Advertisment

Tamil News Today Live: தமிழக மீனவர்கள் 25 பேரை கைது

Tamil News Live Updates-30-06-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai city news in tamil: Fishing ban ends, only 30% deep-sea vessels likely to go

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 106-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ராகுல் டிராவிட், ரோகித், விராட் ஓய்வு

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார். தொடர்ந்து  சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 30, 2024 21:21 IST
    மதுரையில் போக்குவரத்து மாற்றம்; முக்கிய அறிவிப்பு

    மதுரை தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரையிலான பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 1) முதல் மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.



  • Jun 30, 2024 19:33 IST
    உலக கோப்பை இறுதி போட்டியை பார்க்காதது ஏன்? அமிதாப் பச்சன் விளக்கம்

    “நான் இறுதிப்போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவிடுமோ என்ற அச்சத்தால்தான் பார்க்கவில்லை” என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.



  • Jun 30, 2024 17:52 IST
    தஞ்சாவூரில் 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை; 2 பேர் கைது

    தஞ்சாவூரில் 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனையில், சாலியமங்கலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமான் என்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக இவர்கள் இருவர் மீது யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் 153பி, 121ஏ, 120பி உள்ளிட்ட பிரிவுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Jun 30, 2024 17:46 IST
    டாஸ்மாக் மதுபானம் பற்றிஅமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான் - அண்ணாமலை

    கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி: “டாஸ்மாக் மதுபனத்தின் தரம் குறைவு காரணமாகவே சில கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை நாடுகின்றனர்; டாஸ்மாக் மதுபானம்பற்றி அமைச்சர் துரைமுருகன் கூறியது உண்மைதான்; இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.



  • Jun 30, 2024 17:44 IST
    டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா

    டி20 உலகக் கோப்பையை வென்றதைடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.



  • Jun 30, 2024 16:50 IST
    வி.சி.க சார்பில் செப். 17-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு  - திருமாவளவன் அறிவிப்பு

    மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் பின், வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சு: “செப்டம்பர் 17-ம் தேஹ்டி வி.சி.க சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது; மது ஒழிப்பு மாநாடு பெண்கள் மூலம் நடத்தப்படும்.” என்று கூறினார்.



  • Jun 30, 2024 16:44 IST
    தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று (ஜூன் 30) இரவு 7 மணி வரை விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 30, 2024 16:19 IST
    ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்; கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு

    வரும் கல்வி ஆண்டில் இருந்து அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும். செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் அறிவித்துள்ளார்



  • Jun 30, 2024 15:38 IST
    30-வது ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி பொறுப்பேற்பு

    தற்போதைய ஜெனரல் மனோஜ் பாண்டே பணியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, 30-வது ராணுவ தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.



  • Jun 30, 2024 15:08 IST
    மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும் - கிராம மக்கள் தீர்மானம்

    மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும். மலை கிராமங்களில் 5 ஏக்கர் நிலத்துடன், குடியிருப்புகள் அமைத்து தர வேண்டும் என மாஞ்சோலை, நாலு மூக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்ட கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்



  • Jun 30, 2024 14:44 IST
    ஆவின் கிளைகளை அதிகரிக்கத் தேவை உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்

    ஆவின் கிளைகளை அதிகரிக்கத் தேவை உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்



  • Jun 30, 2024 14:27 IST
    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி - ஜி.கே.வாசன்

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மனமாந்த வாழ்த்துகள். இந்திய வீரர்களின் அசாத்திய திறமையாலும், கடின உழைப்பாலும் இந்தியாவிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித் தந்திருக்கின்றார்கள். இந்திய வீரர்கள் மென்மேலும் வெற்றிபெற மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • Jun 30, 2024 14:01 IST
    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.  நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 



  • Jun 30, 2024 13:59 IST
    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக சூர்யகுமார் யாதவ் தேர்வு

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக சூர்யகுமார் யாதவ் தேர்வு.  சூர்யகுமார் யாதவுக்கு பதக்கம் அணிவித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பாராட்டு பரபரப்பான கடைசி ஓவரில் மில்லர் அடித்த பந்தை எல்லைக் கோட்டருகில் சூர்யகுமார் யாதவ் அநாயசமாக கேட்ச் செய்து வியக்க வைத்தார். 



  • Jun 30, 2024 13:40 IST
    வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் தமிழக அரசு அரசாணை வெளியீடு

    தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெற ஆதார் எண் கட்டாயம் தமிழக அரசு அரசாணை வெளியீடு. நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம் - அரசாணை . ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம். 



  • Jun 30, 2024 13:03 IST
    மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது? மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

    "ஏற்கனவே முதல்வர் ஸ்பெயின் சென்று எவ்வளவு முதலீடு வந்தது என்பதை கூற வேண்டும்" "அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களை சந்திக்க உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும்" "விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" "சிபிஐ விசாரித்தால் தான், விஷ சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும்" "மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது? மத்திய இணையமைச்சர் எல்.முருகன்



  • Jun 30, 2024 12:59 IST
    வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இரண்டாவது நாளாக பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    சென்னை சைதாப்பேட்டையில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இரண்டாவது நாளாக பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம். அபித் காலனியில் மெட்ரோ குடிநீர் வாரியம் லாரி மூலம் குடிநீர் விநியோகம் உயிரிழந்த சிறுவன் வீட்டின் முன்பு இருந்த அடிபம்பிற்கு பூட்டு போட்ட வீட்டின் உரிமையாளர் சிகிச்சையில் உள்ள 7 வயது சிறுமியின் உடல்நிலை தேறி வருவதாக மாநகராட்சி தகவல்.



  • Jun 30, 2024 12:53 IST
    கோவில் திருவிழாவில் பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

    திருவாரூரில் கோவில் திருவிழாவில் பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைத்த போது விபத்து பிளக்ஸ் போர்டு மின் கம்பியில் உரசியதில், 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர் 15 வயதான மதன்ராஜ் பரிதாபமாக உயிரிழப்பு, ஒருவருக்கு தீவிர சிகிச்சை, மற்ற இருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர் சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.



  • Jun 30, 2024 12:51 IST
    இந்திய கிரிக்கெட் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து. 



  • Jun 30, 2024 12:06 IST
    கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது: பிரேமலதா விஜயகாந்த் 

    கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழ கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும், புதிய சட்டம் பாயுமா?" "கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது" "கல்வராயன் மலையில் ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது- பிரேமலதா விஜயகாந்த் 



  • Jun 30, 2024 11:50 IST
    விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை; திருமாவளவன்

    தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை; மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் - மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி



  • Jun 30, 2024 11:29 IST
    அதிமுக பிரமுகர் கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

    கடலூர் வண்டிபாளையம் பகுதியில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு



  • Jun 30, 2024 11:29 IST
    மோடி தொலைபேசியில் பாராட்டு

    உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

    அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோகித் ஷர்மா, இறுதிப் போட்டியில் அரைசதம் விளாசிய விராட் கோலிக்கு பிரதமர் பாராட்டு

    கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, அற்புதமாக கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவுக்கும் பிரதமர் மோடி பாராட்டு

    இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக ராகுல் டிராவிட்டுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்



  • Jun 30, 2024 10:56 IST
    மதுரையில் திருமா பேட்டி

    நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறாக உள்ளது; 

    பாஜகவினர் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு; கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63இடங்கள் குறைவு

    ஆயோத்தியிலேயே தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது

    மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைபட்சமாக சார்பாக செயல்படுகிறார்” - மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி



  • Jun 30, 2024 10:54 IST
    வெடிகுண்டு மூலப்பொருட்கள் வெடித்து விபத்து

    சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிப்பதற்காக சேர்த்து வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து

    அரசனேரி கிராமத்தில் ஓட்டு வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேகரித்து வைத்திருந்த அரவிந்தன்

    வீட்டில் வைத்திருந்த வெடி பொருட்கள் வெப்பத்தால் வெடித்து சிதறியதாக தகவல் - முழுவதும் இடிந்து தரைமட்டமான வீடு

    அரவிந்தன் மீது 2 கொலை வழக்கு உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன

    வெடிகுண்டு தயாரித்து முக்கிய நபர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினாரா? என்ற கோணத்தில் விசாரணை



  • Jun 30, 2024 10:17 IST
    பிரான்ஸ் தேர்தல்: புதுச்சேரியில் வாக்குப்பதிவு

    பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்- புதுச்சேரியில் வாக்குப்பதிவு

    பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உள்ள 577 தொகுதிகளில் ஆசிய நாடுகளுக்கான ஒரு தொகுதிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தியாவில் வாழும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 16,000க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு. 



  • Jun 30, 2024 09:46 IST
    குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் - உற்சாக குளியல்

    ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமாக குவிந்துள்ள மக்கள்

    அதிக அளவில் மக்கள் குவிந்ததால், குற்றால அருவிகளில் போலீஸ் பாதுகாப்பு



  • Jun 30, 2024 09:45 IST
    சென்னையில் 250 சவரன் நகை கொள்ளை

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

    கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் 250 சவரன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி ரூ.25 லட்சம் ரொக்கம் திருட்டு

    ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயுள்ளதாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்

    ஓட்டுநராக பணியாற்றும் சரவணன் என்பவரை கைது செய்து விசாரணை



  • Jun 30, 2024 08:58 IST
    கிணற்றுக்குள் தத்தளித்த நபரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    ஆலங்குளம் அருகே கிணற்றுக்குள் தத்தளித்த நபரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

     60 அடி ஆழ கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை பழுது பார்த்த போது விபரீதம். கிணற்றின் உள்ளே இறங்கியவர், படிகள் இல்லாததால் மேலே வர முடியாமல் தவிப்பு. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி மீட்டனர்



  • Jun 30, 2024 08:58 IST
    சென்னையில் மீண்டும் துவங்கியது 'ஹேப்பி ஸ்ட்ரீட்'

    சென்னையில் மீண்டும் துவங்கியது, 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.

    அண்ணாநகர் பகுதியில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்

    அண்ணாநகரில் 2வது நிழல்சாலை பகுதியில் காலை 9 மணி வரை போக்குவத்துக்கு தடை,  அடுத்த ஒரு மாத காலத்துக்கு ஞாயிறுதோறும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெறும் என தகவல்



  • Jun 30, 2024 08:05 IST
    தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ ரெய்டு

    தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    புதுக்கோட்டையில் அப்துல்கான் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அதிகாலையில் இருந்தே சோதனை

    தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வீடுகளில் சோதனை



  • Jun 30, 2024 08:05 IST
    இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.20.25கோடி பரிசு 

    டி20 உலகக் கோப்பை வெற்றியால் 20 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசை அள்ளியது இந்திய அணி

    தோல்வியடைந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு 10 கோடியே 25 லட்சம் ரூபாய் பரிசு

     



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment