Advertisment

Tamil News Update: 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Update: 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news update

அர்ஜென்டினா அணி சாம்பியன்

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

publive-image

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு 3வது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றது.

கால்பந்து விருதுகள்

publive-image

உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிகமாக 8 கோல்கள் அடித்து கோல்டன் ஷூ விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார். அர்ஜென்டினா அணியின் மெஸ்சி கோல்டன் பந்து விருதை வென்றார்.

அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ், சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் க்ளவுஸ் விருதும், அஜென்டினாவின் 21 வயதான என்சோ பெர்னாண்டஸ்-க்கு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:11 (IST) 19 Dec 2022
    சென்னையில் செல்போன், ரூ.700 பணத்துக்காக போதகர் கொலை

    சென்னை சேலையூர் அருகே வனப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் பெண் போதகர் எஸ்தர் (51) சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், செல்போன் மற்றும் ரூ. 700 பணத்திற்காக லோகநாதன் (20) என்பவரால் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 5 மாதங்கள் தொடர்ந்து வழக்கை கண்காணித்து குற்றவாளியைப் போலீசார் கைது செய்தனர்.



  • 21:01 (IST) 19 Dec 2022
    மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது - கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை

    டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ ட்வீட் செய்துள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்ண்டுப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குவதாகவும், ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு தனடு முழு ஆதரவு இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:32 (IST) 19 Dec 2022
    அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா

    சென்னை, வானகரத்தில் அ.தி.மு.க சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றார். விவசாயி கதையை சொல்லி எடப்பாடி பழனிசாமி பேசினார்.



  • 20:17 (IST) 19 Dec 2022
    புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கான ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.25,000 ஆக உயர்வு

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.



  • 20:15 (IST) 19 Dec 2022
    என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி ரெய்டு... ரூ. 20 லட்சம் கொள்ளை; பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் கோர்டில் சரண்

    சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி போலியாக ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சம் கொள்ளை அடித்த பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    சென்னை மண்ணடியில் என்.ஐ.ஏ அதிகாரி எனக் கூறி செல்போன் கடை உரிமையாளரை மிரட்டி ரூ. 20 லட்சம் வரை பணம் பறித்த வழக்கில், பா.ஜ.க நிர்வாகி வேங்கை அமரன் என்கிற வேலு உள்பட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிரவகியான வேலு இந்த கொள்ளைக்கான தீட்டிகொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 20:13 (IST) 19 Dec 2022
    என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சம் கொள்ளை; பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் கோர்டில் சரண்

    சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி போலியாக ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சம் கொள்ளை அடித்த பா.ஜ.க நிர்வாகி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



  • 19:50 (IST) 19 Dec 2022
    ஆங்கிலம்தான் தேவை - ராகுல்காந்தி

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: “பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பா.ஜ.க தலைவர்கள் விரும்பவில்லை; ஆனால், அவர்களின் பிள்ளைகள் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள், உலகின் பிற நாட்டு மக்களிடம் பேச விரும்பினா, அங்கு இந்தி பயன்படாது; ஆங்கிலம்தான் தேவைப்படும்” என்று கூறியுள்ளார்.



  • 19:39 (IST) 19 Dec 2022
    13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

    13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • 19:34 (IST) 19 Dec 2022
    ஜெயலலிதா உடல்நிலை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தகவல்

    ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது. கிரியாட்டின் 68 மி.கிராம், ரத்த அழுத்தம் 120ஆக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். மடிக்கணியை வைத்துக்கொண்டு தேடிப் பாருங்கள் உங்களுக்கே முடிவு தெரியும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தகவல் தெரிவித்துள்ளார்.



  • 19:33 (IST) 19 Dec 2022
    ஜெயலலிதா உடல்நிலை குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தகவல்

    ஜெயலலிதாவின் உடல் எடை 100 கிலோ, சர்க்கரை 220 ஆக இருந்தது. கிரியாட்டின் 68 மி.கிராம், ரத்த அழுத்தம் 120ஆக இருந்தது. அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை நீங்களே சுயபரிசோதனை செய்து பாருங்கள். மடிக்கணியை வைத்துக்கொண்டு தேடிப் பாருங்கள் உங்களுக்கே முடிவு தெரியும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தகவல் தெரிவித்துள்ளார்.



  • 19:31 (IST) 19 Dec 2022
    கோவில்பட்டி அருகே தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் தனியார் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் வந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.



  • 18:58 (IST) 19 Dec 2022
    இமாச்சலப் பிரதேச முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

    இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பதவியேற்ற 10 நாள்களுக்குள் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.



  • 18:44 (IST) 19 Dec 2022
    பொருட்காட்சி டெண்டர் ரத்து செய்ய மறுப்பு

    சென்னை தீவுத் திடலில் நடைபெறவுள்ள 47ஆவது சுற்றுலா பொருள்காட்சி டெண்டரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.



  • 18:30 (IST) 19 Dec 2022
    கர்நாடக சட்டபேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. காங்கிரஸ் எதிர்ப்பு

    கர்நாடக மாநில சட்டப்பேரவையில் இந்துத்துவ சித்தாந்தவாதியான வீர சாவர்க்கரின் உருவப் படம் திறக்கப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.



  • 18:19 (IST) 19 Dec 2022
    வாரிசு பாடல் நாளை வெளியீடு

    நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் வாரிசு படத்தின் 3ஆவது பாடல் நாளை (டிச.20) மாலை வெளியாகிறது.



  • 18:14 (IST) 19 Dec 2022
    சென்னை சிறுமி வன்கொடுமை; தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

    சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாத்தா, சித்தப்பாக்கள் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுமியின் சகோதரர்கள் ஒருவருக்கு 10 ஆண்டும், மற்றொருவருக்கு 5 ஆண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



  • 17:44 (IST) 19 Dec 2022
    ராஜஸ்தானில் ரூ.500க்கு சிலிண்டர் வழங்கப்படும்.. முதலமைச்சர் வாக்குறுதி

    ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார்.



  • 17:26 (IST) 19 Dec 2022
    பரந்தூர் விமான நிலையம்.. நாளை ஆலோசனை

    பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக நாளை (டிச.20) ஆலோசனை நடைபெறவுள்ளது.

    இந்த அமைச்சரவை கூட்டத்தில் கிராம மக்களின் கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.



  • 17:26 (IST) 19 Dec 2022
    பரந்தூர் விமான நிலையம்.. நாளை ஆலோசனை

    பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக நாளை (டிச.20) ஆலோசனை நடைபெறவுள்ளது.

    இந்த அமைச்சரவை கூட்டத்தில் கிராம மக்களின் கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.



  • 17:17 (IST) 19 Dec 2022
    சென்னை அடையாறில் போதை மாத்திரை பறிமுதல்

    சென்னை அடையாறில் வாகன சோதனையின் போது போதை மாத்திரை வைத்திருந்தவர கோகுல் என்பவரை போலீசார் கைது செய்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 17:05 (IST) 19 Dec 2022
    ஆங்கிலம் கற்க வேண்டும்.. ராகுல் காந்தி

    இந்திக்கு பதில் ஆங்கிலம் கற்க வேண்டும் என ராஜஸ்தான் மக்களிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 16:46 (IST) 19 Dec 2022
    ராணிப்பேட்டை அருகே குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே அங்கன்வாடிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 2 வயது குழந்தை குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது.



  • 16:39 (IST) 19 Dec 2022
    ஏப்ரல் முதல் ரேஷனின் செறிவூட்டப்பட்ட அரிசி

    வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ரேஷனின் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்



  • 16:12 (IST) 19 Dec 2022
    கூடுதல் நிதியை எங்கிருந்து பெறப்போகிறது? – ப.சிதம்பரம்

    அரசின் செலவினங்களுக்கு கூடுதலாக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது அரசின் செலவினங்களுக்கான கூடுதல் நிதியை மத்திய அரசு எங்கிருந்து பெறப்போகிறது? என அரசின் செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரும் மசோதா மீது மாநிலங்களவையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்



  • 16:10 (IST) 19 Dec 2022
    புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் நியமனம்- முதல்வர் ஆணை

    “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைவராக திருப்பூரை சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” அமைக்கப்பட்டுள்ளது



  • 15:29 (IST) 19 Dec 2022
    பொதுமக்கள் போராட்டம்; அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்

    புதுக்கோட்டை, அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர், உதவியாளர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவறான சிகிச்சை புகாரில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் இணை இயக்குனர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்



  • 15:16 (IST) 19 Dec 2022
    கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் முழு உருவப்படம் திறப்பு

    கர்நாடக சட்டப்பேரவையில் சாவர்க்கரின் முழு உருவப்படத்தை அம்மாநில சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி திறந்துவைத்தார்



  • 14:58 (IST) 19 Dec 2022
    கரூரில் தி.மு.க - அ.தி.மு.கவினர் மோதல்

    கரூர், அதிமுக நிர்வாகி திரு.வி.க கடத்தப்பட்ட விவகாரத்தில் திமுக - அதிமுகவினர் மோதல்

    இருதரப்பினர் மாறி மாறி செருப்பு வீச்சு. சம்பவ இடத்திற்கு எஸ்.பி. வருகை

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கார் கண்ணாடி உடைப்பு



  • 14:44 (IST) 19 Dec 2022
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

    கடலூர், திட்டக்குடி அருகே மீண்டும் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை சர்ச்சை

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

    அதே பகுதியில் மருந்தகம் நடத்திய சுரேஷ் என்கிற போலி மருத்துவர் கைது



  • 14:41 (IST) 19 Dec 2022
    வேட்பாளர் கடத்தல் - தேர்தலுக்கு விதிக்க கோரிக்கை

    கரூர் மாவட்ட துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்க கோரிக்கை

    மதுரை உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் தரப்பில் முறையீடு



  • 14:16 (IST) 19 Dec 2022
    நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்ய தடை

    நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

    மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை



  • 14:03 (IST) 19 Dec 2022
    கல்லூரி மாணவி தற்கொலை

    சென்னை குரோம்பேட்டையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

    போன் செய்தால் எடுக்க இவ்வளவு நேரமா? என தாய் கண்டித்ததாக கூறப்படுகிறது .

    பேசிக்கொண்டிருந்த போதே அழைப்பை துண்டித்துவிட்டு மாணவி சென்ற நிலையில் தற்கொலை



  • 14:03 (IST) 19 Dec 2022
    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாகனம் மீது தாக்குதல்

    திண்டுக்கல் மாவட்டம் நாகம்பட்டி அருகே சென்ற போது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல்

    4 கார்களில் வந்த மர்ம நபர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் காரின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு

    திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு சென்ற போது கார் மீது தாக்குதல்

    கரூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில் தாக்குதல் என தகவல்



  • 13:35 (IST) 19 Dec 2022
    நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

    நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

    உப்பெனா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் வழக்கு

    உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா உருவாக்கப்பட்டதாக மனு.

    உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை - நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம்

    விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்



  • 13:32 (IST) 19 Dec 2022
    நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறி உள்ளது - ஸ்டாலின்

    நம்பர் 1 தமிழ்நாடு என்ற கனவு நிறைவேறி உள்ளது

    அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கைகோர்க்க வேண்டும்.

    'நம்ம ஸ்கூல்' திட்டத்தை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.



  • 12:48 (IST) 19 Dec 2022
    நம்ம ஸ்கூல் திட்டம்:

    சென்னை, கிண்டியில் அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் வகையில் தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல்' திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்பு



  • 11:49 (IST) 19 Dec 2022
    பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை. பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் தலைமையிலான குழு ஆலோசனை



  • 11:49 (IST) 19 Dec 2022
    டிஜிட்டல் பூட்டு

    டெல்லி, பஸ்சிம் விஹாரில் 'டிஜிட்டல் பூட்டு' கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் டிஜிட்டல் பூட்டை கைப்பற்றி விசாரணை



  • 11:48 (IST) 19 Dec 2022
    பொங்கல் தொகுப்பு

    பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்பு



  • 11:42 (IST) 19 Dec 2022
    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது

    திருப்பூர், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என கோரி மனு தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • 11:01 (IST) 19 Dec 2022
    அன்பழகன் பெயர்

    சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



  • 11:00 (IST) 19 Dec 2022
    அமைப்பு செயலாளர் நியமனம்

    கட்சியின் அமைப்பு செயலாளராக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.



  • 10:56 (IST) 19 Dec 2022
    பேரணி தடுத்து நிறுத்தம்

    பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், ஏகனாபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற கிராம மக்கள் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. பேரணியாக வந்த கிராம மக்களுடன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.



  • 10:46 (IST) 19 Dec 2022
    மீன்வளத்துறை எச்சரிக்கை

    புயல் எச்சரிக்கை காரணமாக, தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 10:45 (IST) 19 Dec 2022
    ஹிமாச்சல் முதல்வருக்கு கொரோனா

    ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 09:40 (IST) 19 Dec 2022
    மீன்பிடிக்க தடை

    அந்தமானுக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிய நிலையில், ராமேஸ்வரம் கடற்பகுதிக்கு செல்ல மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 09:37 (IST) 19 Dec 2022
    புகார்

    திருச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உதயநிதி பங்கேற்கும் மாநாடு என பொய் சொல்லி, மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களிடம் வசூல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 08:57 (IST) 19 Dec 2022
    பிரதமர் மோடி வாழ்த்து

    கால்பந்து உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 08:53 (IST) 19 Dec 2022
    தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

    மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவையின் 10-வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.



  • 08:46 (IST) 19 Dec 2022
    நேரில் ரசித்த மம்முட்டி, மோகன்லால்

    கத்தாரில் நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டியை மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் நேரில் கண்டு ரசித்தனர்.



  • 08:44 (IST) 19 Dec 2022
    அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் வாழ்த்து

    FIFA உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment