/indian-express-tamil/media/media_files/2024/11/09/dcjWRmIrtKcQZNSKmKew.jpg)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் 11வது நாளாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Jul 05, 2025 16:45 IST
கொடைக்கானலில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து
கொடைக்கானல் அருகே அடுக்கம் பகுதியில் தனியார் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Jul 05, 2025 16:33 IST
வலது காலுக்குப் பதில் இடது காலில் அறுவை சிகிச்சை
விழுப்புரம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிசிச்சை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
-
Jul 05, 2025 16:23 IST
ராமதாஸ் தலைமையில் பா.ம.க செயற்குழுக் கூட்டம்
ராமதாஸ் தலைமையில் ஜூலை 8-ம் தேதி பாமக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் செயற்குழு நடைபெறும் என பு.தா.அருள்மொழி தெரிவித்தார். ராமதாஸ் தலைமையில் நடந்த புதிய தலைமை நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் பேட்டி அளித்தார். ஜி.கே.மணி, பு.தா.அருள்மொழி, முரளிசங்கர், சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
-
Jul 05, 2025 16:14 IST
இளைஞர் மரணம் - ஓ.பி.எஸ் நேரில் ஆறுதல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீசார் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமார் குடும்பத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
-
Jul 05, 2025 16:13 IST
திருச்செந்தூர் குடமுழுக்கு - 3 தற்காலிக பேருந்து நிலையங்கள்
வருகிற ஜூலை 7 திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் நிலையில், பக்தர்கள் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் சாலைகளில் 20,000 பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
Jul 05, 2025 15:53 IST
பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாய் வளர்ப்பு பிரச்சனையில் பெண்ணை தாக்கிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வலட்சுமி வீட்டில் வளர்க்கும் நாய் குரைத்ததால் எதிர்வீட்டில் உள்ள கண்ணாத்தாள் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதில் கண்ணாத்தாளை, செல்வலட்சுமியின் உறவினர்கள் 7 பேர் சேர்ந்து தாக்கினர்.
-
Jul 05, 2025 15:52 IST
மணல் கொள்ளை - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
திருச்சி, மாவடிகுளத்தில் சட்ட விதிகளை மீறி தினந்தோறும் 500 லாரிகளில் மணல் கொள்ளை நடப்பதை தடுக்கக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எந்த அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.நீர் பாதாளத்திற்கு சென்றுள்ளதா என பொதுப்பணித்துறை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 05, 2025 15:19 IST
பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை - அமைச்சர் கோவி.செழியன்
பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது திருட்டு புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.
-
Jul 05, 2025 14:53 IST
சோமாட்டோ, ஸ்விகியை புறக்கணித்த ஓட்டல் சங்கம்..!!
நாமக்கல் தாலுகாவில் சோமாட்டோ, ஸ்விகிக்கு பதில் புதிய செயலியை ஓட்டல் உரிமையாளர்கள் தொடங்கி உள்ளனர். கடந்த 1ம் தேதி முதல் சோமாட்டோ, ஸ்விகிக்கு ஓட்டல் உரிமையாளர்கள் உணவு ஆர்டர்களை தரவில்லை. சோமாட்டோ, ஸ்விகி கமிஷன் தொகையை 35%லிருந்து 18%ஆக குறைக்க ஓட்டல் உரிமையாளர்கள் கோரியிருந்தனர். மறைமுக கட்டணம், விளம்பர கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில், ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கையை சோமாட்டோ, ஸ்விகி ஏற்காத நிலையில் புதிய செயலி தொடக்கம் செய்யப்பட்டது.
-
Jul 05, 2025 14:45 IST
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம்: ஐகோர்ட் கிளை ஆணை
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கோடாரி தைலத்துக்கு உரிமம் பெற வேண்டும் என ஆக்சென் நிறுவனத்துக்கு மாநில ஆணையம் நோட்டீஸ் வழங்கியது. சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோடாரி தைலத்தை சுங்கத்துறை முடக்கி வைத்தது. இறக்குமதி செய்த பொருட்களை விடுவிக்கக் கோரி ஆக்சென் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆயுர்வேத மருந்துகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளை மாற்ற வேண்டும். ஆக்சென் நிறுவனத்தின் பொருட்களை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
-
Jul 05, 2025 14:36 IST
வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை என புகார்..!!
கன்னியாகுமரியில் வரதட்சணைக்காக இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Jul 05, 2025 14:35 IST
மேட்டூர் அணை நீர்வரத்து 53,205 கனஅடியாக உயர்வு..!!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,860 கனஅடியில் இருந்து 53,205 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 93.200 டிஎம்சியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,200 கனஅடியும் 16 கண் மதகு வழியாக 17,800 கனஅடி நீரும் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
-
Jul 05, 2025 13:31 IST
திருப்புவனம் காவலர் மரணம் வழக்கு: நீதிபதி விசாரணையில் டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆஜர்
அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணை இன்று (ஜூலை 5) திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் இன்று நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 4) நடைபெற்ற விசாரணையில் திருப்புவனம் அரசு மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகேயன் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:
“ஜூன் 28 மாலை 6.30 மணியளவில் போலீஸாரால் அழைத்து வரப்பட்ட அஜித்குமாரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது என உறுதி செய்தேன். உடலை பிரேதப் பரிசோதனைக்காக வைக்கச் சொன்னேன். எனினும், மேலதிகாரிகள் கூறியதன்படி, போலீஸார் உடலை அவசரமாக எடுத்துச் சென்றனர்” என்று கூறியுள்ளார். -
Jul 05, 2025 12:51 IST
திருச்செந்தூர் குடமுழுக்கு ஒரு மைல் கல்- அமைச்சர் சேகர் பாபு பேட்டி
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு - பக்தர்கள் வசதிக்காக 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேருந்து நிலையங்களில் அகண்ட LED திரைகள் மூலம் குடமுழுக்கு நேரலையில் ஒளிபரப்பப்படும். குடமுழுக்கிற்கு வரும் பக்தர்களுக்காக லட்சக்கணக்காண உணவு பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்படும்; பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஓஆர்எஸ் பானங்கள் வழங்கப்படும்.
- அமைச்சர் சேகர் பாபு -
Jul 05, 2025 11:12 IST
டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடம் நீதிபதி விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் நீதிபதி விசாரணை
-
Jul 05, 2025 10:06 IST
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை-2 பேர் கைது
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்ற சரோஜ் பாந்து தாஸ் (49), லிபான் குமார் தாஸ்(37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Jul 05, 2025 09:52 IST
மதுரை ஆதீனம் ஆஜராகும்படி 2-வது முறை சம்மன்
இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்த ஆதீனம் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மதுரை ஆதீனம், விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆதீனம் ஆஜராகவில்லை. இந்நிலையில் விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ளநிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் (இன்று) ஜூலை 5-ந் தேதி ஆதீனம் ஆஜராக 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டது.
-
Jul 05, 2025 09:31 IST
திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை
இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி நேரில் விசாரணை நடத்திவருகிறார். காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
Jul 05, 2025 09:23 IST
திருப்பூர்: நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த கேசவ மூர்த்தி என்பவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு திருப்பூர்-தாராபுரம் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது காரின் முன்பகுதியில் புகை வெளியேறியது. இதனையடுத்து திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. தீப்பற்றியதும் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அவசர அவசரமாக கேசவ மூர்த்தி காரில் இருந்து இறங்கி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
-
Jul 05, 2025 09:13 IST
மேட்டூர் அணை நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்கு 22,500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 17,500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
-
Jul 05, 2025 09:12 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50,000 கனஅடியாக மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.
-
Jul 05, 2025 09:12 IST
ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு ஜூலை 7-ம் தேதி விடுமுறை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 7ஆம் தேதி (திங்கட்கிழமை ) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். அதனை ஈடுசெய்யும் பொருட்டு 19-07-2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்தும் ஆணையிட்டுள்ளார்.
-
Jul 05, 2025 09:12 IST
4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணை தொடக்கம்
அஜித்குமார் மரண வழக்கில் 4-வது நாளாக காவல் நிலையத்திற்கு நேரில் சென்று நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடங்கி உள்ளார். சம்பவத்தின்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகளிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களாக வழக்கு தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
-
Jul 05, 2025 09:11 IST
திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்பு ரயில் இயக்கம்
திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை (ஜூலை 06) இரவு 9.55-க்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் (ஜூலை 07) இரவு 9.40 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 05, 2025 09:11 IST
கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்கள் சஸ்பெண்ட்
மதுரையில் கைதி தப்பியோடிய விவகாரத்தில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். விசாரணைக்காக ஆஜர்ப்படுத்திய பின்னர் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அரசுப்பேருந்தில் அழைத்து வந்த நிலையில் பகவதிராஜா தப்பியோடினார். இந்நிலையில் காவலர்கள் சரவணக்குமார், பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.