Advertisment

Tamil News Highlights: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

14/02/2024- இன்று நடைபெறும் செய்திகளை, இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

பெட்ரோல் – டீசல் விலை

Advertisment

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63-க்கும், 1 லிட்டர் டீசல் விலை ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது

பிப்.15ஆம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும்" அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர கடிதம் பிப்.15ஆம் தேதி வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது எனவும் எச்சரிக்கை. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

  • Feb 14, 2024 22:29 IST
    டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    டெல்லி உயர் நீதிமன்றத்தில் நாளை வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது



  • Feb 14, 2024 21:36 IST
    CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நாளை பொதுத்தேர்வு

    CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் ஏப்ரல் 2ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் மார்ச் 13ம் தேதியும் நிறைவடைய உள்ளது.



  • Feb 14, 2024 20:56 IST
    தேர்தல் பத்திரம் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

    தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.



  • Feb 14, 2024 20:35 IST
    விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

    டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை சண்டிகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன் முண்டா பங்கேற்கின்றனர்



  • Feb 14, 2024 20:14 IST
    சென்னையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

    சென்னை மாவட்ட மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.



  • Feb 14, 2024 19:48 IST
    மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அ.தி.மு.க; நடிகை கவுதமி

    மக்கள் சேவை செய்ய சரியான கட்சி அ.தி.மு.க. மக்கள் சேவை செய்ய அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன். நான் களத்தில் இறங்கி வேலை செய்ய சரியான இடம் கிடைத்துள்ளது ஜெயலலிதாவிற்கு பின், இ.பி.எஸ் கட்சியை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார் என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்



  • Feb 14, 2024 19:21 IST
    அபுதாபியில் முதல் இந்து கோயில்; திறந்து வைத்தார் மோடி

    அபுதாபியில் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்



  • Feb 14, 2024 19:10 IST
    விவசாயிகளுடன் இன்றிரவு மீண்டும் பேச்சுவார்த்தை

    டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு 7 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, காணொலி காட்சி மூலம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்படுகிறது



  • Feb 14, 2024 18:28 IST
    பெட்ரோலுக்கு மாநில  ரூ.54 வரி விதிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு விளக்கம்

    “பெட்ரோலுக்கு மாநில அரசு ரூ.54 வரி விதிப்பதாக பரவும் தகவல் வதந்தி. 2022 ஏப்ரலில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 110.85 ஆக இருந்தபோது, மாநில அரசின் வாட் ரூ.22.54 ஆக இருந்தது. 2022-ல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசின் கலால், செஸ் வரியாக ரூ.27.9 இருந்தது” தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.



  • Feb 14, 2024 18:22 IST
    விவசாயிகள் போராட்டம்: கல் வீச்சில் 2 டி.எஸ்.பி.கள், 24 போலீசார் காயம் - ஹரியான டி.ஜி.பி தகவல்

    விவசாயிகள் போராட்டம் நடந்த இடத்தில், நேற்று (13.02.2024) நடந்த கல்வீச்சில் 2 டி.எஸ்.பி-கள் மற்றும் 24 போலீசார் காயமடைந்தனர் என்று ஹரியானா டி.ஜ.பி சத்ருஜீத் கபூர் தெரிவித்தார். மேலும்,  “சில விவசாயிகளும் காயமடைந்தனர். சட்டம் மற்றும் ஒழுங்கைப் பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்... முக்கியமாக அம்பாலா-சண்டிகர் பாதை பாதிக்கப்பட்டுள்ளது” என்று டிஜிபி கபூர் மேலும் கூறினார்.



  • Feb 14, 2024 18:19 IST
    விவசாய சங்கத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    சண்டிகரில் உள்ள பஞ்சாப் பவனில் 6 மணிக்கு மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டம் பஞ்சாப் அரசாங்கத்தால் நடத்தப்பட உள்ளது.



  • Feb 14, 2024 18:15 IST
    அ.தி.மு.க பொதுக்கூட்டங்களை நடத்த இ.பி.எஸ் உத்தரவு

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க சார்பில், பொதுக்கூட்டங்களை நடத்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பொதுக்கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 14, 2024 18:13 IST
    இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார் நடிகை கௌதமி

    நடிகை கவுதமி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவர் தற்போது அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.



  • Feb 14, 2024 18:06 IST
    குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை: துபாயில் மோடி பேச்சு

    துபாயில் உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி: “மக்களின் வாழ்வில் அரசின் தலையீடு குறைவாக இருப்பதை உறுதி செய்வதே அரசின் வேலை. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 14, 2024 17:28 IST
    போராடும் விவசாயிகள் மீது தாக்குதல்; யார் தீவிரவாதிகள், உழவர்களா? அரசாங்கமா? ஸ்டாலின் கேள்வி

    முதல்வர் மு.க. ஸ்டாலின்,  “தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக முள் ஆணி படுக்கைகளைப் பாதையில் போட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது தாக்குதலும் நடந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 14, 2024 16:39 IST
    சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை

    சென்னை, நந்தனம் மேற்கு சி.ஐ.டி நகரில் மணல் விற்பனையாளர் கரிகாலன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 



  • Feb 14, 2024 16:37 IST
    இன்று உரிமை முழக்கம்; நாளை வெற்றி முழக்கம் -  ஸ்டாலின் பேச்சு 

    "அம்பேத்கர் உருவாக்கிய  அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் பா.ஜ.க செயல்படுகிறது. ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சி மாண்பை சிதைத்துள்ளனர். இன்றைய நம் உரிமை முழக்கமே நாளைய வெற்றி முழக்கமாக அமைந்திடும்" முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

     



  • Feb 14, 2024 15:39 IST
    ஜாக்டோ ஜியோ போராட்டம் - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு 

    நாளை நடைபெறவிருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 



  • Feb 14, 2024 15:34 IST
    பேச்சுவார்த்தை நடத்த தயார் - விவசாயிகள் நிபந்தனை

    மத்திய அரசுடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த தயார் என சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. பேச்சு வார்த்தையை போராட்ட இடத்திலோ அல்லது சண்டிகரிலோ நடத்த வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை வைத்துள்ளனர். 

     

     



  • Feb 14, 2024 14:29 IST
    செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்

    ஜாமின் கோரிய வழக்கில் "செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்" அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.



  • Feb 14, 2024 14:26 IST
    ஜாக்டோ - ஜியோ ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அறிவித்து இருந்தது.  இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.



  • Feb 14, 2024 13:37 IST
    குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு : நிலைபாட்டை மாற்றிய பா.ம.க

    ‘’நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தாலும், மக்கள் நலனிற்காக இச்சட்டத்திருத்தம் செயல்படுத்தப்படக் கூடாது என பாமக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை நல்லதாக இருந்தாலும், அதை முழுமையாகச் செயல்படுத்துவதில் சிரமம் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Feb 14, 2024 12:57 IST
    ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆகிறார் சோனியா காந்தி

     ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி ஆகிறார் சோனியா காந்தி. இதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் போது ராகுல், பிரியங்கா, அசோக் கெலாட் ஆகியோர் உடனிருந்தனர்.



  • Feb 14, 2024 12:37 IST
    ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரு காலத்தில் திமுகவின் கொள்கை

    "ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரு காலத்தில் திமுகவின் கொள்கையாக இருந்தது"

    "ஒரே நாடு, ஒரே தேர்தல் 2024 தேர்தலில் நிச்சயம் வராது"

    "ராம்நாத் கோவிந்த் குழுவின் அறிக்கை வர வேண்டும், அதன் பின் நிறைய நடைமுறைகள் உள்ளன"

    "தொகுதி மறுவரையறை மூலம் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகும்"

    "ஒரு எம்.எல்.ஏ பல லட்சம் மக்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது, அது முடியவில்லை- பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  



  • Feb 14, 2024 12:36 IST
    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றம்



  • Feb 14, 2024 12:18 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப் போவதில்லை

    ஒரே நாடு ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப் போவதில்லை, சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்,

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்,

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தியுள்ளார்



  • Feb 14, 2024 12:17 IST
    கோடம்பாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோடம்பாக்கம் மேம்பாலத்தில் அமர்ந்து 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

    தீர்வு கிடைக்காததால் 3-வது நாளாக போராட்டம். சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்வரத்து பாதிப்பு 

    டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல். போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். 



  • Feb 14, 2024 12:06 IST
    விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

    பஞ்சாப் - ஹரியானா ஷம்பு எல்லைப் பகுதியில் 2வது நாளாக விவசாயிகள் பேரணி

    போலீஸ் தடுப்பு வேலியை நெருங்கிய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு



  • Feb 14, 2024 11:59 IST
    2 தீர்மானங்களுக்கும் ம.ம.க வரவேற்பு

    முதல்வர் கொண்டுவந்த 2 தீர்மானங்களையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை அழிப்பதாக உள்ளது - ஜவாஹிருல்லா



  • Feb 14, 2024 11:59 IST
    ஒரே நாடு ஒரே தேர்தல் சந்தேகத்தை எழுகிறது

    இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதில் சந்தேகம் எழுகிறது. இந்தியாவில் தமிழக முதல்வர் தான் முதலில் போராட்டத்தை முன்னெடுக்கிறார் - கொங்கு ஈஸ்வரன்



  • Feb 14, 2024 11:58 IST
    39 எம்.பி.க்கள் இருக்கும் போதே, மத்திய அரசிடம் கெஞ்சி கொண்டிருக்கும் நிலை

    சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளில் தொகுதி எண்ணிக்கை அதே விகிதத்தில் இருக்க வேண்டும்

    மக்கள் தொகை எண்ணிக்கைப்படி, தொகுதி எண்ணிக்கையை குறைத்தால், தமிழ்நாடு பாதிக்கப்படும்

    மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு கூடுதல் பரிசு வழங்குவது போல் உள்ளது

    39 எம்.பி.க்கள் இருக்கும் போதே, மத்திய அரசிடம் கெஞ்சி கொண்டிருக்கும் நிலை உள்ளது

    எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தால் என்ன ஆகும்?- ஸ்டாலின் 



  • Feb 14, 2024 11:30 IST
    விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல்? 

    ஜார்க்கண்டில் நடைபெறவிருந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை பயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ரத்து செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மாறாக, காங்கிரஸ் தலைவர் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்பார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.



  • Feb 14, 2024 11:28 IST
     ‘டெல்லி சலோ’ பேரணியை மீண்டும் தொடங்கிய விவசாயிகள்

    விவசாயிகள்  ‘டெல்லி சலோ’ பேரணியை மீண்டும் தொடங்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசுகின்றன. 



  • Feb 14, 2024 11:19 IST
    தொகுதி வரையறைக்கு எதிராக ஸ்டாலின் தனித் தீர்மானம்

    மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்படுவதற்கு எதிராக தனித்தீர்மானம்



  • Feb 14, 2024 11:18 IST
    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம்

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக சட்டப் பேரவையில் தனித்தீர்மானத்தை
    முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின்

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று"  - முதலமைச்சர் ஸ்டாலின்



  • Feb 14, 2024 10:58 IST
    விசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

    விசாயிகள் போராட்டம் காரணமாக ஹரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் செல்போன்களில் தொலைபேசி அழைப்புக்கு மட்டும் அனுமதி மொபைல் இணைய சேவை, ஒட்டுமொத்த எஸ்எம்எஸ் சேவை உள்ளிட்டவை நிறுத்தம் மொபைல் இணைய சேவை, ஒட்டுமொத்த எஸ்எம்எஸ் சேவை உள்ளிட்டவை நிறுத்தம் வரும் 15ஆம் தேதி வரை இணைய சேவையை முடக்கி வைப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவிப்பு



  • Feb 14, 2024 10:34 IST
    மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்

    மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தற்போது ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்



  • Feb 14, 2024 10:16 IST
    ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்! இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் நேற்று வலியுறுத்தினார்!



  • Feb 14, 2024 10:00 IST
    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டது

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயக்குமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 2வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது



  • Feb 14, 2024 09:33 IST
    எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சில மாற்றங்கள் இருக்கலாம்

    எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய நிலையில், இவ்விவகாரம் குறித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது



  • Feb 14, 2024 09:32 IST
    ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை போலீஸார் தாக்குவதாக பஞ்சாப் விவசாயி ராஜ்விந்தர் சிங் குற்றச்சாட்டு

    டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை பயன்படுத்தி 2வது நாளா டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு. ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை போலீஸார் தாக்குவதாக பஞ்சாப் விவசாயி ராஜ்விந்தர் சிங் குற்றச்சாட்டு. 



  • Feb 14, 2024 09:31 IST
    தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு

    தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், மேல்முறையீடு இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டியதாக அண்ணாமலை மீது சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் வழக்கு 2022ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி, பட்டாசு வெடிப்பது தொடர்பாக அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார் அண்ணாமலை மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது



  • Feb 14, 2024 08:28 IST
    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று விசாரணை

    செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை



  • Feb 14, 2024 08:06 IST
    மாசி திருவிழா கொடியேற்றம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் பங்கேற்பு - முருகனுக்கு அரோகரா என பக்தி பரவசம் பிப். 23ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான மாசி தேரோட்டம்



  • Feb 14, 2024 08:05 IST
    அபுதாபியில் இந்து கோயில்: திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

    அபுதாபியில் இந்து கோயிலை இன்று மாலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி



  • Feb 14, 2024 08:04 IST
    ஜன்னல் வழியே கை விட்டு ரயில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

    சென்னை தண்டையார்பேட்டை ரயிலில் நிலையம் அருகே சிக்னலுக்கு காத்திருந்த ஜனா சகப்தி விரைவு ரயிலின் ஜன்னல் வழியே கை விட்டு ரயில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது. தப்பி ஓட முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் இருவரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment