/indian-express-tamil/media/media_files/1w483VHKxV2zCtRXLb6c.jpg)
பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 202-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் ரூ100.75 –க்கும், டீசல், ரூ92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தா என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 05, 2024 23:08 IST
யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம்: மு.க.ஸ்டாலின்
"கலைஞர் வழியில் வாழ்ந்து வருகிறேன். யாருடைய மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாமல் இயங்கி வருகிறோம். "ஒரு எம்.பி., எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் திருச்சி சிவா. கட்சி பணியில் தனது உழைப்பால் உயர்ந்தவர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Oct 05, 2024 20:15 IST
கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும், 3,000 ஏக்கர் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை மீட்கக் கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலங்களை பொது தீட்சகர்கள், முறையாக பராமரிக்கவில்லை என்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டும் என, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியதாகவும், அந்த புகார் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் விசாரணை கூட்டம் கூட்டிய போதும், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமாக, கடலூர் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்தி, 12 வாரத்திற்குள் நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
Oct 05, 2024 19:10 IST
திருச்சி சிவா எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியர்: உதயநிதி ஸ்டாலின்
திமுக எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “திருச்சி சிவாவுக்கு பல முகங்கள் இருக்கலாம்.. ஆனால் திமுக இளைஞரணியை பொறுத்தவரை அவர் எங்களுக்கெல்லாம் ஒரு ஆசிரியர்” என்று கூறியுள்ளார்.
-
Oct 05, 2024 19:08 IST
ஹரியானா மற்றும் காஷ்மீரியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கணிப்பு
ஹரியானா மற்றும் காஷ்மீரியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் கூறுகின்றன. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 59 தொகுதிகளையும், காஷ்மீரியில் உள்ள 90 தொகுதிகளில் 50-க்கு மேற்பட்ட தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றும் என்று கணிப்பு வெளியாகியுள்ளது.
-
Oct 05, 2024 19:06 IST
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பத்தின் மீது இடி தாக்கி ஒயர்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன.
-
Oct 05, 2024 18:17 IST
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 65 சதவீத நிதியை மத்திய அரசு வழக்கும்; நிர்மலா சீதாராமன்
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரூ63,246 கோடி மதிப்பீட்டு செலவில், 65 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய அரசின் திட்டமானதால், ரூ33,593 கோடி முழு கடனும், சமபங்கு மற்றும் சார்நிலை கடனாக, ரூ7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டு தொகையை மாநில அரசு வழங்கும் என்று கூறியுள்ளார்.
-
Oct 05, 2024 17:20 IST
அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம
சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறங்கியது. 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 124 பேருடன் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதற்கான அபாய எச்சரிக்கை சிக்னல் வந்ததையடுத்து, மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறங்கியது.
விமானத்திலிருந்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் உட்பட 124 பேர் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். விமானத்தை பழுது பார்க்கும் பணியும் நடக்கிறது. அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
Oct 05, 2024 17:03 IST
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்!
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தென்காசி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 05, 2024 16:39 IST
விபத்தில் காதலி பலி - காதலன் தற்கொலை
சென்னை ஈசிஆரில் சினிமா பாணியில் காதலி விபத்தில் பலியானதும், பேருந்தில் பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த காதலர்கள் மாமல்லபுரம் சுற்றுலா சென்ற நிலையில் சோகம் சம்பவம் நடந்துள்ளது.
-
Oct 05, 2024 16:38 IST
சாம்சங் தொழிலாளர் போராட்டம் - ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் அமைச்சர்கள் மூவரும் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கட்கிழமை தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
Oct 05, 2024 16:05 IST
போண்டாவில் இருந்த பிளேடு துண்டு
சென்னை வில்லிவாக்கத்தில் போண்டாவில் பிளேடு துண்டு இருந்துள்ளது. பிளேடு போண்டாவால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
-
Oct 05, 2024 15:59 IST
பெரம்பலூரில் திடீர் சோதனை
பெரம்பலூரில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 05, 2024 15:43 IST
தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை பெய்யும் - எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை 17 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 16 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 05, 2024 15:31 IST
தெற்கு பெய்ரூட்டில் தாக்கும் இஸ்ரேலிய ராணுவம் - முதல் முறையாக வடக்கு லெபனான் நகரில் தாக்குதல்
இன்று சனிக்கிழமை அதிகாலையில் லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் இஸ்ரேலிய ராணுவம் முதன்முறையாகத் தாக்கியுள்ளது. தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளை மேலும் குண்டுவீசித் தாக்கிய பின்னர், இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் புதிய தரைவழி ஊடுருவலைச் செய்ய முயன்றதாக லெபனான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீதான தாக்குதலில் ஹமாஸ் அதிகாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குழுவின் ஆயுதப் பிரிவின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாஸுடன் இணைந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சன்னி முஸ்லீம்கள் பெரும்பான்மையான துறைமுக நகரமான திரிபோலி மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
-
Oct 05, 2024 15:27 IST
'சார்' படம் அக்டோபர் 18ல் ரிலீஸ்
'கன்னி மாடம்' படத்தைத் தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'சார்' திரைப்படம், அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
-
Oct 05, 2024 15:26 IST
"பள்ளிக்கூடமா? பாஜக பயிலரங்கமா?"
அரசியல் சாசனத் திருத்தம் தேவைப்படும் பிரச்சினையை மாணவர்களிடம் திணிக்க அது என்ன பள்ளிக்கூடமா? பாஜக பயிலரங்கமா?, பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் "ஒரே தேசம், ஒரே தேர்தல்" விவாதம் நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Oct 05, 2024 14:53 IST
இண்டிகோ நிறுவன விமான சேவைகள் பாதிப்பு
“தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்” என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Oct 05, 2024 13:57 IST
கைதானவர் த.வெ.க நிர்வாகி இல்லை
கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான விவகாரம் தொடர்பாக, கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மதியழகன் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 05, 2024 13:56 IST
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்தை குறைக்க சந்திரபாபு அறிவுறுத்தல்
திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி மலையில் வி.ஐ.பி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என்றும், திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
-
Oct 05, 2024 13:54 IST
கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்கம் தொடங்க அனுமதி கோரி சாம்சங் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்துள்ளனர்.
-
Oct 05, 2024 13:53 IST
4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு எச்சரிக்கை
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Oct 05, 2024 13:38 IST
லெபனானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது - சுகாதார அமைச்சகம்
லெபனானில் கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் கடந்த இரண்டு வாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குடிமக்கள் மீதான எண்ணிக்கை "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறினார்.
லெபனான் அரசாங்கம், இஸ்ரேல் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளது, இது டஜன் கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது. இது பொதுமக்களுக்கும் ஹெஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த எண்ணிக்கையை உடைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவத் திறன்களை குறிவைப்பதாகவும், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் பொதுமக்கள் மத்தியில் மறைந்திருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது, அதை அவர்கள் மறுக்கிறார்கள்.
-
Oct 05, 2024 13:36 IST
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்தடைந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, சிரிய அதிகாரிகளுடன் பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க டமாஸ்கஸ் வந்தடைந்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
-
Oct 05, 2024 13:05 IST
தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் ஊடுருவ முயற்சி - ஹிஸ்புல்லா
லெபனானில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, லெபனானின் தெற்கு நகரமான ஓடாய்ஸேவில் இஸ்ரேலிய ராணுவம் ஊடுருவ முயற்சிப்பதாக ஹெஸ்பொல்லா கூறியுள்ளது. அதனால் அங்கு மோதல்கள் நடந்து வருவதாகவும், சனிக்கிழமை அதிகாலை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், புகைமூட்டம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய ராணுவம் இரண்டு எச்சரிக்கைகளை விடுத்த சிறிது நேரத்திலேயே, இது நிகழ்த்ததாகவும் ஹெஸ்பொல்லா கூறியுள்ளது
-
Oct 05, 2024 11:35 IST
நடிகையை மிரட்டிய 2 பேர் கைது
சென்னையில் நடிகை சோனாவை வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டிய இருவர் கைது செய்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மதுரவாயலை சேர்ந்த சிவா, லோகேஷ் ஆகியோர் கைது, இருவரிடமும் மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த ஏசி யூனிட்டை திருட முயற்சி செய்தனர். சோனா கத்தி கூச்சலிட்டதால் தப்பியோடினர்,
-
Oct 05, 2024 11:01 IST
கோவையில் மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
கோவை,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கோவையில் கடந்த ஒன்றரை மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கோவை மாநகர் பகுதியான புலியகுளம்,உக்கடம்,டவுன் ஹால், குனியமுத்தூர்,பெரிய கடை வீதி,ராமநாதபுரம்,கரும்புகடை, நஞ்சுண்டாபுரம்,போத்தனூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது.கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் உருவானது.மேலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் குடை பிடித்து படி தங்கள் பணிகளுக்கு சென்றனர்.பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது.
-
Oct 05, 2024 10:30 IST
வினேஷ் போகட் வாக்களித்தார்
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் ஜஜ்ஜாரில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
கடந்த மாதம் காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள வினேஷ் போகத்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மற்றொரு மல்யுத்த வீரர் கவிதா தலால் மற்றும் பாஜகவில் யோகேஷ் குமார் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
-
Oct 05, 2024 10:12 IST
மாதபி பூரி புச் ஆஜராக சம்மன்
அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரத்தில், அக்.24-ம் தேதி செபி தலைவர் மாதபி பூரி புச் ஆஜராக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
-
Oct 05, 2024 09:51 IST
மகளிர் டி20-ல் இன்று 2 போட்டிகள்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
Oct 05, 2024 09:28 IST
பாகிஸ்தான் செல்லும் ஜெய்சங்கர்
10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார். வரும் 16ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
-
Oct 05, 2024 08:34 IST
ஹரியானா தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி உள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் 1031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.