Advertisment

Tamil News Updates: வட மாநிலங்களில் வரும் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் : இந்திய வானிலை மையம்

Tamil Nadu News, Tamil News , Isro Chandrayaan 3, Maaveeran movie, Madurai kalaignar library, Magalir Urimai Thogai scheme – 15 July 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Updates: வட மாநிலங்களில் வரும் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் :  இந்திய வானிலை மையம்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

India vs West Indies Test Match: இந்திய அணி வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது; இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 421 ரன்களில் டிக்லேர் செய்தது

2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் அஸ்வின் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  முதல் இன்னிங்சில் - 5, 2வது இன்னிங்சில் - 7 என மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:47 (IST) 15 Jul 2023
    கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி'

    அறிமுக இயக்குநர் கணேஷ்ராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்கு 'கண்ணிவெடி' என பெயரிடப்பட்டுள்ளது; படத்தின் பூஜை இன்று நடைபெற்றது!


  • 22:47 (IST) 15 Jul 2023
    விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்'

    தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'தளபதி விஜய் பயிலகம்' என்ற பெயரில் இரவு நேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது சென்னை கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்துவைத்தார்!


  • 22:46 (IST) 15 Jul 2023
    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் பயணித்த படகு, கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு

    பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் பகுதியில் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் பயணித்த படகு, கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு; வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக சென்றபோது, படகில் அதிக நபர்கள் சென்றதால், லேசாக கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது!


  • 21:05 (IST) 15 Jul 2023
    சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

    தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை


  • 21:03 (IST) 15 Jul 2023
    சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

    தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும். தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை


  • 20:14 (IST) 15 Jul 2023
    உள்ளூர் நாணயங்களில் வர்த்தக செயல்முறை : அபுதாபியில் பிரதமர் மோடி பேச்சு

    பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் அபுதாபியில் நடத்திய விரிவான பேச்சுவார்த்தையில் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தக செயல்முறையை தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


  • 20:10 (IST) 15 Jul 2023
    ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

    அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.


  • 19:41 (IST) 15 Jul 2023
    கல்வியும் - சுகாதாரமும் இரு கண்கள் - முதல்வர் ஸ்டாலின்

    திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது கல்வியும், சுகாதாரமும் தான் சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம் என்பதற்கு சென்னை மருத்துவமனையும், மதுரை நூலகமும் சான்று - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 19:05 (IST) 15 Jul 2023
    மதுரை தமிழகத்தின் கலைநகர்

    சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலைநகர்" "கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூலகத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 19:04 (IST) 15 Jul 2023
    ஜெய்லர் 2வது பாடல் - முன்னோட்டம் வெளியீடு

    நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் 2வது பாடலுக்கான முன்னேட்டத்தை வெளியிட்டது படக்குழு


  • 18:35 (IST) 15 Jul 2023
    மீண்டும் வந்த கருணாநிதி

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம், கருணாநிதி அருகில் அமர்ந்து பேசுவது போல திரை வடிவமைக்கப்பட்டுள்ளது கருணாநிதியுடன் உற்சாகம் ததும்ப பேசி நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன்


  • 18:34 (IST) 15 Jul 2023
    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

    சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும்..." மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!


  • 17:32 (IST) 15 Jul 2023
    உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

    அவதூறு வழக்கில் குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு. 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு


  • 17:15 (IST) 15 Jul 2023
    மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார்

    தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச தரத்தில் நூலகம் கட்டப்பட்டுள்ளது

    நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன


  • 16:55 (IST) 15 Jul 2023
    மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய முடியாது.

    மாநகராட்சி தேர்தலை ரத்து செய்ய முடியாது.

    கோவை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது .

    கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


  • 16:37 (IST) 15 Jul 2023
    வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டாலரை எட்டும்- பிரதமர் மோடி

    வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டாலரை எட்டும். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான வர்த்தகம் 85 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தை இந்தியா தனது உண்மையான நண்பனாக பார்க்கிறது - பிரதமர் மோடி

    வர்த்தகம் விரைவில் 100 பில்லியன் டாலரை எட்டும் என அரபு அமீரக மன்னருடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி தகவல்


  • 16:24 (IST) 15 Jul 2023
    மதுரையில் ஸ்டாலின் - கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ. 206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் நூலகம் கட்டப்பட்டுள்ளது.


  • 16:23 (IST) 15 Jul 2023
    மதுரையில் ஸ்டாலின் - கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ. 206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் நூலகம் கட்டப்பட்டுள்ளது.


