Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்பு
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மணிப்பூர் மாநிலத்தில் ஷிருய் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 31 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் சித்தராமையாவுக்கு ரூ. 1 கோடியில் புதிய சொகுசு கார் ( டொயோட்டா வெல்ஃபயர் ) கர்நாடக அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது
இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்காக இன்று மாலை வரை 1.63 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்
அந்தியூர்: ஆலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி (27), நாளை மறுதினம் திருமணம் நடக்க உள்ள நிலையில் வீட்டில் இன்று தற்கொலை தனியார் பள்ளியில் ஊழியராக உள்ள கேசவமூர்த்திக்கு உறவினர் பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை * வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுகாதாரப்பணியாளர்கள் அனைவருக்கும் கையுறை, காலணிகள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுவிட்டு திரும்பிய சென்னை, கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை(27) என்ற இளைஞருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 4 புதிய நீதிபதிகள் மே 23ம் தேதி பதவி ஏற்பு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்
தமிழகத்தில் 2,000 நோட்டு திரும்ப பெறப்படுவதை கண்காணியுங்கள் என நிதியமைச்சகத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் தற்போது ரூ.2000 நோட்டை திரும்பப் பெறுவதாலும் எந்த பயனும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
திருப்பதியில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது
நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாகனங்களின் ஓட்டுநர்கள் உட்பட 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்
கர்நாடகாவில் எனது ஆட்சியின் போது ரூ.1.18 கோடி கடனாக இருந்தது. தற்போது 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இருந்து சுமார் ரூ.4 லட்சம் கோடி, வரிகள் மூலம் மத்திய அரசுக்கு செல்கிறது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஜி7 மாநாட்டுக்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி உடன் சந்திப்பு நடத்தினார். ரஷியா – உக்ரைன் போரை அடுத்து இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியது அரசின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை 2 வாரங்களில் பிறப்பிக்கவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர், தனியார் பள்ளியில் சீருடை மற்றும் புத்தகங்களுக்காக ரூ.11,977 செலுத்தக்கோரிய பள்ளி நிர்வாகத்துக்கு எதிரான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கைதிகளுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற கொளத்தூரை சேர்ந்த ரவுடிகள் வெட்டு அஜித், அபி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரன், மொட்டை கார்த்திக், ஏழுமலை ஆகிய மூவரை தேடி வருகின்றனர்
கர்நாடகாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “ஜப்பான் செல்லும் போதெல்லாம், பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு உத்தரவை பிறப்பிக்கிறார். மக்கள் வேதனை அடைக்கின்றனர்” என்று கூறினார்.
ஐந்து உத்தரவாதங்களும் சட்டமாக மாறும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உறுதியளித்த 5 உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த ராகுல் காந்தி, “அடுத்த 2 மணி நேரத்தில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஐந்து உத்தரவாதங்களும் சட்டமாக மாறும்” என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாக்களித்த மக்களுக்கு நன்றி.
சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் பதவியேற்பு விழாவுக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் வெற்றி பெற வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி என்று கூறினார்.
டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கக்கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை
வாடிக்கையாளரிடம் ரூ.2000 நோட்டுக்கள் வாங்க கூடாது என்ற தகவல் பரவிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
துணை முதல்வராக சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார்.

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார்.
சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராகவும் மற்றும் சிவகுமார் துணை முதல்வராக பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள, பதவியேற்கும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகைதந்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், காந்திராவா அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார்.
சற்று நேரத்தில் சித்தராமையா, சிவகுமார் பதவியேற்க உள்ள நிலையில், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பெங்களூரு வந்தடைந்தனர். அவரை துணை முதல்வர் சிவகுமார் விமனாநிலையத்தில் வரவேற்றார்.
முதல்வர் சித்தராமையாவுடன் 8 அமைச்சர்கள், பதவியேற்க உள்ளனர். பொங்களூரில் உள்ள கந்திராவா அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை வாங்க கூடாது, என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறும் விவகாரத்தில் இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும்- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து
விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனையாகிறது.
மு.க.ஸ்டாலின் ட்வீட்
500 சந்தேகங்கள்1000 மர்மங்கள்2000 பிழைகள்!கர்நாடகப் படுதோல்வியைமறைக்கஒற்றைத் தந்திரம்!#2000note #demonetisation
— M.K.Stalin (@mkstalin) May 20, 2023
பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் http://tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தேனி அருகே கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடகா முதல்வர் இன்று பதவி ஏற்கும் நிலையில், 8 பேர் கொண்ட முதற்கட்ட அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி உள்ளிட்டோர் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மாலை 3.30 மணிக்கு சென்னை – டெல்லி அணிகள் மோதல்
கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு லக்னோ – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு சென்னை – லக்னோ இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிரான்சின் நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
திரும்ப பெறப்பட்டாலும் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும். பொதுமக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிப் பண பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தலாம். வரும் மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிக்கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலும் மாற்றிக்கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது ஒரு நாளைக்கு சுமார் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.