Advertisment

Tamil news Highlights: கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் வாபஸ்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 03 OCTOBER 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
savukku shankar, savukku shankar tear the govt order new crisis, சவுக்கு சங்கர், சிறையில் அரசு உத்தரவை கிழித்தாரா சவுக்கு சங்கர், வழக்கறிஞர் புகழேந்தி, savukku shankar in jail, savukku shankar torture, advocate pugazhendhi, savukku shankar

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 135-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

மின்துறை ஊழியர்கள் கைது

புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் கைது மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:13 (IST) 03 Oct 2022
    கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் வாபஸ்

    கடலூர் மத்திய சிறையில் கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதினார். கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சிறை நிர்வாகம் உறுதியளித்ததன் பேரில் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது



  • 21:16 (IST) 03 Oct 2022
    டி20 உலகக் கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வரும் டி20 உலகக் கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதை உறுதி செய்துள்ளது.

    “ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பி.சி.சி.ஐ மருத்துவக் குழு நிராகரித்துள்ளது. விரிவான மதிப்பீட்டைத் தொடர்ந்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகக் குழு அக்டோபர் 3 திங்கட்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • 20:52 (IST) 03 Oct 2022
    மெட்ரிகுலேசன் பள்ளிகளை அக். 10-ம் தேதி திறக்க வேண்டும் – இயக்குநர் உத்தரவு

    தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு முடிந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் வரும் 10ம் தேதி திறக்கப்பட்டு செயல்படவேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்



  • 19:47 (IST) 03 Oct 2022
    ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

    ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய, சென்னை கே.கே நகரை சேர்ந்த ஐ.டி ஊழியர் நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்



  • 19:21 (IST) 03 Oct 2022
    இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4-வது இடம் - அமைச்சர் மூர்த்தி

    இந்தியாவில் வணிகவரி வசூலில் தமிழகத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு, வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் வசூல் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்



  • 19:15 (IST) 03 Oct 2022
    கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தான்… உரிமை அல்ல - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

    கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, அது உரிமையாகாது. பணியின் போது இறந்த தந்தையின் பணியை கருணை அடிப்படையில் வழங்க கோரி அனுஸ்ரீ 14 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்த மனுவை ஏற்று பணியை வழங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 18:57 (IST) 03 Oct 2022
    முலாயம் சிங்குக்கு தீவிர சிகிச்சை

    உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங்கின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • 18:55 (IST) 03 Oct 2022
    7 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

    பீகார், மராட்டியம், ஹரியானா உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 18:54 (IST) 03 Oct 2022
    சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது- அமைச்சர்

    காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 18:52 (IST) 03 Oct 2022
    கொடியேறி பாலகிருஷ்ணன் உடல் தகனம்

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த கேரள கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் உடல் கண்ணூரில் தகனம் செய்யப்பட்டது.



  • 18:48 (IST) 03 Oct 2022
    காபூல் பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல்

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் உள்ள பள்ளியொன்றில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 56 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தத் தாக்குதலில் 46 பேர் மாணவிகள் என்று கூறப்படுகிறது.



  • 18:43 (IST) 03 Oct 2022
    காபூல் பள்ளியில் தற்கொலைப் படை தாக்குதல்

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் உள்ள பள்ளியொன்றில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 56 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தத் தாக்குதலில் 46 பேர் மாணவிகள் என்று கூறப்படுகிறது.



  • 18:41 (IST) 03 Oct 2022
    செஞ்சி சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

    செஞ்சி சூப்பர் மார்க்கெட்டில் தலையில் பக்கெட்டு அணிந்து ரூ.1.10 லட்சம் திருடிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



  • 18:40 (IST) 03 Oct 2022
    செஞ்சி சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு

    செஞ்சி சூப்பர் மார்க்கெட்டில் தலையில் பக்கெட்டு அணிந்து ரூ.1.10 லட்சம் திருடிய அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



  • 18:16 (IST) 03 Oct 2022
    பைக் சாகசம் செய்த இளைஞருக்கு விழிப்புணர்வு தண்டனை

    சென்னையில் பைக் சாகசம் செய்த இளைஞர் ஒருவருக்கு விழிப்புணர்வு தண்டனை வழங்கப்பட்டது.

    அதன்படி அவர் போக்குவரத்து விதிகள் குறித்து சாலையில் செல்வோரிடம் விழிப்புணர்வு பதாகைகள் தாங்கியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



  • 18:00 (IST) 03 Oct 2022
    கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டியவர் கைது

    கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவை சேர்ந்தவர் அசோக் குமார். இவர் தன் நண்பர்கள் தினேஷ்குமார் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பொது இடத்தில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    இது பற்றி தகவல் அறிந்த வந்த போலீசார் அசோக் குமார், தினேஷ்குமார், அரவிந்த் குமார் மற்றும் பார்த்திபன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் மீது ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



  • 17:51 (IST) 03 Oct 2022
    புதுச்சேரியில் மின்ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

    புதுச்சேரியில் மின்சார ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டது.



  • 17:26 (IST) 03 Oct 2022
    கொலுவில் காந்தி படம் அசுரனாக சித்தரிப்பு.. போலீஸ் வழக்குப்பதிவு

    மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபா நடத்திய துர்கா பூஜையில் காந்தி படம் அசுரனாக சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 17:01 (IST) 03 Oct 2022
    ரூ.15 ஆயிரத்துக்கு ஜியோ மடிக்கணினி

    ஜியோ நிறுவனம் தயாரிப்பில் ரூ. 15 ஆயிரத்துக்கான மடிக்கணினி விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வர உள்ளது.



  • 16:32 (IST) 03 Oct 2022
    திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி

    திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் சோடியம், அலுமினியம் பவுடர்களை தண்ணீரில் கலந்து ஹீலியம் வாயு வீட்டிலேயே தயார் செய்யப்பட்டதும், 3வது முறையாக தண்ணீர் கலப்பதற்காக எடுக்க சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பலூன் வியாபாரி அனார் சிங் என்பவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.



  • 16:31 (IST) 03 Oct 2022
    நீட் விடைத்தாளை நேரில் பார்க்க மாணவிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

    நீட் தேர்விற்கான விடைத்தாளின்படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று மாணவி அளித்த புகாரை விசாரித்த உயர் நீதிமன்றம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு நேரில் சென்று பார்வையிட மாணவிக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு மாணவி வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயார் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.



  • 15:57 (IST) 03 Oct 2022
    2022-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

    2022ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஸ்வாண்டே பாபோவிற்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 15:53 (IST) 03 Oct 2022
    தி.மு.க. உட்கட்சி தேர்தல் : அக்.7ல் முதல்வர் வேட்புமனு தாக்கல்

    அக்.7ம் தேதி திமுக தலைவர் பதவிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தாய் மக்களாய், குடும்ப சொந்த பந்தங்களாய் பொதுக்குழுவில் காண்போம் தமிழ் பொதுமக்களின் நலனை தவறாது காப்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.



  • 14:48 (IST) 03 Oct 2022
    தூய்மையற்ற மாநிலமான தமிழ்நாடு.. ஓபிஎஸ்

    இந்தியாவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை 44வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை தூய்மையற்ற மாநிலமாக தமிழக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது என தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:15 (IST) 03 Oct 2022
    வண்டலூர் பூங்கா திறப்பு

    தொடர் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 14:14 (IST) 03 Oct 2022
    அனைத்து வித மது விற்பனைகளுக்கும் தடை

    புதுச்சேரியில் வரும் 9ம் தேதி, மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து வித மது விற்பனைகளுக்கும் தடை விதித்து மாநில கலால் துறை அறிவித்துள்ளது.



  • 14:13 (IST) 03 Oct 2022
    சப்பர பவனியில் உலோக கம்பிகள் பயன்படுத்த தடை

    தசரா திருவிழாவின் போது மின்கசிவு விபத்துகளை தவிர்க்க, சப்பர பவனியில் உலோக கம்பிகள் பயன்படுத்த தடை விதித்தும், அலங்கார விளக்குகளுக்காக உபயோகப்படுத்தும் ஜெனரேட்டரில் மின்கசிவு தடுப்புக்கருவி பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.



  • 13:34 (IST) 03 Oct 2022
    பொன்னியின் செல்வன் வரலாற்று சாதனை

    மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்-1 படம் 3 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.



  • 13:34 (IST) 03 Oct 2022
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் கோவை, தருமபுரி, மதுரை, தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:53 (IST) 03 Oct 2022
    ஆயுத பூஜை - தமிழிசை வாழ்த்து

    ஆயுத பூஜையை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து

    அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் - தமிழிசை செளந்தரராஜன்



  • 12:53 (IST) 03 Oct 2022
    ஹீலியம் பலூன் வெடித்து 1 பலியான விவகாரம் - வியாபாரி கைது

    திருச்சியில் ஹீலியம் பலூன் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் வியாபாரி அனர் சிங் கைது

    தலைமறைவாக இருந்த பலூன் வியாபாரியை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை

    விபத்தில் காயம் அடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்



  • 12:40 (IST) 03 Oct 2022
    சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர் ஆதரவு

    பெரம்பலூர் : திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு

    சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில் அமைச்சர் பங்கேற்பு



  • 12:39 (IST) 03 Oct 2022
    புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் 6வது நாளாக போராட்டம்

    புதுச்சேரியில் 200க்கும் மேற்பட்ட மின்துறை ஊழியர்கள் 6வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம்

    மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்

    மின்துறை ஊழியர்களுக்கு, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு



  • 12:09 (IST) 03 Oct 2022
    மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரிப்பு

    மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரிப்பு

    மல்லிகை - ரூ.1200, பிச்சிப்பூ -ரூ. 800, முல்லைப்பூ -ரூ. 900க்கும் விற்பனை



  • 12:08 (IST) 03 Oct 2022
    கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டனர் - பரபரப்பு

    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு

    2 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை தேடும் பணி தீவிரம்

    தூத்துக்குடியில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு 40 பேர் சுற்றுலா வந்த நிலையில் பரிதாபம்



  • 11:43 (IST) 03 Oct 2022
    குருக்ராம் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

    ஹரியானா : குருக்ராம் பகுதியில் பழைய 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

    இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரை மீட்கும் பணிகள் தீவிரம்



  • 11:42 (IST) 03 Oct 2022
    கரூர் பேருந்து நிலையத்தில் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

    கரூர் பேருந்து நிலையத்தில் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல்

    வரி பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவு



  • 10:20 (IST) 03 Oct 2022
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 37,640க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,705க்கு விற்பனை



  • 10:17 (IST) 03 Oct 2022
    யூடியூபருக்கு விசித்திர ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்

    பைக் சாகசத்தில் ஈடுபட்ட யூடியூபருக்கு விசித்திர ஜாமின் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம். பைக் சாகத்தில் ஈடுபட்ட இடத்தில் விழிப்புணர்வு பிரசுரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு . நீதிமன்ற உத்தரவின் படி இன்று முதல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கினார் பிரபல யூட்யூபர் கோட்லா



  • 09:03 (IST) 03 Oct 2022
    தோக்கம்பூர் பகுதியில் 7 ஆண்டுக்கு பின் தீண்டாமை சுவர் இடிப்பு

    திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே தோக்கம்பூர் பகுதியில் 7 ஆண்டுக்கு பின் தீண்டாமை சுவர் இடிப்பு . விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பல அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் வருவாய்துறையினர் நடவடிக்கை



  • 09:03 (IST) 03 Oct 2022
    துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து

    உத்தர பிரதேசம், பதோஹி துர்கா பூஜை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து. 52 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு



  • 09:02 (IST) 03 Oct 2022
    முலாயம் சிங் யாதவ், மருத்துவமனையில் அனுமதி

    உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், மருத்துவமனையில் அனுமதி. பூரண குணமடைவார் என பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி நம்பிக்கை



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment