Tamil News Today Updates: தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக உயர் மட்ட நிர்வாகிகள் குழு ஆலோசனை நேற்று நடைப்பெற்றது. இதில் முதல்வர் வேட்பாளர் யார்? சசிகலா விடுதலை குறித்து காரசார விவாதம் நடைப்பெற்றதை அடுத்து வரும் 28-ம் தேதி, அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவிப்பு. இதைத் தொடர்ந்து முதல்வர் வீட்டில் 40 நிமிடம் அமைச்சர்கள் காரசார விவாதம் நடத்தினர்.
சென்னையில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததையடுத்து, 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. நீதி மன்றத்தின் உத்தரவுகளை தாழ்மையாக ஏற்பதாக சூர்யா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சர்ச்சைக்குறிய பகுதி நீக்கப்பட்டு, மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் ஆப் சேர்க்கப்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இதற்குத் தகுதியானவர்கள், முதலில் ஒரு மாத காலத்திற்குக் குரோம்பேட்டையிலுள்ள MTC பயிற்சி பள்ளியில் பயிற்சி மேற்கொள்வார்கள். வெற்று மைதானம், பாலங்கள், எட்டு வடிவ தடங்கள் மற்றும் பின்னோக்குப் பயிற்சி உள்ளிட்ட பயன்முறையில் வாகனம் ஓட்டுவதுபற்றிய அடிப்படை பாடங்கள் குரோம்பேட்டையில் உள்ள பயிற்சி பள்ளியில் சொல்லித்தரப்படும். பிறகு அவர்களுக்குப் போக்குவரத்தில் எப்படி வாகனம் ஓட்டுவது என்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.
Web Title: Tamil news today live ipl 2020 csk vs mi coronavirus covid 19
வெளிவிவகாரத் துறை அமைச்சர் டாக்டர்.எஸ் ஜெய்சங்கர் அவர்களின் தாயார் சுலோச்சனா சுப்ரமண்யம் காலமானார். ஜெய்சங்கர் தனது தாயின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவு செய்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 30, அரசு மருத்துவமனைகளில் 36 என மொத்தம் 66 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,751-ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 19) ஒரே நாளில் புதிதாக 5,569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக அதிகரித்துள்ளது.
21-ஆம் நூற்றாண்டிற்கு தேவைப்படும் வகையில், தற்போதுள்ள கல்விமுறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் இலக்கோடு,தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றை ஒழிக்க முன்பு தந்த ஒத்துழைப்பை விட பொதுமக்கள் மேலும் ஒத்துழைப்பு தரவேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நோய் அறிகுறிகள் இருந்தால் தங்களை தனிமைப்படுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் அரசு நெல் கொள்முதல் செய்வது, வேளாண் சட்டங்களால் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் சட்டம், 2020 : மொத்த விற்பனையாளர்கள், பெரிய அளவிலான சில்லரை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க இந்தச் சட்டம் வகை செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது.
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தம் : தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய்வித்துகள், உணவு எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இதன் மூலம் வேளாண்மைத் துறையில் தனியார் துறையினர் / வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா : மாநில வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைப்படுத்துதல் சட்டங்களின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட சந்தை வளாகங்களுக்கு வெளியே Apmc ) , மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலத்துக்குள் வர்த்தகம் மற்றும் வியாபாரம் செய்வதை இந்த மசோதா ஊக்குவிக்கிறது.
விவசாயிகள் (அதிகாரமளிப்பு மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த ஒப்புதல் சட்டம் ;வேளாண் உற்பத்திப் பொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்பாடு மற்றும் வசதி ஏற்படுத்துதல்) சட்டம் ;அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தம்ஆகிய மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதால் அதிமுக அரசு அதை எதிர்க்கவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் வரும் புதன்கிழமை முடிவடையலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர், அரசு நலத்திட்ட உதவிகளை பெறவும் உலமாக்கள் அடையாள அட்டைப்பெறவும் 24 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள இந்த திட்டம் வழிவகை செய்கிறது.
பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றை 160 போலி காதி பொருட்களை ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தெரிவித்தது . காதி என்னும் வணிகப் பெயரில் விற்கப்பட்டு வந்த 160 பொருட்களின் இணைய இணைப்புகள் இந்த மின் வணிக தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது மொழி என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. மூன்றாவது மொழியாக எந்த மொழியை படிக்கவேண்டும் என்பதை மாணவர்களும், மாநில அரசுகளும் முடிவு செய்துகொள்ளலாம் என்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சகம் எழுத்துபூர்வமாக பதில் கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை சுமார் 30 எம்பிக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை சுமார் 30 எம்பிக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு திமுக தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
v
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் எனவும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வட கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய 48 கோடியை விரைவில் தருவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து, போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தனியார் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு
”விவசாயத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட மசோதாக்களை மாநில அரசுகள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளிடம் முழுமையாக ஆலோசிக்காமல் மத்திய அரசு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றி இருப்பது சரியானதல்ல” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
‘அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை; ரசமும் இல்லை’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு. ஒரு சவரன் 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4,958 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பிஎட் , எம்எட் உள்ளிட்ட ஆசிரியர் கல்வி படிப்புகளுக்கான தேர்வுகளை புத்தகத்தை பார்த்து மாணவர்கள் எழுதலாம் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மோடியின் பிறந்த நாளில் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றதால் பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 100 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கே.ஏ செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பன் இன்று திமுக-வில் இணைந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னர், அவரது மகன் செல்வம் திமுக-வில் இணைந்தது குறிப்பிடத் தக்கது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளன்று பொதுமக்களுக்கு இடையூறாக குதிரை வண்டியில் வந்ததாக பா.ஜ.க., மாநிலத்தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸும் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு எப்படியொரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதுபோல ஐபிஎல்லில் சிஎஸ்கே – மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பார்க்கப்படும்