Advertisment

Tamil news today: கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 31 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news today:  கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Chennai Rains

Petrol and Diesel Price:

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

குஜராத் பாலம் பலி எண்ணிக்கை உயர்வு

குஜராத், மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 120-ஐ கடந்துள்ளது. 177 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டுள்ளனர். மீடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் அணிக்கு சிக்கல்

டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


  • 22:52 (IST) 31 Oct 2022
    கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 21:09 (IST) 31 Oct 2022
    கனமழை காரணமாக திருவள்ளூரில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெற்று வருகிறது. இதனிடையே திருவள்ளூரில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் உத்தரவிட்டுள்ளார்.


  • 20:12 (IST) 31 Oct 2022
    மோர்பி பால விபத்து தொடர்பாக டிக்கெட் வழங்குபவர்கள், செக்யூரிட்டிகள் உள்ளிட்ட 9 பேர் கைது

    குஜராத் மாநிலத்தில் மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக, டிக்கெட் வழங்குபவர்கள் 2 பேர், 3 செக்யூரிட்டிகள், உள்ளிட்ட 9 பேரை இதுவரை அம்மாநில போலீஸ் கைது செய்துள்ளது. பாலத்தை புனரமைப்பு செய்த Overa நிறுவனத்தின் மேலாளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குஜராத் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


  • 20:09 (IST) 31 Oct 2022
    டெட் தேர்வு - கல்வித்துறை புதிய விளக்கம்

    2010 ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு முன் வாரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வித்துறை புதிய விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  • 19:56 (IST) 31 Oct 2022
    வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஸ்டாலின் நாளை ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை தொடர் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.


  • 19:19 (IST) 31 Oct 2022
    நாளை முதல் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

    நாளை முதல் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்ய உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டில் டிஜிட்டல் நாணயம் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


  • 19:00 (IST) 31 Oct 2022
    மோர்பி பால விபத்து.. புதின் இரங்கல்

    குஜராத் மாநிலத்தில் மோர்பி மேம்பால விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும் விபத்தில் சிக்கி காயமுற்றவர் விரைந்து குணமடையவும் அவர் வாழ்த்தியுள்ளார்.


  • 18:58 (IST) 31 Oct 2022
    ஒரே நாடு, ஒரே சீருடை.. ஜவாஹிருல்லா எதிர்ப்பு

    ஒரே நாடு ஒரே சீருடை திட்டத்துக்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது மாநில உரிமையை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


  • 18:52 (IST) 31 Oct 2022
    பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு ஜாமின் மறுப்பு

    அமலாக்க இயக்குனரகம் சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.


  • 18:41 (IST) 31 Oct 2022
    பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் தீர்ப்பு மையம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.


  • 18:25 (IST) 31 Oct 2022
    சிறைத்துறை டி.ஐ.ஜி., ஆக அம்ரேஷ் பூஜாரி நியமனம்

    தமிழ்நாட்டின் சிறைத்துறை டிஐஜி ஆக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதேபோல் சிபிசிஐடி ஏடிஜிபியாக அபேக் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் இன்று ஓய்வு பெற்றார். சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபி ஆக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


  • 18:21 (IST) 31 Oct 2022
    பிரேசில் புதிய அதிபரானார் லுலா

    பிரேசில் அதிபர் தேர்தலில் லுலா டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று பிரேசிலின் புதிய அதிபராக தேர்வாகியுள்ளார்.


  • 18:01 (IST) 31 Oct 2022
    ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம்

    இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சிகள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


  • 18:01 (IST) 31 Oct 2022
    சென்னையில் கன மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 17:45 (IST) 31 Oct 2022
    சென்னையில் தமிழ்வழி மருத்துவக்கல்லூரி

    சென்னையில் தமிழ் வழி மருத்துவக்கல்லூரி அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    இதுதொடர்பாக ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 17:32 (IST) 31 Oct 2022
    காதலன் கொலை, காதலி கைது

    பாறசாலை ஷரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் போலீஸ் விசாரணையின்போது கிரீஷ்மா கழிவறையில் மயங்கி கிடந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  • 17:22 (IST) 31 Oct 2022
    இம்ரான் கான் கார் மோதி பெண் செய்தியாளர் உயிரிழப்பு

    இம்ரான் கான் பேரணியின்போது அவரது கார் பெண் செய்தியாளர் ஒருவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் பெண் செய்தியாளர் சடாப் நயீம் உயிரிழந்தார்.


  • 16:59 (IST) 31 Oct 2022
    மோர்பி சம்பவம்.. மேம்பால நிர்வாகம் மீது வழக்குப்பதிவு

    குஜராத் மாநிலம் மோர்பியில் மேம்பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேம்பால நிர்வாகம் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்தில் 93 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


  • 16:58 (IST) 31 Oct 2022
    கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் - ஐகோர்ட் தீர்ப்பு

    கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மத்திய - மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளின் விவரங்கள் தெரிவிக்க இணையதளத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையின் பெயரில் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதற்கு வருமானவரித்துறை வரி விதிப்பது சரியே எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது


  • 16:45 (IST) 31 Oct 2022
    உத்தர பிரதேசத்தில் பாழடைந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து

    உத்தர பிரதேசம் மாநிலம் சரையா கிராமத்தில் பாழடைந்த பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் அமர்ந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கால்வாயில் விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கிராம மக்களின் தீவிர நடவடிக்கையால் கால்வாயில் விழுந்தவர்கள் மீட்கப்பட்டனர்


  • 16:35 (IST) 31 Oct 2022
    குஜராத் பாலத்தின் கேபிள் கம்பிகள் பழையவை - தடயவியல் நிபுணர்கள் தகவல்

    குஜராத், மோர்பி பகுதியில் தொங்கு பாலம் விழுந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் பழையவை என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கம்பிகள் பழையவை என்பதால் அதிக கூட்டத்தை தாங்காமல் அறுந்து விழுந்தது என தடவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

    பாலம் 8 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என பாலத்தை புதுப்பித்த நிறுவனம் தெரிவித்திருந்தது


  • 16:19 (IST) 31 Oct 2022
    தென்காசி தீண்டாமை வழக்கு; 2 பேருக்கு ஜாமீன் தர ஐகோர்ட் மறுப்பு

    தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் தர மறுத்த வழக்கில் சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த, மகேஸ்வரனின் உறவினர்களான ராமச்சந்திரன், சுதா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதேநேரம், கடை உரிமையாளர் மகேஸ்வரனுக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது


  • 15:54 (IST) 31 Oct 2022
    எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் இடைக்கால தடை நீட்டிப்பு

    பெங்களூரு மேம்பாட்டு கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஊழல் புகார் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான லோக் ஆயுக்தாவின் போலீஸ் விசாரணைக்கு விதித்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 15:45 (IST) 31 Oct 2022
    அயர்லாந்துக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகளில் அயர்லாந்துக்கு 180 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது


  • 15:32 (IST) 31 Oct 2022
    சென்னையில் மின்சார வயரில் லாரி உரசியதால் சரிந்து விழுந்த மின்கம்பங்கள்

    சென்னையில், மின்சார வயரில் லாரி உரசியதால் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பெட்ரோல் கொண்டு சென்ற டேங்கர் லாரி மீது மின்சார வயர் விழுந்ததில் லாரி தீப்பற்றியது. இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது


  • 15:13 (IST) 31 Oct 2022
    செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு; புதிதாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


  • 14:18 (IST) 31 Oct 2022
    சுவாதி கொலை வழக்கு.. புதிய உத்தரவு

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்த வழக்கில், உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்தவும், ராம்குமார் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 13:42 (IST) 31 Oct 2022
    டி 20 உலகக்கோப்பை

    டி 20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.


  • 13:25 (IST) 31 Oct 2022
    மோர்பி தொங்கு பாலம் விபத்து

    குஜராத், மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக, பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  • 13:25 (IST) 31 Oct 2022
    3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:04 (IST) 31 Oct 2022
    ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

    நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அக். 2ம் தேதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


  • 12:47 (IST) 31 Oct 2022
    ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஓய்வூதியம்

    ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஓய்வூதியம்

    சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 12:46 (IST) 31 Oct 2022
    தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை - மா.சுப்பிரமணியன்

    சென்னையில் தமிழ் வழியில் மருத்துவக்கல்லூரி துவங்க நடவடிக்கை

    6 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


  • 12:43 (IST) 31 Oct 2022
    கடலில் மூழ்கி மாயமான மருத்துவ மாணவர் உடல் கரை ஒதுங்கியது

    காரைக்கால் கடலில் மூழ்கி மாயமான திருவாரூர் மருத்துவ கல்லூரி மாணவர் சிவக்குமார் உடல் வாஞ்சூர் அருகே கரை ஒதுங்கியது.

    உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை


  • 12:21 (IST) 31 Oct 2022
    மாநில அரசுக்கு தொந்தரவு கொடுப்பது எங்கள் நோக்கமல்ல - அண்ணாமலை

    மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்குதான்

    மாநில அரசுக்கு தொந்தரவு கொடுப்பது எங்கள் நோக்கமல்ல - அண்ணாமலை

    முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது. தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது - அண்ணாமலை


  • 12:20 (IST) 31 Oct 2022
    மாணவி சத்யா கொலை வழக்கு : மாணவிகள் 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்

    சென்னையில் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு

    மாணவி சத்யா மரணம் தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்

    நாளை சத்யாவின் தாயார் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய திட்டம்

    சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது

    சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது


  • 11:58 (IST) 31 Oct 2022
    பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல - அண்ணாமலை

    கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை

    பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல

    எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது

    கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி


  • 11:57 (IST) 31 Oct 2022
    ட்விட்டர் 'ப்ளூ டிக்' - மாதம் 20 அமெரிக்க டாலர் சந்தா

    ட்விட்டர் கணக்கில் 'ப்ளூ டிக்' பெற மாதம் 20 அமெரிக்க டாலர் சந்தா

    ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் திட்டம்


  • 11:12 (IST) 31 Oct 2022
    குஜராத் பாலம் விபத்து: 140க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு

    குஜராத் பாலம் விபத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் மீட்பு பணி

    மோர்பியில் நேற்று மாலை 6.40 மணியளவில் சரிந்து விழுந்த தொங்கு பாலம்

    மோர்பி பால விபத்தில், சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல்

    இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு


  • 10:46 (IST) 31 Oct 2022
    சிலிண்டர் வெடிப்பு : சம்பவ இடத்தை பார்வையிட்டார் அண்ணாமலை

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு ஏற்பட்ட சம்பவ இடத்தை பார்வையிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


  • 10:40 (IST) 31 Oct 2022
    காருக்கு அடியில் சிக்கி 6 பேர் படுகாயம்

    வாழப்பாடி அருகே சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் காருக்கு அடியில் சிக்கி 6 பேர் படுகாயம் . மகளை மருத்துவ கல்லூரியில் சேர்க்க குடும்பத்துடன் சென்ற போது விபத்து


  • 10:40 (IST) 31 Oct 2022
    இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி

    காஞ்சிபுரம், உத்திரமேரூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி. தடுக்க முயன்ற வங்கி காவலாளி மீது சரமாரி தாக்குதல்- மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை


  • 09:29 (IST) 31 Oct 2022
    கல்லூரி மாணவி உயிரிழப்பு

    சென்னை, வண்டலூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி சோனியா (19) உயிரிழப்பு வண்டலூர் பூங்காவை சுற்றிப்பார்க்க வந்த மாணவி தண்டவாளத்தை கடந்தபோது விபத்து


  • 09:28 (IST) 31 Oct 2022
    177 பேர் மீட்பு

    குஜராத், மோர்பியில் கேபிள் தொங்கு பாலம் அறுந்து விழுந்து கோர விபத்து ஆற்று நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120ஐ கடந்தது - 177 பேர் மீட்பு மாயமானவர்களை மீட்கும் பணிகள், விடிய விடிய தீவிரம்


  • 09:28 (IST) 31 Oct 2022
    மாநில உள்துறை அமைச்சர் தகவல்

    குஜராத், மோர்பியில் கேபிள் தொங்கு பாலம் அறுந்து விழுந்து கோர விபத்து. குற்றவியல் வழக்குப்பதிந்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக மாநில உள்துறை அமைச்சர் தகவல்


  • 09:27 (IST) 31 Oct 2022
    படேலின் பிறந்தநாளை ஒட்டி, தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம்

    சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை ஒட்டி, தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டம் படேல் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் மரியாதை


  • 09:26 (IST) 31 Oct 2022
    'நால்கே' புயல்

    பிலிப்பைன்ஸ் நாட்டை உலுக்கிய 'நால்கே' புயல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியது


  • 09:26 (IST) 31 Oct 2022
    குடிசை வீட்டில் புகுந்ததால் பரபரப்பு

    கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே அம்மன்குப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த கார் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குடிசை வீட்டில் புகுந்ததால் பரபரப்பு


  • 09:26 (IST) 31 Oct 2022
    தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழை தொடரும்

    தென்னிந்திய பகுதிகளில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வரும் 4ம் தேதி வரை கனமழை தொடரும் தமிழகம், புதுவையில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment