Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுக்காகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து
உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் பணி இயந்திர கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 46.8 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதை துளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குஷ்பு வீடு முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன் குமார்: “பட்டியல் சமூக மக்கள் குறித்த கருத்துக்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் குஷ்பூவின் வீடு முற்றுகையிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ஃபாத்திமா பீவி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்றாத்தின் முதல் பெண் நீதிபதியும் என்ற பெருமைக்குரிய ஃபாத்திமா பீவி மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். ஃபாத்திமா பீவி மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் வெள்ளப் பெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் 'பிக்பாக்கெட், பீடை' என விமர்சனம் செய்ததற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ். 2 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்திருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாக தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரியில் கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பெய்துவரும் கனமழையால் சோலூர் மட்டம் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் 50 மீட்டர் சாலை அடியோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே சானமாவு பகுதியில் காட்டு யானைகள் தஞ்சம் : அருகில் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை
ஓசூர் அருகே சானமாவு பகுதியில் இன்று காலை 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், மாலை நேரங்களில் தோட்டப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சானமாவு , பீர்ஜேப்பள்ளி, கொம்பே பள்ளி, சினிகிரிப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரியில் கனமழை : நிலச்சரிவு காரணமாக 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்து வரும் கனமழையால் சோலூர் மட்டம் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் நீளத்திற்கு சாலை அடியோடு அடித்து செல்லப்பட்டதால் கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும்
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் 2 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது 8 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மரணம்
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மரணம்: அவருக்கு வயது 92
ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சேவை முடக்கம்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி இணையதள சேவை முடக்கம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இ-டிக்கெட் சேவை பாதிப்பு. தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு சேவை தொடங்கப்படும் - ஐ.ஆர்.சி.டி.சி
நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
'சேரி மொழி' என கூறி பட்டியல் சமூக மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை குஷ்பூவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
போலீசார் சம்மன்: மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை
நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகவில்லை. ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம். தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என கடிதம் நாளை ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் கடிதம்
2 மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள் என தகவல்
உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்னும் 2 மணி நேரத்தில் மீட்கப்படுவார்கள் என தகவல். மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்த நபர், தந்தி டிவிக்கு பிரத்யேக தகவல் மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலிக மருத்துவமனை தயார்.
உத்தரகாண்ட்: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணி
உத்தரகாண்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சுரங்கப்பாதை மீட்பு, உள்ளே செல்ல தடையாக இருந்த இரும்பு உலோகம் அகற்றம் .12வது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள், சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பு உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை அடைய சில மீட்டர் தொலைவே இருப்பதாக தகவல் சிகிச்சைக்காக மருத்துவமனை, 40 ஆம்புலன்ஸ், 2 ஹெலிகாப்டர்களும் தயார்.
சென்னை இந்திரா நகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள 'யூ' வடிவ மேம்பாலம் திறப்பு
காணொலி காட்சி மூலம் 'யூ' வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் .'யூ' வடிவ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு ரூ.108.13 கோடி மதிப்பில் 237 மீட்டர் நீளம், 7.50 மீட்டர் அகலம் கொண்ட 'யூ' வடிவ மேம்பாலம் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் அணுகு சாலை அமைப்பு
14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், குமரி ஆகிய 14 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
நெல்லை மாநகராட்சியின் 3 கவுன்சிலர்கள் தற்காலிக நீக்கம்
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நெல்லை மாநகராட்சியின் 3 கவுன்சிலர்கள்- பவுல்ராஜ் (6வது வார்ட்), மன்சூர் (20வது வார்டு), ரவீந்தர் (24வது வார்டு)- ஆகியோர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
மதுரை அழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம்
மதுரை அழகர் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
கோவையில் அதி கனமழை பதிவு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று ஒரே நாளில் 37.3 செ.மீ அதி கனமழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமனை தொடங்கியதில் இருந்து ஒரு நாளில் பதிவான அதிகபட்ச மழை இதுவாகும்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4107கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று (நவ. 23) காலை 63.45அடியாக உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
35 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழையும்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
மதுரை கள்ளழகர் கோயிலில் இன்று குடமுழுக்கு
மதுரை கள்ளழகர் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் ராஜகோபுர பணிகள் நிறைவடைந்ததையடுத்து இன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.
சென்னையில் மழை
சென்னையில் அதிகாலை முதலே ஆயிரம் விளக்கு, ராயபுரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, செண்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.23) விடுமுறை
தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கோவையில் தொடர்மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள 193 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
India vs Australia- முதல் டி20 போட்டி இன்று
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படவுள்ளார்.
உத்தரகாசி சுரங்கபாதை விபத்து
உத்தரகாசி சுரங்கபாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் இன்று காலை 8 மணிக்குள் மீட்கப்படுவர்-மீட்புக் குழு உறுப்பினர் ஹர்பால் சிங் தகவல்
சென்னையின் முதலாவது U வடிவ மேம்பாலன் இன்று திறப்பு
சென்னை OMR சாலை, இந்திராநகர் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள சென்னையின் முதலாவது U வடிவ 237 மீட்டர் நீள மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
OMR சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.108.13 கோடி செலவில் இந்த பாலம் கட்டபட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.