Tamilnadu: பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 644-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 78.17% ஆக உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் தற்போது 9.191 டி.எம்.சி நீர்இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 83.98%, புழல் - 71.42%, பூண்டி - 78.74%, சோழவரம் - 69.66%, கண்ணன்கோட்டை - 95.2% ஆக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Feb 24, 2024 23:53 ISTமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் சந்திப்பு
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.கவை இணைப்பது தொடர்பாக கட்சி நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
Feb 24, 2024 21:24 ISTமலைப்பகுதிகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை நாளை முதல் தொடக்கம்
மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் நாளை (பிப்.25) முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். உதகையில் நாளை தொடங்கும் இந்த திட்டம், படிப்படியாக மற்ற மலை 'கிராமங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது
-
Feb 24, 2024 20:33 ISTசசிகலாவின் புதிய இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை
சென்னை போயஸ் கார்டனில், சசிகலாவின் புதிய இல்லத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.
-
Feb 24, 2024 19:25 ISTதி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு
நாடாளுமன்ற தேர்தல் தி.மு.க - கொ.ம.தே.க. இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கொ.ம.தே.க. போட்டியிடும் என்றும் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
-
Feb 24, 2024 18:41 ISTதி.மு.க உடன் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது – ம.தி.மு.க
பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பேச்சுவார்த்தை தொடர்கிறது, விருப்ப பட்டியலை கொடுக்கவில்லை என தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் ம.தி.மு.க பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது
-
Feb 24, 2024 17:43 ISTமக்களவை தேர்தல்; தி.மு.க - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
மக்களவை தேர்தலுக்கான தி.மு.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. தி.மு.க பேச்சுவார்த்தை குழுவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேச்சுவார்த்தைக்கு குழு சந்திப்பு நடத்தி வருகிறது
-
Feb 24, 2024 17:11 ISTஉத்தர பிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து; 22 பேர் மரணம்
உத்தர பிரதேசத்தில் காஸ்கஞ்ச் பகுதியில் யாத்திரிகர்கள் பயணம் செய்த டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 22 பேர் உயிரிழந்தனர்
-
Feb 24, 2024 16:55 ISTவட இந்தியா முழுவதும் பா.ஜ.க-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது -விஜயதரணி
வட இந்தியா முழுவதும் பா.ஜ.க-வுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் பா.ஜ.க அரசின் திட்டங்கள்தான். ஆனால் இந்த திட்டங்களின் பயன்கள் தமிழ்நாடு மக்களுக்கு தெரியவும் இல்லை. புரியவும் இல்லை என பா.ஜ.க.,வில் இணைந்த விஜயதரணி டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்
-
Feb 24, 2024 16:22 ISTபுதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும்; அரசாணை வெளியீடு
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அரசாணை வெளியிட்டு மத்திய அரசு அறிவித்துள்ளது
-
Feb 24, 2024 15:57 ISTபணப் பட்டுவாடா புகார் அளிக்க சி-விஜில் செயலி; தலைமை தேர்தல் ஆணையர்
வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம். இந்த செயலியில் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் புகார் அளிக்க முடியும் என சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
-
Feb 24, 2024 15:31 ISTதமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை; தலைமை தேர்தல் ஆணையர்
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22 - 29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டின் முதல் முறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்
-
Feb 24, 2024 15:16 ISTஉத்தரப்பிரதேச காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து
உத்தரப்பிரதேசத்தில் சுமார் 50 லட்சம் பேர் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத் தாள் கசிவு தொடர்பான செய்தியை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
-
Feb 24, 2024 14:58 ISTபா.ஜ.க-வில் இணைந்த விஜயதாரணி பேச்சு
"பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம். நாட்டிற்கு பிரதமர் மோடியின் தலைமை மிகவும் தேவை. பா.ஜ.க-வை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன்" என்று விஜயதாரணி கூறியுள்ளார்.
-
Feb 24, 2024 14:52 ISTமத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
"மத்திய அமைச்சர் ஷெகாவத் கூறியிருப்பதும் தேவையற்றது. கர்நாடகத்தின் பிரதிநிதியாக மத்திய நீர்வள அமைச்சர் பேசுவது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை சிக்கலில் சட்டமும், உச்சநீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்பும் என்ன சொல்கிறதோ? அதன்படி தான் செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரின் தனிப்பட்ட கருத்தை யாரும் கேட்கவில்லை.
மேகதாது அணையை தடுக்கக் கூடாது என்று தனிப்பட்ட கருத்தைக் கூற வேண்டிய தேவை என்ன? தமிழ்நாடு & கர்நாடகம் இடையே நீதிபதியாக செயல்பட வேண்டிய மத்திய அமைச்சர் ஷெகாவத், கர்நாடகத்தின் வழக்கறிஞராக மட்டும் செயல்பட வேண்டிய தேவை என்ன?" என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Feb 24, 2024 14:25 ISTரயில் சேவைகள் ரத்து எதிரொலி; 150 பேருந்துகள் இயக்கம்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.25) புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது
-
Feb 24, 2024 14:18 ISTபா.ஜ.க.வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்தார்
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்வானவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என விஜயதாரணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
-
Feb 24, 2024 13:32 ISTகும்பகோணம் மகாமக குளத்தில், மாசி மக தீர்த்தவாரி வைபவம்
10 சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் மகாமக குளத்தை சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். படித்துறைகளில், அஸ்திரதேவர்களுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
-
Feb 24, 2024 13:31 ISTபட்டியலின குடும்பத்தினர் மீது தாக்குதல் - பா.ஜ.க பிரமுகர் கைது
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தில், அரச்சலூர் போலீசார் பா.ஜ.க பிரமுகர் கவீன் குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Feb 24, 2024 13:29 ISTசயனைடு கலந்த மது - ஒருவர் உயிரிழப்பு
சேலத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக மதுவில் அண்ணன் சயனைடு கலந்து வைத்திருந்த நிலையில், சயனைடு கலந்து இருப்பது தெரியாமல் மதுவை எடுத்துச் சென்று நண்பருடன் சேர்ந்து தம்பி குடித்துள்ளார். நண்பர் உயிரிழந்த நிலையில், தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Feb 24, 2024 12:47 ISTதேர்தல் பிரசாரம் - இலச்சினை வெளியிட்டது அதிமுக
தேர்தல் பிரசாரத்திற்காக, லட்சினையை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். “தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்ற வாசகத்துடன் லட்சினை வெளியிட்டுள்ளார். AI தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பேசுவது போன்ற காணொலி வெளியிடப்பட்டுளள்ளது.
