Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
வழக்கமான அட்டவணைப்படி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
டாஸ்மாக் வருமானத்தில் தமிழ்நாடு செயல்படவில்லை: நீதிமன்றத்தில் அரசு வாதம்
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், “டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாகக் கூறுவது தவறு” என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில், தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு தொழில்நுட்ப கோளாறு காரணமாக துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு : மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் செக்
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு -நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை தலைமைச் செயலகத்தில் மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரையில் உள்ள வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் பொது மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், “வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மோதி விபத்து - 10 பேர் காயம்
திண்டுக்கல், பழனி அருகே அரசு பேருந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால் நிலைதடுமாறி மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிக முறை ஆட்ட நாயகன் விருது
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்தியர்களின் பட்டியலில் ரோஹித்தை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் 2வது இடத்திற்கு முன்னேறினார்.
நிமோனியா - தயார் நிலையில் இந்தியா
சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் குறைந்த அளவிலான அபாயம் இருந்து வருகிறது. தற்போது அவசர தேவைகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இந்தியா உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.பி.ஸ் அதிகாரி மகனுக்கு சம்மன்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் ஓய்வு பெற்ற ஐபிஸ் அதிகாரி மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
மன்சூர் அலிகானை மன்னித்தார் த்ரிஷா
அவதூறு கருத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட நிலையில், 'தவறு செய்பவர்கள் மனிதர்கள், மன்னிப்பவர் தெய்வம் என தனது எக்ஸ் தளத்தில் நடிகை த்ரிஷா பதிவிட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரியாக மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்மை - விவசாயிகள் நலவாரியத்தின் சிறப்பு செயலாளராக சங்கர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
போராட்டம் நடத்தியவர்கள் கைது - ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதை கண்டித்து, ஏகனாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக, பள்ளிகளுக்கும் மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு பட்டியல் - போலீசார் பணியிட மாற்றம்
காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 3 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21ம் தேதி குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். ஆவடி காவல் ஆணையர் பரிந்துரை பேரில் 13 காவலர்களையும் வெளி மாவட்டங்களுக்கு மாற்றி டிஜிபி அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாலை 4 மணி வரை 24 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் மாலை 4 மணி வரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, நீலகிரி, நெல்லை ஆகிய 24 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக மாற்றும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது
"தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக மாற்றும் அதிகாரம் குடியரசு தலைவருக்கு உள்ளது. அரசியல் காரணங்களால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காமல் உள்ளனர்"- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ழுப்புரத்தில் இருளர் பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர்ராஜ் பணியிடை நீக்கம். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை. விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஷாகுல் அமீது உத்தரவு.
குஷ்பு மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
முன் ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பேசவில்லை - மன்சூர் அலிகான் தரப்பு "நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு" மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது - காவல்துறை
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசு முறையீடு
10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசு முறையீடு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
கொடநாடு வழக்கு: ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைப்பு
உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
விழுப்புரம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அதிரடி உத்தரவு கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பழனி காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவர்களுக்கு பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத 2 ஆசிரியைகளை இடம் மாற்றம் செய்து அதிரடி உத்தரவு
அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் சம்மன். மணல் குவாரி விவகாரத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது . மணல் குவாரி விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை
'சக திரைநாயகி திரிஷாவே: என்னை மன்னித்துவிடு': மன்சூர் அலிகான் அறிக்கை
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் நடிகர் மன்சூர் அலிகான் "திரிஷாவின் மனம் வருத்தப்பட்டிருக்கிறது என காவல் அதிகாரி சொன்ன போது எனக்கும் வருத்தம் தான் என வந்துவிட்டேன்..." "நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக" சக திரைநாயகி திரிஷாவே.. என்னை மன்னித்துவிடு என அறிக்கை வெளியிட்டார் நடிகர் மன்சூர் அலிகான்
மு.க.ஸ்டாலின் விளக்கம்
உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின்
முன்னாள் டி.ஜி.பி.யும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஆன நட்ராஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் குழுக்களில் முதலமைச்சர் மற்றும் அரசு குறித்து போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தது
அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு
ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொள்ளும் பெரியார் பல்கலை. 22வது பட்டமளிப்பை விழா உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கத்தினரும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு
விழுப்புரம் கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பழனி திடீர் ஆய்வு செய்தார். 26 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் காலை 9.15 மணி ஆகியும் ஆசியர்கள் இருவர் வரவில்லை. இதனால் 2 ஆசிரியைகளை பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவு
ராட்சத ஆசிட் டேங்க் வெடித்து விபத்து
ராணிப்பேட்டை ரசாயன தொழிற்சாலையில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆசிட் டேங்க் திடீரென வெடித்து விபத்துள்ளானது. டேங்கில் வைக்கப்பட்டிருந்த அலுமினியம் குளோரைடு என்ற ஆசிட் தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியது.
நச்சுப்புகை வெளியேறியதால் அருகில் வசிக்கும் மக்கள் சுவாச பிரச்னையால் அவதி அடைந்துள்ளனர்.
ஆளுநர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆளுநர்கள் மசோதாக்களின் மீதான நடவடிக்கைகளை தடுக்கவோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் இயல்பான அதிகாரத்தை முறியடிக்கவோ முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி இருப்பது மிகுந்த வரவேற்ப்பிற்குரியது. இனியாவது ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்பை மீறி உளறுவதையம் ஃபைல்களை தூங்க…
— Mano Thangaraj (@Manothangaraj) November 24, 2023
இந்தியாவுக்கான ஆப்கன் தூதரகம் நிரந்தரமாக மூடல்
டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதரகம் நிரந்தரமாக மூடப்பட்டது.
தாலிபான் அரசு நியமிக்கும் தூதருக்கு இந்தியா சட்ட அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை.
இது வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இருக்கும் ஆப்கன் மாணவர்களுக்கு பாதிப்பு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 11 மணிக்கு மீட்பு பணி மீண்டும் தொடக்கம்
உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது துளையிடும் இயந்திரத்தின் கான்கிரீட் அடித்தளம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
சுமார் 11 மணி அளவில் துளையிடும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 46.8 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதை துளையிட்டுள்ளது. மீதமுள்ள 5 முதல் 10 மீட்டர் துளையிடும் இடத்தில் எந்தவித தடைகளும் கிடையாது என்பதால் இன்று மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடைய வாய்ப்பு
திருவாரூரில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
திருவாரூர் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, இன்று (நவ.24) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டார்.
நாளை வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை?
நெல்லையில் இன்று (நவ.24) மழை பெய்தாலோ, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கினாலோ, வகுப்புகள் நடத்த உகந்த சூழல் இல்லாத நிலை ஏற்பட்டாலோ, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே சூழ்நிலைக்கேற்ப பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கலாம்.
விடுமுறை தொடர்பான தகவல்களை பள்ளிக்கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்கவும் அறிவுறுத்தல்- மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு
உத்தரகாண்ட் சுரங்க விபத்து
உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 46.8 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதை துளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.24) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டார்.
கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
கோவைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம்’ இன்று திரையிடப்படவில்லை
#DhruvaNatchathiram #DhruvaNakshathram pic.twitter.com/dmD4ndEnp9
— Gauthamvasudevmenon (@menongautham) November 23, 2023
'மன்னிக்கவும். ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் படத்தை திரையிட இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது;
உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம்.
இந்த திரைப்படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் மீண்டும் வருவோம் - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் பதிவு
ஆஸ். எதிரான முதல் டி20- இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஜாஸ் இங்கிலிஷ் 110 ரன்கள் குவித்து தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்ட ரஜினி – கமல்
The 2 unparalleled LEGENDS of Indian Cinema 'Ulaganayagan' @ikamalhaasan & 'Superstar' @rajinikanth sharing a lighter moment while shooting for their respective films Indian-2 & Thalaivar170 in the same studio after 21 years! 🤗✨#Indian2 🇮🇳 #Thalaivar170 @shankarshanmugh… pic.twitter.com/jIPcITqMUu
— Ramesh Bala (@rameshlaus) November 23, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.