  • 16:23 (IST) 15 Jul 2023
    மதுரையில் ஸ்டாலின் - கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ. 206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் நூலகம் கட்டப்பட்டுள்ளது.


  • 16:09 (IST) 15 Jul 2023
    ராதாகிருஷ்ணன் விருது - கல்வித்துறை அறிவுறுத்தல்

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தல்

    தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பரிந்துரை செய்யலாம்.

    அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய மற்றும் டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக் கூடாது.

    ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்கள், குற்ற நடவடிக்கைகளுக்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களையும் பரிந்துரை செய்யக் கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி அறிவுறுத்தல்


  • 16:06 (IST) 15 Jul 2023
    ஆசிய தடகளம் - தமிழக வீரர் வெண்கலம்

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் தமிழக வீரர் சந்தோஷ் குமார்

    400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் 49.09 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்று அசத்தல்


  • 16:05 (IST) 15 Jul 2023
    மணிப்பூர் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் - காங்கிரஸ்

    மணிப்பூர் மாநில மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி போராடுவோம். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பா.ஜ.க அரசு, பிரதமரின் மௌனம் மன்னிக்க முடியாதது- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே


  • 15:25 (IST) 15 Jul 2023
    ராமநாதபுரம் - நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை!

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


  • 14:55 (IST) 15 Jul 2023
    அ.தி.மு.க தலைமை விவகாரம்: ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு

    அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, தீர்ப்பு இறுதியாகவில்லை. இரட்டை தலைமை பதவியே இன்று வரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடனேயே தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    உறுப்பினர்களை சேர்த்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 14:52 (IST) 15 Jul 2023
    “21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு“: வானிலை மையம்!

    தமிழகம், புதுச்சேரியில் வரும் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 14:07 (IST) 15 Jul 2023
    'ஐ.டி புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி': ஸ்டாலின் பேச்சு!

    மதுரையில் தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை காணொலி மூலம் திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்பை பெருக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் பிற தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

    நாட்டிலேயே முதல் முதலாக 1997ஆம் ஆண்டு ஐடி கொள்கையை உருவாக்கினார் கருணாநிதி. தமிழ்நாட்டின் ஐடி புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம்" என்று கூறியுள்ளார்.


  • 13:54 (IST) 15 Jul 2023
    மகளிர் உதவித் தொகை: மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

    "1,417 ரேஷன் கடைகளில் 17.81 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 600 ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பம் விநியோகம். ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குடும்ப தலைவிகளுக்கு உதவ ஒரு அலுவலர் இருப்பார்.

    தகுதி உடைய பெண்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கி விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கட்டுப்பாட்டு அறை வரும் 17ஆம் தேதி முதல் செயல்படும்." என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


  • 13:51 (IST) 15 Jul 2023
    இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்!

    தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என்றும், "வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்" என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


  • 13:31 (IST) 15 Jul 2023
    முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள்; மோடி அஞ்சலி

    முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் வளர்ச்சிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த உன்னத மனிதர் காமராஜர் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். வறுமையை அகற்ற வேண்டும் என்ற காமராஜரின் கனவை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்


  • 13:21 (IST) 15 Jul 2023
    ஆர்.எஸ்.எஸ் கூட்டம்; ஒரு வாரம் விடுமுறை அளித்த நீலகிரி தனியார் பள்ளி நிர்வாகம்

    நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் காரணமாக, தனியார் பள்ளி நிர்வாகம் ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை அளித்தது. ஒரு வாரம் விடுமுறை அளித்தது குறித்து தனியார் பள்ளிக்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். தகுந்த விளக்கம் தரவில்லை எனில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


  • 12:58 (IST) 15 Jul 2023
    மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர்

    மதுரை புதுநத்தம் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.215 கோடி செலவில் 6 தளங்களுடன் பிரமாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி, லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 4.30 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன


  • 12:46 (IST) 15 Jul 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்

    அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, நீதிமன்ற காவல் சட்டப்படியானது என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு தீர்ப்பை எதிர்த்து செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது


  • 12:24 (IST) 15 Jul 2023
    கொடநாடு சம்பவம்; குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும் - டி.டி.வி தினகரன்

    மன்னிப்பு கடிதம் கொடுக்கும் இடத்தில் உள்ளது இ.பி.எஸ் அணியினர் தான். கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது துணை முதல்வராக இருந்தவர் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் ஆட்சியில் கொடநாடு சம்பவம் தொடர்பான தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் உள்ளது. உண்மையான குற்றவாளிகளை அரசு தண்டிக்க வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்


  • 12:04 (IST) 15 Jul 2023
    ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார் பிரதமர் மோடி

    பிரான்ஸ் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் முகமது பின் சையதை இன்று சந்திக்கிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது


  • 11:52 (IST) 15 Jul 2023
    டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த நீர்மட்டம்

    டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து தனித்தீவு போல் தலைநகர் டெல்லி காட்சி அளிக்கிறது. ஐடிஓ சந்திப்பு, விஐபிக்கள் இல்லம் அமைந்துள்ள பகுதி, காந்தி நினைவிடமான ராஜ்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. 4 நாட்களாகியும் வெள்ளநீர் வடியாததால் டெல்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது


  • 11:48 (IST) 15 Jul 2023
    ஆன்லைன் மோசடி; நைஜீரியா நபர் கைது

    சென்னை, ஓட்டேரியில் கடந்த 6ம் தேதி ஆன்லைன் மோசடி கும்பலால் மிரட்டப்பட்டு அஸ்வினி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தில், நைஜீரியாவை சேர்ந்த மோசா என்பவரை டெல்லியில் கைது செய்து தமிழகம் கொண்டு வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


  • 11:23 (IST) 15 Jul 2023
    சென்னை சைதாப்பேட்டையில் திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

    சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகே உள்ள மின்மாற்றியில் திடீரென தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்மாற்றியில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புதுறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்மாற்றி தீப்பிடித்து எரிந்ததால், டேங்க் ஸ்கொயர் தெருவில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது


  • 11:17 (IST) 15 Jul 2023
    மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது - அண்ணாமலை

    மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோகிறது. தி.மு.க எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை தி.மு.க அரசு விளக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்


  • 10:41 (IST) 15 Jul 2023
    இலங்கையில் இருந்து மேலும் 8 அகதிகள் தனுஷ்கோடி வருகை

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடருவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

    தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் அங்கு சென்ற போலீசார் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் அகதியாக தனுஷ்கோடி வந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மத்திய, மாநில உளவுத்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • 10:21 (IST) 15 Jul 2023
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ₹40 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 44,400க்கும், கிராம் 5,550க்கும் விற்பனையாகிறது.


  • 10:20 (IST) 15 Jul 2023
    காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம்- கமல்ஹாசன் ட்வீட்

    பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும்” - கமல்ஹாசன் ட்வீட்!


  • 09:26 (IST) 15 Jul 2023
    காமராஜரின் திருவுருவப் படத்திற்கு, மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

    சென்னை: நங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


  • 09:08 (IST) 15 Jul 2023
    தக்காளி விலை உயர்வு

    சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.130க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.140க்கு விற்பனையாகிறது


  • 09:07 (IST) 15 Jul 2023
    கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    பயணிகளின் வசதிக்காக இன்றும், நாளையும் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


  • 09:07 (IST) 15 Jul 2023
    கிரிக்கெட் வீரர் அஷ்வின் புதிய சாதனை

    ஹர்பஜன் சிங்கை பின்ன்னுக்கு தள்ளி, அதிக சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ரவிச்சந்திரன் அஷ்வின்.


  • 08:26 (IST) 15 Jul 2023
    வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சந்திராயன் 3

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வெள்ளிக்கிழமை மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், "திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து 179 கிலோ மீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. இனி எல்லாம் சரியாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


  • 08:25 (IST) 15 Jul 2023
    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு

    மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

    இது மதுரையில் புதுநத்தம் சாலையில் அதிநவீன அம்சங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நூலகத்தில் முதல் கட்டமாக 3 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.


  • 08:25 (IST) 15 Jul 2023
    புதிய தலைமை பயிற்சியாளர்

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக, ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரராகவும், அந்த அணியின் பயிற்சியாளராகவும் இருந்தவர் ஆவார்.


  • 08:24 (IST) 15 Jul 2023
    மகளிர் உரிமைத்தொகை - வரும் 20 முதல் டோக்கன்

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன், விண்ணப்ப விநியோகம் ஜூலை 20 முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 08:24 (IST) 15 Jul 2023
    கால அவகாசம் நீட்டிப்பு

    பொது சிவில் சட்டம் குறித்து மக்கள் கருத்துகளைச் சமா்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரம் (ஜூலை 28 வரை) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment