Advertisment

Tamil news today : ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 26 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news today : ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி

பெட்ரோல்- டீசல் விலை

Advertisment

சென்னையில் 128வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல்  ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.  சட்டப்பேரவை கூட்டம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

டி20- இந்தியா வெற்றி

டி20 கிரிக்கெட் - தொடரை வென்றது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், தொடரை வென்றது இந்திய அணி. கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:09 (IST) 26 Sep 2022
    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது

    கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 22:06 (IST) 26 Sep 2022
    'மல்லிப்பூ' பாடலின் வீடியோ நாளை வெளியாவதாக அறிவிப்பு

    நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஹிட் பாடலான 'மல்லிப்பூ' பாடலின் வீடியோ நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


  • 19:46 (IST) 26 Sep 2022
    ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

    ஆரணி அருகே குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பூச்சி கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


  • 19:43 (IST) 26 Sep 2022
    ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவதூறு கருத்து பரப்பிய யூடியூப் சேனலை முடக்க கோரிக்கை

    ஸ்ரீமதி மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக யூடியூப்பில் வீடியோக்கள் வெளியீடு வெளியிட்ட தொடர்பாக மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில். அவதூறாக கருத்து பதிவிட்ட யூடியூப் சேனலை முடக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • 18:52 (IST) 26 Sep 2022
    கோவை ஆர்ப்பாட்டத்தில் கு. அண்ணாமலை பரபரப்பு பேச்சு

    திமுக எம்.பி., ஆ. ராசாவின் பேச்சை கண்டித்து பாஜகவினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை, “தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்னைக்காக பாஜக தொண்டன் மாதந்தோறும் வீதிக்கு வந்து போராடுகிறான்.

    மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஆகையால் இதை எப்படி திசை திருப்புவது, பாஜகவை எப்படி சமாளிப்பது என திமுகவினர் திணறிவருகின்றனர்.

    கலவரக்காரர்களை பற்றி பேசாமல் பாஜகவை மதவாத கட்சி என்கின்றனர்” எனப் பேசினார்.


  • 18:46 (IST) 26 Sep 2022
    ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல்

    ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த அவசர சட்டம் பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.


  • 18:45 (IST) 26 Sep 2022
    ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல்

    ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த அவசர சட்டம் பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது.


  • 18:44 (IST) 26 Sep 2022
    திரௌபதி முர்மு கர்நாடகா பயணம்

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள்கள் பயணமாக கர்நாடகா மாநிலத்துக்கு நாளை மறுதினம் (செப்.28) செல்கிறார்.


  • 18:33 (IST) 26 Sep 2022
    பிளாஸ்டிக் மறுசுழற்சி அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

    சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பதோடு, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.


  • 18:23 (IST) 26 Sep 2022
    CUET - PG தேர்வு முடிவுகள் வெளியீடு

    மத்திய பல்கலைக்கழகங்களின் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான CUET - PG தேர்வு முடிவுகள் வெளியானது.

    இந்த முடிவுகளை https://cuet.nta.nic.inல் காணலாம்.

    இந்தத் தேர்வுகள் தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டன.


  • 18:12 (IST) 26 Sep 2022
    அமைச்சர் பொன் முடி பெண்ணினத்தை அவமதித்துள்ளார்: .டி. ஜெயக்குமார்

    அமைச்சர் பொன் முடி பெண் இனத்தையே அவமதித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக அமைச்சர் பொன்முடி,மகளிருக்கு பேருந்து பயணம் இலவசம் திட்டம் குறித்து பேசுகையில், ஓசியிலதானே போறீங்க எனப் பேசியிருந்தார்.


  • 17:48 (IST) 26 Sep 2022
    தமிழ்நாட்டில் தலை தூக்கிய வெடிகுண்டு கலாசாரம்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

    தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் போன்று வெடிகுண்டு கலாசாரமும் திமுக ஆட்சியில் தலைதூக்கியுள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது.

    கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன. தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் போன்று. வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.


  • 17:22 (IST) 26 Sep 2022
    ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

    ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு விமானம் மூலம் ஜப்பான் செல்கிறார்.


  • 16:48 (IST) 26 Sep 2022
    பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது

    யூடியூப் சேனலில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அநாகரீகமாக பேசியதாக பெண் தொகுப்பாளர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்.


  • 16:00 (IST) 26 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் திருமாவளவன் மனு

    ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருமாவளவன் மனுவில் தெரிவித்துள்ளார்.


  • 15:56 (IST) 26 Sep 2022
    சமயபுரம் காவல்நிலையத்தில் கைதி உயிரிழப்பு; கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் தகவல்

    திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலையத்தில் கைதி உயிரிழந்தார். கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.


  • 15:15 (IST) 26 Sep 2022
    தமிழகத்தில் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை , திருப்பூர் ,தேனி, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 14:56 (IST) 26 Sep 2022
    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா; சினிமா, டிவி, நாடக நடிகர்களுக்கு அனுமதி

    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்களுக்கு அனுமதி அளித்து, திருச்செந்தூரை சேர்ந்த தசரா குழுவின் செயலர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    சினிமா, டிவி நடிகைகள் ஆபாச நடனமாக ஆடுவதாக கூறி திருவிழாவில் அனுமதிக்க கூடாது என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


  • 14:41 (IST) 26 Sep 2022
    கோவையில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க போராட்டம்; போலீசார் குவிப்பு

    கோவையில் இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகி இல்லம் மற்றும் பாஜக அலுவலுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது சம்மந்தமாக குற்றவாளிகள் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் மற்றும் திமுக அரசை கண்டித்து இன்று மாலை சிவானந்தகாலனி பகுதியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  • 14:34 (IST) 26 Sep 2022
    சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம முறை குறித்த பாடம்? – கமல் கண்டனம்

    சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம முறை குறித்த பாடம்? , பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.


  • 14:25 (IST) 26 Sep 2022
    தி.மு.க முன்னாள் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

    சென்னை, அண்ணா அறிவாலய வளாகத்தில் அமுல் ராஜ் என்ற தி.மு.க முன்னாள் நிர்வாகி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது


  • 14:03 (IST) 26 Sep 2022
    தி.மு.க.,வினர் பேசக்கூடிய செய்திகள் திரித்து வெளியிடப்படுகிறது - மு.க.ஸ்டாலின்

    தி.மு.க.,வினர் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி, ஒட்டி, மோசடி செய்யக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே செய்து வருகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்


  • 13:58 (IST) 26 Sep 2022
    தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திட சில அரசியல் சக்திகள் முயற்சி - ஸ்டாலின்

    தி.மு.க ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில், அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை உள்ளது என தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்


  • 13:44 (IST) 26 Sep 2022
    பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 14 குற்றவாளிகள் கைது – டி.ஜி.பி அறிக்கை

    கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்


  • 13:30 (IST) 26 Sep 2022
    சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

    சென்னை, வண்ணாரப்பேட்டை சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமை செய்த வழக்கில், சிறுமியின் உறவினர்கள் 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மேலும், காவல் ஆய்வாளர், அரசு அதிகாரி, பா.ஜ.க பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


  • 13:13 (IST) 26 Sep 2022
    டெமாக்ரடிக் ஆசாத் பார்ட்டி; புதிய கட்சியை தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

    காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் குலாம் நபி ஆசாத் டெமாக்ரடிக் ஆசாத் பார்ட்டி என்கிற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்


  • 12:57 (IST) 26 Sep 2022
    அதிமுக அலுவலக ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மீட்பு - சிபிசிஐடி

    அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின்போது ஓபிஎஸ் தரப்பு எடுத்துச் சென்ற ஆவணங்கள் மீட்பு - சிபிசிஐடி

    அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தின் போது எடுத்துச் செல்லப்பட்ட 113 ஆவணங்கள் மீட்பு

    காணமல்போன 113 ஆவணங்களும் மீட்கப்பட்டு அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது- சிபிசிஐடி தகவல்


  • 12:39 (IST) 26 Sep 2022
    முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

    அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை

    முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் ஆலோசனை


  • 12:38 (IST) 26 Sep 2022
    நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய மனு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுக்கள்

    மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • 12:38 (IST) 26 Sep 2022
    நளினி, ரவிச்சந்திரன் விடுதலை கோரிய மனு - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுக்கள்

    மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • 12:37 (IST) 26 Sep 2022
    கோவையில் பி.எப்.ஐ சேர்ந்த 3 பேர் கைது

    கோவை, பொள்ளாச்சியில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவம்

    பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது

    முகமது ரபீக்(26), மாலிக்(32), ரமீஸ் ராஜா(36) ஆகியோரை கைது செய்தது தனிப்படை


  • 12:11 (IST) 26 Sep 2022
    புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

    புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி - சுகாதாரத்துறை தகவல்


  • 12:10 (IST) 26 Sep 2022
    மன்மோகன் சிங்கிற்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    பொது வாழ்வில் கண்ணியத்தை காத்து நிலையான ஆட்சி வழங்கியவர். வறுமையை போக்கி, அடக்கத்தின் உருவாக விளங்குபவர் மன்மோகன் சிங்


  • 12:09 (IST) 26 Sep 2022
    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மும்முரம்

    அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 12:08 (IST) 26 Sep 2022
    கோவையில் போக்குவரத்து மாற்றம்

    கோவையில் பாஜகவினர் போராட்டத்தை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம். சிவாநந்தா காலனி, டாடாபாத், 105 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து மாற்றம்


  • 12:08 (IST) 26 Sep 2022
    ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஐபோன் 14 தயாரிப்பு - ஃபாக்ஸ்கான் நிறுவனம்

    ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் விரைவில் ஐபோன் 14 உற்பத்தி தொடங்கப்படும் - ஃபாக்ஸ்கான் நிறுவனம்


  • 11:29 (IST) 26 Sep 2022
    ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமின்

    பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமின்

    டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு


  • 11:20 (IST) 26 Sep 2022
    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

    சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து அமைச்சரவையில் முக்கிய ஆலோசனை

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்


  • 10:55 (IST) 26 Sep 2022
    குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    உலக புகழ்பெற்ற குலசேகரபட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்பு. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 5ம் தேதி நள்ளிரவு குலசை கடற்கரையில் நடைபெறுகிறது


  • 10:47 (IST) 26 Sep 2022
    மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம். சென்னை, அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலக வாயிலில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்.


  • 10:20 (IST) 26 Sep 2022
    தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

    சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது


  • 10:07 (IST) 26 Sep 2022
    அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்பு

    அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்பு. 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்


  • 09:36 (IST) 26 Sep 2022
    இடி தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு

    திருவாரூர் , மன்னார்குடி அருகே தளிக்கோட்டை பகுதியில் இடி தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு


  • 09:35 (IST) 26 Sep 2022
    ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு வாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு. வைரஸ் காய்ச்சால் பரவல் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


  • 09:04 (IST) 26 Sep 2022
    ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்கள் பயணமாக இன்று மாலை 5 மணிக்கு டெல்லி பயணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல்


  • 09:03 (IST) 26 Sep 2022
    5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன

    பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன - காவல்துறை சம்பவம் தொடர்பாக கோவை, ஈரோடு, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 பேர் கைது - காவல்துறை


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment