Advertisment

Tamil News Updates: India vs West Indies முதல் டெஸ்ட் போட்டி ... இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி

Tamil Nadu News, Tamil News , Chandrayaan 3 launches live updates,, Maaveeran movie, India west indies live– 14 JULY 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
Jul 14, 2023 08:13 IST
New Update
Tamil News

Tamil News live

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

Advertisment

முதல் இன்னிங்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்; இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்களில் டிக்லேர் செய்தது

2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  முதல் இன்னிங்சில் - 5, 2வது இன்னிங்சில் - 7 என மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:04 (IST) 14 Jul 2023
    'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    6 மாதங்களாக நடைபெற்ற 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

    நடிகர்கள் மற்றும் படக் குழுவினருக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்



  • 23:03 (IST) 14 Jul 2023
    மகளிர் உரிமைத்தொகை - வரும் 20 முதல் டோக்கன்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன், வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 21:23 (IST) 14 Jul 2023
    இலவசமாக பின்னணி குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி

    இயக்குனர் மடோன் அஸ்வின் உடனான நட்புக்காக மாவீரன் படத்திற்காக இலவசமாக பின்னணி குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி. படக்குழு அறிவிப்பு



  • 20:42 (IST) 14 Jul 2023
    புத்தகங்களை பொது நூலகங்களுக்கு வழங்கும் முதல்வர்

    சென்னை, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை அரசின் பொது நூலகங்களுக்கு வழங்குகிறார்.



  • 20:03 (IST) 14 Jul 2023
    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தாக்கல்!

    மதுரையில் 31 கி.மீ தூரத்திற்கும், கோவையில் 139 கி.மீ தூரத்திற்கும் ( 5 தடங்கள் 3 கட்டங்களாக) மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது



  • 19:27 (IST) 14 Jul 2023
    மாலத்தீவு தலைநகர் மாலே-க்கு பறந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    சென்னைலியிலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலே-க்கு பறந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். எங்களுடன் பறந்ததற்கு நன்றி, நீங்கள் விமானத்தில் இருப்பது மரியாதை என்று முகநூலில் பதிவிட்டுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்



  • 19:24 (IST) 14 Jul 2023
    நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ₨60-க்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் சக்கரபாணி

    நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ₨60-க்கு வழங்கப்படுகிறது. அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு விற்கப்படுகிறது கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பை கொள்முதல் விலையில் விற்க நடவடிக்கை அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி



  • 19:24 (IST) 14 Jul 2023
    நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ₨60-க்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் சக்கரபாணி

    நியாயவிலைக் கடைகளில் தக்காளி கிலோ ₨60-க்கு வழங்கப்படுகிறது. அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு விற்கப்படுகிறது கூட்டுறவு அங்காடிகள் மூலம் துவரம் பருப்பை கொள்முதல் விலையில் விற்க நடவடிக்கை அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படாமல் இருக்கவும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி



  • 18:57 (IST) 14 Jul 2023
    சந்திரயான்-3 சிறப்புமிக்க தருணம்: எடப்பாடி பழனிசாமி

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணத்தை, நமக்கு உருவாக்கித் தந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



  • 18:55 (IST) 14 Jul 2023
    சந்திரயான்-3 சிறப்புமிக்க தருணம்: எடப்பாடி பழனிசாமி

    நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தருணத்தை, நமக்கு உருவாக்கித் தந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



  • 18:50 (IST) 14 Jul 2023
    மாலத்தீவு புறப்பட்டார் ரஜினிகாந்த்

    சென்னைலியிலிருந்து மாலத்தீவு தலைநகர் மாலே-க்கு ரஜினிகாந்த் சென்றுள்ளார்.

    இந்நிலையில், “எங்களுடன் பறந்ததற்கு நன்றி, நீங்கள் விமானத்தில் இருப்பது மரியாதை” என்று முகநூலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பதிவிட்டுள்ளது.



  • 18:45 (IST) 14 Jul 2023
    பாளையங்கோட்டை: தபால் நிலையத்தில் தீ விபத்து

    திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் தலைமை தபால் நிலையம் 3 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது.

    இங்குள்ள 2ஆவது மாடியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர். எனினும் அறையில் இருந்த கணிணி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன.



  • 18:44 (IST) 14 Jul 2023
    வள்ளியூரில் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (38) என்பவர் பணகுடி மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.

    இவர் நேற்று பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீடு திரும்பும்போது வள்ளியூர் பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.



  • 17:47 (IST) 14 Jul 2023
    வேங்கை வயல் விவகாரம் - சிறார்கள் நேரில் ஆஜர்

    வேங்கை வயல் தொடர்பான வழக்கு விசாரணையில் சிறார்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்.



  • 17:46 (IST) 14 Jul 2023
    வேங்கை வயல் விவகாரம் - சிறார்கள் நேரில் ஆஜர்

    --

    வேங்கை வயல் தொடர்பான வழக்கு விசாரணையில் சிறார்கள் நேரில் ஆஜராகி உள்ளனர்.



  • 17:29 (IST) 14 Jul 2023
    விலைவாசி உயர்வு: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

    நெல்லை வண்ணாரப்பேட்டையில் அதிமுகவினர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

    தொடர்ந்து திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து வரும் 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.

    மேலும், மதுரை மாநாட்டில் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் தீர்மானம் போட்டனர்.



  • 17:20 (IST) 14 Jul 2023
    பல்பிடுங்கிய விவகாரம்: குற்றப்பத்திரிகை தாமதம்

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், விசாரணைக்கு ஆஜரானவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 73 நாள்கள் கடந்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நீதி கோர உள்ளதாகவும் அமைப்பின் செயல் இயக்குனர் ஹென்றி தெரிவித்தார்.



  • 17:03 (IST) 14 Jul 2023
    அஜித் பவாருக்கு நிதித்துறை ஒதுக்கீடு

    மஹாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்ட வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 16:52 (IST) 14 Jul 2023
    இஸ்ரோ குழுவினருக்கு நம்பி நாராயணன் வாழ்த்து

    இஸ்ரோ குழுவினருக்கு நம்பி நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் அளித்த தார்மீக ஆதரவு மற்றும் நீங்கள் வெளிப்படுத்திய உற்சாகம் ஒரு மிக வெற்றிகரமான பணியை நம் முன்னே கொண்டு வருவோம் என்று நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 16:13 (IST) 14 Jul 2023
    செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் இ.டி. காவலில் எடுத்து விசாரிக்கலாம் -3வது நீதிபதி தீர்ப்பு

    செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம். செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை அமலாக்கத் துறை காவலில் எடுத்த நாட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு அளித்துள்ளார்.



  • 16:10 (IST) 14 Jul 2023
    செந்தில் பாலாஜி மோசடி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 6 மாத கால அவகாசம் கோரிய தமிழக காவல்துறை

    வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி பணம் வாங்கியதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், விச்சாரணை முடிப்பதற்கு 6 மாத கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.



  • 15:48 (IST) 14 Jul 2023
    செந்தில் பாலாஜியை இ.டி. காவலில் விசாரிக்க அதிகாரம் உள்ளது - 3வது நீதிபதி கார்த்திகேயன்

    செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் கருத்து: “செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்; செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்; அமர்வு நீதிமன்றம் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. நீதிபதி பரத சக்ரவர்த்தி உடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜி குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி சட்டத்தை மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



  • 15:27 (IST) 14 Jul 2023
    சந்திரயான் 3 வெற்றி: திரௌபதி முர்மு வாழ்த்து

    சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:26 (IST) 14 Jul 2023
    இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம்; இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து

    சந்திரயான்-3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்பட்டது இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம்; ஒவ்வொரு இந்தியனின் கனவையும் சந்திராயன் உயரத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது” பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



  • 15:16 (IST) 14 Jul 2023
    நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ தொடங்கியது; இந்தியாவுக்கு வாழ்த்துகள் - இஸ்ரோ தலைவர்

    சந்திரயான்-3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பு: “நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.



  • 15:15 (IST) 14 Jul 2023
    சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தம்; திருப்திகரமாக உள்ளது - இஸ்ரோ

    சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.



  • 15:13 (IST) 14 Jul 2023
    சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலை நிறுத்தம்; திருப்திகரமாக உள்ளது - இஸ்ரோ

    சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.



  • 15:07 (IST) 14 Jul 2023
    இந்தியாவிற்கு பெருமை; இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து

    சந்திரயான்-3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது இந்தியாவிற்கு பெருமை என்று கூறி இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 15:05 (IST) 14 Jul 2023
    நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்

    ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்கள் சந்திப்பு: “நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.



  • 15:01 (IST) 14 Jul 2023
    வெற்றிகரமாகப் பிரிந்த 3 அடுக்குகள்

    சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன.



  • 14:56 (IST) 14 Jul 2023
    சந்திரயான் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

    சந்திரயான் 3 விண்கலம் 179 கி.மீ தொலைவில் நீல் வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.



  • 14:49 (IST) 14 Jul 2023
    எஸ்200 திட பூஸ்டர் பகுதி பிரிந்தது

    எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்டன.



  • 14:46 (IST) 14 Jul 2023
    ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம் 3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் சந்திரயான் 3 விண்கலம்

    சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம் 3 எம்4 ராக்கெட் மூலம் வின்னில் செலுத்தப்பட்டது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது; ஆகஸ்ட் 23-ம் தேதி லேண்டர் நிலவை சென்றடையும் என விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • 14:35 (IST) 14 Jul 2023
    நிலவை நோக்கி விண்ணில் சீறிப் பாய்ந்தது சந்திரயான் 3 வின்கலம்

    சந்திரயான் 3 வின்கலம் திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக 2.35 மணிக்கு நிலவை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்தது.



  • 14:28 (IST) 14 Jul 2023
    LVM3 தொடங்குவதற்கு தயார்

    அனைத்து அனுமதிகளும் முடிந்த பிறகு எல்விஎம்3 விண்கலம் ஏவுவதற்குத் தயாராக உள்ளது என்பதை சந்திரயான் 3 திட்ட இயக்குனர் எஸ் மோகன் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். செலுத்தத் தொடங்குவதற்கான பணியை அவர் அங்கீகரித்துள்ளார். இப்போது, ​​செலுத்தும் பணி விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.



  • 14:24 (IST) 14 Jul 2023
    சந்திரயான் செலுத்தும் கட்டுப்பாட்டு இடத்துக்கு வந்தார் இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத்

    இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், சந்திரயான்-3 விண்கலத்தை ஏவுவதற்கு முன்னதாக மிஷன் கன்ட்ரோலுக்கு வந்துள்ளார். விண்ணில் ஏவப்படும் நேரம் 14:35:17 (பிற்பகல் 2.35 மணி IST) என கணக்கிடப்படுவதால், விஞ்ஞானிகள் ராக்கெட்டின் இறுதி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    LVM3-M4/சந்திராயன் 3-க்கான திட்ட இயக்குனர் எஸ் மோகன குமார், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆவார். முன்னதாக LVM3-M3 மிஷனில் ஒன் வெப் இந்தியா 2 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக வணிக ரீதியாக ஏவுவதற்கு இயக்குநராக பணியாற்றினார்.



  • 13:59 (IST) 14 Jul 2023
    4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 20ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.



  • 13:51 (IST) 14 Jul 2023
    "கொடுநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது": ஓ.பி.எஸ்!

    "தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கொடுநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. கொடநாடு விவகாரத்தில் உண்மை வெளி வர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள்" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.



  • 13:50 (IST) 14 Jul 2023
    நாளை பள்ளிகள் இயங்கும்!

    காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையான நாளை பள்ளிகள் இயங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 13:49 (IST) 14 Jul 2023
    கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு!

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. முதல்வரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது நத்தம் சாலையில் IOC ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 13:22 (IST) 14 Jul 2023
    டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளம்!

    தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லி துணை நிலை ஆளுநர், முதலமைச்சர் கெஜ்ரிவால் இல்லம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளம் வழிந்தோடுகிறது.

    காந்திநினைவிடமான ராஜ்காட், டெல்லி சட்டசபை இருக்கும் இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. செங்கோட்டை பகுதியில் புகுந்த மழை வெள்ளம் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் டெல்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால், யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பித்தக்கது.



  • 13:14 (IST) 14 Jul 2023
    மாவீரன் படம் ரிலீஸ்: சிவகார்த்திகேயன் பேட்டி

    "சில காட்சிகளுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பை பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது." என்று ரசிகர்களுடன் மாவீரன் படம் பார்த்தது குறித்து படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



  • 12:52 (IST) 14 Jul 2023
    கனகசபை விவகாரம்: உயர்நீதிமன்றம் கேள்வி!

    கனகசபை தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியளித்ததை எதிர்த்து எப்படி வழக்கு தொடர முடியும்? என்றும் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில், மூன்றாவது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? என்றும் மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    கனகசபையில் தரிசிக்க அனுமதியளித்த அரசு உத்தரவை எதிர்த்த இந்த வழக்கை அக்டோபர் 11க்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்.



  • 12:40 (IST) 14 Jul 2023
    தி.மு.க எம்.பி-க்கள் திட்டம்

    தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழக மக்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் குரல் எழுப்பவும், பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை கேள்விகளாக எழுப்பவும், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் தி.மு.க எம்.பி-க்கள் திட்டம்

    ஆளுநர்களின் அத்துமீறல், சமூக நீதி, அடிப்படை உரிமை, மாநில உரிமைகளுக்கு பேராபத்தை பாஜக ஏற்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளனர்.



  • 11:59 (IST) 14 Jul 2023
    சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா பொருட்கள் ஒப்படைப்பு!

    ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சமூக ஆர்வலர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளித்துள்ளது.

    "நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைப்பு" என்றும் கூறியுள்ளது.



  • 11:26 (IST) 14 Jul 2023
    அண்ணாமலை பேட்டி

    Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும்;- சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பின், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேட்டி



  • 11:23 (IST) 14 Jul 2023
    அண்ணாமலை மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

    திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆக.24ம் தேதி மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 10:58 (IST) 14 Jul 2023
    விசாரணை தொடங்கியது

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது.



  • 10:56 (IST) 14 Jul 2023
    திமுக எம்பிக்கள் கூட்டம்

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.



  • 10:37 (IST) 14 Jul 2023
    பருப்பு, தக்காளி கொள்முதல் விலைக்கு விற்பனை

    சென்னையில் உள்ள 14 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலை கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை கொள்முதல் விலைக்கே விற்பனை ஆகிறது.



  • 10:26 (IST) 14 Jul 2023
    அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்

    திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆஜர்; நீதிமன்ற வாயிலில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.



  • 10:26 (IST) 14 Jul 2023
    வேட்டி, சேலை திட்டம்- ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு

    2024 பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி, சேலை திட்டத்திற்கு உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



  • 10:25 (IST) 14 Jul 2023
    தங்கம் விலை அதிகரிப்பு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 44,360-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.5,545-க்கும் விற்பனையாகிறது.



  • 09:23 (IST) 14 Jul 2023
    பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

    பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்' விருது வழங்கி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கெளரவித்தார்.

    இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.



  • 09:22 (IST) 14 Jul 2023
    தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு

    தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு - தென்மாவட்ட ரயில்களில் இன்றும் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது



  • 09:22 (IST) 14 Jul 2023
    இன்று தெலுங்கில் வெளியாகும் மாமன்னன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற மாமன்னன் படம் இன்று தெலுங்கில் வெளியாகியுள்ளது.



  • 08:15 (IST) 14 Jul 2023
    வரும் 22 ஆம் தேதி தொடங்கும் பொறியியல் படிப்பு கலந்தாய்வு

    பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும், அதனை தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கு மூன்று கட்டமாக கலந்தாய்வு நடைபெறும்.

    முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 22_ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரையிலும் நடைபெறும்.



  • 08:14 (IST) 14 Jul 2023
    கிலோவுக்கு ரூ.20 குறைந்த தக்காளி விலை

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி நேற்று ரூ.130க்கு விற்ற நிலையில், இன்று கிலோவுக்கு ரூ.20 குறைந்து ரூ.110க்கு விற்பனையாகிறது.

    சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்பனையாகிறது

    பீன்ஸ் விலை இன்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.110க்கு விற்பனையாகிறது சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.200, இஞ்சி விலை ரூ.220, பூண்டு விலை ரூ.200 விற்பனை செய்யப்படுகிறது.



  • 08:14 (IST) 14 Jul 2023
    தளபதி விஜய் பயிலகம்

    ஜூலை 15 ஆம் தேதி காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 15ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் "தளபதி விஜய் பயிலகம்" ஆரம்பிக்கப்பட உள்ளதாக, அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.



#Tamilnadu #India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment