Tamil News Today: த.வெ.க முதல் மாநில மாநாடு: பந்தக்கால் நடும் விழா, பூமி பூஜை நிறைவு

Tamil News Live Updates-03-10-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Live Updates-03-10-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay to attend Tamilaga Vettri Kazhagam conference Vikravandi bhoomi pooja Tamil News

பெட்ரோல் டீசல் விலை: சென்னையில் 200-வது நாளாக  பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மகளிர் டி20 உலகக் கோப்பை

9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ள தொடரில் லீக் சுற்று உள்பட மொத்தம் 23 போட்டிகள் உள்ளன. உள்நாட்டு கலவரம் காரணமாக வங்கதேசத்தில் இருந்து  யு.ஏ.இக்கு மாற்றப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Oct 03, 2024 23:36 IST

    ஈரான் - இஸ்ரேல் மோதலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்: உலக நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை!

    இஸ்ரேலின் உள்கட்டமைப்பு மற்றும் அத்தகைய தாக்குதலை ஆதரிக்கும் எந்த நாடும் எங்களின் முறையான இலக்குகளாக கருதப்படும் என்று ஈரான் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதுக்குழு வெளியிட்ட அறிக்கையில்,"எந்தவொரு நாடும் ஆக்கிரமிப்பாளருக்கு உதவி செய்தால், அது ஒரு உடந்தையாகவும், எங்களின் முறையான அடுத்த இலக்காகவும் கருதப்படும். இஸ்ரேலிய ஆட்சிக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், சண்டையில் இருந்து விலகி இருக்கவும் நாங்கள் மற்ற நாடுகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். அமெரிக்காவுடன் தொடர்புகொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதர்கள் தவிர மற்ற "ஆக்கிரமிப்பாளர்களுக்கு" எந்த செய்தியும் அனுப்பப்படாது என்று ஈரான் கூறியுள்ளது. முன்னதாக ஈரான் கத்தாரை அமெரிக்காவுடன் இடைத்தரகராகப் பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டது.



  • Oct 03, 2024 20:29 IST

    சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார்: பவன் கல்யாண்

    சனாதன தர்மத்தை அழிப்பேன் என்பவர் அழிவார்.சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது மதச்சார்பின்மை ஆகாது எனஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆவேசமாக பேசியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 03, 2024 20:27 IST

    நேரடியாக ஒ.டி.டி தளத்தில் வெளியாகும் இந்தியன் 3?

    இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 3 திரைப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!



  • Oct 03, 2024 19:37 IST

    ரஜினிகாந்துக்கு இளையராஜா வாழ்த்து

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக... என இசையமைப்பாளர் இளையராஜா பதிவிட்டுள்ளார்.



  • Oct 03, 2024 19:27 IST

    ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை குறிவைக்கும் இஸ்ரேலிய ராணுவம் 

    இஸ்ரேலிய விமானப்படை அதன் தாக்குதல்களில் ஒன்று "பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லாவின் உளவுத்துறை தலைமையகத்திற்கு சொந்தமான இலக்குகளை இலக்காகக் கொண்டுள்ளது. 

    "உளவுப்பிரிவின் உளவுத்துறையின் வழிகாட்டுதலின் கீழ் விமானப்படை போர் விமானங்கள், பெய்ரூட்டில் உள்ள பயங்கரவாத அமைப்பின் உளவுத்துறை தலைமையகத்தின் இலக்குகளைத் தாக்கின, இதில் பிரிவின் செயல்பாட்டாளர்கள், சேகரிப்பு வழிமுறைகள், தலைமையகம் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் அடங்கும்" என்று இஸ்ரேலிய விமானப்படை அதன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.



  • Oct 03, 2024 19:22 IST

    விழுப்புரம்: ஏரியில் 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுப்பு

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கோட்டமருதூர் ஏரியில் இருந்து 3 சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 சிறுவர்களும் மனம்பூண்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏரியில் மீன் பிடிக்க வந்த சிறுவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



  • Oct 03, 2024 19:08 IST

     'எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா?' - ஐகோர்ட் கேள்வி 

    கோவை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், "எதிர்த்து குரல் எழுப்பினால் சஸ்பெண்ட் செய்வீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது. 



  • Oct 03, 2024 19:06 IST

    தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

    தி.மு.க தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு மற்றும்  சுற்றுச்சூழல் அணிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 



  • Oct 03, 2024 18:48 IST

    ரூ. 3000 லஞ்சம் - 3 ஆண்டுகள் சிறை

    2009ம் ஆண்டு ரூ. 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய போர்மேனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ. 3000 லஞ்சம் வாங்கிய போர்மேன் மாரிமுத்துவை (தற்போது 61 வயது) லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்

    சுமார் 15 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில் 3 ஆண்டு சிறையும், ரூ. 4000 அபராதமும் விதிக்கப்பட்டது. 



  • Oct 03, 2024 18:46 IST

    போலி பட்டா - ஆட்சியர் நேரில் ஆஜர்

    "போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. 



  • Oct 03, 2024 18:45 IST

    'ஆயுதக் கடத்தல்' - இஸ்ரேல் குற்றச்சாட்டு; லெபனான் எல்லை கண்காணிப்பு 

    லெபனானின் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமீஹ் வியாழனன்று, சிரியாவிலிருந்து மஸ்னா எல்லைக் கடவு வழியாக ஆயுதங்களை கடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து, அனைத்து எல்லைக் கடப்புகளும் அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறினார்.



  • Oct 03, 2024 18:06 IST

    இஸ்ரேலிய தாக்குதல் - 1,974 பேர் உயிரிழப்பு 

    இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 1,974 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து 127 குழந்தைகள் உட்பட மொத்தம் 1,974 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 9,384 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார். 



  • Oct 03, 2024 18:03 IST

    காசாவில் 41,778 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு 

    காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், குறைந்தது 41,778 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

    காசா பகுதியில், இஸ்ரேலின் ராணுவம் அக்டோபர் 7 முதல் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 41,788 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 96,794 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இஸ்ரேலிய விமானப்படை எக்ஸ் தளத்தில் மத்திய காசா பகுதியில் நடந்து வரும் தாக்குதல்களை உறுதிப்படுத்தியது."கடந்த மூன்று மாதங்களில், 252 வது டிவிசன் படைகள் இயக்கிய வான்வழித் தாக்குதல்களிலும், நேருக்கு நேர் என்கவுண்டர்களிலும் 450 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். கூடுதலாக, நூற்றுக்கணக்கான பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அப்பகுதியில் அழிக்கப்பட்டன, ”என்று தெரிவித்துள்ளது.



  • Oct 03, 2024 17:57 IST

    இஸ்ரேலிய படைக்கு எதிராக  குண்டுகளை வெடிக்கச் செய்த ஹெஸ்புல்லா

    தெற்கு லெபனானில் உள்ள மரூன் அல்-ராஸில் ஊடுருவிய இஸ்ரேலிய படைக்கு எதிராக வெடிகுண்டு வெடித்ததாக லெபனானின் ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.



  • Oct 03, 2024 17:56 IST

    லெபனானில் இருந்து குடிமக்களை வெளியேற்றும் ரஷ்யா

    ரஷ்யா தனது குடிமக்களை லெபனானில் இருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது, ரஷ்ய தூதர்களின் குடும்பங்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் பெய்ரூட்டில் இருந்து இன்று வியாழக்கிழமை புறப்பட்டது. லெபனானில் இருந்து சுமார் 60 பேர் ரஷ்யாவுக்கு வருவார்கள் என்று அவசரகால அமைச்சர் அலெக்சாண்டர் குரென்கோவின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    "ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அறிவுறுத்தலின் பேரில் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது" என்றும் அவசரகால அமைச்சகம் கூறியுள்ளது. 



  • Oct 03, 2024 17:06 IST

    லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - குடிமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தல் 

    தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர், 20 க்கும் மேற்பட்ட நகரங்களின் குடிமக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 



  • Oct 03, 2024 16:50 IST

    சென்னையில் கனமழை 

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது



  • Oct 03, 2024 16:49 IST

    16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இரவு 7 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் திருச்சி, தருமபுரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 03, 2024 15:33 IST

    காஸாவில் கொல்லப்பட்ட ஹமாஸின் மூத்த தலைவர்கள் 3 பேர் பெயர்களை அறிவித்தது இஸ்ரேல் 

    “ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று மூத்த ஹமாஸ் தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது..

    காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் தலைவரான ரவ்ஹி முஷ்தாஹா, ஹமாஸின் அரசியல் பணியகம் மற்றும் ஹமாஸின் தொழிலாளர் குழுவின் பாதுகாப்பு இலாகாவை வகித்த சமே அல்-சிராஜ் மற்றும் ஹமாஸின் பொது பாதுகாப்பு பொறிமுறையின் தளபதி சமி ஓதே ஆகியோர் மூன்று மாதங்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.



  • Oct 03, 2024 15:00 IST

    விஜய் திமுக, காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்: “நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றைப் பேசும் விஜய் அதே கொள்கை கொண்ட தி.மு.க, காங்கிரஸில் சேர்ந்திருக்கலாம். அனைவரின் வீட்டு பிள்ளையாக இருக்கும் விஜய் எதற்காக கட்சி ஆரம்பித்தார்?” என்று கேட்டுள்ளார்.



  • Oct 03, 2024 14:48 IST

    லெபனானில் நகராட்சி கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்; 15 பேர் பலி

    தெற்கு லெபனானின் பின்ட் ஜபெய்லில் உள்ள ஒரு நகராட்சி கட்டிடத்தை தாக்கியதில் குறைந்தபட்சம் 15 ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



  • Oct 03, 2024 13:54 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும், ஒரு சவரன் தங்கம்ரூ.56,880க்கும் விற்பனையாகிறது



  • Oct 03, 2024 13:39 IST

    விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

    இந்திய விமானப் படை தினத்தை ஒட்டி வரும் 6ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடக்க உள்ள விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சுமார் 15 லட்சம் பேர் இந்த சாகச நிகழ்ச்சியை காண உள்ளனர். பாதுகாப்பு, குடிநீர், மருத்துவ வசதி ஆகியவற்றை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்



  • Oct 03, 2024 13:23 IST

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடிய மேம்பாட்டு பணிகளில் சுமார் ரூ.20 கோடி அளவிற்கு முறைகேடு என வழக்கு தொடரப்பட்டுள்ளது குற்றச்சாட்டு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அசாருதீனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேசன் தலைவராக அசாருதீன் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது 



  • Oct 03, 2024 13:06 IST

    ரஜினியின் வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    ரஜினியின் வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. என்கவுன்ட்டரை ஆதரிப்பது போல வேட்டையன் படத்தில் காட்சிகளும், வசனங்களும் வருகின்றன. எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும். அல்லது என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது மியூட் செய்யவோ வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது 



  • Oct 03, 2024 12:36 IST

    சைதாப்பேட்டையில் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து மரணம்

    சென்னை சைதாப்பேட்டையில் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். ரயிலில் இருந்து இளைஞர் தவறி விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த பாலமுருகன் ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது, இளைஞரின் கால்கள் நடைமேடையில் உரசி, ரயிலின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.



  • Oct 03, 2024 12:10 IST

    கோவை ஈஷா விவகாரம் - ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோட் தடை

    கோவை ஈஷா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.



  • Oct 03, 2024 11:51 IST

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; தனியார் வங்கியை சேர்ந்த 2 அலுவலர்கள் நேரில் ஆஜர்

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக புதுச்சேரி தனியார் வங்கியை சேர்ந்த 2 அலுவலர்களும், போயஸ் கார்டனில் பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷும் சி.பி.சி.ஐ.டி முன் ஆஜர் ஆகினர். கோவை பி.ஆர்.எஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது



  • Oct 03, 2024 11:38 IST

    இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு தி.மு.க ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட ஐவர் குழு ஆலோசனை நடத்துகிறது. தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி உட்பட 3 அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கட்சியில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள், சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக கருத்துகளை கேட்க உள்ளனர் 



  • Oct 03, 2024 11:29 IST

    ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன்

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . குற்றப்பத்திரிகையில் ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக சம்போ செந்தில், ஏ3 குற்றவாளியாக அஸ்வத்தாமனை  காவல்துறை இணைத்துள்ளது. 



  • Oct 03, 2024 11:28 IST

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்

    அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பாதியில் ரயில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற ரயில், அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தை நெருங்கும் போது தண்டவாளத்தில் விரிசல் கண்டுபிடிப்பு, ரயிலின் எஞ்சின் பகுதி தண்டவாளத்தை கடந்த போது, பலத்த சத்தம் கேட்டதால் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விரிசலை சரிசெய்து வருகின்றனர்.

     அரக்கோணம் வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. 



  • Oct 03, 2024 10:48 IST

    த.வெ.க மாநாடு- பந்தக்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. 

    த.வெ.க மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். 

    விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தக்கால் நடப்படுகிறது. 



  • Oct 03, 2024 10:44 IST

    ரஜினி நாளை டிஸ்சார்

    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், ரஜினியின் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

    ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினிகாந்த்தை  மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் தெரிவித்துள்ளது. 



  • Oct 03, 2024 10:10 IST

    தங்கம் விலை உயர்வு 

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56,880க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,110க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



  • Oct 03, 2024 09:51 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல்  

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Oct 03, 2024 09:33 IST

    அமைச்சர் சுரேகா மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.டி.ஆர்

    சமந்தா, நாக சைதன்யா விவாகரத்துக்கு நான் காரணமா? அமைச்சர் சுரேகா தனது கருத்தை திரும்ப பெற்று பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    தெலங்கான முன்னாள் அமைச்சரும், பி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவருமான  கே.டி. ராமாராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • Oct 03, 2024 08:09 IST

    மதுவிலக்கில் திமுகவுக்கும் உடன்பாடு

    மதுவிலக்கில் திமுகவுக்கும் கொள்கை அடிப்படையில் உடன்பாடு உள்ளதுநடைமுறைச் சிக்கல் காரணமாக உடனே அதைச் செய்ய முடியவில்லை என்ற  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். 



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: