scorecardresearch
Live

Tamil news today : மழைநீர் வடிகால் பணி ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today : மழைநீர் வடிகால் பணி ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு

Petrol and Diesel Price

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா vs பாகிஸ்தான்

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் லீக் போட்டியில் இன்று ஞாயிற்று கிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. பிற்பகல் 1:30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கும் இந்த ஆட்டத்திற்காக இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எல்.வி.எம்3-எம்2 ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் ஏவபட்டது

இஸ்ரோவின் எல்.வி.எம்3-எம்2 ராக்கெட் வெற்றிகரமாக  நேற்று விண்ணில் பாய்ந்தது.  இங்கிலாந்தின் ‘ஒன்வெப்’ என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட்டது

Live Updates
22:30 (IST) 23 Oct 2022
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்

எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் தலைவர்களுள் ஒருவராக விளங்கினார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் இயக்கங்கள், வாசகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

22:23 (IST) 23 Oct 2022
மழைநீர் வடிகால் பணி ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு

இரும்பு தடுப்புகள் ஏற்படுத்தி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் சென்னை மாநகராட்சி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பத்திரிகையாளர் பலியானதன் எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

21:18 (IST) 23 Oct 2022
கோவை கார் வெடி விபத்து: உயிரிழந்தவர் வீட்டில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு – டிஜிபி சைலெந்திர பாபு

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை, ஆனால் அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது. சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

20:27 (IST) 23 Oct 2022
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படம்‘தங்கலான்’ – படக்குழு அறிவிப்பு

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தங்கலான் என படக்குழு அறிவித்துள்ளனர்.

19:39 (IST) 23 Oct 2022
கோவை கார் தீ விபத்து: உயிரிழந்தவர் அடையாளம் கண்டுபிடிப்பு

கோவை, உக்கடம் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டது.

விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் இவரிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

19:37 (IST) 23 Oct 2022
உதயநிதி நடிக்கும் கலகத் தலைவன் படத்தின் டீசர் வெளியீடு

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

19:35 (IST) 23 Oct 2022
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் உயிரிழப்பு; ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18:57 (IST) 23 Oct 2022
விராத் கோலிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு வெற்றி தேடி விராத் கோலியை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “விராத் கோலியின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

18:54 (IST) 23 Oct 2022
கோவை கார் வெடிப்பு அதிர்ச்சியளிக்கிறது; கு. அண்ணாமலை ட்வீட்

கோவை கார் வெடிப்பு அதிர்ச்சியளிக்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “தமிழகத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து நம் மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறையிடம் உள்ளது.

இந்த வெடி விபத்தின் மர்மம் விலக போதிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக எடுக்கும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (அக்.23) காலை கார் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்தார்.

18:29 (IST) 23 Oct 2022
அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் வழிபாடு நடத்தினார். அப்போது ஸ்ரீ ராமருக்கு அவர் அபிஷேகம் நடத்தினார்.

தொடர்ந்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி நிலத்தை ஆய்வு செய்தார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

18:03 (IST) 23 Oct 2022
6 மணி நேரத்தில் சிட்ராங் புயல் உருவாகிறது- கன மழை எச்சரிக்கை

அடுத்த 6 மணி நேரத்தில் சிட்ராங் புயல் உருவாகிறது. இதனால் கடற்கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்தப் புயலுக்கு சிட்ராங் என தாய்லாந்து பெயரிட்டுள்ளது.

17:57 (IST) 23 Oct 2022
இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் பட்டியலில் ரிஷி சுனக்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் பட்டியலில் உள்ளார்.

இந்த நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன.

பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் உள்ளார்.

இந்த நிலையில் ரிஷி சுனக்கிற்கு 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

17:34 (IST) 23 Oct 2022
பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி

டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி பெற்றது.

17:08 (IST) 23 Oct 2022
தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு முன்னதாக தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

16:15 (IST) 23 Oct 2022
பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலி

சென்னை எம்ஜிஆர் நகரில் வடிகால் பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில் கம்பி குத்தி படுகாமடைந்த தனியார் தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணன் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

15:32 (IST) 23 Oct 2022
பண்டிகை காலத்தில் கோவை மக்களின் அச்சத்தைப் அரசு போக்க வேண்டும் – அண்ணாமலை

கோவை உக்கடம் கார் வெடிவிபத்து அதிர்ச்சியளிக்கிறது, பல சந்தேகங்களையும் எழுப்புகிறது” பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் அரசு போக்க வேண்டும். கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் சமூக விரோதிகளிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

14:56 (IST) 23 Oct 2022
குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர் – அன்பில் மகேஷ்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

14:22 (IST) 23 Oct 2022
வங்க கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது – வானிலை மையம்

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது. மத்திய கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுபெறக்கூடும். அக்டோபர் 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

14:02 (IST) 23 Oct 2022
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

13:36 (IST) 23 Oct 2022
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

சென்னை, ஜாபர்கான்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தனியார் நிறுவன ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்

13:13 (IST) 23 Oct 2022
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 தனிப்படை விசாரித்து வருகிறது – டி.ஜி.பி

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக 6 தனிப்படை விசாரித்து வருகிறது. காரை இதற்கு முன்பாக வைத்திருந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்: அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்

12:49 (IST) 23 Oct 2022
டி20 உலகக்கோப்பை – இலங்கை அணி வெற்றி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று : அயர்லாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி

129 ரன்கள் இலக்கை 15 ஓவர்களில் எட்டி இலங்கை அணி வெற்றி

12:33 (IST) 23 Oct 2022
கோவையில் கார் வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்

சம்பவம் நடந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு

12:17 (IST) 23 Oct 2022
ஒரே குடும்பமாக கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம் -ஆளுநர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி, நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம் – ஆர்.என்.ரவி

12:16 (IST) 23 Oct 2022
தீபாவளி – ஈபிஎஸ் வாழ்த்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வாழ்த்துகள் – ஈபிஎஸ்

12:15 (IST) 23 Oct 2022
கோவை – சம்பவம் இடத்தில் ஆணிகள் பறிமுதல்

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக கிடந்த ஆணிகள், கோலி குண்டுகள், பால்ராஸ் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

11:24 (IST) 23 Oct 2022
காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி – ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் ஆய்வு

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம், சம்பவ இடத்திற்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் சென்று ஆய்வு

சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது, இன்று மாலை விவரங்கள் தெரிவிக்கப்படும். சிலிண்டர் வெடித்த பகுதியின் அருகே கோயில் உள்ளதால் விசாரணை தீவிரம்.

கோவை நகரில் பாதுகாப்புக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைப்பு – தாமரைக்கண்ணன்

09:59 (IST) 23 Oct 2022
தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை

செங்கல்பட்டு : காட்டாங்கொளத்தூரில், தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில்(21) என்ற மாணவன் கல்லூரி விடுதியில் தற்கொலை . ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்

09:57 (IST) 23 Oct 2022
டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று : இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு

09:56 (IST) 23 Oct 2022
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள்

தீபாவளியை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள். வெறிச்சோடி காணப்படும் தாம்பரம், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை. போக்குவரத்து நெரிசல் இன்றி செல்லும் வாகனங்கள். நேற்று நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருந்த நிலையில், இன்று எளிதாக செல்கின்றன

Web Title: Tamil news today live india vs pakistan pslv rain updates

Best of Express