Advertisment

Tamil News Highlights: இ-பாஸ் - சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை; தமிழக அரசு

Tamil Nadu News Update Today- 5 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 சவுக்கு சங்கருக்கு நீதிமன்றக் காவல்

சவுக்கு சங்கருக்கு வரும் 17ம் தேதி வரை நீதிமன்ற காவல். போலீசார் குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் கோவை நீதிமன்றம் உத்தரவு. சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையிலடைக்க உத்தரவு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • May 05, 2024 21:30 IST
  இ-பாஸ் - சுற்றுலா பயணிகளுக்கு தடையில்லை; தமிழக அரசு

  வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது • May 05, 2024 21:02 IST
  டைட்டானிக் நடிகர் மரணம்

  டைட்டானிக் படத்தில் கேப்டன் எட்வர்ட் ஸ்மித்தாக நடித்து புகழ் பெற்ற நடிகர் பெர்னார்ட் ஹில் மரணமடைந்தார் • May 05, 2024 20:30 IST
  ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்

  பாலியல் புகார் வழக்கில் ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. • May 05, 2024 20:12 IST
  பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்; புகார் எண் அறிவிப்பு

  பிரஜ்வால் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் புகார் எண்ணை சிறப்பு புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. ரேவண்ணா மற்றும் பிரஜ்வால் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் 63609 38947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது • May 05, 2024 19:45 IST
  ரேவண்ணா நீதிபதி வீட்டில் ஆஜர்; அதிகாரிகள் நடவடிக்கை

   

  பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவை, சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் கோரமங்களாவில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தினர். தேவகவுடா வீட்டில் ரேவண்ணாவை நேற்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. • May 05, 2024 18:14 IST
  மக்களவை தேர்தல்: 3ம் கட்ட பரப்புரை நிறைவு


  நாடு முழுவதும் 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், அஸ்ஸாம், பீகார், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. • May 05, 2024 18:12 IST
  திருவண்ணாமலை நந்திக்கு அபிஷேகம்

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உளள அண்ணாமலையார் கோயிலில்  சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். • May 05, 2024 18:12 IST
  திருவண்ணாமலை நந்திக்கு அபிஷேகம்

  திருவண்ணாமலை மாவட்டத்தில் உளள அண்ணாமலையார் கோயிலில்  சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். • May 05, 2024 17:59 IST
  இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேம் மற்றும் தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • May 05, 2024 17:29 IST
  நீட் தேர்வு நிறைவு

  நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு பெற்றது. • May 05, 2024 17:28 IST
  சவுக்கு சங்கர் கைது: சசிகலா கண்டனம்

  யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார். • May 05, 2024 16:47 IST
  கொடைக்கானல் பகுதிகளில் மழை

  திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று மழை பெய்துவருகிறது. • May 05, 2024 15:53 IST
  அரசு கல்லூரிகள் நாளை முதல் விண்ணப்பம்

  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

   tngasa.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு • May 05, 2024 15:17 IST
  மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் 

  ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா சஸ்பெண்ட் . தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை. ஊக்கமருந்து விதி மீறலுக்காக எந்த போட்டியிலும் பங்கேற்காத படி சஸ்பெண்ட். மே 7-ம் தேதிக்குள் புனியா விளக்கம் அளிக்கவும் உத்தரவு  • May 05, 2024 15:07 IST
  விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல்

  சென்னை விருகம்பாக்கத்தில் விசிக - புரட்சி பாரதம் கட்சியினர் இடையே மோதல். புரட்சிப் பாரதம் கட்சி பேனர் மீது, விசிக நிர்வாகி ஆதவன் பைக்கில் மோதியதாக வாக்குவாதம்.

  வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஆட்களை அழைத்து வந்து மோதல். தாக்குதலில் விசிக தரப்பில் 3 பெண்கள், புரட்சி பாரதம் தரப்பில் 4 பேர் காயம். இருதரப்பும் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை • May 05, 2024 15:06 IST
  திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

  கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை.

  கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வரும் போலீசார். கோடை விடுமுறை, ஞாயிற்று கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் குவியும் பக்தர்கள். பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் ஏமாற்றம் • May 05, 2024 14:40 IST
  தொடங்கியது நீட் நுழைவுத்தேர்வு

  தமிழகம் உள்பட நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. 2 மணிக்கு தொடங்கி உள்ள நீட் நுழைவுத்தேர்வு இன்று மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறுகிறது. சென்னையில் 36 மையங்களில் 24,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்பு  • May 05, 2024 14:27 IST
  மூதாட்டியின் காலில் ஏறி இறங்கிய அரசுப் பேருந்து

  ஈரோடு மாவட்டம் பவானியில், மூதாட்டியின் காலில் ஏறி இறங்கிய அரசுப் பேருந்து.

  பேருந்து மாற்றி ஏறிய மூதாட்டியை கீழே இறக்கிவிட்ட நடத்துநர். மூதாட்டி இறங்கும் போது, பேருந்து நிற்காததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி.

   மூதாட்டியின் கால்களில் பேருந்து ஏறி இறங்கிய நிலையில், மருத்துவமனையில் அனுமதி • May 05, 2024 13:47 IST
  ஜெயக்குமாரின் 2வது கடிதம் - காவல்துறை விளக்கம்

  மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம்.

  புகார் அளித்த கடந்த 3ம் தேதியே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல்.

  கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது. ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டதால், மர்ம மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது - நெல்லை காவல்துறை  • May 05, 2024 13:40 IST
  மே.7 - 8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  தமிழகத்தில் மே.7 மற்றும் 8ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

  மே.7ல் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு. மே.8ல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்  • May 05, 2024 13:13 IST
  நீட் தேர்வு: அண்ணாமலை வாழ்த்து

  நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மருத்துவ கல்வியில் சாதனை படைக்க வாய்ப்பு வழங்கும் நீட் தேர்வு தமிழக மாணவர்களை பெரிதும் ஈர்த்துள்ளது- அண்ணாமலை • May 05, 2024 13:09 IST
  வெயில் பாதித்தவர்களுக்கு சிகிச்சை தர தனி வார்டு

  வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தர தனி வார்டு அமைப்பு. 5 படுக்கைகள் கொண்ட தனி வார்டில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன- சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் 

  ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெற்ற தொழிலாளி உயிரிழந்த நிலையில் நடவடிக்கை.  • May 05, 2024 12:47 IST
  பரந்தூர்: TIDCO மீண்டும் விண்ணப்பம்

  பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுக்கு அனுமதி கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம். ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில் சில மாற்றங்களுடன் மீண்டும் விண்ணப்பம். பரந்தூரில் ரூ.32,704 கோடி திட்டச் செலவில் ஏக்கரில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.  • May 05, 2024 12:43 IST
  நாளை வெளியாகிறது 12-ம் வகுப்பு முடிவுகள்

  தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது - தேர்வுத்துறை மாணவர்கள்

  tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம் • May 05, 2024 12:41 IST
  ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் கரைசுத்துப்புதூரில் உள்ள ஜெயக்குமாரின் குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம். காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் இறுதி அஞ்சலி  • May 05, 2024 12:17 IST
  காங். நிர்வாகி மரணம்: கடிதம் பற்றி விசாரணை

  மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். கடிதத்தில் பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணை நடக்கிறது. உடற்கூராய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என தெரியவரும்- டி.ஐ.ஜி மூர்த்தி • May 05, 2024 11:50 IST
  நீட் தேர்வு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது - ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ

  2021-ம் ஆண்டில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 58,922 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; 2022-ம் ஆண்டு 1.32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2023-ம் ஆண்டில் 1.45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றனர்; இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் நாளை நீட் தேர்வு எழுதி தயாராக இருக்கின்றார்கள்; இன்னும் இந்த நீட் தேர்வு ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது” - ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ • May 05, 2024 11:49 IST
  7.5% உள் ஒதுக்கீடு : சாமானிய அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியவர் இ.பி.எஸ்

  7.5% உள் ஒதுக்கீடு கொடுத்து ஏழை, எளிய, சாமானிய அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கியவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; அதை இன்றைய தமிழ்நாடு அரசு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்” - ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ.  • May 05, 2024 11:19 IST
  சென்னை : ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு

  சென்னையில் கட்டுமானப் பணியின் ஏற்பட்ட ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக உடல் பாதிக்கப்பட்ட வேலு என்பவர் உயிரிழப்பு .ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. • May 05, 2024 10:47 IST
  ஜெயக்குமார் உடலுக்கு, சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி

  நேற்று சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு.  கரைசுத்துப்புதூரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜெயக்குமார் உடல் ஜெயக்குமார் உடலுக்கு, சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ராஜேஷ் குமார், பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் அஞ்சலி.  ஜெயக்குமார் உடலுக்கு கிறிஸ்தவ முறைப்படி, இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது திமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோரும் அஞ்சலி.  • May 05, 2024 09:54 IST
  ரூ.4 கோடி சிக்கிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டம்

  சென்னையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டம் .பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் நேரில் சென்று விசாரணை செய்ய முடிவு என தகவல். கோவர்தன் நடத்தி வரும் ரெஸ்டாரண்டில் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள் இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அனைவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் சிபிசிஐடி முடிவு.  • May 05, 2024 09:48 IST
  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்துள்ளார் - செல்வப்பெருந்தகை

  காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடலுக்கு காங். மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அஞ்சலி ஜெயக்குமார் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .  உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு காவல்துறை, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதி அளித்துள்ளார் - செல்வப்பெருந்தகை • May 05, 2024 09:25 IST
  ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெஃப்ரின் பெற்றுக் கொண்டார். • May 05, 2024 09:01 IST
  வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

  தமிழ்நாட்டில் இன்றும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.  வரும் மே-7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. • May 05, 2024 08:42 IST
  முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

  முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும்.  சர்வதேச குழுவை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு.  முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது எனவும் தமிழக அரசு மனுவில் தகவல் மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறையும் மேற்பார்வை குழு ஆய்வு செய்து வருகிறது முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவை இல்லை - தமிழக அரசு • May 05, 2024 08:09 IST
  தனக்குத்தானே பிரசவம் : செவிலியர் கைது

  சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது, குழந்தையின் கால்களை வெட்டி கொன்ற செவிலியர் கைது.  கடந்த 30ம் தேதி, வினிஷா தனக்குத் தானே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் இரண்டு கால்களை வெட்டி எடுத்துள்ளார் குழந்தை இறந்ததால் 2 பிரிவுகளின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினிஷாவை போலீசார் கைது செய்தனர். • May 05, 2024 08:09 IST
  காங். நிர்வாகி புகாரளிக்கவில்லை - போலீஸ் மறுப்பு

   மரண வாக்குமூலம் என்ற பெயரில் உள்ள புகார் மனு எஸ்.பி.யிடம் அளிக்கப்படவில்லை .கடந்த 2ம் தேதி தான், ஜெயக்குமாரின் மகன் ஜெஃப்ரின் தனது தந்தையை காணவில்லை என உவரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக ஜெஃப்ரின் அந்த கடிதம் காவல்துறையினரிடம் அளித்தார். அந்த கடிதத்தில் 30.4.2024 என போடப்பட்டிருந்தது, அந்த கடிதத்தை அதற்கு முன் யாரிடமும் ஜெயக்குமார் அளிக்கவில்லை .தனிப்படை அமைத்து விசாரித்தபோது, மே 4 அன்று காலை எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார் தற்போது வழக்கு சம்பந்தமாக 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது - காவல்துறை.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment