Tamil News Highligts: மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏரிகளின் நீர் நிலவரம் 

Advertisment

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 58.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 65.87%, புழல் - 87.88%, பூண்டி - 32.9%,  சோழவரம் - 13.41%, கண்ணன்கோட்டை - 77.6% ஆக நீர் இருப்பு உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 25, 2024 22:04 IST

    உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை

    திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிஸ்கட், ​வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை  விடுத்துள்ளது.



  • Apr 25, 2024 22:01 IST

    தமிழக அரசு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்  -  அன்புமணி

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “பேருந்தில் இருக்கையுடன் நடத்துநர் தூக்கி வீசப்பட்டார். வாழ்க திராவிட மாடல் அரசின் போக்குவரத்துக் கழக பராமரிப்பு; அமைச்சர்களின் கார் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது; அரசு பேருந்துகள் 15 ஆண்டாக இயக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் 6 ஆண்டு கடந்த பேருந்துகளை மாற்றி புதியவற்றை வாங்க வேண்டும்; பழைய பேருந்துகளை பராமரிக்க உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 25, 2024 21:57 IST

    வெப்பம் தொடர்பான நோய்க்களைக் கட்டுப்படுத்த மருந்துகள் கையிருப்பில் உள்ளது - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “வெப்பம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளிட்டவை கையிருப்பில் உள்ளன; வெப்பம் தொடர்பான சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன; திறந்த இடங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோம், பாதுகாப்பாக இருக்க வேண்டும். வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவும் காட்டுத் தீ பரவலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிர்வாகமும் கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளேன்.” என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Apr 25, 2024 21:46 IST

    கோடை வெப்பம்: பொதுமக்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

    கோடை வெப்பம் குறித்து பொதுமக்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள், கர்ப்பிணிகள், மாணவர்கள், வயதானவர்களைப் பாதுகாக்க வேண்டும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆலை, கட்டடப்பணி, குவாரி, சாலைப் பணியாளர்களுக்கு குடிநீர், நிழற்கூடம், முதலுதவி வசதி ஏற்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிவுரை  கூறியுள்ளார்.



  • Apr 25, 2024 19:42 IST

    செந்தில் பாலாஜி விசாரணைக்கு மறுக்கிறார்; அமலாக்கத் துறை

     

    சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கை 3 மாதங்களில் முடிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.



  • Apr 25, 2024 18:51 IST

    ஈரோட்டில் அதிகப்பட்ச வெயில் பதிவு

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

    Image



  • Apr 25, 2024 18:48 IST

    வெறுப்பு பேச்சு; மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    வெறுப்புப் பேச்சு புகார்களின் அடிப்படையில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 25, 2024 18:47 IST

    நிழல்கூரை அமைத்த காவல்துறை

     

    திருச்சி - புத்தூர் நான்கு ரோடு சிக்னலில், வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்படாமல் இருக்க மாநகர காவல்துறை நிழற்கூரை அமைத்துள்ளது.



  • Apr 25, 2024 18:17 IST

    சென்னை 3 மாதத்துக்கு போக்குவரத்து மாற்றம்



    தெற்கு ரயில்வே சார்பில் நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணிகளால் சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை நாளை முதல் 3 மாதத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    அதாவது, பாரிமுனையில் இருந்து வரும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி அணுகு சாலை வழியே சென்று காமராஜர் சாலையை சென்று அடையலாம்.
    அதேபோல், காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Apr 25, 2024 18:03 IST

    உடல் பருமன் சிகிச்சை- இளைஞர் மரணம்; தமிழ்நாடு அரசு குழு விசாரணை

     

    சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசு அமைத்த குழுவினர் இன்று விசாரணை நடத்தினார்கள்.



  • Apr 25, 2024 17:42 IST

    சென்னையில் மெட்ரோ பணி; 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

    சென்னையில் மெட்ரோ பணி காரணமாக, 2 நாள்களுக்கு அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறில் குடிநீர விநியோகம் ஏப்.25ஆம் தேதி இரவு 9 மணி முதல் 2 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.



  • Apr 25, 2024 17:25 IST

    கடும் நிதி நெருக்கடி ‘’கு’’ செயலி : ஊழியர்களுக்கு சம்பள பாக்கி

    ட்விட்டருக்கு போட்டியாக தொடங்கப்பட்ட ‘’கு’’ செயலி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், இதன் காரணமாக தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2022-ம் ஆண்டு முதல் மொத்த பணியாளர்களில் 80 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 60 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.



  • Apr 25, 2024 17:07 IST

    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

    சொத்துக்குவிப்பு வழக்கில் திருச்சி முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் சொத்துக்களை பறிமுதல் செய்யநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு



  • Apr 25, 2024 17:04 IST

    பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    விதிகளை மீறி குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும்எனவும்,தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • Apr 25, 2024 16:07 IST

    தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

    பீகார் மாநிலம் பாட்னாவில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.தீ விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி



  • Apr 25, 2024 16:07 IST

    மொட்டை வெயிலில் முட்டை ஆம்லெட்

    சேலத்தில் வெயிலின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு செய்ததால் விபரீதம். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதாக அழைத்துச் சென்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்



  • Apr 25, 2024 16:05 IST

    தேர்தல் அறிக்கை விவகாரம் : பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே

    தேர்தல் அறிக்கை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி விமர்சிக்கும் அளவுக்கு அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லைசில குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, வகுப்புவாத பிளவை ஏற்படுத்துவதே பிரதமரின் வாடிக்கை.தேர்தல் அறிக்கையை பிரதமரிடமே வழங்கி நேரில் விளக்கம் அளிக்கவும் தயார் என கார்கே குறிப்பிட்டுள்ளார்.



  • Apr 25, 2024 16:00 IST

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு

    அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 30 தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில்,செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளித்துள்ளது. காசோலை உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் திருத்தப்பட்டுள்ளதாக அவர் தரப்பு வாதம் செய்துள்ளது.



  • Apr 25, 2024 14:56 IST

    உடல் பருமன் ஆபரேஷன் மரணம் – சுகாதாரத்துறை விசாரணை

    சென்னையில் உடல் பருமன் சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைத்த விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அறுவை சிகிச்சையின்போது நடந்தது என்ன, என்பது பற்றி மருத்துவர்கள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்துள்ளனர்



  • Apr 25, 2024 14:43 IST

    சென்னை ஏர்போர்ட்டில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

    சென்னை ஏர்போர்ட்டில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலம் கம்போடியாவில் இருந்து சென்னைக்கு, கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Apr 25, 2024 14:32 IST

    ரத்னம் படத்திற்கு சிக்கல்; விஷால் வீடியோ வெளியீடு

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தை திரையிட விடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நடிகர் விஷால் பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரத்னம் படத்திற்கான விநியோகத் தொகை பாக்கியைத் தந்தால் மட்டுமே திருச்சி, தஞ்சையில் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகும் என திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து தனக்கு ஒரு அறிக்கை வந்திருப்பதாகவும் அந்த தொகையை செலுத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை எனவும் விஷால் தெரிவித்துள்ளார். இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமான வேலை என்று தெரிவித்துள்ள விஷால், தனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி இருக்கும் என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்



  • Apr 25, 2024 14:25 IST

    காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

    சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்



  • Apr 25, 2024 13:55 IST

    முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது - இந்திய வானிலை மைய தலைவர்

    முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு "Hot and humidity weather" என பெயரிட்டுள்ளோம். முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது. தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்



  • Apr 25, 2024 13:39 IST

    பழனி கோயிலுக்கு பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார் அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர்

    பழனி கோயிலுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் முருக பக்தர் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி காரை நன்கொடையாக வழங்கினார். பழனி மலை கிரிவீதியில் பக்தர்கள் எளிதாக செல்வதற்கு இலவசமாக பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்கவில் பணிபுரியும் முருக பக்தர் அகிலன் ரவிச்சந்திரன் சார்பில் வழங்கிய 7 லட்சம் மதிப்பிலான பேட்டரி வாகனமும் பூஜை செய்யப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பழனி கோயிலுக்கு தொடர்ச்சியாக நன்கொடை அளித்து வருவதாகவும் முதியவர்கள், குழந்தைகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பேட்டரி கார் வாங்கி கொடுத்ததாகவும் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்



  • Apr 25, 2024 13:19 IST

    நெல்லை, குமரியில் ஏப்ரல் 28 வரை மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் வரும் 28ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Apr 25, 2024 13:01 IST

    மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. வரும் 29ம் தேதி பதிலளிக்க உத்தரவு;

    பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது



  • Apr 25, 2024 13:00 IST

    மன்சூர் அலிகான் பேட்டி

    பிரதமர் நரேந்திர மோடியை கைது செய்து, திகார் சிறையில் அடைத்த பிறகு தான் தேர்தலை நடத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன்; முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள்' கட்சியையும் காங்கிரஸுடன் இணைத்து, அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளனர்

    - மன்சூர் அலிகான் பேட்டி



  • Apr 25, 2024 12:33 IST

    மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய கோரிய மனு

    விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு

    -சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

    தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.



  • Apr 25, 2024 12:23 IST

    அருணாச்சல பிரதேசத்தில் சாலையில் பெரும் நிலச்சரிவு

    அருணாச்சல பிரதேசம் திபெங் மாவட்டத்தில் தொடர் கனமழையால்,  சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும்.

    பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Apr 25, 2024 12:20 IST

    எல்.முருகன் அறிக்கை

    பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் - திமுக கூட்டணி நினைக்கிறது. மத அடிப்படையில் கட்சி வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்க துடிக்கும் காங்கிரஸ். திமுகவில் பட்டியலின அமைச்சர்களின் நிலை என்ன? குடும்ப அரசியல் நடத்துவோருக்கு சமூகநீதியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?

    - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை



  • Apr 25, 2024 12:20 IST

    3,24,884 மாணவர்கள்

    தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்

    - பள்ளிக்கல்வித்துறை தகவல்



  • Apr 25, 2024 11:33 IST

    செல்வப்பெருந்தகை பேட்டி

    தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல வாய்ப்பு உள்ளது

    - சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி



  • Apr 25, 2024 11:32 IST

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்

    வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி, அதாவது 108 டிகிரி வரை, 26, 27, 28-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 7 டிகிரி வரை, அதாவது 106 டிகிரி வரை உயரக்கூடும்.

    இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Apr 25, 2024 11:32 IST

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்

    வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி, அதாவது 108 டிகிரி வரை, 26, 27, 28-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 7 டிகிரி வரை, அதாவது 106 டிகிரி வரை உயரக்கூடும்.

    இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Apr 25, 2024 11:32 IST

    மணல் குவாரி முறைகேடு

    மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் 5 பேரும் நேரில் ஆஜராகினர்.

                                         



  • Apr 25, 2024 10:54 IST

    இளைஞர் பலி: 2 நாட்களில் அறிக்கை சமர்பிக்க அதிரடி உத்தரவு

    உடல் பருமன் சிகிச்சையின் போது புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரம். 2 இணை இயக்குனர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து சுகாதாரத்துறை உத்தரவு. 2 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்பிக்க அதிரடி உத்தரவு.

    விசாரணைக்குழு அமைக்கப்படும் என பெற்றோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் நடவடிக்கை. 



  • Apr 25, 2024 10:40 IST

    4 கோடி பணம் என்னுடையதல்ல- நயினார் நாகேந்திரன்

    தாம்பரம் ரயில் நிலையத்தில்பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி பணம் என்னுடையதல்ல என பலமுறை கூறிவிட்டேன். அரசியல் சூழ்ச்சி காரணமாகவே எனது பெயர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    எனக்கு தரப்பட்டுள்ள சம்மன் குறித்து வரும் மே மாதம் 2 ஆம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளேன்.

    - நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பேட்டி



  • Apr 25, 2024 10:24 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் ஒரு கிராம் ரூ.6,710க்கும், ஒரு சவரன் ரூ.53,680க்கும் விற்பனையாகிறது



  • Apr 25, 2024 10:24 IST

    தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்

    2023ல் ஐ.பி.எல். போட்டிகள், Fairplay என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்

    நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்  படி மும்பை சைபர் கிரைம் சம்மன்

    ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது

    Fairplay என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார்

    ஏப்.29-ல் தமன்னா நேரில் ஆஜராகும் படி மும்பை சைபர் கிரைம் சம்மன்



  • Apr 25, 2024 09:25 IST

    இளைஞர் பலி: விசாரணை குழு அமைக்க உத்தரவு

    உடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம். இளைஞரின் உறவினர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வழியாக ஆறுதல்.

    புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு உடல் பருமனை குறைக்க சிகிச்சை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்த சோகம்.

    இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். உயிரிழந்த இளைஞரின் உறவினர்களிடம் உறுதி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். 



  • Apr 25, 2024 09:20 IST

    சென்னை - ஐதராபாத் போட்டி டிக்கெட் விற்பனை

    சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ம் தேதி போட்டி நடைபெற உள்ளது. 



  • Apr 25, 2024 09:18 IST

    கர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு 

    கர்நாடகாவில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு அமல். நாளை மாலை வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 



  • Apr 25, 2024 08:36 IST

    5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்

    5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ED அலுவலகத்தில் ஆஜராகின்றனர்

    மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகின்றனர். விசாரணைக்கு அமலாக்கத் துறை முன்  ஆட்சியர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில் தஞ்சை, திருச்சி, அரியலூர், கரூர், வேலூர் ஆகிய மாவட்ட  ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகின்றனர். 



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: