பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
இன்று இரவு 7.30 மணிக்கு, ஜெய்ப்பூரில், ராஜஸ்தான் – குஜராத் அணிகள் பலப்பரீட்சை.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2453 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 248 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 767 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றம். கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
என்.எல்.சி-க்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 5 கிராமங்களிலும் மே 1-ம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் செய்து புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீக்சிதர்கள் விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்: “கட்டணமில்லா பயணம் மூலம், தமிழ்நாட்டில் மகளிர் 277.13 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். முதலமைச்சரின் பேரையும், புகழையும் பொறுக்க முடியாமல், தி.மு.க அரசு மீது சேற்றை வாரி இறைக்க முயற்சிக்கிறார் இ.பி.எஸ்” என்று கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் காடுகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை காலை நடத்திய என்கவுன்டரைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கண்டி குக்கிராமத்தின் கேசரி பகுதியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரஜோரியில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
கோவிட் 19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதுகின்றன.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
மு.க. ஸ்டாலின் நிர்வாக திறமையற்ற பொம்மை போல் காணப்படுகிறார். அவருக்கு உலக நடப்புகள் எதுவும் தெரியவில்லை.
இதனால் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது” என்றார். மேலும் தமிழ்நாட்டில் ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் எளிதில் கிடைக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணனிடம் நலம் விசாரித்தார்.
ஏ.வி.எம். சரவணன் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் அவரை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் மே 8 முதல் 19ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்சி மூத்த உறுப்பினர்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டனர்” தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் விலகல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
“கஸ்டடி படத்துல என்டர்டெய்ன்மெண்ட் இருக்காதுனு நிறைய மீம்ஸ் பார்த்தேன்.. அப்படி இல்ல” கஸ்டடி படக்குழு செய்தியாளர் சந்திப்பில் நடிகை கீர்த்தி ஷெட்டி பேச்சு!
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படம் வரும் ஜூலை 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகள் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, விதிகளை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக, சிவசங்கருக்கு எதிராக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு; இதனை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்
இயக்குனர் பாண்டிராஜிடம் ₨2 கோடி மோசடி செய்த புகாரில் ஒருவர் கைது. கடனாக பெற்ற பணத்தை திருப்பி அளிக்கவில்லை என இயக்குனர் பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில், குமார் என்பவரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் : ரஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்வு. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேரில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு விளாச்சேரியை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த காசி மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் ஆகிய 3 சடலங்கள் கல்பாலம் அருகே மீட்கப்பட்டுள்ளன
நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தீவிரவாதிகளின் முகத்திறையை கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்குவங்கிக்காக தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மத்தியப்பிரதேசம், மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
“புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
“சென்னை பல்கலைக் கழகத்தின் தரம் 10வது இடத்தில் இருந்து 100வது இடத்திற்கு சென்றதாக ஆளுநர் கூறியது தவறு. ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. ஆளுநர் ஆர்.என்.ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. மாநில அரசுடன் ஒத்து செயல்படுவது தான் ஆளுநரின் கடமை” என்று அமைச்சர் பொன் முடி கூறியுள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில், கூட்டுப் பயிற்சியின்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்; இன்று (05.05.2023) முதல் ஜூன் 4ம் தேதி வரை http://tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது;
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 அதிகரித்து, ரூ.46,200-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து, ரூ.83.70-க்கும் விற்பனையாகிறது.
சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது, தேசிய வாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என்று மும்பையில் நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசியவாத காங்கிரஸின் நிறுவனர் சரத்பவார் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
மதுரை சித்திரை திருவிழாவை பார்க்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு . பக்தர்கள் கூட்டத்தில் சிக்கிய அந்த நபர் ஆழ்வார்புரம் தடுப்பணையில் மூழ்கி இறந்ததாக போலீஸார் தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் http://tneaonline.org
, http://tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினத்தில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்க வந்த 23 வயது இளைஞர் பலி மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்த சூர்யா, அதிகாலை 4 மணி அளவில் ராமராயர் மண்டகப்படி அருகில் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு
சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு . தமிழக தலைமை செயலாளர் இறையன்புவுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டது – ஆளுநர் ரவி பேட்டி . இந்த வழக்கில் 6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு . நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்த சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் என புகார்