தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில், புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெறும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் 2022-23ம் நிதியாண்டுக்கான காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் இதுவாகும்.தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில், புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெறும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
‘சிங்கார சென்னை 2.0′ திட்டத்திற்கு 500 கோடி
*வெள்ளத்தைக் குறைக்கும் நோக்கில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை தியாகராஜன் அறிவித்தார்.
இலவச பேட்டரி வாகனங்கள்!
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உள்நாடு, சா்வதேச முனையங்கள் இடையே இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்கள், தற்போது அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் விரிவு செய்யப்பட்டுள்ளது.
பெகாசஸ் விவகாரம்: மம்தா குற்றச்சாட்டு
பெகாசஸ் உளவு மென்பொருளை 4 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்க அரசுக்கு விற்க முயற்சிகள் நடந்தன. நான் வேண்டாம் என மறுத்த நிலையில் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயு வாங்கினார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
இலங்கைக்கு ரூ.7,500 கோடி உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி கடனுதவி அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவர் நவீன் எஸ்ஜியின் உடல் திங்கள்கிழமை அதிகாலை பெங்களூருவை அடையும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், நவீனின் உடல் அதிகாலை 3 மணிக்கு பெங்களூருவை அடையும் என்றார். பெங்களூருவில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாலகேரி கிராமத்திற்கு அவரது உடல் நேரடியாக எடுத்துச் செல்லப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவர் நவீன் எஸ் ஜி, தனது ஜூனியர்களுக்கு மளிகைப் பொருட்களைக் கொண்டுவர பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்தபோது குண்டு வெடித்ததில் பலியானார். ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனில் இறந்த முதல் இந்தியர் நவீன் என்பது குறிப்பிடத் தக்கது.
வெள்ளிக்கிழமையன்று அவரது சடலத்தை கொண்டு வருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்த குடும்பத்தினர், குறைந்தபட்சம் அவரது சடலத்தை பெங்களூருக்கு கொண்டு வருவதில் நிம்மதி அடைந்ததாக தெரிவித்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய நவீனின் மூத்த சகோதரர் ஹர்ஷா எஸ்ஜி, இந்திய தூதரகத்திலிருந்தும், விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்தும் தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார். “வெள்ளிக்கிழமை மதியம் எனது சகோதரரின் உடலை கொண்டு வருவது குறித்து அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும், அவரது உடல் சனிக்கிழமை மாலை விமானம் மூலம் கொண்டு வரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” என்று அவர் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக உலகை ஒன்றிணைக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சாரம் சீனா போன்ற எதிரிகளால் மட்டுமல்ல, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடுகளான இந்தியாவாலும் எதிர்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கு அதன் பொருளாதாரம் போராடுவதால், தள்ளுபடியில் எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்க அனுமதிக்கும், ரஷ்ய எண்ணெயின் இறக்குமதியை நாடு அதிகரிக்கும் என்று இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசுவதற்கு அதிகாரம் இல்லாத பெயர் குறிப்பிட விரும்பாத அவர், சமீபத்திய கொள்முதல் 3 மில்லியன் பீப்பாய்கள் என்று கூறினா என ஏ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில், உக்ரைனில் படிப்படியாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. நாங்கள் சமீபத்திய சுற்று ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை கருப்பு வெள்ளையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் வரவேற்கிறோம். பகைமையை உடனடியாக நிறுத்துதல் மற்றும் உரையாடல் மற்றும் ராஜதந்திரத்தின் பாதையை விடாமுயற்சியுடன் தொடர்வது மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி”என்று இந்தியா மேலும் கூறயுள்ளது.
தமிழின் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, 1952-இல் இருந்து வாக்களிக்கிறேன். நான் பார்த்ததிலேயே சிறந்த பட்ஜெட் இதுதான் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டினார். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழின் தனிப்பெரும் படைப்பாளியாக விளங்கும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் இந்தப் பாராட்டை பெரிதும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன், மரியுபோல் குண்டுவெடிப்பில் இடிபாடுகளில் சிக்கிய 130 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நிறைவடைந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலான நிலையில் ஆலோசனை நிறைவடைந்தது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சுகாதாரம், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை குறையும் என நம்பிக்கை எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா, கொச்சி அருகே களம்பச்சேரி பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மண்ணில் புதைந்த ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலான நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலான நிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது.
நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த பட்ஜெட், இன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்தான்” என மூத்த இலக்கியவாதி இந்திரா பார்த்தசாரதி பாராட்டியுள்ளார்.
கேரளா – கொச்சி அருகே களம்பச்சேரி பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்த ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு.
கோடை காலத்தில் உடல் நலம் பேண, இளநீர், நீரா, பதநீர் போன்ற பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவற்றை பருகுவதால் உடல் நலத்துக்கும் நல்லது, விவசாயிகளின் வருமானமும் உயரும் என அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, குடியாத்தம், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுகவின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து, தமிழகத்தின் நிதிநிலையை மேம்படுத்தும் 'திராவிட பட்ஜெட்டை' தாக்கல் செய்த நிதியமைச்சருக்கு வாழ்த்துகள். மீண்டும் 'தமிழ்நாடு நம்பர் 1' என்ற நிலையை நோக்கி விரைவாக நடைபோடுவோம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
TANGEDCO- வின் முழு இழப்பையும் தமிழ்நாட்டு அரசே ஏற்பதாலும் வரும் நிதியாண்டிலும் சிக்கல் தொடரக்கூடும். ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, பண வீக்கம், வட்டி விகிதம் உயர்ந்தால், தமிழ்நாட்டு பொருளாதாரமும் பாதிக்கக்கூடும்- நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு http://ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது மகிழ்ச்சி என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறினார்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் 1000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள் போல் இப்போது உருவாக்க முடியாது. எனவே, பழமையான கோயில்களை முறையாக புனரமைத்து, சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சென்னை எண்ணூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து சென்னை எண்ணூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே இஸ்லாமிய கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.யில் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது என்று சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், “மகளிர் உரிமைத் தொகையை நம்பிக்கையோடு எதிர்பார்த்த பெண்களும், பழைய ஓய்வூதியத் திட்டம் ஏற்கப்படும் என்று எதிர்பார்த்த அரசுப் பணியாளர்களும் ஏமாற்றம். நிதி நிர்வாகத்தில் மேற்கொண்ட முயற்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைத்திருப்பது நல்ல முன்னேற்றம்” என்று கூறியுள்ளார்.
“தமிழ் வளர்ச்சிக்கு முதன்மையான இடம் அளித்து, அகர முதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு குறித்த அறிவிப்பு செந்தேனாய் இனிக்கிறது” என்று தமிழக பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல், பகல் கனவு பட்ஜெட்டாக உள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று கூறியுள்ளார்.
மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்கள் என்ன? என்று விளக்கமாக புதிய மனுவை தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு நேரடியாக பயன்தரும் திட்டங்கள் இல்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை” என தமிழக பட்ஜெட் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை. தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கு முன்னோட்டமான கொள்கை அறிக்கையாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் எடுத்துச் செல்லும் அறிவிப்பு, பழமைவாத கருத்துகள் என்னும் இருள் கவ்வியிருக்கும் பகுதிகளுக்கு அறிவொளி பாய்ச்சும். 'திராவிட மாடல்' பாணி தொடரும் என்பதையே நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “மூவலூர் ராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல் உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது.
மேலும். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் தமிழக அரசின் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் ஏதுமில்லை; சாதாரண பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மூவலூர் ராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரி வருவாய் 17%-க்கும் அதிகமாக இருக்கும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.
டாஸ்மாக் மூலம் ₨36 ஆயிரம் கோடி வருவாய் வந்து்ளளதாகவும், கடந்த ஆண்டை விட 7-8% கூடுதல் வருவாய் வரும் ஆண்டில் ₨4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ₨7,000 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்வழி தனியார் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படும் என நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கவே மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் கூறியுள்ளார்.
பட்ஜெட் ஹைலைட்ஸ்
#tnbudget2022 || தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 – நிதி ஒதுக்கீடு விபரம்!https://t.co/gkgoZMIuaK | #tnbudget2022 | #palanivelthiagarajan | #cmstalin | #dmk pic.twitter.com/ItPiJSb29G— Indian Express Tamil (@IeTamil) March 18, 2022பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மாநில அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து. இன்றைய பட்ஜெட் தாக்கல் நிகழ்வின் போது எதிர்க்கட்சி தலைவருக்கு பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அதிமுகவினர் பட்ஜெட் கூட்டத்தில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதிய வானிலை கட்டமைப்பை உருவாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டு அறிவிப்பு.
தமிழகத்தில் அறிவு சார் நகரம் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 79 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள தொன்மையான கோவில்களை சீரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தேசிய, உலக அளவில் முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க பட்ஜெட்டின் சில முக்கிய குறிப்புகளை
ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன் என்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆங்கிலத்தில் பேசிய நிதி அமைச்சர்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ. 5922.40 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு இந்த நிதி ஆண்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.