Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில், நவ.7 மற்றும் நவ.17 ஆகிய இருநாள்கள், மொத்தம் இரண்டு கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. டிச.3 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், காங்கிரஸ் 40-50 இடங்களை கைப்பற்றும். பாஜக 36-46 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக வர வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 02, 2023 07:03 ISTமதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக போலீஸ் விடியவிடிய சோதனை
அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விடிய விடிய தீவிர சோதனை நட்த்தி வருகின்றனர்.
பாதுகாப்பு பணிக்கு சென்ற சி.ஆர்.பி.எஃப் படையினரை அனுமதிக்க தமிழ்நாடு காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு
-
Dec 01, 2023 20:29 ISTஅறையை சோதனை செய்ய ED அனுமதி மறுப்பு
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடந்தது. அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சோதனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். -
Dec 01, 2023 19:00 ISTஅமலாக்கத் துறை அதிகாரி கைது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை மண்டல அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடந்தது. அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். -
Dec 01, 2023 16:36 ISTவாட்ஸ் அப் - சீக்ரெட் கோட்!
வாட்ஸ் அப் சாட்களை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க சீக்ரெட் கோட் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. இதன் மூலம் குறிப்பிட்ட சாட்களை யாரும் பார்க்காமல் ரகசியமாக வைத்துக்கொள்ள முடியும்.
-
Dec 01, 2023 15:59 ISTசென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார். நாளை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 01, 2023 15:00 ISTகே.சி.வீரமணி மீது வழக்குப்பதிய ஆளுநர் ரவி மறுப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி இருந்தது தமிழ்நாடு அரசு. ஆவணங்கள் குறைவாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.
நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
Dec 01, 2023 13:50 ISTடிசம்பர் 3ம் தேதி வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
டிசம்பர் 3ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 780 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை - மசிலிப்பட்டினம் இடையே மற்றும் திருவள்ளூரில் வரும் டிச.4-ஆம் தேதி புயல் கரையை கடக்கக்கூடும் சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
-
Dec 01, 2023 13:21 ISTதமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி
ஆளுநர், ஒன்றிய அரசின் NOMINEE என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு. ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை.
-
Dec 01, 2023 12:55 ISTரூ. 20 லட்சம் லஞ்சப் பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரில் இருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் பணத்தை கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியிடம் விசாரணை
-
Dec 01, 2023 12:14 ISTபுயல் முன்னெச்சரிக்கை முதல்வர் ஆலோசனை
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உயர்அதிகாரிகள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
-
Dec 01, 2023 11:56 ISTநடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம்
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவிற்கு காவல்துறை அறிவுறுத்தல்
-
Dec 01, 2023 11:55 ISTஇ.பி.எஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
மான நஷ்டஈடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-ன் வாக்குமூலத்தை பதிய வழக்கறிஞர் ஆணையர் நியமித்ததை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு டிச.8க்குள் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
-
Dec 01, 2023 11:23 ISTதமிழகம்: 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Dec 01, 2023 11:20 IST9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயல் எச்சரிக்கை எதிரொலி - 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் சென்னை, நாகை, காரைக்கால், கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
-
Dec 01, 2023 10:54 ISTமூத்த நடிகை சுப்புலட்சுமி மரணம்
வயது மூப்பு காரணமாக முத்த நடிகை சுப்புலட்சுமி இன்று காலமானார்.
நடிகை சுப்புலட்சுமி (87) காலமானார்!#SunNews | #RIPSubbulakshmi pic.twitter.com/0JBW38GEiA
— Sun News (@sunnewstamil) December 1, 2023Credit: Sun News Twitter
-
Dec 01, 2023 10:53 ISTமீண்டும் மலை ரயில் சேவை
8 நாட்களுக்கு பிறகு குன்னூர்- உதகை இடையே மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
-
Dec 01, 2023 10:34 IST9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Dec 01, 2023 10:23 ISTதங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.46, 800-க்கும், ரூ. 5,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Dec 01, 2023 09:40 ISTகாற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Dec 01, 2023 09:20 ISTஜி-20 அமைப்பின் புதிய தலைவராக பிரேசில்
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை வகித்த இந்தியாவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. புதிய தலைவராக பிரேசில் நாடு இன்று முதல் பொறுப்பு ஏற்கிறது
-
Dec 01, 2023 09:20 ISTசென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேக்கம்
சென்னை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 2வது நாளாக போக்குவரத்து முடக்கம். கனரக மோட்டார்கள் கொண்டு அருகில் உள்ள கால்வாயில் நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Dec 01, 2023 08:32 ISTவைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பு
சிவகங்கை மாவட்டத்தின் பூர்விக 2ஆம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் 5 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 10,531 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்
-
Dec 01, 2023 08:31 ISTநாளை அனைத்துக்கட்சி கூட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக நாளை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
Dec 01, 2023 07:31 ISTவணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்தது. ரூ.1,942க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,968.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Dec 01, 2023 07:30 ISTஅடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகபட்டினம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2023 07:30 ISTவங்கக்கடலில் டிச. 3-ம் தேதி உருவாகும் புயல்
அந்தமான் அருகே உருவாகி, வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 3-ம் தேதி வாக்கில் புயலாகவும் வலுப்பெறும். 4-ம் தேதி அதிகாலை வடதமிழகம் – தெற்கு ஆந்திர கடலோரபகுதிகளில் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2023 07:30 ISTசெம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால், உபரி நீர் வெளியேற்றம் 4,000 கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்வரத்து 1431 கன அடியாக உள்ளது.
-
Dec 01, 2023 07:30 ISTIndia vs Australia 4th T20I
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
-
Dec 01, 2023 07:29 ISTதுபாய் புறப்பட்டார் பிரதமர் மோடி
காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்க துபாய் புறப்பட்டார் பிரதமர் மோடி
Deeply moved by the warm welcome from the Indian community in Dubai. Their support and enthusiasm is a testament to our vibrant culture and strong bonds. pic.twitter.com/xQC64gcvDJ
— Narendra Modi (@narendramodi) November 30, 2023 -
Dec 01, 2023 07:28 ISTசென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு
புயல் எச்சரிக்கை திரும்பப் பெறும் வரை பொது மக்கள் பாதுகாப்பு கருதி பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.