Tamil Breaking News Highlights: மக்கள் வெள்ளத்தில் புத்தமத முறைப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்

Tamil Nadu Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSP TN President Mayawati tribute

BSP Armstrong Murder

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  • Jul 08, 2024 07:02 IST

    இன்று மாலையுடன் ஓய்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.



  • Jul 08, 2024 05:26 IST

    பி.எஸ்.பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் அடக்கம்; புத்த மத வழக்கப்படி இறுதி மரியாதை

    திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள ரோஜா நகரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.புத்த மத வழக்கப்படி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறவினர்கள் மரியாதை செலுத்தினர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 07, 2024 20:57 IST

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்; கனமழையிலும் சூழ்ந்து வரும் மக்கள் வெள்ளம்

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் 3 மணி நேரமாகியும் இதுவரை சுமார் 5 கி.மீ தூரத்தை மட்டுமே கடந்துள்ளது. இன்னும் 16 கி.மீ தூரம் அடைய வேண்டும். கனமழைக்கு இடையே மக்கள் வெள்ளம் சூழ இறுதி ஊர்வலம் பொத்தூர் நோக்கி செல்கிறது.



  • Jul 07, 2024 20:33 IST

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்; 3 மணி நேரத்தில் 5 கி.மீ மட்டுமே கடந்தது

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் பெரம்பூரில் இருந்து  3 மணி நேரமாக 5 கி.மீ மட்டுமே கடந்துள்ளது. ஏராளமான தொண்டர்கள், சூழ இறுதி ஊர்வலம் நடந்து வருகிறது. இறுதி ஊர்வலம் ரெட்டி மேம்பாலத்தைக் கடந்தது. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள ரோஜா நகரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.



  • Jul 07, 2024 19:01 IST

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்; பலத்த பாதுகாப்பு

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு வழிநெடுகிலும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனிடையே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • Jul 07, 2024 18:35 IST

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்; கண்கலங்கிய பிஞ்சு மகள்!

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் பெரம்பூர் வழியாக 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொத்தூர் செல்கிறது. அவரது பிஞ்சு மகள் கண்ணீருடன் காட்சியளிப்பது காண்போர் மனதை கலங்க செய்கிறது.



  • Jul 07, 2024 18:15 IST

    தீபக் ராஜா இறுதி ஊர்வலம்; இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு: சீமான் குற்றச்சாட்டு

    “அண்மையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒற்றைக்காரணத்திற்காக, தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொடும் குற்றவாளிகள் போலத் தேடித் தேடி கைது செய்துவருவது வன்மையான கண்டனத்துக்குரியது.


    தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்ட காணொலி ஊடகங்களில் வெளியாகி தென் மாவட்ட மக்களிடத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் மக்கள் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்டதை பெருங்குற்றம் போலக் கட்டமைத்து கைது செய்வதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
    ஆகவே, தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என சீமான் கூறியுள்ளார்.



  • Jul 07, 2024 18:11 IST

    விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.



  • Jul 07, 2024 18:09 IST

    சென்னை, கோவை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jul 07, 2024 17:30 IST

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு சீமான் அஞ்சலி

     

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஞாயிற்றுக்கிழமை ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், “தமிழ்நாட்டில் 31 நாள்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன” என்றார். தொடர்ந்து, குற்றவாளிகள் சரண் அடைந்தார்களா? அல்லது கைது செய்யப்பட்டார்களா? அந்த உண்மையை முதலில் கூறுங்கள்.
    அவரின் உயிருக்கு ஆபத்து என்ற போது அவருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை கொடுத்திருக்க வேண்டும்” என்றார்.



  • Jul 07, 2024 17:25 IST

    ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் அமைதியாக செல்கிறது.



  • Jul 07, 2024 17:20 IST

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நிறைவு 

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. 
    கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 7 இடங்களில் 8 மணி நேரம் நடத்திய சோதனைக்கு பின் சில ஆவணங்கள் கைப்பற்றிய நிலையில் சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது.



  • Jul 07, 2024 16:43 IST

    தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு; தமிழிசை விமர்சனம்

    தமிழ்நாட்டில் நடப்பது திராவிட மாடலா கொலைகார மாடலா? எனக் கேள்வியெழுப்பிய தமிமிசை சௌந்தரராஜன், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை; தமிழ்நாட்டில் அரசியல் கொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன” என குற்றஞ்சாட்டினார்.



  • Jul 07, 2024 16:29 IST

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகத்தில் நடத்திய சி.பி.சி.ஐடி சோதனை நிறைவு

    கரூர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 7 இடங்களில் 8 மணி நேரம் நடத்திய சோதனைக்கு பின் சில ஆவணங்கள் கைப்பற்றிய நிலையில் சி.பி.சி.ஐ.டி சோதனை நிறைவு பெற்றுள்ளது



  • Jul 07, 2024 15:54 IST

    துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை, அவர் ஒரு பச்சோந்தி – இ.பி.எஸ்

    துரோகத்தின் மொத்த உருவம் அண்ணாமலை, அவர் ஒரு பச்சோந்தி. நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை கீழ்த்தரமாக விமர்சித்தால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். நான் கிளை செயலாளராக இருந்து முதல்வராக வந்தவன். கட்சியில் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தில் இருந்து வந்தேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அண்ணாமலை நியமிக்கப்பட்டவர். பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்



  • Jul 07, 2024 15:22 IST

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை; அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை - இ.பி.எஸ்

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை... காவல் துறை மீது ரவுடிகளுக்கு அச்சம் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என மதுரை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்



  • Jul 07, 2024 15:10 IST

    கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை – நீதிபதி

    ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் கிராமத்தில் அடக்கம் செய்துக் கொள்ளலாம். கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்னை. கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் கட்ட எந்த பிரச்னையும் இல்லை. அரசு அனுமதியுடன் கட்டிக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்



  • Jul 07, 2024 14:47 IST

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல்; மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம்

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆம்ஸ்ட்ராங் நினைவாக நினைவிடம், மருத்துவமனை அமைக்க விரும்பினால் அரசை அணுகி உரிய அனுமதிகளை பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.



  • Jul 07, 2024 14:26 IST

    தமிழ்நாட்டில் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இன்று முதல் 13 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Jul 07, 2024 14:10 IST

    தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடந்துள்ளது - சீமான்

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



  • Jul 07, 2024 13:39 IST

    சிபிஐ விசாரணை தேவையில்லை - செல்வப்பெருந்தகை

    ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரணை தேவையில்லை - செல்வப்பெருந்தகை

    ஆம்ஸ்ட்ராங் கொலையில்  சிபிஐ விசாரணை தேவையில்லை. தமிழக காவல்துறை விசாரணை போதும். உளவுப்பிரிவு போலீசாரை பலப்படுத்த வேண்டும். தமிழத்தில் சட்டம் ஒழுங்கு கவலை அளிக்கும் வகையில் உள்ளது-   ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் காங்.தலைவர் செல்வப்பெருந்தகை



  • Jul 07, 2024 13:34 IST

    டிஎன்பிஎல் இன்றைய போட்டிகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதல். 



  • Jul 07, 2024 13:25 IST

    வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம்- நீதிபதி 

    ராஜிவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது, ஆனால் உடல் தகனம் செய்யப்பட்டது டெல்லியில்.

    அதேபோல உடலை அடக்கம் செய்து விட்டு, பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம்- நீதிபதி 



  • Jul 07, 2024 13:03 IST

    விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு 

     ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கின் விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைப்பு. குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். நல்ல இடத்தில் மணிமண்டபம் அமைக்கலாம்-  ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது நீதிபதி பவானி சுப்பராயன்



  • Jul 07, 2024 12:57 IST

    விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: நீதிபதி

    விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேபோல அனுமதி வழங்க வேண்டும் - மனுதாரர் தரப்பு

    விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேபோல அனுமதி வழங்க வேண்டும். புதிய இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் புதிய மனு அளிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். 

    விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும்

    உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளி வர வேண்டும்

    அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது

    பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7,500 சதுர அடி நிலமும் குடியிருப்பு பகுதி தான், அதில் எப்படி அனுமதி வழங்க முடியும்? - நீதிபதி



  • Jul 07, 2024 12:19 IST

    200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: தமிழக அரசு

    ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல்



  • Jul 07, 2024 12:19 IST

    ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: மாயாவதி

    கட்சி அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர், தேர்வு செய்த கட்சி பகுஜன் சமாஜ் கட்சியே

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையை, தமிழக அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்

    தலித்துகளின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது

    தலித் மக்களின் வாழ்க்கை மேம்பட, பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ வசம் மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் 

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தால் எங்கள் கட்சி மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைகிறது 

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்பதை காட்டுகிறது

    சட்டத்தை கையில் எடுத்து தொண்டர்கள் செயல்பட கூடாது, அமைதியான முறையில் கருத்துக்களை கூறுங்கள்

    ஆம்ஸ்ட்ராங் கொலையால் பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்திற்கு பகுஜன் சமாஜ் துணை நிற்கிறது

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும்

    உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, தமிழக அரசுக்கு பகுஜன் சமாஜ் அழுத்தம் கொடுக்கும்

    தலித் மக்களுக்கு நிறைய பொருளாதார உதவிகளை செய்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்- பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னையில் பேச்சு



  • Jul 07, 2024 11:21 IST

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: மாயாவதி

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்

    - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மாயாவதி பேட்டி



  • Jul 07, 2024 11:00 IST

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

    சென்னை பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி

    Mayavati



  • Jul 07, 2024 10:10 IST

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்தின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 2832 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 40.05 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



  • Jul 07, 2024 10:10 IST

    இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jul 07, 2024 09:54 IST

    போதுமான இடம் இல்லை: கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு தரப்பு மறுப்பு

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக்கோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை.

    அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே? ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா?

    போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.

    -உயர்நீதிமன்ற நீதிபதி

    கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் என அரசுத் தரப்பு வாதம்

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக மனுதாரர் வாதம்

    தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது - அரசுத் தரப்பு வழக்கறிஞர்

    வழக்கு விசாரணை 10:30 மணிக்கு ஒத்திவைப்பு



  • Jul 07, 2024 09:06 IST

    4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

    தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், இந்திய ராணுவம் - தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



  • Jul 07, 2024 08:41 IST

    பொதுமக்கள் அஞ்சலி

    சென்னை பெரம்பூர் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது



  • Jul 07, 2024 08:40 IST

    ஆம்ஸ்ட்ராங் இழப்பு ஈடுசெய்ய முடியாதது: இயக்குநர் வெற்றிமாறன்

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரிய ஆளுமை. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரால் இன்ஸ்பையர் ஆகி படித்து முன்னேறியவர்கள் ஏராளம். இந்த படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    - ஆம்ஸ்ட்ராங்  உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் இயக்குநர் வெற்றிமாறன்



  • Jul 07, 2024 07:51 IST

    ஆம்ஸ்ட்ராங்க் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.



  • Jul 07, 2024 07:48 IST

    மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தோனி



  • Jul 07, 2024 07:37 IST

    பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

    கும்மிடிப்பூண்டியில் கடந்த 4ம் தேதி ஆக்கிரமிப்பு வீட்டை வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றபோது, எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் ராஜ்குமார், 85% தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.



  • Jul 07, 2024 07:36 IST

    மாயாவதி இன்று காலை சென்னை வருகை

    ஆம்ஸ்ட்ராங் உடல் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளாது.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று காலை சென்னை வருகிறார்

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு புத்தமத வழக்கப்படி இறுதி சடங்கு நடைபெற்றது.



  • Jul 07, 2024 07:36 IST

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி சோதனை

    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களில்  சோதனை நடைபெறுகிறது

    நேற்று 3 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று 9 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அவர் 25 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளார்.



  • Jul 07, 2024 07:36 IST

    விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.



  • Jul 07, 2024 07:35 IST

    கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான்

    கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள்தான். சோமோட்டோ டி-சர்ட், 3 பைக்குகள், 7 அரிவாள் கைப்பற்றப்பட்டு உள்ளது. தற்போது சந்தேகத்தின்பேரில் மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டி



  • Jul 07, 2024 07:35 IST

    ஜிம்பாப்வே அணி வெற்றி

    இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி

    ZIM 115/9 (20) | IND 102/10 (19.5)



  • Jul 07, 2024 07:35 IST

    வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

    விருதுநகர்: வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான காளையின் உடல் பகுதி, சுடுமண் காதணி, சுடுமண் மணி, சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    virudhunagar



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: