Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என உயர்கல்வித்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜூன் 1 முதல் 10 வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
- 22:03 (IST) 25 May 2023புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை விசாரணை
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே. மகேஸ்வரி, பி.எஸ். நரசிம்ஹா, அமர்வு நாளை விசாரிக்கிறது. வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- 20:54 (IST) 25 May 2023கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் - அன்பில் மகேஷ்
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
- 20:52 (IST) 25 May 202360 வயதில் 2-வது திருமணம் செய்து கொண்ட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி
பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் 2-வது திருமணம் செய்து கொண்டார். அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
- 20:19 (IST) 25 May 2023கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிய வேண்டும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
கழிவுநீர் ஊர்தி என்பதற்கு பதிலாக கழிவுநீர் அகற்றும் வாகனம் என குறிப்பிட வேண்டும். இந்த வாகனங்களை பதிவு புத்தகத்தில் பதிவு செய்வது கட்டாயம்; கழிவுநீர் அகற்றும் வாகனம் என குறிப்பிடாதவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரை அணுகி 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் அல்லது வாகன அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- 19:49 (IST) 25 May 2023இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும் - நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: “இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களின் டயர்களின் தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் விபத்துக்களைத் தடுக்க முடியும் எனவும், டயர் வெடிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காது” எனவும் உறுதியளித்துள்ளார்.
- 19:32 (IST) 25 May 2023பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 5 முதல் 14 வரை நடைபெறும்; அசல் மற்றும் நகல் சான்றிதழ் உடன் தேவையான படிவங்களை கொண்டு வர வேண்டும் என பொறியியல் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை குழு அறிவித்துளது. மேலும், குறிப்பிட்ட தேதியில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
- 19:31 (IST) 25 May 2023ஜப்பான் சென்றடைந்தார் மு.க.ஸ்டாலின்
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரம் சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- 19:23 (IST) 25 May 2023தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு
பசி பிணியை போக்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் மே 28-ல் இலவச மதிய உணவு வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக மே 28-ம் தேதி இலவச மதிய உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 18:58 (IST) 25 May 2023அஸ்ஸாமில் சேது சேவை செயலி அறிமுகம்
அஸ்ஸாம் மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் வகையில் சேது சேவை என்ற காவல் துறை செயலியை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
இந்தச் செயலி வாயிலாக மக்கள் புகார்களை அளித்தால், காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18:46 (IST) 25 May 2023சரத் பவாருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி
டெல்லியில் சேவைகள் கட்டுப்பாடு தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிரான ஆம் ஆத்மியின் போராட்டத்தை ஆதரித்ததற்காக சரத் பவாருக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
- 18:32 (IST) 25 May 2023புதிய சி.பி.ஐ இயக்குனர் பதவியேற்பு
புதிய சிபிஐ இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் பதவியேற்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரவீன் சூட் கர்நாடக மாநிலத்தில் காவல்துறை தலைவராக இருந்தவர் ஆவார்.
- 18:21 (IST) 25 May 2023வந்தே பாரத் ரயில்கள் வேகம் அதிகரிப்பு
அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், வந்தே பாரத் ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆக செல்லும் வகையில் ரயில் பாதைகள் சீரமைக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
- 18:01 (IST) 25 May 2023மாமன்னன் இரண்டாம் பாடல் அப்டேட்
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் மே 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஏற்கனவே வடிவேல் குரலில் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- 17:51 (IST) 25 May 2023இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி வெளியீடு
தொடக்கப்பள்ளி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு, மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முறையே மே 29 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
- 17:33 (IST) 25 May 2023ஜூனில் மது விலக்கு கோரி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் பேட்டி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், "தேர்தல் கூட்டணி என்பது வேறு, மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் வேறு.
மக்கள் நலனுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடுவோம். மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால், அவர்களுடன் இணைய தயார்;
ஜூன் 2வது வாரம் முழுமையான மதுவிலக்கு வேண்டி அறப்போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
- 17:02 (IST) 25 May 2023பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் நாளை வெளியிடப்படும் – தமிழக அரசு
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் 5,45,297 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் நாளை வெளியிடப்படும்.
http://cps.tn.gov.in/public/ என்ற இணையதளத்தில் ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 16:48 (IST) 25 May 2023பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு Z பிளஸ் பாதுகாப்பு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்-க்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக Z பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
- 16:27 (IST) 25 May 2023விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரம்; செங்கல்பட்டில் சிபிசிஐடி விசாரணை
செங்கல்பட்டில் விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில், விஷ சாராயம் விற்ற அமாவாசை என்பவருக்கு சொந்தமான கரிக்கந்தாங்கள் கிராமத்தில் உள்ள பண்ணையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
- 16:07 (IST) 25 May 2023அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை வடக்கு கிராமத்தில்,ரூ.36.58 கோடி வாடகையை செலுத்தாவிட்டால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து ஹோட்டல் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டு கால குத்தகை பெற்றுவிட்டு கூடுதலாக 15 ஆண்டுகள் வாடகை செலுத்தாமல், ஹோட்டல் நடத்தி வருவதாக கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஹோட்டலை காலி செய்து, நிலத்தை ஒரு மாதத்தில் மீட்கவும், வாடகை பாக்கியை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது
- 15:37 (IST) 25 May 2023தமிழ் வழிக்கல்விக்கு வரவேற்பு இல்லை என சொல்வது தவறானது; அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்
தமிழ் வழிக்கல்விக்கு வரவேற்பு இல்லை என சொல்வது தவறானது. அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படுவதாக வெளியான தகவல் தவறானது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் உறுப்பு கல்லூரிகளில் இரு மொழிவழி கல்வியிலும் பாடப்பிரிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்
- 15:16 (IST) 25 May 2023அ.தி.மு.க ஆட்சியில் நீடித்து இருந்தால் டாஸ்மாக் கடைகளை மூடி இருப்போம் - ஜெயக்குமார்
அதிமுக ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
- 13:46 (IST) 25 May 2023சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரை விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும்? என்று கோவையை சேர்ந்த ஆர்.பூமிராஜ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
- 13:32 (IST) 25 May 2023சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு; கே.எஸ்.அழகிரி கண்டனம்!
'சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதைவிட இந்திய மக்களுக்கு செய்யும் தூரோகம் வேறு எதுவும் இல்லை.' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
- 13:01 (IST) 25 May 20235 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- 13:01 (IST) 25 May 2023தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது
அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது - அண்ணா பல்கலை. அறிவிப்பு வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது - துணைவேந்தர் வேல்ராஜ் உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி இந்தக் கல்வி ஆண்டு எந்தப் பாடப்பிரிவும் நீக்கப்படாது அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் - அண்ணா பல்கலை.
- 13:00 (IST) 25 May 2023புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், அதிமுக பங்கேற்பு
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில், அதிமுக எம்.பிக்கள் பங்கேற்க உள்ளனர் . மாநிலங்களவை அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் . மக்களவை எம்பி ரவீந்திரநாத் குமார், மாநிலங்களவை எம்பி ஆர்.தர்மர் பங்கேற்க உள்ளனர் /. பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்
- 12:59 (IST) 25 May 2023ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள்
"ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள், இன்று நாடாளுமன்றத்தை அவர் தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 12:59 (IST) 25 May 2023புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை . புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதில் எந்த அரசியலும் இல்லை . பிரதமரை பிடிக்கவில்லை என்றாலும் நாடாளுமன்றத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- 11:55 (IST) 25 May 2023காவல்நிலையத்தில் எஸ்.ஐ பிரிட்டோ என்பவர் தற்கொலை முயற்சி
சிவகங்கை, சாலைகிராமம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ பிரிட்டோ என்பவர் தற்கொலை முயற்சி . சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்பி உத்தரவு . மனம் உடைந்த எஸ்ஐ , காவல்நிலையத்திலேயே தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
- 11:35 (IST) 25 May 2023நெல்லை: காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
நெல்லை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். உத்தரவை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் - மாநகர காவல்துறை ஆணையர்
- 11:14 (IST) 25 May 2023நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறக்க வேண்டும் . மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு
- 10:27 (IST) 25 May 2023குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,000-க்கும், ஒரு கிராம் தங்கம் 5,625 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
- 10:22 (IST) 25 May 2023சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமான சேவை
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார்.
- 10:22 (IST) 25 May 2023தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம்
அண்ணா பல்கலை. கீழ் இயங்கும் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை தற்காலிகமாக நீக்கப்படுகிறது. இது வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது, மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலை அறிவிப்பு அறிவித்துள்ளது.
- 09:09 (IST) 25 May 2023கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 25 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
- 09:08 (IST) 25 May 2023மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 08:18 (IST) 25 May 2023ஜப்பான் செல்கிறார் ஸ்டாலின்
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். இன்று சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து, ஜப்பான் புறப்படுகிறார்.
- 08:18 (IST) 25 May 2023சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரைப்பாக்கம் கிராமத்தில் நீண்ட நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என ஊராட்சியை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 08:06 (IST) 25 May 2023மும்பை அணி வெற்றி
புதன்கிழமை இரவு நடைபெற்ற Eliminator போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி Qualifier 2 க்கு முன்னேறியது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.