Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
காசா மருத்துவமனை மீது தாக்குதல்: பாலஸ்தீனர்கள் பலி 11 ஆயிரமாக உயர்வு
பாலஸ்தீன தலைநகர் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மீது வெள்ளிக்கிழமை (இன்று) இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்
கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார்.
சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: ஒரு மணி நேரமாக நிற்கும் வாகனங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சிங்கபெருமாள் கோவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
14 ஆம் தேதி முதல் தென் இந்தியாவில் அடுத்த சுற்று மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் காரணமாக வரும் 14 ஆம் தேதி முதல் தென் இந்தியாவில் அடுத்த சுற்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
கே.ஜி.எஃப் விக்கி கடையில் ரெய்டு
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியதாக கூறி இன்ஸ்டா பிரபலம் கே.ஜி.எஃப் விக்கி கடையில் ரெய்டு நடைபெற்ற நிலையில், காட்டிக்கொடுத்ததாக கூறி கே.ஜி.எஃப் விக்கி எதிர்கடையை தாக்கியுள்ளனர்.
24 நாட்கள் பொது விடுமுறை
2024ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர் குறித்த பரபரப்பு தகவல்
சென்னை, பாரிமுனையில் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானவர் குறித்து வெளியான பரபரப்பு தகவல் . கைதான முரளி கிருஷ்ணன் மீது கொலை, திருட்டு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன முரளி கிருஷ்ணனின் நடவடிக்கைகளால் மனைவி மற்றும் மகன் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விசாரணையில் தகவல்
எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்
மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; பீர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, மது அருந்துபவர்களை ஊக்குவிப்பதற்காக அல்ல; வியாபாரத்தை பெருக்குவது எங்களது நோக்கமல்ல; எப்படியாவது மது விற்பனையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” - கோவையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது
சென்னை: கொத்தவால்சாவடியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது; தனக்கு சாமி எதுவுமே செய்யவில்லை எனக்கூறி பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம்
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய போது ஜேசிபியை சேதப்படுத்திய வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்; சேதப்படுத்தப்பட்ட ஜேசிபி வாகன உரிமையாளருக்கு ரூ.12,000 வழங்க வேண்டும் என நிபந்தனை
ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா ? பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை. ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா, இது மிகவும் தீவிரமான விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து. நெருப்புடன் விளையாடுகிறீர்கள். மசோதாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன - உச்சநீதிமன்றம்
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்: சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
தியாகராயநகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள், உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்; பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன; உள்நோக்கம் எதுவும் இல்லை, இருப்பினும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - சென்னையில் காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பேட்டி
ஆளுநருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு. மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு. மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு
வீரபத்ர சுவாமி கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு. சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆத்திரத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோயில் உள்ளே சென்று வீசிய நபர்
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி- ஐகோர்ட் உத்தரவு
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு. சட்டமன்ற செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்
கோவை, விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் - 2 பேர் கைது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலைபாம்பு, ஆமை, சிலந்தி, ஓணான் உள்ளிட்டவை பறிமுதல். நவ.7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் 3 பேர் விட்டு சென்ற பெட்டியில் நடத்திய சோதனையில் கண்டெடுப்பு
ஓபிஎஸ் மேல்முறையீடு மனு: புதன்கிழமை விசாரணை
அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து முறையீடு. புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
வைகையில் இருந்து தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்டத்தின் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு. அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விட்டனர்
மக்களை சந்திக்காமல் என்னால் இருக்க முடியாது- ஸ்டாலின்
என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாது. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருந்தேன். உங்களை பார்க்கும் போது உடல் வலி குறைந்து மகிழ்ச்சி மேலிடுகிறது. தொண்டை வலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்க கூடாது என வந்தேன்- ஸ்டாலின்
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும், 14 பேர் கொண்ட 5-வது பட்டியலை பாஜக வெளியிட்டது
சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.5,645க்கும் விற்பனை ஆகிறது.
7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம- நேரம் 10:27 AM
மலை ரயில் சேவை இன்று முதல் 13ம் தேதி வரை ரத்து
நீலகிரி : உதகை - குன்னூர் இடையே ரயில் தண்டவளத்தில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மலை ரயில் சேவை இன்று முதல் 13ம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்- டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
22 மாவட்டங்களுக்கு மழை
தமிழ்நாட்டில் அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ,தென்காசி, திருப்பூர், கரூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சிவகங்கை
உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
கோவையில் இன்று விடுமுறை இல்லை
கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை இல்லை.
மழையின் தன்மையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என கூறியிருந்த நிலையில் இரவு முதல் அதிகாலை வரை பெரிய அளவிலான மழைப் பொழிவு இல்லாததால், விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குறிப்பிட்ட கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை வழங்க வேண்டும். பல்கலை. துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஆளுநர் ஏற்படுத்துவதாகும் மற்றொரு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்து இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று முதல் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதன்மூலம் உரிமைத் தொகை பெறும் மகளிரின் எண்ணிக்கை 1.13 கோடியாக உயர்வு
வைகை அணை நிரம்பியது
71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்
தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.