பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 150- வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.78% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 39.98% ; புழல் - 75.12% ; பூண்டி - 3.4% ; சோழவரம் - 8.6% ; கண்ணன்கோட்டை - 62%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 15, 2024 06:27 ISTதேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். அவரின் கடிதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
-
Aug 15, 2024 06:24 ISTகேரளா வழிக்கடவு பகுதியில் சோதனை சாவடி மூடல்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வழிக்கடவு பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வழிக்கடவு வழியாக வாகனங்கள் வர வேண்டாம் என கேரள காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Aug 14, 2024 21:52 ISTபாரிஸ் ஒலிம்பிக் - வினேஷ் போகட் மனு தள்ளுபடி
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிக்கு முன்பாக 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகட் தொடர்ந்த மனு மீதான விசாரணை 3 முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தள்ளுப்படி செய்யப்பட்டது.
-
Aug 14, 2024 20:42 ISTசெவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
வயநாடு நிலச்சரிவில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்ட தமிழக செவிலியர் சபீனாவுக்கு, வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
-
Aug 14, 2024 20:12 ISTகச்சத்தீவை தாரை வார்த்ததால் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் சுடப்படுகின்றனர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் நடக்கிறது. இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகின்றனர். பல சிந்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தது. அதில் திராவிட சிந்தாந்தமும் ஒன்று. முன்பு இந்தியாவை ஆண்ட அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்த அண்டை நாடுகளுக்கு தாரைவார்த்தனர். 1960 போரில் இந்தியா இடத்தை சீனாவிடம் தாரைவார்த்தது. அதேபோல் கச்சத்தீவையும் தாரைவார்த்தனர். இதனால் நமது மீனவர்கள் இன்று அண்டை நாட்டு ராணுவத்தால் சுடப்படுகின்றனர் என சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்
-
Aug 14, 2024 19:55 ISTஅமலாக்கத்துறையின் இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்
அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநராக இருந்த ராகுல் நவீன், இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை ராகுல் நவீன் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Aug 14, 2024 19:35 ISTபழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை
பழங்குடியினரது பங்களிப்பு அளப்பரியது என தனது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்
-
Aug 14, 2024 19:12 ISTதங்கலான் பட குழுவுக்கு சீமான் வாழ்த்து
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம் நாளை திரைக்கு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Aug 14, 2024 18:33 ISTசுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு&காஷ்மீரில் தேசிய கொடியுடன் பேரணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு&காஷ்மீர் மாநிலம் ரியாசியில் செனாப் ஆற்றில் உள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தில் 750 மீ நீளமுள்ள மூவர்ணக் கொடியுடன் திரங்கா பேரணி நடைபெற்றது.
-
Aug 14, 2024 17:48 ISTஒரு வாரத்தில் 3-வது முறையாக தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் வேதனை
வேதாரண்யம் மீனவர்கள் மீது ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுதுறை மீனவ கிராம மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள், வலைகளையும் அபகரித்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
-
Aug 14, 2024 17:45 ISTஅண்ணாமலை பற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை: ஆர்.பி.உதயகுமார்
"தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது? அவர்கள் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துள்ளார்கள்? அண்ணாமலை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவரைப் பற்றி பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
-
Aug 14, 2024 17:08 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி நாகேந்திரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
-
Aug 14, 2024 17:06 IST3வது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
நாகை மாவட்டம் வேதாரண்யம் மீனவர்கள் மீது ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுதுறை மீனவ கிராம மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல். வலைகளையும் அபகரித்துச் சென்றுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
-
Aug 14, 2024 17:05 ISTதடை கோரிய என்.எல்.சி - தொழிற்சங்கத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17-ம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்பான விவகாரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என என்.எல்.சி தெரிவித்துள்ளது. 20 ஆண்டுக்கும் மேலாக பணி நிரந்தரம் அளிக்கவில்லை, ஐகோர்ட் உத்தரவையும் நிர்வாகம் பின்பற்றவில்லை என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 14, 2024 16:20 ISTதங்கலான்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!
ரூ. 10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில், படம் வெளியாகும் முன் ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
-
Aug 14, 2024 15:47 ISTவிருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Aug 14, 2024 15:30 ISTதடுப்பணை - கேரள அரசுக்கு கேள்வி
"சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட கேரள அரசு முன் அனுமதி பெற்றுள்ளதா?" என்று கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
Aug 14, 2024 15:29 ISTரவுடி நாகேந்திரன் ஆஜர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசாரால் ஆஜர் படுத்தப்பட்டார்.
-
Aug 14, 2024 14:59 ISTதமிழ்நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, நெல்லை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 14, 2024 14:59 ISTராணுவ கேப்டன் தீபக் சிங் உயிரிழப்பு?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடந்து வரும் என்கவுண்டரில் ராணுவ கேப்டன் தீபக் சிங், உயிரிழந்துள்ளதாக தகவல்
தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
-
Aug 14, 2024 14:59 ISTதேவநாதன் யாதவ் உள்பட மூவர் கைது: போலீசார் அறிக்கை
மைலாப்பூர் இந்து நிரந்தர நிதி லிமிடெட்’ நிறுவன நிதி மோசடியில் தேவநாதன் யாதவ் உள்பட மூவர் கைது வழக்கின் பின்னணி, கைதுக்கான காரணம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
-
Aug 14, 2024 13:36 ISTஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்து திமுக புறக்கணிப்பு
சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் இன்று மாலை தெரிவிப்பார்
- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
-
Aug 14, 2024 13:33 ISTபாடப்புத்தக விலை உயர்வு: அன்பில் மகேஸ் அறிக்கை
காகிதம் விலை, மேல் அட்டை விலை மற்றும் அச்சுக் கூலி உயர்வு காரணமாகவே பாடப்புத்தக விலை உயர்த்தப்பட்டது. லாப நோக்கத்திற்காக அல்ல
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
-
Aug 14, 2024 13:03 ISTசனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு
சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு .அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
-
Aug 14, 2024 12:49 ISTதொடர் விடுமுறை பேருந்து கட்டணம் உயர்வு
அதிகபட்சமாக சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு 3,000 ரூபாய் கட்டணம் உயர்வு திருநெல்வேலிக்கு 2,700 ரூபாய் வரையிலும், கோவைக்கு 2,700 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூல் சேலத்திற்கு 1,800 வரையிலும் பேருந்து கட்டணம் உயர்வு
-
Aug 14, 2024 12:47 ISTசெந்தில் பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்: அமலாக்கத்துறை கோரிக்கை
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் - அமலாக்கத்துறை தரப்பு கோரிக்கை மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது - அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செந்தில்பாலாஜி மேல்முறையீட்டு மனு செந்தில்பாலாஜி மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு ஒரு வார கால அவகாசம்
-
Aug 14, 2024 12:44 ISTசுதந்திர தினத்தன்று பாஜக பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி
சுதந்திர தினத்தன்று பாஜக பைக் பேரணி செல்ல நிபந்தனையுடன் அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் தேசிய கொடி ஏந்தி பேரணி செல்வதை தடை செய்யக் கூடாது என்றும் டிஜிபி-க்கு உத்தரவு.
-
Aug 14, 2024 12:36 ISTசவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரிய சவுக்கு சங்கரின் ரிட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி
-
Aug 14, 2024 12:03 ISTஆம்ஸ்ட்ராங் கொலை : வேலூர் மத்திய சிறையில் இருந்து ரவுடி நாகேந்திரனை சென்னைக்கு அழைத்து வரும் போலீஸ்
வேலூர் மத்திய சிறையில் இருந்து ரவுடி நாகேந்திரனை சென்னைக்கு அழைத்து வரும் போலீஸ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்
-
Aug 14, 2024 12:03 ISTகழிவறையில் மயங்கி விழுந்த கேட்டரிங் மாணவி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே கழிவறையில் மயங்கி விழுந்த கேட்டரிங் மாணவி உயிரிழப்பு கேட்டரிங் பயிற்சிக்கு சென்ற மாணவி திடீரென உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சி நாமக்கல் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு.
-
Aug 14, 2024 11:42 ISTகனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
"கனிம வளங்களுக்கான வரியை முன் தேதியிட்டு மாநில அரசுகள் வசூலிக்கலாம்" பல்வேறு மாநிலங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
-
Aug 14, 2024 11:39 ISTசெந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? உச்சநீதிமன்றம் கேள்வி
செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? விளக்கம் கேட்டு தெரிவிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
-
Aug 14, 2024 11:38 ISTவக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
புதுச்சேரி சட்டப்பேரவையில் 11–ஆம் நாள் அமர்வில் கேள்வி நேரம் முடிந்த பூஜ்ஜிய நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, துணைத் தலைவர் ஏ.எச்.எம். நாஜிம் ஆகியோர் மத்திய அரசு கொண்டுவரவுள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே நிலைப்பாட்டை புதுச்சேரி அரசும் எடுத்து, புதுச்சேரி சட்டபேரவையில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார்கள். அதற்கு, முதலமைச்சர் ரங்கசாமி இந்த சட்ட மசோதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். முதல்வரின் இந்த நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாகதியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மு. வைத்தியநாதன் மற்றும் சுயேட்சை உறுப்பினர் பி.ஆர். சிவா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
-
Aug 14, 2024 11:33 ISTமுதலமைச்சர் ஸ்டாலின் அரசின் மூன்றாண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்
சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் மூன்றாண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்
-
Aug 14, 2024 11:14 ISTதமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 14, 2024 11:04 ISTமருத்துவர் வன்கொடுமை : கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணையை தொடங்கியது சிபிஐ
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணையை தொடங்கியது சிபிஐ
-
Aug 14, 2024 10:24 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,555க்கும், ஒரு சவரன் ரூ.52,440க்கும் விற்பனை
-
Aug 14, 2024 10:24 ISTவிசாரணையை தொடங்கியது சிபிஐ
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்.
கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணையை தொடங்கியது சிபிஐ
-
Aug 14, 2024 10:18 ISTஒரு தலித் எந்த சூழலிலும் முதல்வர் ஆக முடியாது- திருமா
"மாயாவதி முதலமைச்சர் ஆனது Exceptional ஆனால் ஒரு தலித் எந்த சூழலிலும் முதலமைச்சர் ஆக முடியாது.." - உள்ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து சென்னையில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேச்சு
-
Aug 14, 2024 09:58 ISTஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறது அதிமுக
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்து கொள்கின்றனர்
-
Aug 14, 2024 09:41 ISTவிமான கட்டணங்கள் இரு மடங்கு உயர்வு
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வு. சுதந்திர தினம், சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை வருவதையொட்டி விமான டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வு -
Aug 14, 2024 08:55 ISTரேபிஸ் நோய் தாக்கி சிறுவன் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பு
கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிர்மலை வெறிநாய் கடித்தது
ரேபிஸ் நோய் தாக்கிய நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் உயிரிழந்தான்
சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் இரவில் வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது
-
Aug 14, 2024 08:30 ISTதேநீரில் மயக்க மருந்து- ரயிலில் நகை பறிப்பு
ரயிலில் பெண் பயணிகள் இருவருக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து ஐந்து சவரன் நகை பறிப்பு.
மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயிலில் மூன்று பேர் கொண்ட கும்பல் துணிகரம்
-
Aug 14, 2024 08:28 ISTபுறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு
தாம்பரத்தில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி முடிவடையாததால் சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றம் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவை மாற்றம் வரும் ஆக.14 வரை மாற்றம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆக. 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
Aug 14, 2024 08:00 ISTசிவகாசியில் அமைச்சர் சுரேஷ் கோபி
சிவகாசி சென்ற மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு உற்சாக வரவேற்பு.
தமிழ்ப் பண்பாடு மீது பற்று கொண்ட மகனாக, பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன் என உறுதி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.