Advertisment

Tamil News Today : ஜல்லிக்கட்டு- இணையதளத்தில் பதிவு தொடக்கம்

0/02/2024: இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும், லேட்டஸ்ட் அப்டேட்களையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saa

பெட்ரோல் மற்றும் டீசல் விலை

Advertisment

சென்னையில் தொடர்ந்து 626 ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2577 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 769 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 769 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 08, 2024 23:25 IST
    இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு

    மதுரை, உசிலம்பட்டி அருகே தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. வீட்டு பூட்டை உடைத்து 5 சவரன் நகை, ₨1 லட்சம் ரொக்கம் திருட்டு 



  • Feb 08, 2024 21:21 IST
    சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக தகவல்

    சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சமீபத்திய நிதிப் பரிமாற்றங்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, இவ்விவகாரம் தீர்க்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



  • Feb 08, 2024 20:04 IST
    ஓய்ந்து விடக் கூடாது: பழனிவேல் தியாகராஜன்

     

    "தமிழ் மொழியின் கடந்த காலப் பெருமைகளைப் பேசி நாம் ஓய்ந்து விடக் கூடாது" என சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.



  • Feb 08, 2024 19:46 IST
    உதகை விபத்து: தொழிலாளிகளுக்கு ரூ.5 லட்சம் நிதி

     

    உதகையில் கட்டிட பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    தொடர்ந்து, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் தலா ₹5 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையையும் வழங்கினார்.



  • Feb 08, 2024 19:33 IST
    கோவை: விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

     

    கோவை உடையார் பாளையம் பகுதியில் உள்ள அஸ்வினி அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மோகன சுந்தரம் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.



  • Feb 08, 2024 19:10 IST
    தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம்: மக்களவையில் கனிமொழி கேள்வி

    தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வியெழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார்.



  • Feb 08, 2024 18:28 IST
    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்; சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றும்; சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 47% வாக்குகளை பெறும் என சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க, பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்றும் சி வோட்டர், இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.



  • Feb 08, 2024 18:08 IST
    மன்மோகன்சிங் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து லோக் சபாவில் வெள்ளை அறிக்கை தாக்கல்

    10 ஆண்டுகால மன்மோகன்சிங் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து லோக் சபாவில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வாராக்கடன் அதிகமாக இருந்ததால், வங்கிகள் பலவீனமாக இருந்ததாகவும், டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசாமாக இருந்ததாகவும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Feb 08, 2024 17:54 IST
    சென்னையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; 3 பிரிவுகளில் வழக்கு

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் விடுத்த நபர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற திட்டம்.



  • Feb 08, 2024 16:26 IST
    புதிய சட்டத்தை இயற்றும் ஆஸி.,

    வேலை நேரத்திற்கு பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் குறுஞ்செய்தி, அழைப்புகளை புறக்கணிக்கலாம், மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து கொள்ளலாம் என்கிற புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு இயற்றுகிறது. 



  • Feb 08, 2024 16:11 IST
    புதுச்சேரி: மாலை நேரங்களில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் 

    புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் வரும் 14ம் தேதி மாலை தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

     



  • Feb 08, 2024 15:36 IST
    ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் மாதிரி வடிவம் வெளியீடு 

    ஓட்டுநர் இல்லா மெட்ரோ  ரயில்களின் மாதிரி வடிவத்தை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டது. மெட்ரோ ரயிலில் 2ம் கட்ட வழித்தடத்தில் 3 பெட்டிகள் கொண்ட  36 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயங்கவுள்ள்ளன. 



  • Feb 08, 2024 15:23 IST
    "மாநில அரசுகளை பிரதமர் மதிப்பதில்லை"  - ஸ்டாலின் காணொலி வாயிலாக உரை 

    "பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டி போல நினைக்கிறார். முந்தைய பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள், ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை" என பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்து டெல்லியில் கேரள முதலமைச்சர் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி உரை வெளியிட்டுள்ளார். 

     



  • Feb 08, 2024 14:44 IST
    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு

    எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான மறு ஆய்வு வழக்குகளை நானே விசாரிக்கலாம் என தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்



  • Feb 08, 2024 14:34 IST
    மாநில அரசுகளை பிரதமர் மதிப்பதில்லை - ஸ்டாலின்

    முந்தைய பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள், ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை என டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்



  • Feb 08, 2024 14:23 IST
    செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு; இ.டி நடவடிக்கை

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அசோக் குமார் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்துள்ளது



  • Feb 08, 2024 14:03 IST
    டெல்லி போராட்டத்தில் பி.டி.ஆர் பங்கேற்பு

    ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்



  • Feb 08, 2024 13:46 IST
    வெடிகுண்டு மிரட்டலால் பதற்றப்பட வேண்டாம் - காவல்துறை

    சென்னையில் 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது



  • Feb 08, 2024 13:24 IST
    சென்னையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர விசாரணை

    சென்னை உள்ள 4 தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி நிர்வாகம் பெற்றோரை வரவழைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • Feb 08, 2024 13:10 IST
    அ.தி.மு.க சிறப்பான கூட்டணியை அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி

    இந்தியா கூட்டணி வலிமை இழந்து வருகிறது. மக்களவை தேர்தலில் அ.தி.மு.க சிறப்பான கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்



  • Feb 08, 2024 12:45 IST
    அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி

    கூட்டணியை உறுதி செய்த புரட்சி பாரதம் கட்சி

    "மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது உறுதி"

    "வரும் வாரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி உறுதி செய்யப்படும்"

    விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 தனித் தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

    புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அறிவிப்பு



  • Feb 08, 2024 12:25 IST
    குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: 2 பேர் பலி

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி.

    பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் 2 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு



  • Feb 08, 2024 12:18 IST
    டெல்லியில் பினராயி விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

    டெல்லியில் பினராயி விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

    டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

    பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என குற்றச்சாட்டு

    திமுக சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்பு



  • Feb 08, 2024 11:58 IST
    கருப்பு அறிக்கை வெளியிட்ட கார்கே

    பாஜகவின் பொருளாதாரம் - கருப்பு அறிக்கை வெளியீடு

    பாஜக அரசின் 10 ஆண்டு கால பொருளாதார நிர்வாகம் குறித்த கருப்பு அறிக்கை வெளியீடு

    கருப்பு அறிக்கை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே



  • Feb 08, 2024 11:48 IST
    நா.த.க நிர்வாகிகள் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜர்


    சென்னை, புரசைவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜர்

    சேலம் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

    சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை



  • Feb 08, 2024 11:41 IST
    அண்ணாமலையின் மனு தள்ளுபடி

    சிறுபான்மையினர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அண்ணாமலை தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

    அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கலாம்-  நீதிபதி



  • Feb 08, 2024 11:11 IST
    வெள்ள பாதிப்பு - திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உரிய நிதி வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்



  • Feb 08, 2024 11:00 IST
    ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை

    "ரெப்போ ரேட் மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும்" ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை உலகப் பொருளாதாரம், தொடர்ந்து கலவையான தோற்றத்தையே வழங்கி வருகிறது - சக்தி காந்ததாஸ்



  • Feb 08, 2024 10:40 IST
    வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா முதல்வர்?

     முதல்வர் ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணம் மூலம் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் முதலீடு என்ற இலக்குக்கான வரைவு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? - இபிஎஸ் கேள்வி



  • Feb 08, 2024 10:22 IST
    மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர் மத்திய அரசு அளிக்கும் நிதிப்பகிர்வை உணர்த்தும் வகையில் மக்களுக்கு வழங்கப்பட்ட அல்வா.



  • Feb 08, 2024 09:59 IST
    செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்து 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.  



  • Feb 08, 2024 09:46 IST
    ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை - குழு அமைப்பு

    போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு ஊதிய உயர்வு கோரி கடந்த மாதம் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து, 14 பேர் கொண்ட குழு அமைத்து போக்குவரத்து துறை செயலர் உத்தரவு



  • Feb 08, 2024 08:42 IST
    நாடாளுமன்றம் முன் திமுக எம்.பி.க்கள் இன்று ஆர்ப்பாட்டம்

    மிக்ஜாம் மற்றும் பெருவெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சென்னை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. இதை தேசிய பேரிடகராக மத்திய ஏற்றுக்கொள்ளவில்லை. நீது வழங்கவில்லை. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை அணிந்து இன்று எதிர்ப்பை பதிவு செய்யும் திமுக எம்.பி.க்கள், நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில அரசின் நிதி பகிர்வில் மத்திய அரசு தலையிடுவதை கண்டித்து டெல்லியில் கேரள அரசு சார்பில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது. இதில், திமுக எம்.பி. க்கள் பங்கேற்று ஆதரவு அளிக்க உள்ளனர்.



  • Feb 08, 2024 07:53 IST
    இடும்பாவனம் கார்த்திக், யூடியூபர் தென்னகம் விஷ்ணு ஆகியோர் புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று அஜராக வாய்ப்பு

    என்ஐஏ அனுப்பிய சம்மன் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், யூடியூபர் தென்னகம் விஷ்ணு ஆகியோர் புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று ஆஜராகின்றனர்.



  • Feb 08, 2024 07:52 IST
    குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

    சென்னை கொளத்தூரில் வசித்து வரும், குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை! மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை வைத்து, ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



  • Feb 08, 2024 07:51 IST
    கோவில் வாசலில் தீ - 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் தீ வைத்த மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை தேடி வருகின்றனர்.



  • Feb 08, 2024 07:51 IST
    19 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

    இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 19 தமிழக மீனவர்கள் கைது 19 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை..



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment