Advertisment

Tamil News Highlights: விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து - 40 படகுகள் எரிந்து சேதம்

Tamil News LIVE, World Cup 2023, IND VS AUS Final LIVE Updates, Rohit Sharma, Pat Cummins, Mohammed Shami – 19 November 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sava

Tamil news

 Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆளுநர்கள் மசோதாக்களை காலம் தாழ்த்தி வருவதாக மாநில அரசுகள் தொடர்ந்த ரிட் மனுக்கள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை (நவ.20) விசாரணைக்கு வருகிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்

தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

ராமநாதபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் தெரிவித்துள்ளது.

மன்சூர் அலிகான் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

நடிகை திரிஷா குறித்து இழிவாகப் பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; சுய விளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார்.

திரிஷாவை விமர்சித்து பேசிய மன்சூர் அலிகான்: தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் - குஷ்பு உறுதி

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை விமர்சித்து பேசிய விவகாரம் பற்றி தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகை திரிஷாவுக்கு துணை நிற்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண நடிகை தீபிகா படுகோனே வருகை

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காண நடிகை தீபிகா படுகோனே அகமதாபாத் மைதானத்திற்கு வந்துள்ளார். 

திருவள்ளூர் அருகே ரயில் மோதி 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் உயிரிழந்தது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து

உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து.140 கோடி இந்தியர்கள் உங்களை வாழ்த்துகிறார்கள்: All the Best TEAM INDIA! என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. Come on INDIA..! Make it Three..! என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிகர் சுவாமி முன்பு பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி

வைகோ அறிக்கை

தமிழ்நாடு அரசு நவம்பர் 18ம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவை விதி 143 ன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து 10 சட்ட முன் வடிவுகளையும் மீண்டும் நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது;

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் படி, ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்- வைகோ அறிக்கை

இறுதி போட்டியை முன்னிட்டு தடையில்லா மின்சாரம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியையொட்டி தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இந்திய அணியின் வெற்றிக்காக ஒன்றிணைவோம்- தமிழ்நாடு மின்சார வாரியம்

பாலஸ்தீன மக்களுக்கு 32 டன் நிவாரணப் பொருட்கள்

பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.  இந்திய விமானப் படையின் C17 விமானம் 32 டன் நிவாரணப் பொருட்களை எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்றது- ஜெய்சங்கர் ட்வீட்டரில் பதிவு

6 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இந்திரா காந்தி பிறந்தநாள்

இன்று இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு , டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய அணிக்கு சோனியா காந்தி வாழ்த்து

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள். நாட்டிற்கு நீங்கள் தொடர்ந்து பெருமை சேர்க்கிறீர்கள். இறுதிப் போட்டிக்கான உங்கள் பயணம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.

ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, நேற்று சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப் பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது

உலக கோப்பை இறுதிப் போட்டி

Marina

உலக கோப்பை இறுதிப் போட்டியை நேரலையாக திரையிட சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரம்

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1899 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் கூடுதலாக 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மன்சூர் அலிகானுக்கு லோகேஷ் கனகராஜ் கண்டனம்

நாங்கள் அனைவரும் ஒன்றாக பணி புரிந்தோம் என்ற அடிப்படையில் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறியதை கேட்டு மனமுடைந்தேன். மிகவும் கோபம் அடைந்தேன்.

பெண்கள், சக கலைஞர்களுக்கான மரியாதை என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும்.மன்சூர் அலிகானின் இந்த சேயலை கண்டிக்கிறேன்.  

9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால்  ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

IND VS AUS Final: மகுடம் வெல்லப் போவது யார்?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும்

3வது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

உலக பாரம்பரிய விழா

உலக பாரம்பரிய விழாவை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதான சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம்.

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

மண் சரிவு காரணமாக கடந்த 9ம் தேதி நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை உதகையை நோக்கி ரயில் புறப்பட்டது.

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார், வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

22 மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது.

சிறப்பு டூடுல்

icc Doodle

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது கூகுள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment