பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 149- வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 40.11% ; புழல் - 75.12% ; பூண்டி - 3.4% ; சோழவரம் - 8.69% ; கண்ணன்கோட்டை - 62.2%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Aug 13, 2024 23:00 ISTபொறியியல் கல்லூரி வகுப்புகள் செப். 2-ம் தேதி தொடங்கும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு
பொறியியல் கல்லூரி வகுப்புகள் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ., பி.டெக், பி.பிளான், எம்.எஸ்.சி (5 ஆண்டுகள்) பாடப்பிரிவுக்கான வகுப்புகளுக்கு, முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
Aug 13, 2024 22:55 ISTஒலிம்பிக் - வினேஷ் போகட்டின் மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மனு மீதான தீர்ப்பு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 16 இரவு 9.30 மணிக்கு விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் தள்ளிவைத்துள்ளது.
-
Aug 13, 2024 22:31 ISTகுண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் கைதான சவுக்கு சங்கர் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராய குற்றவாளிகள், கணினி வெளிச்சட்ட குற்றவாளிகள், காணொலி திருடர்கள், பாலியல் குற்றங்கள் மீது பதிவு செய்யப்படும் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Aug 13, 2024 21:28 ISTயு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் கைதானாலும் ஜாமின் உண்டு - சுப்ரீம் கோர்ட்
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், யு.ஏ.பி.ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த நபரை ஜாமினில் விடுவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்ட வழக்குகளிலும் சட்ட விதிப்படி ஜாமின் வழங்கப்பட வேண்டும். ஜாமின் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பது அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ மீறுவதாக ஆகிவிடும். ஒருவரை சிறையில் அடைத்து வைக்கப்படுவது என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
Aug 13, 2024 20:45 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் மனு நாளை விசாரணை
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ கைதுக்கு எதிரான டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது
-
Aug 13, 2024 20:32 ISTஆண், பெண் பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும்; தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து, ஆண், பெண் பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும். மாணவர்கள் மீதான எத்தகைய வன்முறையாக இருந்தாலும் அது குறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகம் முறையாக விசாரிக்க வேண்டும். முக்கியமான இடங்களை சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது
-
Aug 13, 2024 20:19 ISTபாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தூத்துக்குடி வரை நீட்டிப்பு
கேரளாவின் பாலக்காட்டில் இருந்து நெல்லை வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இந்த சேவையை தொடங்கி வைக்கிறார்.
-
Aug 13, 2024 19:46 ISTகருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்
-
Aug 13, 2024 19:28 ISTகொல்கத்தா மருத்துவ மாணவி கொலை; சென்னையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்!
கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
-
Aug 13, 2024 19:20 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; அஸ்வத்தாமனுக்கு 4 நாள் போலீஸ் காவல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தானுக்கு 7 நாள் போலீஸ் காவல் கேட்கப்பட்ட நிலையில், 4 நாள் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்வத்தாமன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் காவலை அடுத்து, எழும்பூரில் உள்ள ரவுடிகள் தனிப்பிரிவு அலுவலகத்தில் வைத்து அஸ்வத்தாமனிடம் விசாரணை நடைபெற உள்ளது
-
Aug 13, 2024 18:55 ISTசெந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுமீது நாளை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
-
Aug 13, 2024 18:02 ISTதொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
"தமிழ்நாட்டில் ரூ45,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ளன. உணவு, எலக்ட்ரானிக், புதுப்பிக்கப்பட்ட மின் உற்பத்திக்கு முதலீட்டில் முக்கியத்துவம் வழங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
-
Aug 13, 2024 18:00 ISTகுளிர்பானம் குடித்து சிறுமி: உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு
குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குளிர்பான பாட்டில்களை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து வருகின்னர்.
-
Aug 13, 2024 17:36 ISTதேவநாதன் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், திரு தேவநாதன் அவர்கள், தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
Aug 13, 2024 17:28 ISTஎஸ்.கே.பிரபாகர் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் உள்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 13, 2024 17:21 ISTடி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்
டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கே.பிரபாகர் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார். உள்துறை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் எஸ்.கே.பிரபாகர் என்பது குறிப்பிடதக்கது.
-
Aug 13, 2024 16:56 ISTபிரபல ரவுடி பேங்க் அக்கவுண்டுக்கு திடீரென வந்த ரூ.2.5 கோடி
பெரியாங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அசோக் குமாரின் வங்கி கணக்கில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் என பணம் குவிந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்கள்.
புகார் அளித்த தகவலை தெரிந்து கொண்டு, தனது நண்பர்கள் 7 பேருக்கு பணத்தை ஆன்லைனில் பிரித்து அனுப்பியுள்ளார் அசோக் குமார். தற்போது அசோக் குமாரின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் மட்டுமே உள்ள நிலையில், போலீசார் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.
அசோக் குமார் தலைமறைவான நிலையில் அவர் பணம் அனுப்பிய 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடி அசோக் குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. பணத்தை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Aug 13, 2024 16:54 ISTபட்டாசு தொழிலாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
-
Aug 13, 2024 16:31 ISTகம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து
கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பற்றி எரிந்ததில் ஏற்பட்ட புகைமூட்டத்தால், மூச்சுத்திணறி ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்தார். கூட்டுறவு வங்கியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன.
-
Aug 13, 2024 16:18 ISTஅடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Aug 13, 2024 16:16 ISTபாடப்புத்தகங்களின் விலை உயர்வு - டி.டி.வி கண்டனம்
அ.ம.மு.க தலைவர் டி.டி.வி கண்டனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என ஒருபுறம் முழங்கிவிட்டு, மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்துவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ?
தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக அச்சடிக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு விற்பனை செய்யப்படும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலை சுமார் 40 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
390 ரூபாயாக இருந்த ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டதில் தொடங்கி, 790 ரூபாயாக இருந்த பத்தாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் 1,130 ரூபாய் என அனைத்து வகையான பாடப்புத்தகங்களின் விலையையும் திடீரென உயர்த்தியிருப்பது தனியார் பள்ளிகளின் நிர்வாகத்திற்கும், அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மேடைக்கு மேடை ஒருபுறம் முழங்கி வரும் நிலையில், மற்றொருபுறம் பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களையும் மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா ? என மக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அதிகரிக்கும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம், தலைவர் இல்லாமல் இயங்கும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்தும் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போட்டித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உதவும் பாடப்புத்தகங்களின் விலையையும் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களில் தொடங்கி அரசுப் பணி கனவில் இரவு, பகல் பாராமல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் பாடப்புத்தகங்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்
-
Aug 13, 2024 16:13 ISTஹிண்டன்பர்க் அறிக்கை - ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம்; காங்கிரஸ் அறிவிப்பு!
“செபி தலைவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் அமலாக்க இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.
தற்போது நாட்டில் நடக்கும் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றான ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்து போராட்டம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை முன்வைக்கவும் முடிவெடுத்துள்ளோம்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
-
Aug 13, 2024 16:08 ISTகட்டணம் உயர்கிறதா? - போக்குவரத்துத்துறை விளக்கம்
பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் தகவலுக்கு போக்குவரத்துத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் போக்குவரத்துத் துறை குறிப்பிட்டுள்ளது.
-
Aug 13, 2024 14:47 ISTதேவநாதன் யாதவ் கைது
மயிலாப்பூரில் ரூ.525 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில், தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Aug 13, 2024 14:05 ISTநீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
தேதி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, குமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு
-
Aug 13, 2024 13:54 ISTதமிழகத்தில் முதலீடு செய்ய 15 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி
தமிழகத்தில் முதலீடு செய்ய 15 தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி
44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் 24 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
-
Aug 13, 2024 13:53 ISTதமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 4 தினங்கள் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்பட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்
ஆக.15ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Aug 13, 2024 13:52 ISTகர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
காவிரி ஒழுங்காற்று குழுவின் 100வது கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
ஜூன் முதல் தற்போது வரை கூடுதலாக 97 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
-
Aug 13, 2024 13:23 ISTதமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று 12- 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Aug 13, 2024 13:23 ISTபதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு
தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் அளித்த உத்தரவாதத்தை ஏற்று, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்
-
Aug 13, 2024 12:50 ISTசென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்ஐ கலைச்செல்விக்கு பாராட்டு
சென்னையில் ரவுடியை சுட்டுப்பிடித்த எஸ்ஐ கலைச்செல்விக்கு பாராட்டு. சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டு.
-
Aug 13, 2024 12:49 ISTஇந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் திகழ்கிறது - முதல்வர் ஸ்டாலின்
2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது "தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது தமிழகம்" "தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு பெருமையான தருணம்" "நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்"
-
Aug 13, 2024 12:27 ISTதமிழகத்தில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி
தமிழகத்தில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக முறையீடு செய்துள்ளது..பாஜகவின் முறையீட்டை ஏற்று, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
-
Aug 13, 2024 11:56 ISTமுன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு எதிரான வழக்குகள் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம் நடத்தியதாக இரு வழக்குகள் பதிவு விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை - உயர் நீதிமன்றம் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை - உயர் நீதிமன்றம் ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது, எஃப்ஐஆரில் குறைபாடுகள் உள்ளன- உயர்நீதிமன்றம்.
-
Aug 13, 2024 11:55 ISTமுதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் .சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது அமைச்சரவை ஆலோசனை தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்த விவாதம் இடம் பெறும் என தகவல் தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
Aug 13, 2024 11:15 IST2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று (ஆக.13) பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
-
Aug 13, 2024 11:12 ISTஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் கட்சிகள்
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன அறிவிப்பு
-
Aug 13, 2024 10:38 ISTதொடர் கண்காணிப்பில் குளிர்பான ஆலை
தொடர் கண்காணிப்பில் இருக்கும் கிருஷ்ணகிரி தனியார் குளிர்பான ஆலை
கடந்த 2022, 2024 ஜனவரியிலும் இதே ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுஏற்கனவே நடந்த இரண்டு ஆய்வுகளிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை
2022, 2024ல் தவறு கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது ஆய்வுக்காக மத்திய, மாநில அதிகாரிகள் மீண்டும் வருகை
-
Aug 13, 2024 10:08 ISTகுளிர்பான ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிரடி ஆய்வு
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இதே நிறுவனம் தயாரித்த குளிர்பானம் குடித்து 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
-
Aug 13, 2024 09:55 ISTரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ
சென்னையில் போலீசாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ.
ரவுடி ரோகித் ராஜ் கத்தியால் வெட்டியதில் தலைமைக்காவலர் சரவணக்குமார், காவலர் பிரதீப் ஆகியோர் காயம்
போலீசாரை கத்தியால் தாக்கியதால், பெண் எஸ்.ஐ., கலைச்செல்வி தற்காப்புக்காக ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்
ரவுடி ரோகித் ராஜ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன
பிரபல ரவுடி சிவகுமார், தீச்சட்டி முருகன், ஆறுமுகம் கொலை வழக்கில் ரவுடி ரோகித் ராஜ் முக்கிய குற்றவாளியாவார்
-
Aug 13, 2024 09:44 ISTஇந்த மாவட்டங்களில் மழை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை, சேலம், திருவாரூர், நாகை ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
-
Aug 13, 2024 08:56 ISTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியில் இருந்து 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.14 அடியாக உள்ளது.
டெல்டா பாசனத்துக்காக 21,500 கன அடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக 14,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
-
Aug 13, 2024 08:34 ISTஇந்தியா திரும்பும் வினேஷ் போகத்
பாரிஸிலிருந்து இந்தியா திரும்புகிறார் வினேஷ் போகத். பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் புறப்பட்டார். இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க கோரிய வழக்கில் இன்று விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தீர்ப்பு
-
Aug 13, 2024 07:47 ISTசரித்திர பதிவேடு குற்றவாளி மீது துப்பாக்கிச்சூடு
சென்னை ராயப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
டி.பி.சத்திரம் சரித்திர பதிவேடு குற்றவாளி ரோகித் ராஜ் என்பவர் தப்ப முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்
-
Aug 13, 2024 07:47 ISTமூச்சுத் திணறல் - எஸ்.ஐ பலி
சாப்பிடும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உயிரிழப்பு
-
Aug 13, 2024 07:45 IST8 மாவட்டங்களில் இன்று கனமழை
ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஆக.13) கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.