Tamil Breaking News Highlights: வங்கதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை: வெள்ளை மாளிகை அறிக்கை

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
People-participate-in-a-protest-march-against-Prime-Minister-Sheikh-Hasina-and-her-government-demanding-justice-for-the-victims-killed-in-the-recent-countrywide-deadly-clashes-in-Dhaka-Bangladesh.-AP

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 148- வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 37.94% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 40.27% ; புழல் - 75.24% ; பூண்டி - 3.22% ; சோழவரம் - 8.79% ; கண்ணன்கோட்டை - 62.2%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Aug 12, 2024 21:18 IST

    ஆகஸ்ட் 16-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு

    தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.



  • Aug 12, 2024 21:13 IST

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக முனைவர் சா.வின்சென்ட் நியமனம்

    லயோலா கல்லூரியின் மேனாள் டீன், முனைவர் சா. வின்செண்ட், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த விஞ்ஞானி பட்டத்தை வென்றுள்ளார். 2002-ல் மேர்கொண்ட மழை நீர் வடிகால் வாய்க்காலைப் பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Aug 12, 2024 20:59 IST

    சுதந்திர தின தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    சுதந்திர தின தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு ஆகஸ்ட் 14, 16, 17-ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.



  • Aug 12, 2024 20:17 IST

    சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு 

    தேனியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Aug 12, 2024 19:56 IST

    13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Aug 12, 2024 19:24 IST

    தமிழ்நாடு அறிவியல் - தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக வின்சென்ட் நியமனம்

    தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் டீன் வின்சென்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Aug 12, 2024 18:57 IST

    தமிழக பாடப் புத்தகங்களின் விலை உயர்வு

    தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது



  • Aug 12, 2024 18:43 IST

    குளிர்பானத்தில் நச்சுத்தன்மை கலந்துள்ளது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சு

    திருவண்ணாமலையில் குளிர்பானம் அருந்திய சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், குளிர்பானத்தில் நச்சுத்தன்மை கலந்துள்ளது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்



  • Aug 12, 2024 18:20 IST

    வயநாடு நிலச்சரிவு; புதுக்கோட்டை தனியார் பள்ளி ரூ14 லட்சம் நிதியுதவி

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு உதவிடும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகமும், மாணவர்களின் பெற்றோரும் இணைந்து நிதி திரட்டி 14 லட்சத்து 24,186 ரூபாய் அளித்துள்ளனர்



  • Aug 12, 2024 18:10 IST

    நாய்கள் நடமாட்டம்: பார்கவுன்சிலுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Aug 12, 2024 17:44 IST

    மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பு

    மேட்டூர் அணையில் இருந்து தற்போது நொடிக்கு 26,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை 6 மணி அளவில் நொடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளது



  • Aug 12, 2024 17:21 IST

    இடி, மின்னலுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழை. இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி



  • Aug 12, 2024 16:43 IST

    இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனம்: முதலிடத்தில் ஐஐடி மெட்ராஸ்

    இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2 வது இடத்தில் பெங்களூருவில் உள்ள IIS கல்வி நிறுவனம், 3 வது இடத்தில் ஐஐடி பாம்பே தேர்வு  செய்யப்பட்டுள்ள நிலையில், பொறியியல் பிரிவிலும், சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் தேர்வாகி உள்ளது



  • Aug 12, 2024 16:37 IST

    கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

    வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி. வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது கேரள வங்கி



  • Aug 12, 2024 16:36 IST

    நடிகர் ரஞ்சித் சமூக அமைதியை சீர்குலைக்கிறார்: விசிக வன்னியரசு புகார்

    நடிகர் ரஞ்சித் சமூக அமைதியை சீர்குலைக்கிறார் என்று அவர் மீது, விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திரைப்பட நடிகர் ரஞ்சித் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாக குற்றச்சாட்டு சாட்டியுள்ள அவர், ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில், ஆணவ கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Aug 12, 2024 15:27 IST

    பொன் மாணிக்கவேல் வழக்கு: கடத்தல் தடுப்பு பிரிவு அதிகரிகளுக்கு சம்மன் அனுப்ப திட்டம்

    ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை பெற்றுள்ளனர். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பொன் மாணிக்கவேல் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை, இவற்றுடன் ஒப்பீட்டு ஒப்பிட்டு பார்த்து வருகின்றனர். இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படையில் இருந்த அனைத்து போலீசாருக்கும், சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதில்  அடுத்தக்கட்டமாக முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்



  • Aug 12, 2024 15:24 IST

    தாயை பிரிந்த புலிக்குட்டி: வனத்துறையினர் தீவிர முயற்சி

    முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டியை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் 8 மணி நேரத்திற்கு மேலாக முயற்சித்து வருகின்றனர். தாய் யானை இருக்கும் யானை கூட்டத்தை தற்போது ட்ரோன் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தாய் யானை அடையாளம் காணபட்ட உடன் குட்டியானையை சேர்க்கபடும் என புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • Aug 12, 2024 14:47 IST

    ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம்: புதுச்சேரியில் எந்த மருத்துவமனையும் ஏற்றுகொள்வதில்லை ஏன்? தி.மு.க எம்.எல்.ஏ சிவா கேள்வி  

    மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை புதுச்சேரியில் எந்த மருத்துவமனையும் ஏற்றுகொள்வதில்லை ஏன்? என தி.மு.க எம்.எல்.ஏ சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையே இதை ஏற்றுக் கொள்வதில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடன் 9 வது நாளான இன்று உறுப்பினர்கள் கேள்வி பதில் நேரத்தில் பேசிய சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை எந்த மருத்துவ மனைகளை ஏற்றுகொள்வதில்லை என்றும், குறிப்பாக மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டை ஏற்றுகொள்வதில்லை என குற்றம்சாட்டினார். மேலும் இதனால் ஏழை எளிய மக்கள் அவசர சிகிச்சை பெறமுடியாமல் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். 

    இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புதுச்சேரியில் சரியான முறையில் அமல்படுத்த முடியவில்லை, இந்த திட்டத்தை சீர்படுத்தி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மஞ்சள் அட்டை உள்ளிட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றார்.



  • Aug 12, 2024 14:37 IST

    கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா: இ.பி.எஸ், கமல், ரஜினிக்கு அழைப்பு 

    கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

     



  • Aug 12, 2024 14:24 IST

    ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்த  நிதி அமைச்சகம் நடவடிக்கை என்ன? - செயலாளர் அஜய் சேத் விளக்கம் 

    பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் மாதபி பூரி புச்க்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்பாடுகள் குறித்து நிதி அமைச்சகத்தின் முதல் அதிகாரப்பூர்வ பதிலில், பொருளாதாரத்துறை செயலர் அஜய் சேத், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தால் மேலும் எதுவும் கூற முடியாது என்றும், கட்டுப்பாட்டாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் இருவரும் அறிக்கைகளை வழங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளார். 

    “செபி அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். நான் மேலும் சேர்க்க எதுவும் இல்லை, ”என்று அஜய் சேத் செய்தியாளர்களிடம் கூறினார்.



  • Aug 12, 2024 14:04 IST

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 



  • Aug 12, 2024 13:46 IST

    அக்டோபர் 10ல் 'கங்குவா' ரிலீஸ்; டிரைலர் வெளியீடு 

    சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.  சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள 'கங்குவா' படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது



  • Aug 12, 2024 13:44 IST

    5,191 கிலோ கஞ்சா தீயிலிட்டு எரிப்பு 

    தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் 495 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் தீயிலிட்டு எரித்தனர். 



  • Aug 12, 2024 13:26 IST

    கடன் சுமை  - தம்பதி தற்கொலை

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடன் சுமை மற்றும் குழந்தையின்மை மன உளைச்சலால் உயர் மின் அழுத்த மின் கம்பியைப் பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    குமரேசன் (35) மனைவி புவனேஸ்வரி (28) இருவரும் இன்று காலை வீட்டின் மாடிக்கு சென்று அங்கு மின் கம்பத்தில் இருந்த மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துள்ளனர். இருவரது உடலையும் மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 



  • Aug 12, 2024 12:50 IST

    தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

    தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 12- 20 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்

    வரும் 15, 16 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு



  • Aug 12, 2024 12:46 IST

    தென்மேற்கு பருவமழை இயல்பை விட 91% அதிகம்

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 91% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!



  • Aug 12, 2024 12:45 IST

    பூஜா கேத்கரை கைது செய்ய காவல்துறைக்கு இடைக்கால தடை

    ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட பூஜா கேத்கரை கைது செய்ய காவல்துறைக்கு இடைக்கால தடை டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு

     டெல்லி உச்சநீதிமன்றம்



  • Aug 12, 2024 12:03 IST

    தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம்: நீதிபதி

    சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். 

    சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து

    தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம்.

    உயர் நீதிமன்றம்



  • Aug 12, 2024 11:53 IST

    அழுத்தத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள்

    ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது சமீபத்திய அறிக்கையில், செபி தலைவர் மாதாபி பூரி புச் 'அதானி பண மோசடியில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களில்' பங்கு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டிய நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் திங்களன்று அழுத்தத்தில் இருந்தன,



  • Aug 12, 2024 11:47 IST

    திருப்பத்தூர்: புதிய காவல் கண்காணிப்பாளர் பதவியேற்பு

    திருப்பத்தூர் மாவட்டத்தின் 5வது காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

    Thirupathur



  • Aug 12, 2024 11:28 IST

    சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பு

    2022ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Aug 12, 2024 11:28 IST

    சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 9 ஆயிரம் போலீசார்

    சுதந்திர தினவிழாவை ஒட்டி சென்னை மாநகரில் 9000 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளதாக அறிக்கை



  • Aug 12, 2024 11:02 IST

    கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: சிபிஐ கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு. இ.டி-யை தொடர்ந்து சி.பி.ஐயும் கைது செய்தது. உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 



  • Aug 12, 2024 10:55 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,470க்கும், ஒரு சவரன் ரூ.51,760க்கும் விற்பனை 



  • Aug 12, 2024 10:54 IST

    விஜய் மக்கள் இயக்க  நிர்வாகி கைது

    குடியாத்தம் அருகே விஜய் பட ஸ்டிக்கர் ஒட்டிய தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து

    விஜய் மக்கள் இயக்க  நிர்வாகி, அவரது மகன்கள் என 4 பேர் கைது



  • Aug 12, 2024 10:12 IST

    ஆக.16 முதல் இலங்கைக்கு கப்பல் சேவை

    நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் ஆக.16-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடக்கம். இன்று நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கப்படும் என படகு இயக்கும் நிறுவனம் அறிவிப்பு



  • Aug 12, 2024 10:11 IST

    வருங்கால துணை முதல்வர் உதயநிதி: கீதா ஜீவன் பேச்சு

    வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் திட்டம்- திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு



  • Aug 12, 2024 09:41 IST

    காவிரியில் 41,308 கனஅடி உபரி நீர் திறப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 41,308 கனஅடி உபரி நீர் திறப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 41,308 கனஅடி உபரி நீர் திறப்பு. கே.எஸ்.ஆர் அணை- 36,308 கனஅடி, கபினி அணை- 5000 கனஅடி தண்ணீர் திறப்பு 



  • Aug 12, 2024 09:30 IST

    என்னை போன்று விஜய் பிரச்சினைகளை சந்திப்பார்: சீமான்

    மாநாடு நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநாடு நடத்தும் விவகாரத்தில் நான் சந்தித்த பிரச்சினைகளை போன்று, நடிகர் விஜய் சந்திப்பார் என கூறினார்



  • Aug 12, 2024 08:45 IST

    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்

    வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தமிழ்நாட்டிற்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை  விடுப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 

    இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 



  • Aug 12, 2024 08:10 IST

    வினேஷ் போகத் தான் கவனித்து இருக்க வேண்டும்: பி.டி.உஷா

    பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் தான், எடையை சரிவர நிர்வகித்திருக்க வேண்டும்

    மருத்துவக் குழுவினர் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கருத்து



  • Aug 12, 2024 08:08 IST

    விழுப்புரம்: 2வது நாளாக கொட்டித் தீர்த்த மழை

    விழுப்புரம் மாவட்டத்தில் 2வது நாளாக கொட்டித் தீர்த்த மழை

    புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர் - பயணிகள் அவதி

    பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் அவதி



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: