பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 150- வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது
வயநாடு நிலச்சரிவில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்ட தமிழக செவிலியர் சபீனாவுக்கு செயலுக்கான சாகச மற்றும் செயல் வீரருக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிப்பு.
-
Aug 15, 2024 21:24 ISTசுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை - காங்கிரஸ் கட்சி கண்டனம்
சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கீடு செய்ததற்காக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் வீரர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையது அல்ல. அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மட்டும் எப்படி முன் வரிசையில் இருக்கைகள் பெற்றனர். மத்திய அமைச்சர் அந்தஸ்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் இருக்கை வேண்டும். நெறிமுறைப்படி இரு அவை எதிர்க்கட்சித் தலைவர்களும் முன்வரிசையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
-
Aug 15, 2024 20:51 ISTஅனைத்து இடங்களிலும் அரசியல் தேவையில்லை - அண்ணாமலை
தி.மு.க-வும் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநர் தேநீர் விருந்து புறக்கணிப்பு பற்றி கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ, அங்கு அரசியல் செய்ய வேண்டும்; எங்கு மக்களுக்காக சண்டை போட வேண்டுமோ, அங்கு சண்டை போட வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் தேவையில்லை” என்று கூறினார்.
-
Aug 15, 2024 20:00 ISTஉலக முதலீடுகளை ஈர்க்க, ஆகஸ்ட் 27-ம் தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம்
உலக முதலீடுகளை ஈர்க்க, ஆகஸ்ட் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்
-
Aug 15, 2024 19:23 ISTகொல்கத்தா மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; 5 மருத்துவர்களுக்கு சி.பி.ஐ சம்மன்
அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் 5 மருத்துவர்களை விசாரணைக்கு மத்திய புலனாய்வுத் துறை வியாழக்கிழமை அழைத்தது.
-
Aug 15, 2024 18:48 ISTஉக்ரைனுக்கு நிதி - சிறை தண்டனை விதித்த ரஷிய நீதிமன்றம்
உக்ரைனுக்கு நிதி வழங்கிய அமெரிக்க குடியுரிமை கொண்ட பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Aug 15, 2024 18:17 ISTநடிகர் விஜய்யின் `GOAT' படத்தின் டிரெய்லர் எப்போது?
நடிகர் விஜய்யின் `GOAT' படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
-
Aug 15, 2024 18:16 ISTபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து விட்டனர். இதன் மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள 1 லட்சத்து 3500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
Aug 15, 2024 18:14 ISTபட்டம்விடும் திருவிழா; அமைச்சர்கள் துவக்கிவைப்பு
செங்கல்பட்டு, திருவிடந்தை கடற்கரை பகுதியில் நடக்கும் 3வது சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
-
Aug 15, 2024 17:21 ISTஆளுனர் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
Aug 15, 2024 17:18 ISTஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. செல்வகணபதி
தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்த ஒன்றிய அரசை வெளுத்து வாங்கிய திமுக எம்.பி. செல்வகணபதி“தமிழர்கள் வளரக் கூடாது.. தமிழ்நாடு வளரவே கூடாது என்ற மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு உள்ளது!” என்று கூறியுள்ளார்.
-
Aug 15, 2024 16:36 ISTஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றவர்களை அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்றவர்களை அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி, வெற்றி வாய்ப்பை இழந்த வீரர், வீராங்கனைகளுடன் உரையாடி தங்கள் ஒலிம்பிக்ஸ் அனுபவத்தை கேட்டறிந்தார்.
-
Aug 15, 2024 16:35 ISTசர்வதேச காற்றாடி திருவிழா: கடற்கரையில் காற்றாடி விட குவிந்த வெளிநாட்டினர்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற சர்வதேச காற்றாடித் திருவிழாவில், தாய்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்கவிட பலர் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு 150 காற்றாடியை பறக்கவிட்ட நிலையில் இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிடத் திட்டம்.
-
Aug 15, 2024 15:37 ISTஇயக்குநர் அட்லீ பரபரப்பு பதிவு
"என்று ஒரு பெண் இரவில் சுதந்திரமாக சாலையில் நடக்க முடிகிறதோ, அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம்" என்று மகாத்மா காந்தியின் வரிகளை மேற்கோள்காட்டி இயக்குநர் அட்லீ பதிவு பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
-
Aug 15, 2024 15:35 ISTதலித்துக்கு முதல்வர் பதவி- நிபந்தனையுடன் அன்புமணி ஆதரவு
"பா.ம.க-வுக்கு பட்டியல் இன சமுதாயம் ஆதரவு தந்தால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வருக்குவோம். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை 1998 ஆம் ஆண்டிலே மத்திய அமைச்சர் ஆக்கியது பா.ம.க தான்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Aug 15, 2024 15:33 IST'தி கோட்' (The GOAT) படம் ட்ரெய்லர் தேதி வெங்கட் பிரபு உறுதி
'தி கோட்' (The GOAT) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை இன்று வெளியிடுவதாக இயக்குநர் வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளார். நேற்று வெளியிடுவதாக அறிவித்து தாமதமானது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வருத்தம் தெரிவித்திருந்தார்
-
Aug 15, 2024 15:32 ISTகடும் போக்குவரத்து
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.
-
Aug 15, 2024 15:19 ISTதலைக்கவசம் இன்றி பா.ஜ.க-வினர் வாகனப் பேரணி
காரைக்குடியில் தலைக்கவசம் இன்றி தேசியக் கொடியுடன் பா.ஜ.க-வினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். அனுமதிக்கப்பட்ட வழித்தடம் மாறி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் வழியாக காவல்துறையினரின் தடையை மீறி பேரணி சென்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
Aug 15, 2024 15:18 ISTமருத்துவமனைக்கு சீல்
புதுக்கோட்டை கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்த போது பெண் உயிரிழந்துள்ளர். இதனையடுத்து, மருத்துவமனைக்கு சீல் வைக்க கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்
-
Aug 15, 2024 14:21 ISTகிராம சபை கூட்டம் புறக்கணிப்பு
திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் கிராம பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தை அதவத்தூர் மக்கள் புறக்கணித்தனர்.
-
Aug 15, 2024 13:52 ISTகப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றம்
கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி சுங்கச்சாவடியை சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறைவேற்றம்
-
Aug 15, 2024 13:39 ISTதமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 15, 2024 13:04 ISTநீலகிரி, கோவையில் நாளை மிகக் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மிகக் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Aug 15, 2024 12:39 ISTதிருச்சியில் ‘தங்கலான்’ கெட்அப்-ல் திரையரங்குக்கு வந்த ரசிகர்கள்
#Watch | திருச்சியில் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘தங்கலான்’ படத்தை காண ‘தங்கலான்’ GETUP-ல் வந்த ரசிகர்கள்
— Sun News (@sunnewstamil) August 15, 2024
சட்டை அணிந்து உள்ளே வரும்படி திரையரங்க நிர்வாகிகள் அறிவுறுத்தியதையடுத்து சட்டை அணிந்து உள்ளே சென்றனர்#SunNews | #Thangalaan | #Trichy pic.twitter.com/bRAaDjAZiSCredit: Sunnews
-
Aug 15, 2024 12:31 ISTபெரிய சாதிகள்: பிரதமர் மோடி
என்னைப் பொறுத்தவரை, நாட்டில் நான்கு பெரிய சாதிகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை ஏழைகள்தான் பெரிய ஜாதி. என்னைப் பொறுத்தவரை பெரிய சாதி இளைஞர்கள், பெண்கள். என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய ஜாதி விவசாயிகள்தான்” என்று மோடி கூறியிருந்தார்.
இந்த நான்கு ஜாதிகளின் உயர்வுதான் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்யும். மேலும் இந்த நால்வருக்கும் கிடைத்தால் அனைவருக்கும் கிடைத்து விடும் என்று அர்த்தம், என்றார்.
-
Aug 15, 2024 12:21 ISTபெண்களுக்கு எதிரான வன்கொடுமை: மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்- மோடி
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்தும் பேசிய பிரதமர், மக்களின் சீற்றத்தை தன்னால் உணர முடிகிறது என்றார்.
-
Aug 15, 2024 12:08 ISTகுமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது
#Watch | 78வது சுதந்திர தின விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவிப்பு! #SunNews | #CMStalin | #KumariAnandhan | #78thIndependenceDay pic.twitter.com/SwpU6Y4lEA
— Sun News (@sunnewstamil) August 15, 2024Credit: Sun news
-
Aug 15, 2024 11:43 ISTதியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது!
— M.K.Stalin (@mkstalin) August 15, 2024
அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன்.
எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப்… pic.twitter.com/tsQU6GZcJB -
Aug 15, 2024 11:24 ISTசுதந்திர தினம் : தவெக தலைவர் விஜய் வாழ்த்து
#IndependenceDay2024 pic.twitter.com/321VECPbAF
— TVK Vijay (@tvkvijayhq) August 15, 2024 -
Aug 15, 2024 11:14 ISTபதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை: குஷ்பூ விளக்கம்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை. கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன். கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை. எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி - குஷ்பூ விளக்கம்
-
Aug 15, 2024 10:22 ISTஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் : தங்கம் தென்னரசு
ஆளுநரின் அழைப்பை ஏற்று கலந்து கொள்ள உள்ளோம். அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளார் . அரசியல் நிலைப்பாடு வேறு, அரசின் நிலைபாடு வேறு : அமைச்சர் தங்கம் தென்னரசு
-
Aug 15, 2024 10:11 IST2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்
2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000 மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
-
Aug 15, 2024 09:46 ISTகூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது
கூடலூரை சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு துணிவு, சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது.சந்திரயான் -3 விண்கல திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது
-
Aug 15, 2024 09:34 ISTஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரிக்க வேண்டும்: மோடி
“ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற கருத்தை அரசியல் சமூகம் ஆதரிக்க வேண்டும் என்று செங்கோட்டையில் இருந்து கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சியின் பின்னால் தேசம் ஒன்றுபடுவது மிகவும் முக்கியமானது. அடிக்கடி நடைபெறும் தேர்தல்கள் நாட்டில் தேக்க நிலையை உருவாக்குகின்றன. இன்று, ஒவ்வொரு திட்டமும், முன்முயற்சியும் தேர்தல் சுழற்சிகளால் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது,- மோடி
-
Aug 15, 2024 09:28 ISTதமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு: ஸ்டாலின்
மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
-
Aug 15, 2024 09:27 ISTமாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர்: ஸ்டாலின்
மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்- ஸ்டாலின்
-
Aug 15, 2024 09:25 ISTவிடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு - முதல்வர் ஸ்டாலின்
77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்" "விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு - முதல்வர் ஸ்டாலின்
-
Aug 15, 2024 09:15 ISTஅடுத்த 5 ஆண்டுகளில் 75000 புதிய மருத்துவ இடங்கள் வழங்கப்படும்: மோடி
ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து ஏராளமான குழந்தைகள் மருத்துவக் கல்வி பயில வெளிநாடு செல்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில்அடுத்த 5 ஆண்டுகளில் 75000 புதிய மருத்துவ இடங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். "விசிட் பாரத்என்பது ஆரோக்கியமான பாரதம்என்றும் பொருள்பட வேண்டும். வளமான பாரதத்தின் முதல் தலைமுறை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்அதனால்தான் நாங்கள் போஷன் மிஷனைத் தொடங்கினோம்.- மோடி
-
Aug 15, 2024 09:04 ISTஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா
ஏழைத் தாய்மார்களின் கண்ணீரை துடைக்கும் திட்டம் உஜ்வாலா. 3ஆம் பாலினத்தவருக்கு அதிகாரம் அளிக்கவும் மரியாதை அளிக்கவும் புதிய சட்டம்" "நீதி வழங்கும் அமைப்பை துரிதப்படுத்த புதிய குற்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது" "பழைய சட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் மோடி
-
Aug 15, 2024 09:02 ISTவங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன
நாட்டை வலிமையாக்க மாற்றங்களை கொண்டு வருகிறோம். மாற்றங்கள் அரசியலுக்கானது அல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கானது. வங்கி துறையில் செய்த மாற்றங்களால் உலகின் சிறந்த வங்கிகளில் இந்திய வங்கிகள் இடம்பெறுகின்றன. இன்று அரசின் திட்டங்கள், பயனாளிகளின் வீடுகளுக்கே செல்கிறது - பிரதமர் மோடி
-
Aug 15, 2024 08:27 ISTவிண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம்: மோடி
விண்வெளித் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். விண்வெளி துறையை துடிப்பு கொண்டதாக நாம் மாற்றிக் கொண்டிருக்கிறோம். தனியார் துறை செயற்கைக்கோள்கள் ஏவப்படுவது, நமக்கு பெருமையான விஷயம் - பிரதமர் மோடி
-
Aug 15, 2024 08:17 IST2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு
2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு. வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாட்டு மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்" "நமது பல்வேறு திட்டங்களின் மூலம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பயனடைந்துள்ளனர் - பிரதமர் மோடி
-
Aug 15, 2024 07:54 ISTமகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
இந்நிலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தார். செங்கோட்டையில் பிரதமர் மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.
-
Aug 15, 2024 07:51 ISTசுதந்திர தின விழா கொண்டாட்டம்: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் ஸ்டாலின்
சுதந்திர தின விழா கொண்டாட்டம் - சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Aug 15, 2024 07:49 IST11வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
11வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.