Tamil News Today Updates: நவம்பர் 21ம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதற்கு முன் தினம் சட்டப் பேரவை தேர்தல் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
பழனியில் நில தகராறு காரணமாக, துப்பாக்கியில் சுடப்பட்ட சுப்பிரமணி, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே வாரத்தில் நடந்த 3 துப்பாக்கி சூடு நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி வருகிறதோ என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ஹஜ் யாத்திரையை மீண்டும் சென்னையிலிருந்து தொடங்குவதற்கு நடவடிக்கை தேவை என, பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை. அடுத்த 24 மணி நேரத்துக்கு இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க அரசு அமைத்த விசாரணை குழுவின் தலைவராக நீதிபதி, கலையரசன் பொறுப்பேற்றார். பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றார் நிதிஷ் குமார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி: “திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் புத்தன், ஏசு, காந்தியா? அதிமுக எம்எல்ஏ சக்ரபாணியின் மகன் சட்டப்பூர்வமாகவே டெண்டரில் பங்கேற்றார். முறைப்படி லைசென்ஸ் பெற்றே எம்எல்ஏ சக்ரபாணியின் மகன் குவாரி நடத்தி வருகிறார். திமுக மக்கள் பிரதிநிதிகளின் வாரிசுகள் யாரும் அரசு டெண்டர்களில் பங்கேற்கவில்லையா? திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மருமகள் பெயரில் குவாரி டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை பதவியில் இருந்து ஸ்டாலின் விலகச் சொல்வாரா? திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை பதவியில் இருந்து ஸ்டாலின் விலகச் சொல்வாரா? திமுக எம்எல்ஏவாக இருக்கும் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி செம்மண் குவாரி அமைக்க மனு அளித்தார்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி: திமுகவில் மிகப்பெரிய அதிகார மோதல் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் துரைமுருகன், பொன்முடியை ராஜினாமா செய்ய மறைமுகமாக கூறுகிறார். ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் துரைமுருகன், பொன்முடிக்கும் பொருந்தும். திமுகவில் இருப்பவர்கள்தான் கனிமவளங்களை கொள்ளை அடிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் சட்டத்திற்கு புறம்பாக டெண்டர் பெற்றால் மட்டுமே குற்றம். மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் எந்த டெண்டரிலும் பங்கேற்க கூடாது என்று சட்டம் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவிப்பது மட்டுமே சட்டப்படி குற்றம்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
நவம்பர் 21ம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் ஹெச்.ராஜா, “கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள். ஆன்மீகத்தை கடைபிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள்” என்று கூறியுள்ளார்.
விருத்தாசலம் கிளை சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறியுள்ளார். “பணம் பறிக்கும் நோக்கில் தான் காவல்துறை செயல்பட்டது. செல்வத்தை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தினர்; அவர் தண்ணீர் தண்ணீர் என கேட்டார்; அவரை துன்புறுத்தியதை பார்த்த சாட்சி உள்ளது” என்று கூறியுள்ளார்.
ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று, பொருளாதார மேலாண்மை, வர்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்தினார். நகரங்கள் தான் வளர்ச்சியின் முக்கிய இயந்திரங்கள். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் எப்படித் தொடங்குவது என்பதுதான் ஒட்டுமொத்த உலக நாடுகளின் எண்ணம் என்று பிரதமர் மோடி கூறினார்.
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் நேற்று வெளியிட்டார். இதனை தொடர்ந்து நாளை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது. முதற்கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும் அதனை தொடர்ந்து 7.5% இட ஒதுக்கீடு பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 500 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேல்வி எழுப்பாதது ஏன்? .குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? .பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர் .பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது . பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், 2 நாள்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கள்ளழகர், நெஞ்சினிலே, அருந்ததி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த சோனு சூட், ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு பெரும் உதவி புரிந்தார். அவரின் இந்த செயல் தேசிய அளவில் பேசப்பட்டது. அவர் பஞ்சாப் மாநில அடையாள சின்னமாக மாறியிருக்கிறார்.
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. அந்த மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமானது பெரம்பலூர்.
தமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான 'க்ரியா' ராமகிருஷ்ணன் மறைவு வேதனையைத் தருகிறது.
பதிப்பைத் தவமாகக் கொண்டு, மரணப் படுக்கையிலும் பணியாற்றியவர்; அவர் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி' அரிய கருவூலம்!
குடும்பத்தினர்- தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் என்னுடைய ஆறுதல்! pic.twitter.com/TUkFPMqGm7
— M.K.Stalin (@mkstalin) November 17, 2020
சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. ஏரிக்கு நீர்வரத்து 1,086 கனஅடியாக உள்ள நிலையில் நீர்மட்டம் 21.13 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரமான 24 அடியில் 21.13 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று மாலைக்குள் நீர்மட்டம் 22 அடியை எட்டினால், ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்படும்.
பாஜகவின் வேல் யாத்திரை டிசம்பர் 6-க்கு பதில் டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிப்பு. பாபர் மசூதி இடிப்பு தினமான டிச.6ல் வேல்யாத்திரையை நிறைவு செய்ய எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ல் நெல்லையிலும், டிசம்பர் 7-ல் தூத்துக்குடி திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் வேல்யாத்திரை நடைபெறும் என தமிழக பாஜக அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 67 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 909 ஏரிகளில் காஞ்சிபுரத்தில் 13 ஏரியும், செங்கல்பட்டில் 54 ஏரியும் முழுமையாக நிரம்பியுள்ளது. 125 ஏரிகள் 75%, 206 ஏரிகள் 50%, 180 ஏரிகள் 25%, 324 ஏரிகள் 25% என்ற விகிதத்தில் நிரம்பியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights