Advertisment

Tamil Breaking News Highlights: முல்லைப்பெரியாறு அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு- கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு

Tamil News Live Updates-02-09-2024: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mullaperiyar dam

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 169-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பதக்கம் உறுதி 

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் தமிழ்நாடு வீராங்கனை துளசிமதி முருகேசன். பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் துளசிமதி பதக்கத்தை உறுதி செய்தார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • Sep 02, 2024 22:55 IST
    ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதல்வர் ஸ்டாலின்!

    அமெரிக்க சுற்றுப்பயணத்தில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியாரின் ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தில் உள்ள கருத்தோடு வீடியோவை பகிர்ந்துள்ளார்!



  • Sep 02, 2024 22:54 IST
    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    பாராலிம்பிக்ஸில் ஒரே போட்டியில் 2 பதக்கங்களை தட்டிச் சென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!



  • Sep 02, 2024 20:31 IST
    மாநில ஆளுனர் பதவி நீக்கப்பட வேண்டும்: காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி

    மாநில ஆளுனர் பதவி நீக்கப்பட வேண்டும் அல்லது அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும். ஆளுனர் என்பவர் முதல்வருக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எதிராகவோ இருந்தால், இறங்கி வர வேண்டியது ஆளுனர் தான். ஏனென்றால் முதல்வர் யார் என்பதற்கு தான் தேர்தல் நடக்கிறது. ஆனால் ஆளுனர் யார் என்பதற்கு அல்ல என்று, காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.



  • Sep 02, 2024 20:25 IST
    கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் விற்பனை: கறிக்கடைக்கு சீல்

    சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வந்த இறைச்சிக் கடை குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டபோது ஆயிரக்கணக்கான கெட்டுப்போன ஆட்டுக்கால்களைப் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை! 



  • Sep 02, 2024 20:24 IST
    பிளடி பெக்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.



  • Sep 02, 2024 20:22 IST
    ‘ELITE’ திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வீரர் - வீராங்கனைகள்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE’ திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வீரர் - வீராங்கனைகள். மாரியப்பன் தங்கவேலு, ராஜேஷ் ரமேஷ், வித்யா ராமராஜ், துளசிமதி முருகேசன், பிருத்விராஜ் தொண்டைமான், வைஷாலி ஆகியோர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.



  • Sep 02, 2024 19:31 IST
    நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

    'வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம்! தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் மாரி செல்வராஜ் நிரூபித்திருக்கிறார்' என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 



  • Sep 02, 2024 18:59 IST
    700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் பறிமுதல் 

    சென்னை, சைதாப்பேட்டையில் அதிகாரி அதிரடி சோதனையில் சிக்கிய 700 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்கள், சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருத்தவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு மாதமாக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டுக் கால்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



  • Sep 02, 2024 18:57 IST
    கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகள்- உயர்நீதிமன்றம் அதிரடி

    "பழனி முருகன் கோவில் கிரிவலப்பாதையில் அப்புறப்படுத்தாமல் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்" என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 02, 2024 18:56 IST
    ரஜினி கதாபாத்திரம் பெயர் வெளியீடு 

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'கூலி' திரைப்படத்தில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். 



  • Sep 02, 2024 18:45 IST
    போலீசுக்கு பாராட்டு 

    மாநில அளவில் நடந்த பளுதூக்குதல் போட்டியில் 75 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் மகேஸ்வரனை, மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேரில் அழைத்து பாராட்டினார். 



  • Sep 02, 2024 18:45 IST
    தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சு 

    கேரளா திரைத்துறையில் நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, தமிழ்நாட்டிலிருந்து 2 நடிகைகள் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தை நாடி, கமிட்டி அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை கேட்டறிந்து சென்றுள்ளனர்” என்று தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி தெரிவித்துள்ளார். 



  • Sep 02, 2024 18:37 IST
     ரூ.2,817 கோடி செலவில் டிஜிட்டல் வேளாண் பணி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    2,817 கோடி செலவில் டிஜிட்டல் வேளாண் பணிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான ரூ.3,979 கோடி திட்டத்திற்கும் ரூ.2,291 கோடி மதிப்பிலான வேளாண் கல்வி, மேலாண்மைத் திட்டத்திற்கும் 860 கோடி மதிப்புள்ள தோட்டக்கலை திட்டத்திற்கும் ரூ.1,702 கோடி கால்நடை சுகாதார மேலாண்மை, உற்பத்தித் திட்டத்திற்கும் கிருஷி விக்யான் கேந்திராவை வலுப்படுத்த 1,202 கோடி திட்டத்திற்கும் இயற்கை வள மேலாண்மைக்கான 1,115 கோடி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



  • Sep 02, 2024 18:08 IST
    கொல்கத்தா பெண் மருத்துவர் மரணம்: சிவகங்கையில் அரசு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

    கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்
    சிவகங்கை மாவட்டத்தில் அந்த சம்பவத்தினைக் கண்டித்தும், குற்றவாளிகளை தூக்கிலிடவும், நாடு முழுவதும் பெண் மீதான பாலியல் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடவேண்டும் என தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

    இப்போராட்டத்தில் கண்ணதாசன் தலைமை தாங்கிட ராதாகிருஷ்ணன் கோரிக்கை விளக்கஉரை ஆற்றினார்.தொடர்ந்து மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா கருத்துரை வழங்கினார். இந்தப் போராட்டத்தில்கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தினர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



  • Sep 02, 2024 17:53 IST
    'தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்கனும்' - ராதிகா பேச்சு 

    ``தப்பு செய்யும் ஆணை தான் நமது சமூகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றது. ஹேமா கமிட்டி போல் தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும்'' என்று நடிகை ராதிகா கூறியுள்ளார். 



  • Sep 02, 2024 17:45 IST
    சிவகங்கை: ஒன்றோடு ஒன்று 3 வாகனங்கள் மோதி விபத்து 

    சிவகங்கை காலேஜ் ரோடு பகுதியில் மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ் அவரது சொகுசு காரை இயக்கி வந்துள்ளார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த இண்டிகா மற்றும் டாட்டா ஏசி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் டாட்டா ஏசி ஓட்டுநர் பிரகாஷ் மற்றும் சிவ தனுஷ் ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து சிவகங்கை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • Sep 02, 2024 17:43 IST
    இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் பேச்சு 

    “சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய முன்முயற்சி இந்திய கார் பந்தய வீரர்களுக்குச் சர்வதேசத் தளத்தில் போட்டியிடுவதற்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும். மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் வீரர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெறவும் உதவுகிறது. இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உயர்மட்ட பந்தயத்திற்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தும். தெற்காசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை இந்தப் பந்தயத்தை நடத்துவது மேலும், சிறப்பாகும்” என்று  சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கூறியுள்ளார். 



  • Sep 02, 2024 17:41 IST
    பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 தங்கம்

    பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024: ஆடவர் ஒற்றையர் பிரிவில் (SL3) இந்திய பேட்மிண்டன் வீரர் குமார் நிதேஷ், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை வீழ்த்தி தங்கம் வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2வது தங்கம் மற்றும் 9வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது

     



  • Sep 02, 2024 17:41 IST
    'அரசியல் ஆசை இருக்கு': நடிகை ராதிகா 

    "தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை இருக்கு;  நீங்க மக்களுக்காக பேசபோறீங்களே, உங்க கூட இருக்கின்ற பெண்களுக்காக ஒரு வார்த்தை சொல்லுங்க" என்று  நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். 



  • Sep 02, 2024 16:59 IST
    நில மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் கைது

    ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் கரூரில் இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது முன் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சேகர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே, கைதான எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார்.



  • Sep 02, 2024 16:56 IST
    சென்னையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்

    சென்னை சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக்கால்களை விற்பனை செய்த கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல்  வைத்தனர். ஆயிரக் கணக்கான ஆட்டுக்கால்களைப் பதப்படுத்தி விற்பனை செய்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 700 கிலோ ஆட்டுக் கால்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்து அழிக்கப்பட்டன.



  • Sep 02, 2024 16:17 IST
    ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் அரசிடம் 250 பேருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க பணமில்லையா? - சீமான் 

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ஆடம்பர கார் பந்தயம் நடத்தும் அரசிடம் 250 பேருக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க பணமில்லையா; உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களைக் குறைக்கும் தமிழக அரசின் தவறான நிர்வாக முடிவு” என்று கூறியுள்ளார்.



  • Sep 02, 2024 15:31 IST
    சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்​வு கட்டாயம் - தேர்வுத்துறை உத்தரவு

     “சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்​வு கட்டாயம்; சிறுபான்மை மொழி மாணவர்களும், கட்டாயம் தமிழ் தேர்வு எழுத வேண்டும். 10, 11 மற்றும் 12ம்  வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



  • Sep 02, 2024 14:54 IST
    பாரிஸ் சாந்து சிலைகளுக்கு அனுமதி கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 02, 2024 14:32 IST
    டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

    ஜூலை 13 ஆம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்



  • Sep 02, 2024 14:14 IST
    செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவின் மீதான விசாரணையின்போது, விசாரணை அறிக்கையை, உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலாக, எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 02, 2024 13:41 IST
    சாதிவாரி கணக்கெடுப்பு; உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

    சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 02, 2024 13:37 IST
    ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் எப்போது? ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

    3 மாதத்தில் 'ஸ்லீப்பர்' வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படும்" என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்



  • Sep 02, 2024 13:36 IST
    பாலியல் தொல்லை - தலைமை காவலர் சஸ்பெண்ட்

    சென்னை சைதாப்பேட்டையில் ரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த பெண் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை அளித்த சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்



  • Sep 02, 2024 13:34 IST
    என் மகனின் வாழ்க்கையை அழித்த தோனியை மன்னிக்க மாட்டேன் - யுவராஜின் தந்தை காட்டம்

    என் மகனின் வாழ்க்கையை அழித்த தோனியை மன்னிக்க மாட்டேன். இந்திய அணிக்காக இன்னும் 5 ஆண்டுகள் விளையாடியிருப்பார், அதை தோனி கெடுத்து விட்டார் என யுவராஜின் தந்தை யோக்ராஜ் காட்டமாக கூறியுள்ளார்



  • Sep 02, 2024 13:13 IST
    சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது; ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

    கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து கொள்ளட்டும். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை விட தமிழக பாடத்திட்டம் சிறப்பாக உள்ளது. போட்டித் தேர்வுகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெறுகின்றனர். மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது என விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்



  • Sep 02, 2024 12:43 IST
    எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்குவதை சமீபத்திய செய்திகள் உணர்த்துகின்றன. இது மிகுந்த கவலையளிக்கிறது

    சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்

    • எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்



  • Sep 02, 2024 12:27 IST
    என் உழைப்பை தொடர்ந்து பாராட்டும் முதல்வருக்கு நன்றி: மாரி செல்வராஜ்



  • Sep 02, 2024 11:41 IST
    ராதிகாவிடம் சிறப்பு குழு விசாரணை

    கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளை ஆபாசமாக படம் பிடிப்பதாக நடிகை ராதிகா குற்றம் சாட்டியிருந்த நிலையில், கேரள சிறப்பு குழு, தொலைபேசி மூலம் விசாரணை

    கேரள திரைத்துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழு அமைத்துள்ள மாநில அரசு



  • Sep 02, 2024 11:33 IST
    ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆக. 31ம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது;
    இது கடந்த 2022-23ம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவான 44.22 லட்சம் டன்னை விட 9.26 லட்சம் டன், அதாவது 21% குறைவு ஆகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கிறது;
    உழவர்கள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு  ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும்
    - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்



  • Sep 02, 2024 10:38 IST
    தங்கம் விலை ரூ200 குறைவு

    தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 53,360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 25 ரூபாய் குறைந்து 6,670 ரூபாய்க்கு விற்பனை 



  • Sep 02, 2024 10:02 IST
    நடராஜன் உருக்கம்

    "பாதையெல்லாம் முட்கள் தான் " - நடராஜன் உருக்கம்

    என்னுடைய வாழ்க்கை பாதை முழுவதும் முட்களாகவே இருந்தன. 3 ஆண்டாக காலணி கூட இல்லாமல் மைதானத்தில் ஓடினேன்.

    வசதி இல்லாத காலத்தில் என் அம்மா சமைத்ததுதான் நல்ல உணவு. அம்மா சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டு பயிற்சி பெற்றேன் - இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்



  • Sep 02, 2024 09:59 IST
    த.வெ.க மாநாடு தள்ளிப்போகிறதா?

    த.வெ.க மாநாடு ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா?

    விஜய்யின் த.வெ.க மாநாடு தேதி மாற்றம் தொடர்பாக ஜோதிடரை அணுகிய புஸ்ஸி ஆனந்த்

    வரும் 23ஆம் தேதி அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக ஜோதிடரை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்

    அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்துள்ளார்

    மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்



  • Sep 02, 2024 08:51 IST
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22,601 கன அடியாக அதிகரிப்பு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 116.270 அடி, நீர் இருப்பு - 87.64 டி.எம்.சி, நீர்வரத்து - 22,601 கன அடி, நீர் வெளியேற்றம் - 13,500 கன அடி



  • Sep 02, 2024 08:50 IST
    நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம்

    நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி மரணம் - அதிர்ச்சி

    திருச்சி அரியமங்கலத்தில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட 15 வயது மாணவி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்

    மாணவி உடல் உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு



  • Sep 02, 2024 08:50 IST
    கப்பலூர் சுங்கச் சாவடியில் மீண்டும் மோதல்

    கப்பலூர் சுங்கச் சாவடியில் மீண்டும் மோதல்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியில் மீண்டும் மோதல்

    உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதாக கூறி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம்

    இன்று காலை சுங்கச் சாவடி வழியாக சென்ற உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டதால் தகராறு

    கட்டணம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளூர் வாகன ஓட்டிகள்



  • Sep 02, 2024 08:21 IST
    19 ரயில்கள் ரத்து

    ஆந்திரா வெள்ளம் - 2வது நாளாக ரயில் சேவை பாதிப்பு

    ஆந்திரா, தெலங்கானாவில் தொடரும் கனமழையால் வெள்ளம் - 2வது நாளாக ரயில் சேவை பாதிப்பு

    ஆந்திரா, தெலங்கானாவில் தொடரும் கனமழையால் ராயப்பனாடு ரயில்நிலைய பகுதியில் தண்டவாளத்தை சூழ்ந்த வெள்ளம்

    சார்மினார் விரைவு ரயில், கோரமண்டல் விரைவு ரயில், சென்னை-புதுடெல்லி விரைவு ரயில் உள்ளிட்ட 19 ரயில்கள் ரத்து



  • Sep 02, 2024 08:19 IST
    இன்று சிகாகோ செல்கிறார் ஸ்டாலின்

    இன்று சிகாகோ செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சிகாகோ நகருக்கு செல்கிறார்

    பல்வேறு முன்னனி நிறுவனங்களின் தொழில் அதிபர்களை சந்திக்க திட்டம் 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment