பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தி திணிப்பு : கண்டன ஆர்ப்பாட்டம்
வரும் 15ல் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 15ம் தேதி இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., நேற்று அறிவித்துள்ளார்.
இப்படி ஒரு மாவட்ட ஆட்சியரா: நாங்க மிஸ் பண்ணிட்டோமே
மழை பெய்ததால், இன்ஸ்டிராகிராமில் லீவு கேட்டு அவருக்கு வந்த குறுஞ் செய்திகளை நேற்று முகநூல் பக்கத்தில் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் பகிரந்தார். சில மாணவர் அவரை செல்லம் லீவு வேண்டும் என்று கேட்டபோதும், அதை அவர் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. யார் மனதையும் புண்படுத்தாமல் அவர் நடந்துகொண்ட விதத்தை பற்றி சமூகவலை தளத்தில் பலரும் பேசி வருகின்றனர். இப்படி ஒரு மாவட்ட ஆட்சியர் எங்க காலத்தில் இல்லை என்று 90’ஸ் கிட்ஸ் முகநூலில் புகழந்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை,தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருச்சி,கரூர்,திருவாரூர்,மயிலாடுதுறை, தஞ்சை,நாகையிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சாமிநாதன்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது; நேரில் வரவழைத்து பேச மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிதுள்ளார்.
கோவை பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்த வழக்கில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியான சதீஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ரயில்வே போலிசார் சார்பில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக கண்ணியக்குறைவாக பேசியதாக குஜராத் ஆம் ஆத்மி தலைவரை டெல்லி போலீசர் தடுப்புக்காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
“எப்போதும் தமிழகம் இந்தியை ஏற்றுக்கொள்ளாது. நாங்களும் அதில் உறுதியாக உள்ளோம். யாரையும் கட்டுப்படுத்த முடியாத முதல்வராக ஸ்டாலின் இருக்கின்றார். முதல்வருக்கு கட்டுப்படாதவர்களாக திமுகவினரும் இருக்கின்றனர்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பி.எஸ்.மித்திரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.
கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கைதான பகவத் சிங், லைலா, முகமது ஷாபி ஆகியோரை 12 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 60,000 கன அடி வரை நீர் திறந்துவிட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்
மாதவரத்தில் சுரங்கம் தோண்டும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அமமுக உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை – ஜெயக்குமார்
“ஓபிஎஸ், சசிகலா உடன் வேண்டுமானால் டிடிவி தினகரன் கூட்டணி வைக்கலாம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவது குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது”
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரியின் 254 உதவி பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக் கல்வி துறையில் பணியின்போது இறந்தவர்களின் வாரிசுகள் 270 பேருக்கு கருணை அடிப்படையில் பணி
சென்னை, கலைவாணர் அரங்கில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
கேரள மாநில காவல்துறை உத்தரவு
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரம்
இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியது
தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டம்
தமிழகத்தில் இலவச மின்சாரம் மற்றும் மானிய மின்சாரம் பெறுபவர்கள், ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி அரசிதழ் வெளியீடு
ஹிஜாப் விவகாரம் – இருவேறு தீர்ப்புகள் கர்நாடகா:கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தார் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா; ஹிஜாப் அணிவது அவரவர் விருப்பம் என உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா தீர்ப்பு . வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
ஹிசாப் வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன் இந்த விவகாரம் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, மயிலாப்பூர் தனியார் மருத்துவமனையில் கேன்டீன் ஊழியர்களிடையே மோதல். 4 பேருக்கு கத்திக்குத்து – மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் ரூ. 9 கோடி மோசடி புகார். துணை மேலாளர் ஆனந்தன் மற்றும் ஹரிஹரன் பணியிடை நீக்கம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி கட்டாயம் என இருந்தது 3 மொழியை கற்க வேண்டும் என்பது மத்திய அரசின் கல்வி கொள்கை – அண்ணாமலை
திருவள்ளூர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் விசில் விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு. விசிலை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்
சென்னை மதுரவாயலில் பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்த விவகாரம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தியா(2) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேசம் பயணம் உன்னாவ் பகுதியில் 'வந்தே பாரத்' ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் ஐ.ஐ.டி. தொடக்க விழா, மருந்து பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கூடும் என தகவல்
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்ததை எதிர்த்த வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்