Advertisment

Tamil News Updates: ஜார்க்கண்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் சம்பாய் சோரன்

Tamil News Updates Today: இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும், லேட்டஸ்ட் அப்டேட்களையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள நமது 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
sasa

இன்றைய முக்கிய செய்திகள் அனைத்தையும் 'இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்

Tamil News Updates: பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 620-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும்,  டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2715 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 779 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் நீரிருப்பு 494 மில்லியன் கன அடியாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Feb 01, 2024 22:51 IST
    தலைமை ஆசிரியர் மீது அவதூறு பரப்ப குழந்தைகளை வைத்து வீடியோ; சக ஆசிரியை கைது

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மீது அவதூறு பரப்பும் நோக்கில், பள்ளியில் படிக்கும் குழந்தைகளை வைத்து பாலியல் தொல்லை நடப்பதாக வீடியோ எடுத்து வெளியிட்ட சக ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஆசிரியை மங்களம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.



  • Feb 01, 2024 22:50 IST
    திருப்பரங்குன்றம் அருகே அக்காவையும் காதலனையும் வெட்டிக் கொன்ற தம்பி கைது

    திருப்பரங்குன்றம் அருகே கொம்பாடி கிராமத்தில் தனது அக்கா மற்றும் அக்காவின் காதலனை வெட்டிக்கொலை செய்த தம்பி பிரவீன் குமார் (24) கைதான நிலையில், மேலும் சிலர் இன்று கைது செய்யப்பட்டனர்.

    கொலையில் தொடர்புடைய வேல்முருகன் (22), காராளம் மூர்த்தி (23), ராமகிருஷ்ணன் (19) ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.



  • Feb 01, 2024 22:44 IST
     'மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள்' - பட்ஜெட் குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக்கொண்டே போவது மட்டும்தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை” என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.



  • Feb 01, 2024 20:50 IST
    2 ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு - ஸ்டாலின் 

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2 ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 1,339 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.



  • Feb 01, 2024 20:50 IST
    2 ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு - ஸ்டாலின் 

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2 ஆண்டுகளில் இந்துசமய அறநிலையத்துறைக்கு ரூ.630 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 1,339 கோயில்களுக்கு குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.



  • Feb 01, 2024 20:24 IST
    தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது... 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் - திருமாவளவன்

    தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளதால் 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.



  • Feb 01, 2024 19:57 IST
    தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? - நிர்மலா சீதாரமானுக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காததற்கு என்ன காரணம்? மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? பா.ஜ.க-வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 01, 2024 19:04 IST
    ஏமாற்றம் கொடுத்த பட்ஜெட்: மு.க. ஸ்டாலின்

    “நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு இந்தப் பட்ஜெட் ஏமாற்றம் கொடுத்துள்ளது.
    சாமானிய ஏழை எளிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை; குறைந்தப்பட்ச ஆதார விலை அறிவிப்பும் இல்லை” என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.



  • Feb 01, 2024 19:01 IST
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்; அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

     

    எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடனும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ளது என அரசுக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

    மேலும், எந்த திட்டம் வந்தாலும் அதில் குறைகள் இருப்பதை தவிர்க்க முடியாது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் - அரசுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி அதன் விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமெனவும், மீண்டும் கிளாம்பாகக்த்திற்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Feb 01, 2024 18:02 IST
    பிப்.12, தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்: சபாநாயகர் அப்பாவு

     

    “தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது; 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என சபாநாயகர் அப்பாவு கூறினார்.



  • Feb 01, 2024 17:59 IST
    3வது டெஸ்டில் ஜடேஜா விலகல்?


    இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகிய நிலையில், 3வது போட்டியிலும் அவர் விளையாட வாய்பபுகள் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Feb 01, 2024 17:07 IST
    ஹேமந்த் சோரன் கைது; உதயநிதி கண்டனம்

    ஜார்க்கண்ட் முன்னாள் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் கைதுக்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “2024 மக்களவை தேர்தலில் பாசிஸ்டுகளை மக்கள் தூக்கி எறிவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

     



  • Feb 01, 2024 16:41 IST
    இது எனக்கு மிகப்பெரிய வருத்தம்; அன்புமணி ராமதாஸ்

    “கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
    இளைஞர்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மருத்துவர் ராமதாஸ்-க்கு 'பாரத ரத்னா' தரவில்லை என்பது தான் எனக்கு பெரிய வருத்தம்” என்றார்.



  • Feb 01, 2024 16:18 IST
    நாவை அடக்காவிட்டால்.. ஆ. ராசாவுக்கு ஓ.பி.எஸ் கடும் கண்டனம்

    திமுகவின் ஆ ராசாவுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “நாவை அடக்காவிட்டால் துன்பப்பட நேரிடும் என்ற வள்ளூவர் வாக்கை நினைவுப் படுத்தி உள்ளார்.
    இது குறித்து அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நாகரிகமற்ற முறையில் பேசியுள்ள தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. ஆ. ராசாவுக்கு கடும் கண்டனங்கள்!
    நாவடக்கம் இல்லாமல் பேசும் திரு. ராசாவுக்கு, ‘நாவை அடக்காவிட்டால் சொற்குற்றம் ஏற்பட்டு துன்பப்பட நேரிடும்’ என்ற வள்ளுவரின் வாக்கினை சுட்டிக்காட்டுவதோடு, வருகின்ற தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க.வும், திரு. ஆ. ராசாவும் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Feb 01, 2024 16:02 IST
    மதுபானங்களின் விலை  உயர்வு

    மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் புதிய விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது. 



  • Feb 01, 2024 15:50 IST
    ராமேஸ்வரம்: கிரேன் முறிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

    ராமேஸ்வரம் பாம்பனில் புதியதாக கட்டப்படும் ரயில் பால பணியின் போது கிரேன் முறிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

     



  • Feb 01, 2024 15:49 IST
    2வது டெஸ்ட் - ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து!

    விசாகப்பட்டிணத்தில் நாளை தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்தது. 

    கிராலி, டக்கெட், போப், ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ், ரெஹான், ஹார்ட்லி, பஷீர், ஆண்டர்சன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்தது 



  • Feb 01, 2024 15:47 IST
    5வது முறையாக ஜாமீன்  தள்ளுபடி 

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சஸ்பெண்ட் ஆன காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

    சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது என சி.பி.ஐ வழக்கறிஞர் வாதிட்டுள்ளார். 

    "மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?" எனவும் உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளது. 



  • Feb 01, 2024 15:45 IST
    ஓ.பி.எஸ்-க்கு தெய்வத்தண்டனை -  திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு  

    "ஓ.பி.எஸ். அதிமுக வேட்டியும், கொடியும் கட்ட முடியாமல் போனது தெய்வத்தண்டனை" என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 



  • Feb 01, 2024 15:44 IST
    விடுதலை படத்திற்கு எழுந்து நின்று பாராட்டு - சூரி நெகிழ்ச்சி 

    நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்ததற்க்கு எக்ஸ் தளத்தில் நடிகர் சூரி நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார். 



  • Feb 01, 2024 15:42 IST
    டெல்லி - தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 

    டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். 

    மேகதாது அணை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்க ஆணையம் பட்டியலிட்டுள்ளதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா திறக்க உத்தரவிட தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்கவும் முடிவு செய்துள்ளது. 



  • Feb 01, 2024 15:41 IST
    கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் - மாணவர்கள் போராட்டம்

    திருவாரூர் திருவிக அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

    தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வந்த சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி முதல்வர் கீதா மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



  • Feb 01, 2024 14:35 IST
    'பா.ம.க கூட்டணி - விரைவில் அறிவிப்பு' - அன்புமணி ராமதாஸ் பேச்சு 

     

    "யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி குறித்து முடிவெடுக்க. பாமக நிறுவனர் ராமதாசுக்கு முழு அதிகாரம் உண்டு. எங்கள் கொள்கைக்கு ஒத்துவரும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Feb 01, 2024 14:16 IST
    ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது - அன்புமணி பேச்சு 

    "பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 



  • Feb 01, 2024 14:01 IST
    ஹேமந்த் சோரன் கைது - ஸ்டாலின் கடும் கண்டனம்

    "ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது மத்திய பா.ஜ.க அரசின் அரசியல் பழிவாங்கும் அப்பட்டமான காட்சி. புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி பழங்குடித் தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்த நடவடிக்கை. இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது.

    பாஜகவின் பழிவாங்கும் அரசியல் இருந்தாலும் ஹேமந்த் சோரன் தலைவணங்க மறுத்து வலுவாக நிற்கிறார். இன்னல்களை எதிர்கொண்டாலும் அவரது மன உறுதி பாராட்டுக்குரியது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு ஒரு உத்வேகம்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Feb 01, 2024 13:21 IST
    இந்தியா சிமெண்ட்ஸ் இ.டி சோதனை 

    சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் 

     



  • Feb 01, 2024 13:20 IST
    இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிடியன்

    பரோஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லிடியன் நாதஸ்வரம். 



  • Feb 01, 2024 13:18 IST
    மக்களவை தேர்தலில் தனித்து போட்டி இல்லை - பா.ம.க அறிவிப்பு 

    மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க முடிவு செய்துள்ளது. மக்கள் நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அது குறித்து முடிவு செய்ய கட்சியின் நிறுவன தலைவர்  ராமதாசுக்கு அதிகாரம் வழங்கியும் பொதுக்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது. 



  • Feb 01, 2024 13:17 IST
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment