பெட்ரோல், டீசல் விலை: 75ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.66% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 49.6%, புழல் - 88.67%, பூண்டி - 10.03%, சோழவரம் - 9.62%, கண்ணன்கோட்டை - 64.8% நீர் இருப்பு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 31, 2024 07:17 ISTபாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது
நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது;
ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
May 30, 2024 23:35 ISTபெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் காட்டுத்தீ : அணைக்கும் பணி தீவிரம்
சென்னை, சோழிங்கநல்லூர் ஆவின் பின்புறம் உள்ள பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. அதிக வெயில் காரணமாக தீப்பிடித்ததா, உயர் அழுத்த மின் கம்பி உரசி தீப்பிடித்ததா என விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
May 30, 2024 21:56 ISTதமிழகத்தில் 18 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 ஃபாரன்கீட்டை கடந்தது
தமிழகத்தில் 18 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 ஃபாரன்கீட்டை கடந்துள்ள நிலையில், அதிகபட்சமாக திருத்தணியில், 109ஃபாரன்கீட் பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 2-வது நாளாக 107 ஃபாரன்கீட் பதிவாகியுள்ளது.
-
May 30, 2024 21:53 IST100வது பிறந்தநாளை கொண்டாடிய சுதந்திர போராட்ட தியாகி : ஊர் பொதுமக்கள் வாழ்த்து
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள பாம்பாரப்பட்டியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் இருந்த சுதந்திர போராட்ட வீரர் வீரப்பன், தனது 5வது தலைமுறை பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார். ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து அவரிடம் ஆசி பெற்றனர். சுதந்திர போராட்ட தியாகியின் 100வது பிறந்தநாளை ஊரே ஒன்று சேர்ந்து கொண்டாடியதால் அப்பகுதியே திருவிழா கோலமாக காட்சியளித்தது.
-
May 30, 2024 20:47 ISTஅரசுப்பணி தேர்வுகளில் தமிழில் 40% மதிப்பெண் தொடர்பான அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
தமிழகத்தின் அரசுப்பணி தேர்வுகளில் தமிழில் 40 சதவீத மதிப்பெண் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
May 30, 2024 19:46 ISTஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 3 போலி மருத்துவர்கள் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சின்னவளையம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், பத்மநாபன் மற்றும் பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
May 30, 2024 19:45 IST50வது படமான ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள, அவரது 50வது படமான ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. படத்தில் அனுராக் காஷ்யப், நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
-
May 30, 2024 19:06 ISTஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - புதுவை கல்வித்துறை
புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக ஜீன் 6 அன்று பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் தற்போது ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
May 30, 2024 18:49 ISTஇறுதிக்கட்ட மக்களவை தேர்தல்: பரப்புரை ஓய்வு
2024 மக்களவை தேர்தலின் 7ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட பரப்புரை இன்று மாலை உடன் நிறைவடைந்தது. ஜூன்1ஆம் தேதி உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
May 30, 2024 18:38 ISTபாலஸ்தீனத்துக்கு இந்தியா 1980களிலே அங்கீகாரம்!
இந்திய வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “பாலஸ்தீனத்தை இந்தியா 1980களிலே அங்கீகரித்துவிட்டது. இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை” என்றார்.
-
May 30, 2024 18:01 ISTவி.கே பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல: நவீன் பட்நாயக்
வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல; எதிர்கால பிஜு ஜனதா தள தலைவரை ஒடிசா மக்களே தீர்மானிப்பார்கள் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். -
May 30, 2024 17:06 ISTபோலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம்
தெலங்கானாவில் போலீசாருடன் நடிகை நிவேதா பெத்துராஜ் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ ரீலா? இல்லை ரியலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. -
May 30, 2024 16:36 ISTதிருமயம் கோட்டை பைரவர் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷாவுடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
-
May 30, 2024 16:08 ISTடி.டி.எஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் டி.டி.எஃப். வாசன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. டி.டி.எஃப். வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்க உள்ளார். வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியவற்றை செய்துள்ளார் என்று வழக்கறிஞர் வாதிட்டார்.உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உறுதிமொழி பத்திரம் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்து, டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
May 30, 2024 15:59 ISTஎல்.எல்.ஆர் மட்டும் வைத்துள்ள டி.டி.எஃப். வாசன் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஓட்டியுள்ளார் - அரசு தரப்பு வாதம்
ஜாமின் கோரிய டி.டி.எஃப். வாசனின் மனு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. டி.டி.எஃப். வாசன் வளரும் இளைஞர், படத்தில் நடிக்க உள்ளார். வீடியோவுக்கு மன்னிப்பு கூட கேட்கிறோம். தலைக்கவசம் வழங்குவது, மழை வெள்ளத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஆகியவற்றை செய்துள்ளார் டி.டி.எஃப். வாசன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கார் ஓட்டுநர் உரிமம் பெற எல்.எல்.ஆர் மட்டுமே வைத்துள்ள வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
-
May 30, 2024 15:26 ISTமோடி கன்னியாகுமரிக்கு ஷூட்டிங்குக்குதான் போகிறார் - தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ்: “பிரதமர் மோடி கன்னியாகுமரிக்குச் செல்வது தியானம் செய்ய அல்ல, ஷூட்டிங்கிற்குதான். கேமரா இல்லாமல் மோடி தியானம் செயய் வேண்டும்” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
-
May 30, 2024 15:20 ISTபிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி; மன்மோகன் சிங் விமர்சனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: “பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி; பிரச்சாரம் முழுவதும் அவர் வெறுப்பு பேச்சை பேசி வருகிறார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அவரின் பிரச்சாரம் மகக்ளை பிளவுபடுத்தும் வகையில் உள்ளது. இதற்கு முன் எந்த பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை” என்று கூறினார்.
-
May 30, 2024 15:00 ISTகாவல்துறை கட்டுப்பாட்டில் பகவதி அம்மன் கோயில்
பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
-
May 30, 2024 14:23 ISTமின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு
ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே கிராமப் பகுதியில் நுழைந்த 3 காட்டு யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிய போது, தாழ்வாகச் சென்ற மின்சார கம்பியில் உரசி ஒரு ஆண் யானை உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 30, 2024 13:57 ISTதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் வரும் 1, 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
1, 2ஆம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
3ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 30, 2024 13:57 ISTசங்கர் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, கோவை நீதிமன்றம் உத்தரவு
பெலிக்ஸ் ஜெரால்ட் ஜாமின் மனு மீதான விசாரணையும் ஒத்திவைப்பு
-
May 30, 2024 13:26 ISTஎனக்கு நீதி வேண்டும்- TTF வாசன்
என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என் மீது 308 கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு நீதி வேண்டும்
- மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்துச் சென்ற வழியில் TTF வாசன் பேச்சு
-
May 30, 2024 13:26 ISTகாங்கிரஸ் சார்பில் மனு
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
-
May 30, 2024 13:26 ISTமு.க.ஸ்டாலின் இரங்கல்
வானூர் சட்டமன்றத் தொகுதி கழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன். பரமசிவம் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும், மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்
- மு.க.ஸ்டாலின்
-
May 30, 2024 12:54 ISTகெஜ்ரிவால் மனு இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரனை
தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கிறது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைய கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
-
May 30, 2024 12:16 ISTதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள்
“திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா?; சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தெரியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காவல்துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக்கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
-
May 30, 2024 12:15 ISTபட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து
ராணிப்பேட்டையில் துக்க நிகழ்வில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து .பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 12 பேர் காயம் வேறு இடத்தில் பட்டாசு வெடித்த போது குவியலாக இருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி விழுந்தது காயமடைந்தவர்கள் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதி.
-
May 30, 2024 11:22 ISTஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி
ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி . வெற்றி- இஸ்ரோ செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்ட அக்னிபான் ராக்கெட் திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் இயங்கும் ராக்கெட் இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் எந்திரத்தை கொண்டுள்ளது அக்னிபான் ராக்கெட்.
-
May 30, 2024 10:50 ISTவாக்கு எண்ணிக்கை: பார்வையாளர்கள் நியமனம்
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமித்து
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு. ஜுன் 4ம் தேதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. -
May 30, 2024 10:32 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு. ஒரு கிராம் தங்கம் ரூ.6,730க்கும், ஒரு சவரன் ரூ.53,840க்கும் விற்பனை
-
May 30, 2024 10:28 ISTகுமரி கடல் பகுதியில் 3 நாட்கள் மீன் பிடிக்க தடை
கன்னியாகுமரி கடல் பகுதியில் 3 நாட்கள் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை
அதிகாரிகள் உத்தரவு எதிரொலி - 1000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைப்பு
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
-
May 30, 2024 09:48 ISTடிடிஎஃப் வாசன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு
மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை அண்ணாநகர் போலீசார்
நேற்று வரை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
-
May 30, 2024 09:27 ISTகனமழை: தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் வரும் 1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு
1ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.
இன்றும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு, இன்று மஞ்சள் நிற எச்சரிக்கை இல்லை
கேரளாவில் இன்று முதல் வரும் 3ஆம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும்
-
May 30, 2024 08:48 ISTவிவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதி
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகு படகில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு அனுமதி
-
May 30, 2024 08:47 ISTஇன்று மாலை 4.35 மணிக்கு குமரி வரும் மோடி
3 நாள் பயணமாக கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு.
மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்கிறார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்து விட்டு குமரி வரும் பிரதமர் விமானத்தில் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் குமரிக்கு வருகிறார்.
பிரதமர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று மாலை 4.35 மணிக்கு குமரிக்கு வருகிறார்
-
May 30, 2024 08:28 ISTடிடிஎப் வாசன் மீண்டும் கைது
பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் அதிரடியாக கைது, மதுரை அண்ணாநகர் போலீசார் நடவடிக்கை
செல்போன் பயன்படுத்தியபடி காரை இயக்கியதாக புகார்
சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்கு
மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு
தற்போது டிடிஎஸ் வாசன் மீது 6 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு
-
May 30, 2024 08:19 ISTகார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. கிளாசிகள் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
-
May 30, 2024 08:03 ISTஇன்று மாலை குமரி வரும் மோடி
மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தை முடித்து விட்டு, இன்று மாலை கன்னியாகுமரி வருகிறார், பிரதமர் மோடி.
விவேகானந்தர் பாறையில் நாளை தியானத்தை தொடங்குகிறார்.
-
May 30, 2024 08:02 ISTஇறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரம்
மக்களவை தேர்தலுக்கான கடைசிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரம்,. 8 மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.