Petrol price
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி சென்னை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி .
இன்றைய வானிலை
வாலாஜாப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், கலவை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தாம் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதால் லேசான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலம் நெருங்குவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 2 –ல் இன்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.மேலும் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், அடுத்தாக 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதில் அகமதாபாத்தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ராஜா என்பவர் சிறார்களின் ஆபாச காட்சிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 10 மணி நேரத்தை கடந்தும் விசாரணை நீடித்து வருகிறது.
தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி NFT (Non Fungible Token) எனப்படும் டிஜிட்டல் வெகுமதியை வழங்கியுள்ளார். கடந்த மாதம் திருவான்மியூரில் 15 சிலைகளை மீட்ட டிஎஸ்பி முத்துராஜ் டிஎஸ்பி மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் ரீகன் லட்சுமிகாந்த் ஆகியோருக்கு இந்த டிஜிட்டல் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் செல்லும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது.
நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
குஜராத் தேர்தலில் 19 மாவட்டங்களில் இன்று நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி ஊள்ளது. அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கில், விஜயபாஸ்கரின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வரி பாக்கியில் 20 சதவீதத்தை மட்டுமே செலுத்தும்படி கடிதம் அனுப்பியும், செலுத்தாததால் அவருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துக்களை விற்பதை தடுக்க முடக்கப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று முன் தினம் அமைச்சர் மா.சுப்பிமணியன் சென்றபோது, லிஃப்ட் பழுதடைந்ததால், லிஃப்ட்க்குள் இருந்து மீட்கப்பட்டனர். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் லிஃப்ட்டை சரியாக பராமரிக்காத பொறியாளர்கள் சசிந்தரன், கலைவாணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம் அடைந்துள்ளார். அன்பே சிவம், புதுப்பேட்டை, பகவதி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது
பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தலையை துண்டித்து இளைஞர் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தலை கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரபாகரன், பால முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் வரும் 3ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 3 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வேட்புமனுவில் கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை தெரிவித்ததாக தொடரப்பட்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகள் குறித்து நீதிபதிகள் கேள்விக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தகுதி பெறும் ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் ஒரு காளையை தொட முடியும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. காளைகளுக்கு முன் வீரர்கள் நிற்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
குஜராத் தேர்தல்; நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.48% வாக்குப்பதிவுகுஜராத் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலில் நண்பகல் 1 மணி நிலவரப்படி 34.48% வாக்குகள் பதிவாகியுள்ளன
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் தி.மு.க கைப்பற்ற வேண்டும். கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம், இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து நாம் போட்டியிடுவோம் என தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த முறை 40 தொகுதிகளில் ஒரு தொகுதியை இழந்துவிட்டோம், இந்த முறை 40 தொகுதியிலும் வெல்ல வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் 5ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் டிச. 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க கூடும். அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து டிச.8 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலவ வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் முதல்கட்ட சட்டப் பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
எம்.பி ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் கைதான அலெக்ஸ் பாண்டியன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதம் மட்டும் 62.71 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் சிலை நிறுவப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா பரிசீலனையில் உள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் உறுதி
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த கால நிர்ணயமும் கிடையாது
ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான 4வது நாள் விசாரணை தொடக்கம்
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதங்களை முன்வைக்கிறார்
குஜராத்தில் முதல்கட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பு
ஜாம் நகர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் கிரிக்கெட் வீரர் ஜடேஜா
குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜடேஜாவின் மனைவி ரிவாபா
தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை, தேவைக்கேற்ப பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தை விட தற்போது பால் விற்பனை அதிகரித்துள்ளது.
ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் குறைந்ததாக வரும் தகவல் தவறானது – அமைச்சர் நாசர்
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநருடன் சந்திப்பு
நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் தர நடவடிக்கை.
1,241 பேருக்கு பணப்பலன் வழங்கும் பணியை போக்கவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கடலூர்: வேப்பூர் அருகே உள்ள மலையனூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்பு
டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை
பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் வெளிநபர்கள் பணியாற்றுவதாக எழுந்த புகாரால் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை
அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை
குஜராத் தேர்தலில் அதிக வாக்களர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க பிரதமர் மோடி வேண்டுகோள் . முதல் தலைமுறை வாக்காளர்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும் – பிரதமர் மோடி
குஜராத், ராஜ்கோட் தொகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா வாக்களித்தார் ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் ரிவாபா ஜடேஜா