Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
மேட்டூர் அணை திறப்பு
டெல்டா பாசன சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல். தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என தமிழன்டா என்ற ஹாஷ்டாக் உடன் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்
தனக்கான அங்கீகாரத்தையும், இடத்தையும் செங்கோல், தற்போது பெற்றுக் கொண்டிருக்கிறது. நமது கடமையை செங்கோல், எப்போதும் நியாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நாளை வைக்கப்படவுள்ள செங்கோலை, டெல்லியில் திருவாவடுதுறை ஆதினத்திடம் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்றுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்
வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். வருமானவரி சோதனை முடிவுக்கு வந்தபின் நான் பதிலளிக்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்
கரூரில் கொங்கு மெஸ் உணவகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 2 நாள் தொடர்ந்து நடைபெற்ற சோதனைக்கு பின் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 3.37 கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடத்த முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். “வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கடிதம் எழுதியுள்ளார்
அஜித் குமாரின் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.
இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்கிறார். படத்திற்கு விடா முயற்சி எனப் பெயரிட்டுள்ளனர்.
அரிகொம்பன் யானை அருகே யாரும் செல்ல வேண்டாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, யானை செல்லும் பாதையில் எந்தவித இடையூறும் செய்ய வேண்டாம். யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்ட பின்னர் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் ” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது, ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியின் அழைப்பை ஏற்று பார்வையிட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா உடனிருந்தார்.
உலகப் புகழ்பெற்ற ஜப்பானின் ஒசாகா கோட்டையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது, ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜியின் அழைப்பை ஏற்று பார்வையிட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா உடனிருந்தார்.
புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி அவர் வாழ்த்தியுள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தனிப்படை போலீசார் கேரளா விரைகின்றனர்.
அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய கேரள பதிவெண் கொண்ட 2 கார்களின் உரிமையாளர்களை விசாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மை அல்ல. உண்மை கதை என்று சொன்னால் மட்டும் போதாது, படத்தில் உண்மை இருக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வந்தவாசி அருகே தாழம்பள்ளம் கிராம கூட்டு சாலையில், அதிவேகமாக பயணித்த கார் ஒன்று நிலைத்தடுமாறி எதிரே அடுத்து அடுத்து வந்த 2 சரக்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின.
சரக்கு வாகனத்தில் வந்த 6 பேரும் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி டெல்லி சென்றார்.
திருவாவடுதுறை ஆதீனம் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கிய தங்க செங்கோல் புதிய பாராளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது.
144 தடை உத்தரவை மீறி அரிக்கொம்பன் யானை இருக்கும் பகுதிக்கு வந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர்கள் ட்ரோனை பறக்க விட்டு யானையை படம் பிடிப்பதால் அரிக்கொம்பன் யானை மிரட்டு போயுள்ளது. ட்ரோனால் மிரண்ட யானை புளியந்தோப்பில் இருந்து வெளியேறி வாழை தோப்பிற்குள் புகுந்தது. யூடியூபர் ஒருவர் கைது – கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம்
சோதனையோடு நின்றுவிடாமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஈபிஎஸ்
விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட கோரிய வழக்கில், விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மனுதாரர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் முன் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றம் தலையிடுவது இல்லை” “துன்புறுத்தப்பட்டதாக புகார் வந்தால், நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதில்லை என்று கூறியுள்ளனர்.
கொடைக்கானலில் மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு மலைச்சாலையில் 5 கி.மீ. தூரத்திற்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை கட்டுப்படுத்த வாகன நிறுத்த இடங்களை ஏற்படுத்தி தர சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வெப்பச்சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூரில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 9 இடங்களில் வருமான வரித்துறை சோதனை தடுக்கப்பட்டு, அதிகாரிகள் தாக்கப்பட்டதாக மனுவில் புகார் மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தரப்பில் முறையீடு
கரூர், அண்ணா நகர் பகுதியில் ஆசி டெக்ஸ் உரிமையாளர் கே.செல்வராஜ் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு சோதனையின் முடிவில் விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக தகவல் முக்கிய ஆவணங்களையும் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்
“தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும்..” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.
அரிக்கொம்பன் யானையை பிடிக்க தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்னர்.
தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு நன்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்த 95 நபர்களை கொட்டிய மலை தேனீ கூட்டம். குழந்தை உள்பட 95 பேரும் சிகிச்சைக்காக ஆனைகுப்பம், நன்னிலம், திருவாரூர் ஆகிய 3 இடங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் மேலும் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் இருவேறு இடங்களில் சோதனை நடத்துகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பிரபல யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான காரில் இர்ஃபான் பயணம் செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் அசாருதீன் மீது 304 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் இர்பான் மீது தற்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்தில் தமிழ் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு
புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பிற்கு சி.பி.எஸ்.இ பாடம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தாய் மொழியை விருப்ப பாடமாக தேர்வு செய்ய 11-ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தமிழுக்கும், ஏனாமில் தெலுங்குக்கும், மாஹேயில் மலையாள மொழிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல், ஷிவானந்த் பாட்டீல் உள்ளிட்ட 24 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாததால் சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
சிசிடிவி, மருத்துவர்கள் கைரேகை பதிவு உடனடியாக சரி செய்யக் கூடிய பிரச்சினை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக SV.கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாததால் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு
சிசிடிவி, மருத்துவர்கள் கைரேகை பதிவு உடனடியாக சரி செய்யக் கூடிய பிரச்சினை- மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக உலா வரும் அரிக்கொம்பன் யானை
காட்டுயானை உரசியதில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து லேசான காயம்
அரிக்கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
அரிக்கொம்பன் யானையை மக்கள் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் – மாவட்ட எஸ்பி பிரவீன் டோங்கிரே
ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது
குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அதிகாரிகளுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு
அதிகாரிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் தமிழக காவலர்கள்
தொழிலதிபர் அரவிந்த்-க்கு சொந்தமான விலை உயர்ந்த மினி கூப்பர் காரில் சோதனை
சொகுசு காரில் ஏதேனும் ஆவணங்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு
கரூர் காந்திகிராமம் பகுதியில் அமைந்துள்ள பிரேம்குமார் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது. சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்
கோவையில் தொழிலதிபர் அரவிந்த் வீடு உள்பட 7 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு தொடர்கிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
இதுவரை 18 பேரை கொன்ற அரிக்கொம்பன் காட்டு யானை, தேனி மாவட்டம் கம்பம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. யானையை பின் தொடர்ந்து வரும் வனத்துறையினர், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு தொடர்கிறது, பனப்பட்டி கிராமத்தில் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
DMK FILES 2ல் திமுகவை சேர்ந்தவர்களும் திமுகவை சாராதவர்களும் இருக்கிறார்கள். DMK FILES 2 வை கோவையில் வெளியிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கரூரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே, குஜராத் அணிகள் மோதுகின்றன.
கரூரில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 எம்எல்ஏக்கள், இன்று பதவியேற்க உள்ளனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று நடைபெறும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, எச்.கே.பாட்டில், மது பங்காரப்பா உள்ளிட்டோர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.