பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2463 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 225 கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 750 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 467 மில்லியன் கனஅடியாக உள்ளது.
ராஜஸ்தான் அணி அபார வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி. முதலில் ஆடிய கொல்கத்தா, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி அசத்தல்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்கரினோ நியமனம் – எலான் மஸ்க் அறிவிப்பு
2 முறை டி20 உலகக் கோப்பைகளை வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அன்றைய கேப்டன் டேரன் சமி, தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்!
காரைக்கால் அக்கரைவட்டம் பகுதியில் ஃபிரிட்ஜை திறந்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு தந்தையின் மெக்கானிக் கடையில் நேர்ந்த சோகம் – போலீசார் விசாரணை
நடிகர் விஜய் சேதுபதி, “ன்னு பாக்கப் போரோம்” என்ற வீடியோ பாடலை வலையொளியில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று அதிகப்பட்சமாக வேலூரில் 103 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
அடுத்த இடங்களில் சென்னை, ஈரோடு, பரங்கிப்பேட்டை, கடலூர், திருச்சி, காரைக்கால், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளன.
கிரிக்கெட்டர் விராத் கோலி எப்போதும் உத்வேகம் அளிப்பவர். நீண்ட நாள்களுக்கு பிறகு அவரின் சதம், மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
வில்லிவாக்கம் மேம்பாலத்துக்கு சிட்டி பாபு பெயர் சூட்டப்பட உள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார்.
தான் கேப்டனாக இருந்த போது தவறுகள் செய்துள்ளேன். அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எனது சுயநலத்திற்காக எதையும் செய்ததில்லை என விராத் கோலி கூறியுள்ளார்.
ஒகேனக்கல் அருகே காட்டு யானை அருகில் சென்று இரு கைகளால் கும்பிட்ட நபரின் வீடியோ வைரலானது. இந்த நிலையில் அந்நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதும் அவரும் கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் அணி வீரர் ஜாஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மதுபோதை தலை உச்சிக்கு ஏறிய நிலையில் இளைஞர் ஒருவர் சாலையின் நடுவே கோழி பிடிப்பது போல் தாவி தாவி விழுந்த சம்பவம் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தண்டையார்பேட்டையில் நடந்துள்ளது. மதுப் பழக்கத்தால் அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே மீது மத்திய புலனாய்வு குழு ஊழல் வழக்குப் பதிவு செய்தது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
உலகிலேயே முதன்முறையாக ஸ்காட்லாந்தில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிட தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில்,மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
புதுச்சேரி மடுகரை கிராமத்தில் 80 அடி கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்த முதியவர் 2 நாள்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அவர் கிணற்றுக்குள் தவறிவிழுந்தது இன்றுதான் தெரிந்தது. இதையடுத்து 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை முதல் 3 இடங்களில் உள்ளன.
திமுகவின் ஊழல், சொத்துப் பட்டியல் இரண்டாம் பாகம் விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
துன்பத்தை தாங்க மகாபாரதம் சொல்லிக் கொடுத்துள்ளது என கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
மேலும் ராமாயாணம், மகாபாரதம் உள்ளிட்ட காவியங்களை படித்தவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள் எனவும் தமிழிசை கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 20ஆம் தேதி, கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்தாண்டின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10ஆம் பொதுத்தேர்வில் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஆடியோ காரணமாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. ஆடியோவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.
பழனிவேல் தியாகராஜன் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்; வழக்கு தொடர்ந்தால், ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்” – பாஜக அண்ணாமலை
“இந்தியாவின் அடிநாதமாக இருப்பது வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையே”- தமிழகம் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்
ஐஐடி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது
அன்பும், அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவர்க்கும் சர்வதேச செவிலியர் தின வாழ்த்துகள்; காயமாற்றும் அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட நமது அரசு தொடர்ந்து செயலாற்றிடும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக பாஜக செய்யும் வெறுப்பு அரசியலை கண்டித்து, சென்னையில் விசிக சார்பில் வரும் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்- சென்னையில் திருமாவளவன் பேட்டி
நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு, அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 296 குறைந்து ரூ. 45,640க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,705 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான்; பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் – மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
குஜராத்தில் 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதில், அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது, http://cbse.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
16,60,511 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 14,50,174 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.33% ஆக உள்ளது.
திமுக யார் மீதும் பொய் வழக்கு போட்டதில்லை, திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு; அண்ணாமலை மீது போடப்பட்ட வழக்கில் ஓராண்டு தண்டனை கிடைக்கும்- சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்த பின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
மருத்துவமனைகளில் நோயாளிகளை மருந்துகளோடும், மாத்திரைகளோடும் மட்டுமின்றி அன்பாலும், புன்னகையாலும் அக்கறையோடு கவனித்து குணம்பெறச் செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்து- டிடிவி தினகரன் ட்வீட்
அண்ணாமலை சொன்ன அவதூறு கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் . அண்ணாமலை மன்னிப்பு கேட்காததால் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். திமுக யார் மீதும் பொய் வழக்கு போடாது நிச்சயமாக அண்ணாமலைக்கு தண்டனை பெற்று தரப்படும். சட்ட ரீதியாக தற்போது வரை அண்ணாமலை எந்த பதிலும் அளிக்கவில்லை .
“மாயமான் இல்லையென்றால் இ.பி.எஸ் முதலமைச்சராக ஆகியிருக்க முடியாது” மாயமான் – மண் குதிரை விமர்சனம் = இ.பி.எஸ்-க்கு வைத்திலிங்கம் கண்டனம்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல்
சேலத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 200 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி இ.பி. எஸ் உற்சாகம்
“நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து – சொகுசு கார் மோதி விபத்து காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
அம்பையில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கிய காவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவு காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட 24 காவலர்கள் பணியிட மாற்றம்
ஆந்திர பிரதேசம்: பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழப்பு மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் நூலிழையில் உயிர் தப்பின ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேளி அமைத்துள்ளனர்
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மோக்கா தீவிர புயல், மிக தீவிர புயலாக மாறியது தொடர்ந்து வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 14ம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கடற்கரையை கடக்கக்கூடும். மிக தீவிர புயலாக கரையை கடக்கும்போது, காற்றின் வேகம் மணிக்கு 150 முதல் 160 கி.மீ வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தகவல்.
நாளை மறுநாள் நடைபெறும் சென்னை – கொல்கத்தா போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம். சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆர்வம் .
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க் . புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் 6 வாரங்களில் பதவியேற்பார் என எலான் மஸ்க் தெரிவிப்பு . எலான் மஸ்க் நிர்வாக தலைவராகவும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாகவும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நடந்த சாலைவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு . டேங்கர் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து . இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அரசு பேருந்து நடத்துனர் உயிரிழப்பு, 26 பேர் காயம்.