-
Feb 24, 2024 12:45 ISTசந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் தொகுதி பங்கீடு
ஆந்திர மாநிலத்தில் சந்திர பாபு நாயுடுவுடன் நடிகர் பவன் கல்யாண் கூட்டணி அமைத்துள்ளார். 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் கூட்டணி உறுதியானது .தெலுங்கு தேசம் கட்சி 94 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடுகிறது.
-
Feb 24, 2024 12:31 IST'விஷமத்தனமான பிரசாரங்களை பரப்புகின்றனர்': இ.பி.எஸ்
"இன்று முதல் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். விஷமத் தனதான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும்.
"மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதிமுக கூட்டணியை அறிவிப்போம். தேர்தல் பரப்புரைகளை இன்று முதல் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதிமுக கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரசாரங்களை சிலர் பரப்புகின்றனர்" என்று எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
-
Feb 24, 2024 12:26 ISTஸ்டாலின் உரை
"அதிகப்படியான நகரமயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடும் நெருக்கடியில் ரூ. 100 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மாநகராட்சி, நகராட்சிகளில் ஏராளமான திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அப்பணிகளை பட்டியலிட ஒரு நாள் போதாது" என நெம்மேலியில் ரூ 2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். -
Feb 24, 2024 12:18 IST'எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம்' - ஸ்டாலின் பேச்சு
"எனது இதயத்திற்கு நெருக்கமான திட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ரூ.1,802 கோடி மதிப்பீட்டில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அமைச்சர் நேரு எதையும் நேர்த்தியாக, பிரமாண்டமாக செய்யக்கூடியவர்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Feb 24, 2024 11:41 ISTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள். ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை
-
Feb 24, 2024 11:32 ISTகடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
ரூ.2,465 கோடி மதிப்பீட்டில், அமைக்கப்பட்ட நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திறப்பு
-
Feb 24, 2024 11:30 ISTஜெயலலிதா படத்திற்கு டி.டி.வி.தினகரன் மரியாதை
ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி மதுரையில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
-
Feb 24, 2024 10:45 ISTஏ.வி.ராஜு மீது நடிகர் கருணாஸ் மீண்டும் புகார்
அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் மீண்டும் புகார். எவ்வித ஆதாரமும் இன்றி ராஜு பேசிய அவதூறு கருத்துகளை விசாரிக்காமல் யூடியூபில் ஒளிபரப்பியதாக புகார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் ராஜு மீது நடவடிக்கை எடுக்க கருணாஸ் புகார். யூடியூபில் அவதூறு பரப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் உட்பட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை.
-
Feb 24, 2024 10:41 ISTசமூக நீதியோடு அரசாண்ட சிங்க தலைவி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு. ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி சமரசம் ஏதுமின்றி சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க தலைவி என்றும் புகழாரம்
-
Feb 24, 2024 10:39 ISTஜெ. 76வது பிறந்தநாள்: ஓ.பி.எஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள். சென்னை காமராஜர் சாலையில் மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.
-
Feb 24, 2024 10:15 ISTஜெயலலிதா பிறந்தநாள்: இ.பி.எஸ் மரியாதை
ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை
-
Feb 24, 2024 10:14 ISTஅ.தி.மு.க உடன் சமத்துவ மக்கள் கட்சி பேச்சுவார்த்தை
அதிமுக உடன் சமத்துவ மக்கள் கட்சி பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் சமத்துவ மக்கள் கட்சி 2வது கட்ட பேச்சுவார்த்தை
அதிமுகவின் மூத்த தலைவர்கள் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர்.
-
Feb 24, 2024 09:16 ISTபரந்தூர்: நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு
பரந்தூர் புதிய விமான நிலையம் - நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியீடு
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும்.
-
Feb 24, 2024 09:10 ISTநவக்கிரக கோயில்கள் தரிசினம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மக்களின் வரவேற்பை பொறுத்து ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்க இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்
-
Feb 24, 2024 09:07 ISTராகுல் யாத்திரையில் பிரியங்கா இன்று பங்கேற்பு
ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நீதி யாத்திரையில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்கிறார்
-
Feb 24, 2024 09:04 ISTகடலூர் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கடலூர் கடற்கரையில் குவியும் மக்கள்
மாசி மகத்தை முன்னிட்டு கடலூர் வெள்ளி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடும் மக்கள்.
-
Feb 24, 2024 08:24 ISTஇந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள்: ரூட் சாதனை
இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் - ரூட் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
-
Feb 24, 2024 08:20 ISTதமிழகத்தில் இன்று நடைபெறுகிறது தட்டச்சு தேர்வு
தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தட்டச்சு தேர்வு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 208 தேர்வு மையங்களில் பிப்.24,25- தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வின் முடிவுகள் ஏப்.23-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.