பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் – இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஆம்னி பேருந்து அலுவலகத்தில் தீ விபத்து
திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து கொழுந்து விட்டு எரிந்த தீயை 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்: “இந்திய வரலாற்றில் இதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட்டதில்லை; ஆளுநர்கள் அதனை திடீரென உணர்ந்துகொண்டதால், சம்பந்தமில்லாமல் தீவிரமாகப் பேசி தங்களை முட்டாள்கள் ஆக்கிக்கொள்கிறார்கள். ஆளுநர்கள் தகுதிக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் அய்யம்மாள் கொலை செய்து எரிக்கப்பட்டுள்ளார். செவிலியரின் கணவர் அக்பர் இப்ராஹிம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: “ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான். ஆளுநர் உரைகள் மாநிலத்தின் அமைதியைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளன என்பதே உண்மை. கனியாமூரில் நடந்த வன்முறையை துப்பாக்கிச்சூடு இன்றி கட்டுப்படுத்தினோம் என்பதே முதன்மையானது. ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார்; சனாதன வகுப்பு எடுக்கிறார்; ஆரியத்துக்கு ஆலாபனை பாடும் ஆளுநர், திராவிடத்துக்கு தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார்.” என்று கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள வேலுமணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-க குறைகிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: “சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பார். 7 முறை ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதுவரி பதில் வரவில்லை. சித்த மருத்துவத்துக்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள், ஆவணங்களை அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என காவல்துறைக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா ஸ்டோரி படம் வெளியிடுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கேரளா ஸ்டோரி படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் சட்ட ஒழுங்கை பாதிக்கும் கருத்துகள் வெளியிட்டால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆளுனர் தனது திராவிட மாடல் தொடர்பான கருத்துக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என ஆளுனர் ஆர்.என். ரவி கூறியதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, “ஆளுனரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முடிவு கட்ட நேரம் நெருங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 7 மாவட்டங்களில் வன்முறை நீடிக்கிறது.
இந்தப் பகுதிகளில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 நாள்களுக்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறை முன்பு ஆஜராக எஸ்.பி. வேலுமணி ஆஜராக ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவித்துள்ளது
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி வர்மாவுக்கு ராஜ்கோட் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என 15 பேரின் புகைப்படங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டது. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிந்தால் 044 2250 4332 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்
தேனி, ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். கள்ளக்காதலன் உயிரிழந்துள்ள நிலையில், மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் கணவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மாடு முட்டி பலியானார். அவரது உடலை புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே மயானத்துக்கு தோளில் சுமந்து சென்றார்
நாளை வெளியாகவுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்பட வெளியீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. கேரளப் பெண்கள் 32,000 பேரை ஏமாற்றி முஸ்லிமாக மாற்றியதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிட்டதாகவும் படம் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக வழக்கு ரிட் மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
தங்கள் சாதனைகளால் நாட்டிற்கே பெருமை தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு அநீதி – முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைப் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து பேசுகிறார் பாதிக்கப்பட்டோருக்கு தொல்லையளிப்பதும், குற்றம்சாட்டப்பட்டோரை பாதுகாப்பதுமே பாஜகவின் அடையாளம் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்
“கட்சியை திட்டியே வயிறு வளர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்” “இலவச திட்டங்களை இழிவாக பேசியவர்களின் இரட்டை வேடம் கர்நாடக தேர்தல் களத்தில் அம்பலமாகி இருக்கிறது” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் மூலம் மது விற்பனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகச் செலவுகளுக்காக, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்கள் வருமானத்திலிருந்து, 12% ஒதுக்கப்படுகிறது. அதற்கு மேல், கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது என்பது விதி மீறலாகும். கோவில் நிதியை அறநிலையத் துறையின் இதர செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றமே கூறியிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் பேசுகையில், கோவில் நிதியில் வாகனங்கள் வாங்கியிருக்கிறோம் என்று அந்த விதிமீறலை நியாயப்படுத்தியிருக்கிறார். அமைச்சரின் இந்தச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. அரசின் இத்தகைய விதிமீறல்களை எதிர்த்தே, அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்தி வருகிறோம்.
மின் மயானத்திற்கு கொண்டுவரப்பட்ட மனோபாலா உடல். குடும்ப வழக்கப்படி தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்தார் மனோபாலாவின் மகன்
இயக்குநர் கதிர்வேலு இயக்கும் பெயர் வைக்காத படத்தில் மனோபாலா கடைசியாக நடித்திருந்தார்.
படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கடைசியாக பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.
ஸ்டெர்லைட் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்
தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வரும் கல்வியாண்டு முதல் சுமார் 30 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
3 ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது
“ஆளுநர் மாளிகை கணக்கு குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அனைத்தும் அப்பட்டமான பொய்” – ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு
மறைந்த இயக்குநர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
நிலப் பிரச்னையை தீர்க்க தனிச்சட்டம் – தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை
நிலப் பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக தனிச்சட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆந்திராவில் இருப்பது போன்று தமிழ்நாட்டில் நில அபகரிப்பு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை. 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நிலப் பிரச்சனைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது – உச்ச நீதிமன்றம்
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேரம் வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு . எம்.எல்.ஏ-களுக்கு சட்டசெயலகம் கடிதம் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 அதிகரிப்பு . ஒரு கிராம் தங்கம் ரூ. 5,750க்கும், சவரன் ரூ. 46,000க்கும் விற்பனை
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம். தலைமறைவாக இருந்த சுஜய்-யை கேரளாவில் கைது செய்தது தனிப்படை
வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவு. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நாளை 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை
நெல்லை, அம்பையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் . சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் தவிர, மேலும் 2 காவலர்கள் மீதும் வழக்குப்பதிவு . .தனிப்பிரிவு காவலராக இருந்த போகன், உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு
மனோபாலா உடலுக்கு குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் பாக்யராஜ் . “ஒரே கால கட்டத்தில் நாங்கள் இருவரும் பணிபுரிந்து வந்தோம். தீவிரமான சிகிச்சையைக் கூட மிகவும் சாதாரணமாக எடுத்து கொண்டவர் மனோபாலா” – இயக்குநர் பாக்யராஜ்
மறைந்த இயக்குநர் மனோபாலா உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி. காலை 10 மணிக்கு மனோபாலா உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது. http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
மறைந்த இயக்குநரும், நடிகருமான மனோபாலா இறுதிச்சடங்கு, இன்று காலை நடைபெறுகிறது . சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி
கத்திரி வெயில் இன்று முதல் ஆரம்பமாகிறது. வரும் 29ம் தேதி வரை, இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும்.