Advertisment

Tamil News Today: 2024-25-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல்

அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Thangam Thanarasu has condemned the violent incident in the Neyveli protest

IE Tamil Updates

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் 637-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது

 ஏரிகளின் நீர் நிலவரம்

புழல் ஏரியில் நீர்இருப்பு 2438 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 759 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 480 மில்லியன் கனஅடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 • Feb 18, 2024 21:15 IST
  தமிழக பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவுகள் இடம்பெறும் - தமிழக அரசு 

  மாபெரும் 7 தமிழ்க்கனவு தலைப்பில் தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய சிறப்பம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  • Feb 18, 2024 21:15 IST
  தமிழக பட்ஜெட்டில் மாபெரும் 7 தமிழ்க்கனவுகள் இடம்பெறும் - தமிழக அரசு 

  மாபெரும் 7 தமிழ்க்கனவு தலைப்பில் தமிழக பட்ஜெட் சிறப்பம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய சிறப்பம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  • Feb 18, 2024 20:24 IST
  3 ஆண்டுகளில் 60,000 பேருக்கு அரசுப் பணி - தமிழ்நாடு அரசு தகவல்

  தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளுக்குள் 60,567 பேருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. • Feb 18, 2024 19:28 IST
  ராமர் கோவில் குறித்து பா.ஜ.க தீர்மானம்: 'அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு ராம ராஜ்யம்'

  அயோத்தி ராமர் கோவில் "தேசிய உணர்வின்" கோவிலாக மாறியுள்ளது. விக்சித் பாரதத்தை கட்டியெழுப்புவதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தீர்க்கமான பங்கை வகிக்கும் என்று அக்கட்சி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த அதன் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, “அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் ராமராஜ்யம் ஸ்தாபிப்பதைக் குறிக்கிறது” என்று பா.ஜ.க ஞாயிற்றுக்கிழமை தனது தேசிய கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவித்துள்ளது. • Feb 18, 2024 18:56 IST
  பவதாரணிக்கு தொல். திருமாவளவன் அஞ்சலி

  அண்மையில் உடல்நலக்குறைவால் காலமான இசைஞானி #இளையராஜா அவர்களின் மகள் #பவதாரிணி அவர்களின் இல்லம் சென்ற விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். • Feb 18, 2024 18:54 IST
  தோல்வி, வெற்றியை கருணாநிதி சமமாக பார்ப்பார்: உதயநிதி  "தோல்வி மற்றும் வெற்றி ஆகிய இரண்டையும் சமமாக பார்க்க கூடியவர் கருணாநிதி" என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். • Feb 18, 2024 18:52 IST
  எதிர்பார்க்கவில்லை- ரோஹித் சர்மா

   

   “இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை!” என இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வென்ற பின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். • Feb 18, 2024 17:55 IST
  பா.ஜ.க.வை தோற்கடிப்போம்: மாணிக்கம் தாகூர் எம்.பி.

  “2024 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும்” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். • Feb 18, 2024 17:22 IST
  பஞ்சாப்பில் தனித்துப் போட்டி ஏன்? அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்

  பஞ்சாப்பில் இந்தியா கூட்டணியாக இல்லாமல் தனித்துப் போட்டி ஏன் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார்.
  அந்த விளக்கத்தில், “காங்கிரஸூடன் இணைந்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது” என்றார். • Feb 18, 2024 16:50 IST
  தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

  "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். • Feb 18, 2024 15:28 IST
  சமூகத்தில் அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் : பிரதமர் மோடி உரை

  அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். 18 வயதை எட்டிய இளைஞர்கள், நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் பிரசாரத்தின் போது, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். • Feb 18, 2024 15:27 IST
  வணங்கான் திரைப்படத்தின் டீஸர் அப்டேட்

  பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படத்தின் டீஸர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தகவல் • Feb 18, 2024 14:40 IST
  உ.பி.யில் வேலை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது : ராகுல்காந்தி கடும் தாக்கு

  உ.பி.யில் பணி சேர்க்கை நடப்பதே கனவாக இருக்கிறது. அப்படியே நடந்தால் வினாத்தாள் கசிகிறது. தேர்வு நடந்தால் முடிவுகள் வெளியாவதில்லை. முடிவுகள் வெளியானால், பணி நியமனத்திற்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. வேலை பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. இளைஞர்களுக்கு வேலை என்பது வருமானம் ஈட்டுவதற்காக மட்டும் கிடையாது, குடும்பத்தின் நிலையை மாற்றும் கனவாக இருக்கிறது. அந்த கனவு உடையும்போது ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் நொறுங்கிப் போகிறதுஎன ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். • Feb 18, 2024 14:00 IST
  ஜெய்ஸ்வால் மீண்டும் இரட்டை சதம்

  இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார். கடந்த டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த நிலையில் மீண்டும் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார் • Feb 18, 2024 13:52 IST
  அ.தி.மு.க ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலன்கள் கிடைத்தன – சீர்காழியில் இ.பி.எஸ் பேச்சு

  தடையில்லா மின்சாரம் வழங்கியது அ.தி.மு.க அரசு. அ.தி.மு.க ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு ஏராளமான நலன்கள் கிடைத்தன. இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள துணை நின்றது அ.தி.மு.க அரசு. இஸ்லாமியர்கள் நலனுக்கான வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்ற வேண்டும் என மயிலாடுதுறை, சீர்காழியில் நடைபெறும் விழாவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் • Feb 18, 2024 13:04 IST
  பா.ஜ.க.,வுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

  நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளதால், பாஜகவுக்கு ஆதரவு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை டி.டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புகிறேன் என மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் • Feb 18, 2024 12:45 IST
  மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ. மகன் சிவில் நீதிபதியாக தேர்வு

  தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷ்ல் ஏசுவடியான் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் • Feb 18, 2024 12:23 IST
  வெள்ளை பஞ்சுமிட்டாய்க்கு தடையில்லை; அமைச்சர் மா.சு

  வண்ணம் கலக்கப்பட்ட பஞ்சுமிட்டாய்க்குத்தான் தடை, வெண்மை நிற பஞ்சுமிட்டாய் விற்க தடையில்லை என புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் • Feb 18, 2024 12:05 IST
  பா.ஜ.க.,வுடன் கூட்டணி இப்பவும் இல்லை எப்பவும் இல்லை; ஜெயக்குமார் திட்டவட்டம்

  பா.ஜ.க.,வுடன் கூட்டணி இப்பவும் இல்லை எப்பவும் இல்லை என அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் • Feb 18, 2024 11:45 IST
  நலத்திட்டங்களை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி

  நெல்லை மாவட்டத்தில் ரூ.570.36 கோடி மதிப்பிலான திட்டங்கள், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாகம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர் • Feb 18, 2024 11:26 IST
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த அரசு நலத்திட்டங்கள்

  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் ₹29.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காசநோய், நெஞ்சக மருத்துவ பிரிவுக் கட்டடம் திறப்பு.இன்போசிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ₹30 கோடி செலவில் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு வழங்கினார்.ஈரோடு, தூத்துக்குடி, கோபி, சத்தி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட புதிய வணிகவரி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு.204.57 கோடி செலவில் 1374 புதிய வகுப்பறை கட்டடங்கள், ₹80.85 கோடி செலவில் துறைக் கட்டடங்கள், ₹48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டடங்கள், ₹3.92 கோடி செலவில் நூலக கட்டடங்கள் திறக்கப்பட்டன • Feb 18, 2024 11:11 IST
  பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  நெல்லை ஜங்ஷன் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் • Feb 18, 2024 11:05 IST
  ‘வணங்கான்’ படத்தின் டீசர் நாளை வெளியாகும்

  பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் டீசர், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது • Feb 18, 2024 11:04 IST
  பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்டதாக 2 ஊழியர்கள் மீது போலீசில் புகார்

  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் வெளியே கசிய விட்டதாக 2 ஊழியர்கள் மீது போலீசில் புகார் தொழில்நுட்ப உதவியாளர்கள் பிரவீன் குமார், விவேக் இருவர் மீது கண்காணிப்பு பொறியாளர் புகார். கோயம்பேடு போலீசார் விசாரணை • Feb 18, 2024 11:03 IST
  தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

  மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்.  • Feb 18, 2024 10:17 IST
  மாவட்டங்களில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை நாளை வரை நீட்டிப்பு

  விவசாயிகள் போராட்டம் காரணமாக 7 மாவட்டங்களில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை நாளை வரை நீட்டித்து ஹரியானா அரசு உத்தரவு • Feb 18, 2024 10:15 IST
  தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும்

  தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அக்கட்சி அறிவிப்பு • Feb 18, 2024 09:06 IST
  செல்வப்பெருந்தகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  https://twitter.com/mkstalin/status/1758890075885375929 • Feb 18, 2024 09:04 IST
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து: 66 கன அடியாக சற்று அதிகரிப்பு

  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 66 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நீர் இருப்பு 28.85 டி.எம்.சி. ஆக உள்ளது • Feb 18, 2024 09:03 IST
  காட்டு யானை தாக்கியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஜவளகிரி பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் உயிரிழப்பு 2 பசுமாடுகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளன. வனத்துறை விசாரணை • Feb 18, 2024 09:02 IST
  44 புறநகர் ரயில்களின் சேவை இரு மார்க்கத்திலும் ரத்து

  சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை 44 புறநகர் ரயில்களின் சேவை இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது - தெற்கு ரயில்வே அறிவிப்பு • Feb 18, 2024 07:57 IST
  பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் : 5000 பெண்கள் பங்கேற்றனர்

  கோவை வ.உ.சி மைதானத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற, பெண்களுக்கான இரவுநேர மாரத்தான் போட்டியில் 5000 பெண்கள் பங்கேற்றனர். 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர். • Feb 18, 2024 07:53 IST
   பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஒருவர் கைது

   விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ் குமார் கைது.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment