Advertisment

News Highlights : அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, தமிழகம் முழுவதும் 4,500 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
News Highlights : அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

Tamil News Today : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 35,873பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு 18,06,861 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 5,559 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருந்த 448 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 2,84,278 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

இன்று கடைகள் திறப்பு; காவல்துறை எச்சரிக்கை :

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது. நேற்றும் இன்றும் இரவு 9 மணி வரை கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கி உள்ள நிலையில், தளர்வுகளை பயன்படுத்தி பொருள்கள் வாங்குகிறோம் என்று தேவையில்லாமல் நகர் முழுவதும் சுற்றித் திரிய கூடாது எனவும், அந்தந்த பகுதிகளிலேயே பொருள்களை வாங்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. அதிக விலைக்கு பொருள்களை விற்றால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 4500 பேருந்துகள் இயக்கம் :

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, தமிழகம் முழுவதும் 4,500 பேருந்துகள் இன்று இயக்கப்பட உள்ளதாகவும், மக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டியதே எங்கள் நோக்கம் எனவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில், 30% பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாவட்டங்களுக்கு சிறப்பு கவனம்; அமைச்சர்கள் நியமனம் :

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்துக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் சேகர் பாபு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:45 (IST) 23 May 2021
    நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறக் கூடாது; முடிவில் மாற்றமில்லை - தமிழக அரசு

    தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறக் கூடாது எனும் அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



  • 21:33 (IST) 23 May 2021
    சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமனம்!

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக செல்வப் பெருந்தகையும் துணை தலைவராக ராஜேஷ் குமாரும் நியமனம் செய்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.



  • 20:42 (IST) 23 May 2021
    பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை - முதல்வர் ஸ்டாலின் நன்றி

    முதல்வர் பொது நிவாரண நிதியாக இதுவரை ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பொது பெறப்பட்ட பொது நிவாரண நிதியில் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியும் ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 20:38 (IST) 23 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,483 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 20:36 (IST) 23 May 2021
    தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிப்பு

    தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மே 30 வரையிலான காலகட்டத்திற்கு 3.5 லட்சத்தில் இருந்து 5.6 லட்சமாக ரெம்டெசிவிர் மருந்தை அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 22.17 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை ஒதுக்கியுள்ளது.



  • 20:34 (IST) 23 May 2021
    பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும் - விற்பனையாளர்கள் கோரிக்கை

    பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு பெட்ரோலிய விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் பெட்ரோல் பங்குகளை இயக்க அனுமதிக்க வேண்டும். என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.



  • 20:07 (IST) 23 May 2021
    நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறக் கூடாது; முடிவில் மாற்றமில்லை - தமிழக அரசு

    தமிழகத்தில் நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை நடைபெறக் கூடாது எனும் அரசின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



  • 18:53 (IST) 23 May 2021
    என்னால்தான் அதிமுக வாணியம்பாடியில் வெற்றி பெற்றது - நிலோஃபர் கபில் பேட்டி

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைசர் நிலோஃபர் கபில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்: “வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மனு தாக்கலுக்குகூட என்னை அழைக்கவில்லை. அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற வாக்கு சேகரித்தேன். அதிமுகவில் உண்மையாக உழைத்தேன். 5 ஆண்டுகள் சிறந்த அமைச்சராக செயல்பட்டேன். என்னால்தான் வாணியம்பாடியில் அதிமுக வெற்றி பெற்றது. கட்சி கூட்டத்திற்கு என்னை வரக்கூடாது என்று கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:48 (IST) 23 May 2021
    என்னால்தான் அதிமுக வாணியம்பாடியில் வெற்றி பெற்றது - நிலோஃபர் கபில் பேட்டி

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைசர் நிலோஃபர் கபில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்: “வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மனு தாக்கலுக்குகூட என்னை அழைக்கவில்லை. அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற வாக்கு சேகரித்தேன். அதிமுகவில் உண்மையாக உழைத்தேன். 5 ஆண்டுகள் சிறந்த அமைச்சராக செயல்பட்டேன். என்னால்தான் வாணியம்பாடியில் அதிமுக வெற்றி பெற்றது. கட்சி கூட்டத்திற்கு என்னை வரக்கூடாது என்று கூறினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 18:05 (IST) 23 May 2021
    கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

    கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். ஆக்ஸிஜனுடன் கூடிய 100 படுக்கைகளையும் திறந்து வைத்தார்.



  • 16:55 (IST) 23 May 2021
    மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை அறிவிப்பு

    தமிழக அரசு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை அறிவித்துள்ளது. அதன்படி மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 1.72 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 16:39 (IST) 23 May 2021
    முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை - காவல் ஆணையர்

    நாளை முதல் அமல்படுத்த உள்ள முழு ஊரடங்கை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் கண்காணிப்பு பணியில் 2000 காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.



  • 15:18 (IST) 23 May 2021
    காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை கோரி கடிதம்

    காணாமல் போன 16 மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 14:47 (IST) 23 May 2021
    பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பெரும்பணியை மேற்கொள்வீர்- ஸ்டாலின் வேண்டுகோள்

    பிணி நீக்கும் போர்க்களத்தில் பசி போக்கும் பெரும்பணியை மேற்கொள்வீர் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டில் சமைக்க முடியாத சூழலில் இருப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் எனவும், யாருக்கெல்லாம் உணவு தேவைப்படுகிறது என்பதை அறிந்து உதவ வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளின் அனுமதி பெற்று செயல்பட வேண்டும் எனவும் ராணுவத்துக்கு நிகரான கட்டுப்பாட்டுடன் உதவி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 14:43 (IST) 23 May 2021
    மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி கேட்ட தமிழக அரசு

    மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல். இன்று காலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசிடம் தமிழக அரசு இந்த புதிய கோரிக்கையை வைத்துள்ளது.



  • 14:00 (IST) 23 May 2021
    முழு ஊரடங்கு நாட்களில் மக்களுக்கு காய்கறி, பழங்கள் விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு

    ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கினைத் தொடர்ந்து, சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் முழு காய்கறிகள், பழங்கள் விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகிக்கப்படும். காய்கறி மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள 044 22253884 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, விற்பனை செய்யப்படும்.



  • 12:39 (IST) 23 May 2021
    புதுச்சேரியில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 வரை தொடரும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்திருக்கிறார்.



  • 12:37 (IST) 23 May 2021
    டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

    டெல்லியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கிறது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். மேலும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தால், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார்.



  • 12:18 (IST) 23 May 2021
    தளர்வுகளற்ற முழு ஊரடங்கு எதிரொலி

    நாளை முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள சந்தைகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 15 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ காய்கறிகள், தற்போது 40-ஆக அதிகரித்துள்ளது.



  • 12:13 (IST) 23 May 2021
    ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

    அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை தொடங்கியது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரமேஷ் பொக்ரியால், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.



  • 11:34 (IST) 23 May 2021
    தோட்டக்கலைத் துறை மூலம் காய்கறிகள்; அமைச்சர் சக்கரபாணி பேட்டி!

    சென்னையில், முழு ஊரடங்கு காலத்தில் தோட்டக்கலைத் துறை உதவியுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகிக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.



  • 11:32 (IST) 23 May 2021
    தடுப்பூசி தட்டுப்பாடு : 18+ திட்டம் தொடக்கம்; ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு!

    தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்திருப்பதாக, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார்.



  • 11:29 (IST) 23 May 2021
    கருப்பு பூஞ்சை தொற்று; 8,000 பேர் பாதிப்பு!

    இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் இதுவரை 8848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகாவும், 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.



  • 11:24 (IST) 23 May 2021
    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் யார்!?

    மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்று வரும் ஆலோசனைய கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 11:24 (IST) 23 May 2021
    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளவர்கள் யார்!?

    மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்று வரும் ஆலோசனைய கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.



  • 11:21 (IST) 23 May 2021
    ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

    தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 10:43 (IST) 23 May 2021
    சைதாப்பேட்டையில் கொரோனா சிகிச்சை மையம்; ஸ்டாலின் திறந்து வைத்தார்!

    சைதாப்பேட்டையில் 130 படுக்கைககள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.



  • 10:35 (IST) 23 May 2021
    காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல்; தமிழக அரசு!

    காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக விலைக்கு காய்களை விற்பனை செய்தால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



  • 10:33 (IST) 23 May 2021
    புதுச்சேரி; தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு!

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31 வரை நீட்டித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.



  • 10:31 (IST) 23 May 2021
    கொலை வழக்கு; மல்யுத்த வீரர் சுஷில்குமார் கைது!

    மல்யுத்த வீரர் சாகர் தான்கரை அடித்துக் கொலை செய்த புகாரில் மல்யுத்த வீரர் சுஷில்குமார் செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்து வந்த சுஷில்குமாரை டெல்லி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 09:35 (IST) 23 May 2021
    மாவட்டங்களுக்கு முறையான தடுப்பூசி பங்கீடு; அமைச்சர் மா.சு!

    கொரோனா தடுப்பூசியை குஜராத்திற்கு அதிகமாக ஒதுக்கி மத்திய அரசு பாரபட்சம் காண்டி வந்தாலும், தமிழக அரசுக்கு கிடைத்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் முறையாக பங்கீடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 09:25 (IST) 23 May 2021
    முதல் டோஸிலேயே 96% எதிர்ப்பாற்றல்; பிரிட்டன் நம்பிக்கை!

    கொரோனா பரவலின் முதல் அலையில், பிரிட்டனில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. தற்போது, தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பிரிட்டனில் பயன்படுத்தப்படும் அஸ்ட்ரா ஜெனிக்கா, பைசர் தடுப்பூசிகள் முதல் டோஸிலேயே 96% எதிர்ப்பாற்றலை தருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.



  • 09:22 (IST) 23 May 2021
    ஊரடங்கு விதி மீறல்; இளைஞரின் செல்போனை பறித்து உடைத்த கலெக்ட்டர்!

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சுஜாப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக இளைஞரை தாக்கி, செல்போனை பறித்து மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா உடைத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரல் ஆன நிலையில், சம்பவத்துக்காக மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்டுள்ளார்.



  • 09:19 (IST) 23 May 2021
    கோயம்பேட்டில் வரத்து குறைவு; இருமடங்கு விலை உயர்ந்த காய்கறிகள்!

    கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். காய்கறி வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு என வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.



  • 09:17 (IST) 23 May 2021
    யாஸ் புயல்; பிரதமர் ஆலோசனை!

    வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு உயர் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.



  • 09:16 (IST) 23 May 2021
    யாஸ் புயல்; மீட்பு பணிகளுக்காக அந்தமான் விரைந்த பேரிடர் மீட்பு படையினஎர்!

    வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக, அரக்கோணம் முகாமில் இருந்து அந்தமான் மற்றும் ஊட்டிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.



  • 08:33 (IST) 23 May 2021
    மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

    தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். தற்போது அமலில் உள்ள ஊரடங்கு விதிகளை கடுமையாக்குவது பற்றியும், ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



Tamilnadu Live News Udpate Tamilnadu Lockdown Tamil News Live Update Tamilnadu Covid 19 Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment