/indian-express-tamil/media/media_files/JHPa3Pcn2kJzXg8QhX69.jpg)
Tamil News live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
பால் பொருட்களை கண்ணாடி பாட்டிலில் விற்க கோரி மனு
தமிழகத்தில் பால், பால் பொருட்களை கண்ணாடி பாட்டில் அல்லது டெட்ரா பாக்கெட்டில் விற்க கோரி மனு சமூக ஆர்வலர் அய்யா என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பால் விற்க தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல்
வேலூரில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
வேலூர், வசந்தம் நகர் முதல் தெருவில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த நிலையில், நீரை வெளியேற்றும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். கழிவுநீர் கால்வாயில் முறையாக நீர் வெளியேறாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள் பாம்பு, பூச்சிகள் புகுந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
"தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன்" : கமல்ஹாசன்
தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன் வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்பட கூடாது வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம். அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்
ஜி20 மாநாடு - காவலருக்கு பிரதமர் பாராட்டு
ஜி20 மாநாட்டின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு. மாரடைப்பால் தாய் சிகிச்சையில் இருந்த போதும் பணியாற்றிய காவலருக்கு பிரதமர் மோடி பாராட்டு
தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை"
விதிகளை மீறி குடியிருப்பு பகுதியில் உள்ள கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்
பள்ளி வாகனம் மீது கல்லூரி வாகனம் மோதி விபத்து
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் மண் கரடு மேடு என்ற இடத்தில், வித்யபாரதி பள்ளி வாகனத்தின் மீது கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன வாகனம் மோதி விபத்து! நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை. லேசாக காயமடைந்த 4 குழந்தைகள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்!
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை
சென்னையின் தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை!
ஜூஸ் குடித்த 13 பேருக்கு சிகிச்சை
பொன்னேரி அருகே எலுமிச்சை பழச்சாறில் சிலிக்கான் ஜெல் ஐஸ் கலந்து குடித்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதி ஒத்தடம் கொடுக்க பயன்படும் ஐஸ் கட்டியை பழச்சாறில் கலந்து குடித்த 13 பேருக்கு சிகிச்சை
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளது. கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். இன்று தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது
சர்க்கரை ஆலை விவகாரம்; 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு
உத்தரவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதியம், பணிநிரந்தரம் கோரிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆன்லைனில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது
விநாயகர் சிலைகள் ஊர்வலம் – காவல்துறை அறிவிப்பு
பட்டினப்பாக்கத்திற்குக் கரைக்க கொண்டுவரப்படும் அனைத்து விநாயகர் சிலைகளும், வழியெங்கும் சிசிடிவி கொண்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்
ஒரே நாடு ஒரே தேர்தல்; அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும் - ராம்நாத் கோவிந்த் குழு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும் என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தையும் பரிந்துரைகளை வழங்குமாறு ஆலோசனை குழு கேட்டுக் கொண்டுள்ளது
ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து
திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்காநகர் செல்லும் ஹம்சாஃபர் விரைவு ரயில், குஜராத்தின் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிறு, குறு நிறுவனங்கள், நூற்பாலைகளில் மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க ஸ்டாலின் உத்தரவு
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளில் மின் கட்டண முறைகளை மாற்றியமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சூரிய ஒளி சக்தி, மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும். பருவகால தேவைக்கேற்ப மாறும் தன்மை மின்பளுவைக் கொண்ட தாழ்வழுத்த ஆலைகளின் நிலை கட்டணத்தை குறைத்து கொள்ள சலுகை அளிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட மின் பளுவை குறைத்து கொள்ளவும் தேவைப்படும் போது உயர்த்தி கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும். 12 கிலோவாட்டுக்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டியை மாற்றுவது குறித்து பரீசிலிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ரூ. 450 கோடியில் கிரிக்கெட் மைதானம்: அடிக்கல் நாட்டிய மோடி
வாரணாசியில் ரூ. 450 கோடி மதிப்பில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 31 ஏக்கர் பரப்பளவில், 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மைதானம் கட்டப்பட உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது 'நமோ' என்று எழுதிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை பிரதமர் மோடிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிசளித்தார்.
#WATCH | Sachin Tendulkar with PM Modi and CM Yogi Adityanath at the event to mark the foundation stone laying of an international cricket stadium in Varanasi, UP pic.twitter.com/TjgIHNrelD
— ANI (@ANI) September 23, 2023
காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல்
ராஜஸ்தான், ஜெய்பூரில் கட்டப்படும் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
கமல் தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி: 2 பேர் கைது
நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன பெயரில் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதாகர், புகழேந்தி ஆகிய இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
பா.ஜ.க கூட்டணி: இ.பி.ஸ்-யிடம் அ.தி.மு.க தலைவர்கள் வலியுறுத்தல்
அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பா.ஜ.க-வுடன் கூட்டணியில் தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்ணாமலைக்கு நான் கூறும் யோசனை இது- துரைமுருகன் பதில்
தமிழகத்தில் 40க்கும் மேலான அணைகளை கட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நம்பியாறு அணை, கொடுமுடி அணை, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளை கட்டியவர் கருணாநிதி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை: அப்படி சொல்வதற்கு முன் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒருமுறை பரிசீலனை செய்ய வேண்டும்.
எனது நீண்ட அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் கூறும் யோசனை இது, இல்லாவிட்டால் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் புஸ்வாணமாகிவிடும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில்
15 மாவட்டங்களில் கனமழை
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி
ஆந்திரா, காக்கிநாடா அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டாரை வெளியில் எடுக்க முயன்ற போது விபத்து - 3 பேர் உயிரிழப்பு
ஸ்டாலின் அலுவலகம் முற்றுகை- 800 பேருக்கு சம்மன்
சென்னை, கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்திய விவகாரம். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 800 பேருக்கும் பெரவள்ளூர் போலீசார் சம்மன்.
ஒப்பந்த மின்சார கேங்மேன் தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அபராதம்
நெல்லையை சேர்ந்த ஆசிரியர் ரோகினி என்பவருக்கு பணி ஒப்புதல் வழங்க கோரிய வழக்கு. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
3 வருடம் தாமதமாக நீதிமன்றத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ததால் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. அபராதத்தை 2 வாரத்தில் வழக்கறிஞர்கள் நலன் நிதியில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு
வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு அக்.13ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை. திறன் மேம்பாட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும் போலீசார்
ராஜமுந்திரி மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு விசாரணை. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் மட்டுமே தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க சந்திரபாபு நாயுடுவிற்கு அனுமதி.
விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் எடுத்து சிஐடி போலீஸ் விசாரணை
அண்ணாமலையை மாற்ற அதிமுக வலியுறத்தல்?
பியூஷ் கோயலுடன் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசினர். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதி .மாநில தலைவரை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு. பாஜக தேசிய தலைமையிடம் அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்
மோடி பாராட்டு
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வழங்குவது பாராட்டுக்குரியது. இது சாமானிய மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் - பிரதமர் மோடி
7 பேருக்கு டெங்கு காய்ச்சல்
தஞ்சாவூர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இன்று முதல் இணையசேவை
மணிப்பூரில் இன்று முதல் பொது மக்களுக்கு இணையசேவை வழங்கப்படும் - மாநில முதல்வர் பிரேன் சிங்
கடந்த ஜூன் முதல் கலவரம் காரணமாக மணிப்பூரில் இணைய சேவை தடை செய்யப்பட்டது.
இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்- மு.க. ஸ்டாலின்
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும்…
டானிஷ் அலியை நேரில் சந்தித்து ராகுல் ஆதரவு
மக்களவையில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதுரியால் வெறுப்பு பேச்சுக்கு ஆளாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் எம்.பி., டானிஷ் அலியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ராகுல் காந்தி.
नफ़रत के बाज़ार में मोहब्बत की दुकान pic.twitter.com/3IqLMFU0dx
— Rahul Gandhi (@RahulGandhi) September 22, 2023
எனக்கு மன வலிமை கொடுப்பதற்காக ராகுல் காந்தி என்னை வந்து சந்தித்தார்- டானிஷ் அலி
உதகையில் கடுங்குளிர்
உதகையில் பெய்த கனமழை காரணமாக, சேரிங் கிராஸ், படகு இல்லம், மத்தியப் பேருந்து நிலையம், பிங்கர் போஸ்ட், காந்தள், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடுங்குளிர் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மைசூரு, சாம்ராஜ்நகர், ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கவலைக்குரியதாக மாறிவிட்ட இந்திய ரயில்வே
2021-22-ஆம் ஆண்டில் ரயில்வே துறை, 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்காக 107 ரூபாய் செலவழித்து இருப்பதாகவும், இதனால் இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறிவிட்டதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது- Speaking for India Podcast மூலம் மு.க.ஸ்டாலின் உரை
டோல் பிளாசா ஊழல்
பயணம் செய்யும் பொதுமக்களிடம் டோல் பிளாசா மூலமாக, நாள்தோறும் மாபெரும் மோசடியான வசூல் நடந்திருக்கிறது.
5 டோல் பிளாசாக்களை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்குப் புறம்பாக, வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்து இருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது.
அவ்வாறு பார்த்தால் இந்தியா முழுவதும் எத்தனை டோல் பிளாசா இருக்கிறது. அதன் மூலமாக எத்தனை லட்சம் கோடி ரூபாய் முறைகேடாக வசூலாகி இருக்கும் என்று கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள்- Speaking for India Podcast மூலம் மு.க.ஸ்டாலின் உரை
7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு
அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை என்று எல்லாவற்றிலும், 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டிருக்கிறார்கள்.
இதுவரைக்கும் இதற்கு பிரதமரோ – சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை- Speaking for India Podcast மூலம் மு.க.ஸ்டாலின் உரை
மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி
வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!
2014, 2019ம் ஆண்டு ஏமாந்ததை போல 2024-ம் ஆண்டும் நாடு ஏமாந்து விடக்கூடாது.
#Speaking4India: Why is the BJP silent on the accusations of the CAG which exposed huge irregularities worth over Rs. 7.5 Lakh Crores ??? pic.twitter.com/Q61yDDqB9x
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023
INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் பிரதமர் மோடி, உங்கள் ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா? இது தொடர்பாக சிறப்புக் கூட்டத்தில் விவாதித்தீர்களா அல்லது பதில் அளித்தீர்களா? Speaking for India Podcast மூலம் மு.க.ஸ்டாலின் உரை
இந்திய அணி வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 74, துராஜ் கெய்க்வாட் 71, ராகுல் 51 ரன்கள் சேர்த்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.