுவலகங்களின் வாயிலாக வழங்க முடியும்.

    நாட்டில் பொது வை-ஃபை வலைப் பின்னல்களின் வளர்ச்சியை இத்திட்டம் ஊக்கப்படுத்தும். இதனால் அகண்ட அலைவரிசை இணைய வசதியின் வீச்சு அதிகமாகி, வருமானமும், வேலைவாய்ப்புகளும் பெருகி மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

    19:07 (IST)09 Dec 2020

    வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை - முதல்வர்

    வேளாண் சட்டங்களினால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.

    18:52 (IST)09 Dec 2020

    நீர்வள மேலாண்மை விருது

    நீர்வள மேலாண்மையில் சிறப்பான பங்கை ஆற்றி வரும் தனிநபர்களையும், அமைப்புகளையும் ஊக்குவித்து அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தில், தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

    https://mygov.in என்ற தளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

    18:18 (IST)09 Dec 2020

    டிச.14 பாஜக அலுவலகம் முற்றுகை - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

    டிசம்பர் 14 ம் தேதி நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் ரிலையன்ஸ் / அதானி / அம்பானி நிறுவனங்கள் / தயாரிப்புகள்  புறக்கணிப்படும் என்றும் எச்சரிகை விடுத்தனர்.  

    18:07 (IST)09 Dec 2020

    மு. க ஸ்டாலின் கேள்வி

    காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசு மருத்துவரின் 4 ஆண்டு ஊதிய உயர்வைப் பெற தமிழக அரசு மருத்துவருக்கு 15 ஆண்டுகள் ஆகிறது! தன்னலமற்ற மருத்துவர்களை கொரோனா காலத்திலும் முதல்வர் புரிந்து கொள்ளாதது ஏன்? என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.   

    17:47 (IST)09 Dec 2020

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மு. க ஸ்டாலின்

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டுமென்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    17:46 (IST)09 Dec 2020

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்

    பிரதமர் நரேந்திரமோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.  புதுதில்லியில் உள்ள சன்சத் மார்க்கில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    17:41 (IST)09 Dec 2020

    மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைக் குறித்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

    17:40 (IST)09 Dec 2020

    குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது

    குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்தார்.  

    17:39 (IST)09 Dec 2020

    லட்சத் தீவு-கொச்சி இடையே நீர்முழ்கி கம்பிவடத் தடத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதல்

    சுய சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில்1,584 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

    லட்சத் தீவு-கொச்சி இடையே நீர்முழ்கி கம்பிவடத் தடத்தை ஏற்படுத்தும் திட்டத்திற்கும் ஒப்புதளித்துள்ளது.

    12:40 (IST)09 Dec 2020

    புறநகர் ரயில்களை இயக்க கமல் ஹாசன் வேண்டுகோள்

    11:56 (IST)09 Dec 2020

    சாலையில் பள்ளம் - மாநகராட்சி மறுப்பு

    சென்னையில் இன்று காலை முதியவர் உயிரிழந்த விவகாரத்திற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மழைநீர் தேங்கிய பள்ளத்திலோ, கழிவுநீர் கால்வாயிலோ விழுந்து உயிரிழக்கவில்லை, மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

    11:39 (IST)09 Dec 2020

    ரஜினி ஆலோசனை

    சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகளுடன்  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ரஜினி. 

    10:54 (IST)09 Dec 2020

    வேளாங்கண்ணியில் முதல்வர் பிரார்த்தனை

    10:28 (IST)09 Dec 2020

    சாக்கடையில் விழுந்து மேலும் ஒருவர் உயிரிழப்பு

    சென்னை கோடம்பாக்கத்தில் நடந்து செல்லும்போது பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழப்பு.  நொளம்பூரில் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

    10:06 (IST)09 Dec 2020

    நாகையில் முதல்வர்

    நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புயல், மழையால் ஏற்பட்ட பயிர்சேத பாதிப்புகளை முதல்வர் பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    09:46 (IST)09 Dec 2020

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை குறைவு

    தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலத்தில் கோவிட்-19 இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    09:23 (IST)09 Dec 2020

    வருமான வரித்துறை சோதனை

    செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான, சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. 

    09:18 (IST)09 Dec 2020

    நிவர் புயல் - நிதி ஒதுக்கீடு

    தமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கியது தமிழக அரசு. 

    Tamil News: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக கிட்டத்தட்ட 8 மாதங்களாக ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஊட்டி மலை ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே மலை ரயில் கட்டணம் பயணிகளை மலைக்க வைக்கும்படி நிர்ணயிக்கப்பட்டுளது. ஒரு தனியார் நிறுவனம் ரயிலை வாடகைக்கு எடுத்து, நீலகிரி மலை ரயில் (என்.எம்.ஆர்) பாதையில், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே வார இறுதியில் இயக்குகிறது. மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் இடையே ஒரு முறை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலித்துள்ளது. இதற்கு முன்பு இந்த மலை ரயிலில் வழக்கமாக முதல் வகுப்பு டிக்கெட் ரூ.600 மற்றும் இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.295 என வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது, ஒரு நபருக்கு ரூ.3,000 என்று கட்டணம் நிர்ணயித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை மலைக்க வைத்துள்ளது.
    Coronavirus Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment